அவளை திரும்பி பார்த்தவனின் பார்வையில் அதித எரிச்சல் இருந்தது. “ஏய் என்னடி விட்டா ரொம்ப தான் சீனை போடுற? உன் தராதரம் தெரிஞ்சு என் கார்ல உன்னை ஏத்துனேன் பாரு என்னை சொல்லணும்டி” என்று அவன் அடிக்குரலில் சீர விக்கித்துப் போனாள் வராளி. ‘அப்போ என்னை யாருன்னு இவருக்கு தெரியுமா?’ அதிர்ந்துப் போனாள். ஆனால் அதை அவனிடம் கேட்டு தெளிவு பெற விரும்பாமல் தன் மகனிடம் ஒட்டு மொத்த கவனத்தையும் வைத்தாள்.
“மேடம் எங்க போகணும்?” என்று ட்ரைவர் கேட்டார். வராளி இடத்தை சொன்னாள்.
“அங்க என்ன வேலை?” என்று கேட்டான் உதயாதிபன். ஆனால் அவள் பதில் சொல்லவில்லை. அவளுக்கு பதிலாக பாட்டியே எல்லாத்தையும் சொன்னார்.
“பாட்டி” என்று அவள் அதட்ட,
“அட நீ சும்மா இரு பாப்பா... நம்ம அமைச்சர் தானே... பொது மக்கள் படும் அவஸ்த்தை எல்லாம் சொன்னா தானே பார்லிமென்ட்ல நம்ம கோரிக்கையை எல்லாம் வைக்க முடியும்” என்று அவர் சொல்ல,
“அது பார்லிமென்ட் இல்ல சட்டமன்றம்” என்று ட்ரைவர் திருத்தினார்.
“அது என்னவா வேணா இருந்துட்டு போகட்டும் தம்பி நாம அதை தெரிஞ்சு என்ன பண்ண போறோம். நமக்கு தேவை உதவி அவ்வளவு தான்” என்றார் பாட்டி.
“எனக்கு யாரோட உதவியும் தேவையில்லை பாட்டி... என் உடம்புல உயிர் இருக்கும் வரை என்னால சமாளிக்க முடியும்...” என்றாள் பட்டென்று.
“ஆஹான் அப்படி இருக்கிறவ எதுக்குடி என்கிட்டே இருந்து ஒரு கோடிய திருடிக்கிட்டு போன? அவ்வளவும் நடிப்பு... சரியான ஏமாத்துகாரிடி. உன் குணம் தெரியாம உன்னை என் பெட்ரூம் வரை விட்டேன் பத்தியா? அது தான் என்னோட தவறு.. ஆனா அந்த குற்ற குறுகுறுப்பு எதுவும் இல்லாம நல்லா ஜம்முன்னு தான்டி இருக்க” என்று அவளின் வனப்புகளை கூர்ந்து பார்த்தான்.
அவனது பார்வை ஒரு பக்கம் எரிச்சலை கொடுத்தாலும் தன் மீது வீண் பழியை போட்டவனை முறைத்துப் பார்த்தாள்.
“என்ன தேவைக்கு உங்க பணத்தை நான் எடுக்கணும்... அதுக்கு என்ன அவசியம் வந்தது? என்னை கழட்டி விட்டுட்டு உங்களுக்கு ஏத்த மாதிரி ரொம்ப வசதியா இருக்கிற பெண்ணை பார்த்து கல்யாணம் பண்ணிக்கிட்டு குடும்பம் நடத்தலாம்னு தானே என் மேல வீணான பழியை போடுறீங்க. நீங்க அவ்வளவு கட்டல்(ஸ்ட்ட)ப்பட்டு என்னை ஒதுக்கி வைக்கணும்னு அவசியம் இல்லை. நானே உங்களை விட்டு வந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. தாராளமா டைவர்ஸ்க்கு அப்ளை பண்ணுங்க. சீக்கிரம் கிடைச்சிடும்” என்றாள் அடிக்குரலில்.
