Notifications
Clear all

அத்தியாயம் 19

 

Admin
(@ramya-devi)
Member Admin
Joined: 1 year ago
Posts: 992
Topic starter  

 

அவளின் பயந்த சுபாவத்தை பார்த்த ஆதி,

“இன்னும் எவ்வளவு நேரம் இதே புடவையில இருப்ப.. போ போய் குளிச்சுட்டு வா” என்று அவளை தன் அறைக்கு அனுப்பியவன் தான் வேறு ஒரு அறையில் குளிக்கச் சென்றான்.

குளித்து விட்டு வந்தவன் தன் அறைக்குள் நுழைந்தான். அங்கே மகரி இலகுவான சல்வாரில் இருந்தாள். அதை பார்த்து புருவம் சுறுக்கியவன்,

“நான் இத குடுக்கலையே..” கேட்டான்.

“இல்ல நைட்டு தூங்க இது கொஞ்சம் பெட்டரா இருக்கும் அதான்” என்று தயக்கத்துடன் சொன்னவளை முறைத்துப் பார்த்தவன்,

“இன்னைக்கு தூங்க போறன்னு யார் சொன்னா?” கடுப்படித்தான். மகரி தலையை குனிந்துக் கொண்டாள்.

“போய் புடவையை கட்டு” என்றான்.

“அது..” என்று அவள் தயங்கி இழுக்க,

“என்னடி..” அதட்டினான்.

“புடவை கட்ட தெரியாது” அவளின் குரல் உள்ளே சென்றது.

“இது வேறையா?” கடுப்படித்தவன்,

“போய் மத்த எல்லாத்தையும் போட்டுட்டு வா.. கட்டி விடுறேன்” என்று சொன்னவனுக்கு எரிச்சல் தான் மண்டியது. இவன் ஒரு எண்ணத்தில் வந்து இருந்தான்.

உள்ளே நுழையும் பொழுதே மகரி புடவையில் இருப்பாள் என்று எதிர் பார்த்து வந்து இருந்தான். ஆனால் அவள் சுடிதாரில் இருப்பதை பார்த்து உள்ளே பொங்கிய உணர்வுகள் எல்லாம் அப்படியே அடங்கிப் போய் விட்டது. அதனால் விளைந்த எரிச்சலில் அவளிடம் கடுப்படித்தான்.

அவன் எடுத்துக் கொடுத்த புடவையை எடுத்துக் கொண்டு அருகில் இருந்த அறைக்குள் நுழைந்தவளுக்கு நெஞ்சம் படபடவென்று வந்தது.

ஏற்கனவே எல்லாம் அறிமுகம் தான் என்றாலும் இந்த நொடி அவளுக்குள் ஒரு பயம் வரத்தான் செய்தது. விரல்கள் நடுங்க தன் உடைகளை கலைந்து விட்டு இரவிக்கையையும் பாவடையும் அணிந்த நேரம் கதவு பட்டென்று திறக்கப்பட்டது.

அரைகுறை உடையுடன் நின்றிருந்தவளை கண்டு மீண்டும் அவனுக்குள் உணர்வுகள் பொங்கி எழுந்தது. ஆனாலும் சேலையோடு அவளை களவாட வேண்டும் என்று பொறுமையை இழுத்துப் பிடித்தவன்

“முடிஞ்சதா?” என்று கேட்டான்.

“ஒரு நிமிடம்” என்றவள் அவனுக்கு முதுகு காட்டி தன்னை சரி படுத்திக் கொள்ள பார்த்தாள். ஆனால் அதற்குள் அவனுக்கு பொறுமை போய் இருக்க, அவளின் வெற்று முதுகில் தன் முகத்தை புதைத்து மீசையால் கோலம் போட்டு மெலிதாக கடித்தவன் அவளின் உடை மறைக்காத வயிற்றிலும் இடுப்பிலும் தன் கையை வைத்து இறுக்கமாக பற்றிக் கொண்டான்.

அவனின் நெருக்கத்தில் முதுகில் மின்னல் வெட்டிப் போக, திகைத்துப் போனாள்.

“ப்ளீஸ்..” என்றவளின் கெஞ்சல்கள் எங்கோ கேட்டது. தன்னை மயக்கி வைத்து இருக்கும் பெண்ணவளை திருப்பி அவளின் கழுத்தில் முகம் புதைத்தவன், வன்மையாக அவளின் இதழ்களில் கவிதை படிக்க தொடங்கினான்.

மலர் மஞ்சம் அவர்களுக்காக அங்கு காத்துக் கொண்டு இருக்க, இங்கோ வெறும் தரையையே மஞ்சமாக்கி அவளின் மீது பரவி படர்ந்தான்.

“இல்ல டைம் இன்னும் இருக்கே” என்று குறித்துக் கொடுத்த நேரத்தை அவள் அறிவுறுத்த,

“அது தான் எல்லாம் ஏற்கனவே முடிஞ்சிடுச்சேடி அப்புறம் என்ன” என்றவன்,

“முதல்ல நீ என்னை கவனி” என்றவன் அவளுக்கு வேறு சிந்தனை எதுவும் எழாதவாறு பார்த்துக் கொண்டான். புடவை புடவை என்று அலைந்தவன் அந்த புடவையின் மடிப்பு கூட கலையாத அளவுக்கு மேசை மீது படுத்து இருந்தது.

ஆதி சிறிதும் தாமதிக்காமல் அவளின் உடைகளை கலைந்து அவளை தனக்கு நெருக்கமாக மாற்ற, “இதுக்கு எதுக்கு நான் தேவை இல்லாம உடை மாற்றினேன்” நொந்துக் கொண்டாள் மகரி.

