Notifications
Clear all

அத்தியாயம் 8

 

Admin
(@ramya-devi)
Member Admin
Joined: 1 year ago
Posts: 1004
Topic starter  

“ஆனா இதுல வராளிக்கும் பிள்ளைக்கும் எதாவது ஆபத்து வந்தா என்ன செய்யிறது?” என்று தனுஸ் கேட்டான்.

“அப்பவும் நமக்கு இன்னமும் லாபம் தான்” என்றாள்.

“எப்படிம்மா சொல்ற” வியந்து போய் கேட்டான்.

“அதேல்லாம் ஒரு கணக்குடா” என்றவரின் கண்களில் பணத்தின் மீது இருந்த ஆசை வெறி அப்பட்டமாக தெரிந்தது.

“ம்மா புரியிற மாதிரி சொல்லு” என்றான் சிவா.

“பிள்ளைக்கு ஆபத்து வந்தா அதை அப்படியே திருப்பி அவங்க மேல பழியை போட்டு மீடியால சோகமா முகத்தை வச்சுக்கிட்டு ஒரு வாரம் அழுதா சரியா போயிடும். அப்படியே அந்த பிள்ளையோட நாம மூணு பேரும் விளையாடுற மாதிரி ஒரு நாலஞ்சு வீடியோ எடுத்து வை. பின்னாடி யூஸ் ஆகும்”  என்று போகும் தாய் பல சகுனிகளுக்கு ஈடாகுவார்.

இது எதுவும் தெரியாமல் அன்றைய ஷூட்டிங்கில் பிசியாக நடித்துக் கொண்டு இருந்தாள் வராளி. அது ஒரு குக்கர் கம்பெனியின் ஷூட்...

பழைய குக்கரை வைத்து கை நோக தேய்க்க வேண்டும். அதுவே பல டேக் போச்சு.. அடுத்தது விளம்பரத்தில் நடிக்கும் முன்னணி நாயகி பளபளக்கும் புது குக்கர் வைத்து இருப்பதை பார்த்து, பெருமூச்சு விட வேண்டும் மற்றவர்கள். அந்த ஒரு நாள் முழுவதுமே இதே ஆட் ஓடியது.

விளம்பரம் முடிந்த சமயம் டப்பிங் வேலையும் பார்த்து முடித்து கிளம்ப இரவு பத்து மணி ஆகியது. அந்த நேரம் பாரதி அவளை அழைத்து இருந்தார்.

“சொல்லுங்க சார்” என்றாள்.

“ஒன்னும் இல்லம்மா கவர்மெண்ட்ல இருந்து ஒரு ஆட் ஒன்னு வந்து இருக்கு. கொஞ்சம் சீக்கிரமா நாளைக்கு ஷூட்க்கு வந்திடுறியா?” என்று கேட்டார்.

“கண்டிப்பா வந்திடுறேன் சார்... என்ன ஆட் அது..” விளக்கம் கேட்டாள்.

“போலியோ சொத்து மருந்து போடுற மாதிரி எடுக்குறாங்க. அதுக்கு ஒரு பிள்ளையும் வேணும். அது தான் உன் மகன் இருக்கானே... எங்கயும் நாம அலைய வேணாம்.. உன் மகனையே நடிக்க வச்சுடு. தனி பேமன்ட் தந்திடுறேன்... அதோட ஒரே ஒரு போட்டோ தான். ரொம்ப சிரமம் இருக்காது” என்றார்.

“லட்ச கணக்குல அதுக்கு பேமஸ் உண்டு... அப்புறம் தமிழகம் எங்கும் நீயும் உன் மகனும் தான் போலியோ ட்ராப்ஸ் க்கு மாடல்” என்று அவர் சொல்ல சரிஎன்று ஒப்புதல் கொடுத்தாள்.

வீட்டுக்கு அந்த பிறகு யாரும் அவளை துருவி துருவி விசாரிக்கவில்லை. அதுவே பெரிய விடுதலையாக எண்ணிக் கொண்டவள் சாப்பிட்டுவிட்டு பிள்ளைக்கு கொஞ்சம் சத்தான உணவை செய்து உண்ண வைத்தவள் மாடிக்கு போய் பிள்ளையை தோளில் போட்டு மெல்ல தாலாட்டி விட்டாள். அவனுக்கு கொஞ்சம் செரிமானம் ஆன உடனே கீழே கொண்டு வந்து அவனது மெத்தையில் படுக்க வைத்தவள் அவன் மீது கையை போட்டுகொண்டு வராளியும் தூங்கிப் போனாள்.