“ஓகோ திருடுறதும் திருடிட்டு நல்லா நடிக்கிறடி. என் மேல ரொம்ப அக்கறை இருக்கிற மாதிரி நடிக்காதடி... உன் பப்பு இங்க வேகாது. அதோட இன்னும் உன்னை நினைச்சுக்கிட்டு இருப்பேன்னு கனவு காணாத... நீ போன அடுத்த மாசமே உனக்கும் எனக்கும் டைவர்ஸ் ஆகிடுச்சு... இன்னும் டைவேர்ஸ் பண்ணாம இருப்பேன்னு உனக்கு ரொம்ப தான் நினைப்பு” என்று அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் நக்கலாக சொன்னவன், உரிமையாக அவளின் மடியில் படுத்து இருக்கும் பிள்ளையை தொட்டான்.
‘எனக்கு தெரியாம டைவர்ஸும் வாங்கியாச்சா?’ பெருமூச்சு விட்டாள். டைவர்ஸ் ஆனாலும் ஒன்னும் பிரச்சனை இல்லை. ஆகாம போனாலும் அவளுக்கு ஒன்றும் இல்லை. அவளின் வாழ்க்கை தான் எப்பொழுதோ அவளின் மகனோடு என்று முடிவு எடுத்து விட்டாளே... பிறகு என்ன நடந்தால் அவளுக்கு என்ன...
அந்த நேரம் உதயாதிபன் பிள்ளையை தொட வர பட்டென்று அவனது கையை தள்ளி விட்டாள் வராளி.
“சாரி சார்... இவன் என்னோட மகன்... இவனை தொட யாருக்கும் உரிமை இல்லை.. குறிப்பா உங்களுக்கு... டைவேர்ஸ் தான் ஆகிடுச்சுல்ல. பிறகு எதுக்காக எனக்கு உங்க கருணை மழையை பொழியணும்... இனி இன்னொரு முறை உங்களை என் வாழ்க்கையில் நான் பார்க்க வேணாம்னு நினைக்கிறேன்” என்றவள் அவனது கையை தள்ளி விட்டாள். அதில் உதயாதிபனுக்கு கட்டுக் கடங்காமல் கோவம் வர வேகமாய் அவளின் இடையோடு இழுத்து தன்னோடு இறுக்கியவன்,
“என்னடி எல்லாம் மறந்து போச்சா?” என்று அவளின் காதில் உறுமினான். அதில் கொஞ்சம் பயந்துப் போனாலும்,
“இப்படி அடுத்த பெண்ணை தொட்டு பேசுறீங்களே இது தான் உங்க நாகரீகமா? முதல்ல கையை எடுங்க சார் என் மேல இருந்து” என்று அடிக்குரலில் சீறியவள் அவனை விட்டு விலக பார்த்தாள்.
“யாருடி நீ அடுத்த பெண்ணா?” என்று கேட்டவன் அவள் கொஞ்சமும் எதிர்பாரா நேரம் அவளின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை எடுத்து வெளியே விட்டான். அதில் திகைத்துப் போனவள் வேகமாய் அதை மறைக்கப் பார்த்தாள். அவளது கையை பற்றி அவளது செயலை தடுத்தவன்,
“இந்த தாலியை கட்டியது யாருடி?” என்றான் கோவமாக. அவள் பதிலே பேசவில்லை. ஏனெனில் ஊர் உலகத்தில் இது போல ஒரு தாலியை யாரும் போட்டு இருக்க மாட்டார்கள். இவள் மட்டும் தான் அப்படி போட்டு இருக்கிறாள்.
கதிரவன் நிலவு என இரு உருவத்திலும் இருவரின் பெயரும் பொரித்து புது விதமான தாலி கட்டி இருந்தான் அவளது கழுத்தில்.
கதிரவன் உதயாதிபனை குறிக்கும், அதே போல நிலவு வராளியை குறிக்கும். எப்படி பெயர் பொருத்தம் இது போல அமைந்தது என்று தெரியவில்லை. ஆனால் பெயர் பொருத்தம் ரொம்ப ஜோராக அமைந்து விட்டது. ஆனால் வாழ்க்கை தான் தலைகீழாக மாறி விட்டது.
அவனது கையில் இருந்த தாலியை வெடுகென்று பிடுங்கி தன் உடைக்குள் மறைத்துக் கொண்டாள்.