அவளை தரையில் சரித்து அவளுடன் ஒன்றினைந்தவன், அடுத்த கட்டத்துக்கு செல்ல, இவள் தான் தளர்ந்துப் போனாள்.

எல்லாம் முடித்து அவன் விலகிப் படுக்க, எழுந்து குளியல் அறைக்குள் சென்று தன்னை சுத்தம் செய்துக் கொண்டு துண்டுடன் வெளியே வர,

அவளை அப்படியே தூக்கி மலர் மஞ்சத்துக்கு தூக்கிக் கொண்டு போனான்.

“போதுமே..” என்று அவள் பதற,

“இன்னைக்கு எல்லாம் கணக்கு பார்க்க முடியாதுடி” சொன்னவன் அவளை மலர் படுக்கையில் உருட்டி விட்டான். அதில் உருண்டதால் அவளின் வெற்று தேகத்தில் பூக்கள் எல்லாம் ஒட்டிக் கொண்டது.

அதை பார்த்த ஆதிக்கு தன் உதடுகள் இருக்க வேண்டிய இடத்தில் மலர்களின் இதழ்கள் இருப்பதை கண்டு கோவம் வர, வேகமாக அவளின் அருகில் வந்து விழுந்தவன், தன் முரட்டு இதழ்களால் அவள் மேனியில் ஒட்டி இருந்த மென்மையான இதழ்களை எடுத்து கீழே போட்டான். அதிலும் அவனின் பொறுமை போக, கடித்து எடுத்தான். அதில் பெண்ணவளின் மேனியில் அவனின் பற்தடம் பதிந்துப் போக,

“ப்ளீஸ்..” என்று கெஞ்சினாள். அவனின் இந்த செயலில் பெண்ணவளுக்குள் பெரும் கிளர்ச்சி எழுந்தது. அதை அவனுக்கு காட்டாமல் மறைக்கப் போராடியவள் அவனை விட்டு எழுந்து ஓடப்பார்க்க, விரட்டி இரண்டே எட்டில் அவளை பிடித்தவன் வன்மையாக அவளின் நெஞ்சுக்குள் புதைந்துப் போனான்.

அதை எதிர் பாராதவள் திகைத்து அவனை தள்ளி விடப் பார்க்க, அவளுடன் இன்னும் அதிகமாக ஒட்டிக் கொண்டவன் அவளை படுக்கையில் தள்ளி அவளோடு கட்டி உருண்டு மஞ்சத்தை போர்க்களம் ஆக்கினான் ஆதித்யன்.

அவனின் தீரத்தில் திகைத்துப் போனவளுக்கோ வெட்கம் பிடுங்கி தின்றது.

“வேணாமே..” என்றவளின் பேச்சுக்கள் எல்லாம் அவனின் இதழ்களுக்குள்ளே அடங்கிப் போக, அவளுக்கு வன்முறையை கற்றுக் கொடுத்தான்.

“மாட்டேன்” என்று அவள் அவனுக்கு முதுகு காண்பிக்க அவளோடு இணைந்துக் கொண்டவன்,

அவளின் காதில் தன் தேவைகளையும் ஆசையையும் சொல்ல, வெட்கம் பிடுங்கி தின்றது அவளுக்கு.

“மாட்டவே மாட்டேன்” என்று அவள் தலையணையில் முகம் புதைத்துக் கொள்ள, அவளை புரட்டி போட்டு அவளின் இரு கைகளையும் தலைக்கு மேல் பிடித்துக் கொண்டவன், அவளுள் வரைமுறை இன்றி அத்து மீறினான்.

“கடவுளே” என்று மருதாணிப் போல சிவந்துப்போனவளின் வெட்கம் அவனை இன்னும் அதிகமாக ஈர்க்க, அவளுடன் இரவு முழுவதும் ஒன்றிப் போய் கிடந்தான்.

அவன் தேட தேட தன்னை கொடுத்து மிகவும் களைத்துப் போய் தூங்கி இருந்தாள். அவளின் முகத்தில் இருந்த சோர்வை கண்ட ஆதி அவளின் நெற்றியில் அழுத்தமாக முத்தம் கொடுத்தவன் அவளுடன் இணைந்து படுத்துக் கொண்டான்.

அவளை சுற்றி கையையும் காலையும் போட்டுக் கொண்டவனின் மனம் மெல்ல மெல்ல அவள் பால் சாயத் தொடங்கியது.

அடுத்த நாள் காலையில் மிகுந்த அயர்வுடன் எழுந்தவள் குளித்து விட்டு வர,

“புடவை கட்டு” என்று மல்லுக்கு நின்றான்.

அவனின் குணம் தெரிந்து “போய் தொலை” என்று புடவைக்கு மாறினாள். நேற்று போல அவன் வம்பு எதுவும் பண்ணாமல் அவளுக்கு புடவை கட்டி விட்டவன்,

“பியூட்டி பார்லர்ல இருந்து ஆள் வருவாங்க.. சேரி எப்படி கட்டுறதுன்னு கத்துக்க” என்றவன் குளிக்க சென்றான்.

புடவை கட்டி விட்ட பொழுது அவன் விரல்கள் அங்கும் இங்கும் அவளை தீண்டு சிவக்க வைத்ததில் முகம் அந்தி வானமாய் சிவந்துப் போனது. அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் இருக்க அவள் பெரிதும் பாடு பட வேண்டி இருந்தது. ஆனால் ஆதி ஒற்றை விரலால் அவளின் கன்னத்தில் கொடு இழுத்து,

“இந்த சிவப்பு உனக்கு நல்லா இருக்கு” என்று விட்டு போனான். அதில் மூச்சடைத்து நின்றாள் சில கணங்கள்.

Loading spinner


   
Quote
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top