ஆதியின் முகம் தன் கழுத்தில் அழுத்தமாக பதிந்து அங்கும் இங்குமாக நகர, அவனின் தலையை அழுத்தமாக பிடித்துக் கொண்டு அசைய விடாமல் செய்தவள்,
“இதெல்லாம் சீட்டிங்” என்றாள்.
“எனக்கு ஸ்ட்ரெஸ் ஓவர் டோஸ் ஆகிடுச்சு. சோ அதுக்கு ஏற்ற மாதிரி பிளேசும் மாறும்” என்றான் அடாவடியாய்.
“அதுக்குன்னு இதெல்லாம் பண்ணா நான் எப்படி என் லவர் பாய்க்கு உண்மையா இருக்க முடியும்” கேள்வி கேட்டவளை அவளின் கழுத்தில் இருந்து கீழிறங்கி அவளின் மார்பில் புதைந்துக் கொண்டு முகத்தை மட்டும் மேல் நோக்கி அவளின் விழிகளை பார்த்து,
“மெடிசின்னு சொன்னா தவறா எடுத்துக்க மாட்டான். நீ வேணா ட்ரை பண்ணிப் பாரேன்” என்றான்.
“எங்க அவனுக்கு போன் போட்டா தான் எடுக்கவே மாட்டேங்குறானே” அலுத்துக் கொண்டாள்.
“அப்போ சைட்ல எதுவும் செட் பண்ணிட்டனோ என்னவோ..” என்றவனை முறைத்தவள்,
“இப்படி எல்லாம் பேசினா நான் கோவமா போயிடுவேன்” முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள்.
“சரி சரி உன் லவர் பாய் ரொம்ப ரொம்ப நல்லவன் தான் போதுமா?” என்று அவன் கேட்ட பிறகும் அவள் இயல்புக்கு வராமல் போக,
“தோப்புக்கரணம் போட்டா தான் மேடம் சமாதானம் ஆகுவீங்களோ”
“ஹாங்.. இது குட் ஐடியா.. போடுங்க தோப்புக்கரணம்”
“கவுண்டிங் உண்டா?” நக்கலாக கேட்டவனுக்கு
“கண்டிப்பா.. நான் எண்ணுவேன்” என்றவள் அவனிடம் இருந்து விலகி எழுந்து நின்றுக் கொண்டு, விரல் விட்டு எண்ண ஆரம்பிக்க,
“நான் தோப்புக்கரணம் போடுறேன். ஆனா தனியா இல்ல..” சொன்னவன் அவள் கண்ணிமைக்கும் நேரத்தில் அவளை சுழற்றி தன் இடுப்புக்கு அலேக்காக தூக்கி வைத்துக் கொண்டவன் உட்கார்ந்து உட்கார்ந்து எழ, வாயை பிளந்துப் அவனை பார்த்தாள்.
“செம்ம மசில்ஸ்” என்று அவனின் உருண்டு திரண்டு இருந்த புஜத்தை பார்த்தவள்,
“இப்படி ஒரு பெண்ணை இடுப்புல தூக்கி வச்சு இருக்கீங்களே. நாளைக்கு உங்களுக்கு பொண்ணு பார்க்க போனா என்ன ஆகுறது...” கேட்டவளை கூர்ந்துப் பார்த்தவன் ஸ்குவாட்ஸ் எடுத்துக் கொண்டே அவளின் இதழ்களை நறுக்கென்று கடித்து வைத்தான்.
“ஸ்... ஆ ஏன் இப்படி கடிச்சு வைக்கிறீங்க..” இதழ்களை நாவால் வருடிவிட்டு அவனை முறைத்தாள்.
“என் கல்யாண விசயத்தை பத்தி பேசாதடி.. கடுப்பு வருது” என்றான் கோவமாக.
“ஏன் கல்யாணம் பிடிக்காதா?” அவனின் இடுப்பில் இரு பக்கமும் கால்களை போட்டுக் கொண்டு சொகுசாக அமர்ந்துக் கொண்டு அவனிடம் பேச்சை வளர்த்துக் கொண்டு இருந்தாள் மகரி.
அவள் கேட்கும் கேள்விக்கு பதில் சொன்னவனுக்குள் இரகசிய புன்னகை மிளிர்ந்தது. பின்ன எவ்வளவு நாள் ஆச்சு இப்படி அவளை தூக்கி சுமந்து. அந்த பரவசத்தில் இன்னும் வேகமாகவே ஸ்குவாட்ஸ் எடுத்தான்.
“பிடிக்காதுன்னு இல்ல.. ரொம்ப பிடிக்கும்...”
“அப்புறம் என்ன கட்டிக்க வேண்டியது தானே..” என்றவளை ஆழ்ந்துப் பார்த்தவன்,
“என்னை அடி ஆழம் வரை காதலிக்கிற பொண்ணு வேணுமேடி, என்னையே மறந்துப் போற அளவுக்கு அவளை மட்டுமே நினைக்கிற அளவுக்கு பொண்ணு வேணும். அவளுக்கு நான் எங்கப் போறது..” என்றவனை திகைத்துப் போய் பார்த்தாள்.
“என்னடி அப்படி பார்க்கிற.. கல்யாணம்னா சும்மான்னு நினைச்சியா? என்னையே புரட்டி போடுற அளவுக்கு ஒருத்தி வரணும்டி.. அவ தான் என் சகலம்னு நான் உணரனும். முக்கியமா என்னை உண்மையா லவ் பண்ணனும். அந்த மாதிரி ஒருத்தியை காட்டு.. வேணான்னா ஒரு... ஒரு மாசம் பழகிப்பார்க்கிறேன். ஒத்து வந்தா கல்யாணம் பண்ணிக்கிறேன்” என்றான்.