உதயாதிபன் எதுவும் பேசவில்லை. அப்படியே பின்னாடி இருக்கையில் நன்றாக சாய்ந்து அமர்ந்துக் கொண்டான். வராளிக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை. இந்த சூழ்நிலையை எப்படி கையாள்வது என்று சுத்தமாக தெரியவில்லை.
தன்னை அவனுக்கு நினைவு இருக்காது என்று எண்ணினாள். ஆனால் உன்னை மறக்கவில்லை. உன் கழுத்தில் கட்டிய தாலியையும் மறக்கவில்லை என்று உணர்த்தியவனை கண்டு நெஞ்சு துடித்தது. அதை அவனிடம் இருந்து மறைக்க வெகுவாக போராடினாள்.
அவளின் கைகள் நடுங்கியது. விழிகளில் நீர் தளும்பியது. ஆனால் அதை சமாளித்துக் கொண்டவள் குழந்தையின் புறம் கவனத்தை மாற்றிக் கொண்டாள்.
“இந்த கண்ணீருக்கு என்ன பொருள்?” என்று முறைத்தான்.
“அது என்ன வேணா இருந்துட்டு போகட்டும். அதைபத்தி உங்களுக்கு என்ன அக்கறை?”
“உடமை பட்டவன் நானாச்சே.. அதனால கொஞ்சமே கொஞ்சம் அக்கறை இருக்கு. அதோட நான் மறுபடியும் ஏமாறக் கூடாது இல்லையா?” என்று நக்கல் பண்ணினான்.
“ஓ... உடமை பட்டவன்னு இப்போ தான் தெருஞ்சதா?” காட்டமாக அவள் கேட்டவள், “எனக்கு கண்டவங்களை ஏமாற்றி பழக்கம் இல்லை. அதோட யாருடைய அக்கறையும் தேவையில்லை. உங்க அக்கறை தேவைபடுறவங்களுக்கு உங்க சேவையை போய் செய்ங்க... எனக்கு தேவை இல்லை உங்க சேவகம்” என்று சீறினாள்.
“இவ்வளவு நாள் இருக்கனா செத்தனான்னு கூட தெரியாம இருந்துட்டு இன்னைக்கு வந்து அக்கறை இருக்கு வெங்காயம் இருக்குன்னு சொல்ல வந்துட்டாரு பெரிய துரை” என்று முணுமுணுத்தவள் அடுத்த நொடியே,
“இப்ப காரை நிறுத்துறீங்களா இல்ல நான் கதவை திறந்து குதிக்கவா?” என்று மிரட்டினாள்.
“கார் சென்டர் லாக்ல இருக்கு. நீ குதிக்கனும்னு நினச்சாலும் இப்போ உன்னால குதிக்க முடியாது. பெட்டர் நெக்ஸ்ட் டைம் ட்ரை பண்ணு. உனக்காக கார் டோரை திறந்து வைக்கிறேன்” என்றான் நக்கலாக. அவனது நக்கலில் இன்னும் வெகுண்டு எழுந்தாள்.
ஆனால் அவனிடம் தன் கோவத்தை காட்ட முடியாமல் பற்களை கடித்து தன்னை தானே அடக்கிக் கொள்ள பார்த்தாள். ஆனால் அது முடியாமல் அவளது கண்களிலிருந்து கண்ணீர் கசிந்தது.
அவளின் இத்தனை நாள் போராட்டத்தை அவன் ஒன்றுமே இல்லாமல் செய்து விட்ட தோரனையை கண்டு உள்ளுக்குள் வெந்துப் போனாள். அதுவும் ஏதோ பணத்தை ஏமாற்றி விட்டது போல பேச்சு வேற... யாருக்கு வேணும் இந்த ஆளோட பணம்... என்று அவளின் மனம் வெந்தது.
இவ பெற்றோர் வாங்கின பணம் இவளுக்கு தெரியாதா என்ன????
அவன் அதை தானே குறிப்பிட்டு சொல்றான் போலவே.....
ஒரு வேலை இவன் வீட்டில், அவ தான் பணம் எடுத்துட்டு போயிட்டானு சொல்லிட்டாங்களோ🤔🤔🤔🤔🤔
அதை இந்த பக்கியும் நம்பிட்டு போல