அடுத்த நாள் காலை தனக்கு என்ன வைத்து இருக்கிறது என்று தெரியாமல் நிம்மதியாக உறங்கிப் போனாள். உறங்கியவள் புத்துணர்வாக அடுத்த நாள் எழுந்து அமர்ந்து பிள்ளையை மனமாற கொஞ்சியவள் அவனை கிளப்பி விட்டு தானும் கிளம்பி ஆட் நடக்கும் இடத்துக்கு விரைந்தாள்.

அங்கே போலியோ ட்ராப்ஸ் விட இருக்கும் அமைச்சரை கண்டு மயக்கம் வராத குறை தான். சுகாதார அமைச்சர் தானே இதெல்லாம் போடணும். போலியோவுக்கும் தொழில்துறை அமைச்சருக்கும் என்னய்யா சம்மந்தம் என்று வாய்க்குள் முணகினாள் வராளி.

வராளி ஆட் நடக்கும் நகரின் மிக முக்கிய அரசு மருத்துவமனையின் முன்பு வந்து இறங்கினாள். அங்குமிங்கும் பரபரப்பாய் நோயாளிகளும் நோயாளிகளை பார்க்க வருபவர்களும் டாக்டர் நர்ஸ் அதர் ஒர்க்கர்ஸ் என அவ்விடமே சந்தை கடை போல இருந்தது.

இங்க தான் ஆட் நடக்கப் போகுதா? என்று அயர்ந்துப் போனாள். ஆட் சூட்டிங் ஆட்கள் அவளை வரவேற்று மறைவான ஒரு இடம் காட்டி “ரேயாகுங்க மேடம்.. லைட்டிங் எல்லாம் ரெடி. அமைச்சர் சாரும் வந்திடுவாங்க.. க்ரவுட் கிளியர் ஆகிடும் கொஞ்ச நேரத்துல” என்று சொல்லி விட்டு போனார்கள்.

பெருமூச்சு விட்டவள் பாட்டியிடம் குழந்தையை விட்டுட்டு மறைவான இடத்துக்கு போய் அங்கு அவர்கள் வைத்த காஸ்ட்டியூமை பார்த்தாள். புடவைதான்... மங்கலான புடவை. அளவான மேக்கப் போட ஆரம்பித்தார்கள்.

சிவப்பு நிற குங்குமம் அவளின் வகிட்டில் வைத்து திருமணம் ஆன பெண் போல ரெடி செய்தார்கள். இவ்வளவு நாள் வகிட்டில் அவள் குங்குமம் வைத்ததே இல்லை. இன்றைக்கு அவர்கள் வைக்க சொல்லி சொல்லவும் அவளின் விரல்கள் நடுங்கியது.

நடிப்பு தான் என்றாலும் என்னவோ மனம் ஒரு மாதிரி ஆனது. “ப்ச் நடிப்புக்கு தானே...” என்று எண்ணியவள் விரல் நிறைய குங்குமத்தை எடுத்து வைத்தாள். என்னவோ இவ்வளவு நாளில்லாத ஒரு மெருகு சட்டென்று வந்து ஒட்டிக் கொண்டது போல அவளுக்கு தோன்றியது.

பின் மல்லிகை பூவையும் அவளின் கூந்தலில் வைத்து விட, தோளில் வந்து விழுந்த மலர்களை வெறித்து பார்த்தாள். திருமணமான அன்றிரவு அவள் கூந்தலில் ஏறியது மல்லிகை.

திருமணம் ஆன பெண்கள் எதற்காக மல்லிகை சூடுவார்களோ அதன் பொருட்டே இவளுக்கும் சூடி விட்டார்கள். கொஞ்ச நேரம் கூட அவளது கூந்தலில் அந்த பூக்கள் இருக்கவில்லை.

உதயாதிபன் கைப்பட்டு அது உதிர்ந்துப் போனது படுக்கை எங்கும். அவளின் உடம்பில் சிதறி இருந்த பூக்களை அவனது இதழ்களாலே எடுத்த கணங்கள் எல்லாம் கண் முன் வந்துப் போனது.

“கடவுளே ஏன் எனக்கு இந்த தேவை இல்லாத நினைவுகள் எல்லாம் வருது...” நொந்துக் கொண்டவளுக்கு அந்த பூக்களை வெடுக்கென்று இழுத்து தூர தூக்கி எரிய கைகள் பரபரத்தது.

“ஆனால் இது வேலைக்காக வைத்து இருக்கிறோம்.. வேற யார் ஆசைக்காகவும் வைக்கல” என்று தன்னை தானே சமாதனம் செய்துக் கொண்டவள் கிளம்பி வெளியே வந்தாள். சரியாக அந்த நேரம் அவளின் மகன் பசிக்கு அழ,

“நல்ல வேலைக்கு ஷூட்டிங்கு இடையில கத்தி வைக்கல உன் மகன்” என்று சிரித்த பாட்டி அவளிடம் குழந்தையை நீட்டினார்.

வாங்கிக் கொண்டாள் அறைக்கு உள்ளே திரும்ப, அந்த நேரம் வேக நடையோடு உதயாதிபன் வந்தான்.

“இவரு எங்க இங்க?” எண்ணியவள் தன் மகனை கவனிக்க உள்ளே விரைந்து விட்டாள்.

“யாரு எங்க வந்தா உனக்கு என்னவாம்... நீ பாட்டுக்க உன் வேலையை பாரு” என்று தனக்குள் அறிவுறுத்திக் கொண்டவள், தன் மகனை கவனித்தாள்.

அவளுக்கு பின்னாடி வரிசையில் நிற்கும் பெண்களுக்கும் மேக்கப் டச்சப் போட்டு ரெடியாகி நின்றாகள்.

அப்பொழுது அசிஸ்டன்ட் டைரெக்டர் உள்ள வந்து அங்கிருந்தவர்களை வெளியே போகச் சொன்னான்.

“அமைச்சருக்கு கொஞ்சம் டச்சப் போட வேண்டி இருக்கு... நீங்க எல்லாம் கொஞ்சம் வெளியே இருங்க” என்று அவர்களை வெளியே அனுப்பி வைத்தான்.

தானும் எழுந்து வெளியே போக பார்க்கலாம் என்று பார்க்க, “மேம் இந்த ஸ்க்ரீனை இழுத்து விட்டுக்கோங்க” என்று அவனே இழுத்து விட்டுட்டு போய் விட்டான். இப்பொழுது அறை இரண்டாக பிரிந்து இருப்பது போல ஆனது.

பெருமூச்சு விட்டவள் நிம்மதியாக தன் மகனுக்கு பசியாற்றினாள். அவளின் பின் புறம் கரகரப்பான தொண்டையை செருமும் சத்தம் கேட்க தூக்கி வாரிப் போட்டது.

பிள்ளைக்கு பால் கொடுக்கும் நேரம் யாரிது இப்படி அத்துமீறி உள்ளே நுழைந்தது. யாரும் உள்ளே வரமாட்டார்களே... பாரதி சார் அதிலெல்லாம் ரொம்ப ஸ்ட்ரிக் ஆச்சே... எண்ணியபடி படக்கென்று திரும்பி பார்த்தாள்.

உதயாதிபன் தான் நின்று இருந்தான். அவனை இங்கு எதிர் பாராதவளுக்கு இங்கயுமா வரணும்... என்று அலுப்பு தான் வந்தது அவளுக்கு. ஆனால் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் மீண்டும் திரும்பிக் கொண்டாள்.

Loading spinner


   
Quote
(@williamsmura)
New Member
Joined: 2 hours ago
Posts: 1
 

Vertyowdiwjodko kofkosfjwgojfsjf oijwfwsfjowehgewjiofwj jewfkwkfdoeguhrfkadwknfew ijedkaoaswnfeugjfkadcajsfn saranikadevinovels.com

Loading spinner


   
ReplyQuote
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top