“என்னது பழகி பார்க்குறீங்களா?” வாயை பிளந்தாள். குருவியாய் வாய் பிளந்தவளின் இதழ்களில் தன் இதழ்களை அழுத்தமாக புதைத்துக் கொண்டவன்,
“பெண்ணு தேடுறியா?” அவளின் மூக்கோடு மூக்கு வைத்து கேட்டவனை கண்டு முறைத்தவள்,
“உங்களுக்கு எல்லாம் பொண்ணு தேடவே முடியாது சாமி” பெரிய கும்பிடு போட்டாள்.
“ஏன்டி இப்படி சொல்ற?” கேட்டுக் கொண்டே அவன் தம் பிடித்து ஸ்குவாட்ஸ் எடுத்தான்.
“பின்ன இந்த காலத்துல உண்மையா லவ் பண்ணனுமாம், புரட்டி போடுற மாதிரி லவ் பண்ணனுமாம்.. எவ கிடைப்பா.. அவ அவ ஒரே டைம்ல டைரெக்ட்டா நாலஞ்சி பிக்கப் பண்ணி, அது இல்லாம சைடுல போன்லயே யாருக்கும் தெரியாம நாலஞ்சு சேனல் ஒப்பேன் பண்ணி வாழ்ந்துட்டு இருக்காங்க. இதுல சாருக்கு உண்மையா இருக்கணுமாம்.. அதுக்கு நான் எங்க போறது” உதட்டை சுளித்தாள்.
“பக்கத்துல தான் எங்காவாது இருப்பா.. நல்லா சுத்தி பாருடி” என்றான்.
“லொள்ளா” முறைத்தாள்.
“இல்லடி உண்மையாவே குரங்கு குட்டி மாதிரி எங்காவது தொங்கிக்கிட்டு இருப்பா. நீ மனசு வச்சு நல்லா தேடுநீனா ஒருவேளை கிடைக்க வாய்ப்பு இருக்கும் ல அதனால சொன்னேன்” என்றான்.
“ம்கும்... வாம்மா உன்னை பிடிச்சுட்டு போறேன்னு நமக்காக குரங்கு குட்டி மாதிரி தொங்கிக்கிட்டு இருப்பாங்கலாக்கும்.. நினைப்பு தான்” என்றவளின் முகம் வியர்வை வழியும் அவனின் மார்பில் பட்டு உரசிக் கொண்டே இருந்தது.
அந்த சின்ன தீண்டலில் ஆணவனுக்குள் மெல்லிய புயல் கிளம்பியது.
அதுவும் அவளின் கூர் மூக்கு அவனின் மார்பில் உரசி உரசி செல்ல, அந்த தீண்டலில் கிளர்ந்து எழுந்தான். எடுத்துக் கொண்டு இருந்த ஸ்குவாட்சை நிறுத்தி விட்டு சுவர் பக்கம் திரும்பி பெண்ணவளை சுவரோடு சாய்த்து தன்னை தீண்டி தாபத்தை கிளப்பி விட்ட பெண்ணவளின் நுனி மூக்கை பற்கள் படாமல் கடித்து வைத்து, அதற்கு கீழே கோவைப்பழ சிவப்புடன் துடித்துக் கொண்டு இருந்த அவளின் பட்டு இதழ்களை கவ்விக் கொண்டான்.
“ஹாங்..” என்று அதிர்ந்துப் போனவள் அவனிடம் இருந்து விலகப் பார்த்தாள். ஆனால் அவன் இரசித்து ருசித்து குடுக்கும் முத்தத்தில் தன்னை மறந்து உருகிப் போனவள்,
“ஆதி...” என்று முணகி அவனின் பின்னந்தலையோடு இரு கை விரல்களையும் கோர்த்துக் கொண்டவள் தன்னை அவனுக்கு ஏந்திக் கொடுத்தாள் பெண்ணவள்.
“இந்த மாதிரி மெல்ட்டாகுற அளவுக்கு முத்தம் குடுக்க எங்க இருந்து கத்துக்கிட்டீங்க..” அவனின் இதழ் முத்தத்தில் இருந்து விலகிக் கொண்டே அவள் கேட்க,
“ஏன் நீயும் அங்க டியூசன் சேரப்போறியா என்ன?” நக்கலுடன் கேட்டான்.
“இந்த நக்கல் தானே வேணான்னு சொல்றது..” என்றவள்,
“உண்மையா சொல்லுங்க.. எங்க இருந்து கத்துக்கிட்டீங்க..?” ஆர்வத்துடன் கேட்டவளை ஆழ்ந்து கூர்ந்துப் பார்த்தவன்,
“கண்டிப்பா சொல்லியே ஆகணுமா?” கேட்டான்.
“ம்ம்.. கண்டிப்பா சொல்லணும். எனக்கு தெரிஞ்சுக்கணும்” என்றாள்.
“தெரிஞ்சு என்னடி பண்ண போற?”
“என் லவர் கிட்ட டெமோ காட்டுவேன்ல” என்றவளை முறைத்தவன்,
“அவன் வரும் பொழுது வரட்டும். இப்போ நீ எனக்கு டெமோ காட்டு” என்றான் கடுப்பாக.
“அதை அப்புறம் பார்த்துக்கலாம், இப்ப நீங்க கத்துக்கிட்ட இடத்தை சொல்லவே இல்லையே, அதை முதல்ல சொல்லுங்க” என்றாள் மிகுந்த ஆர்வத்துடன்.
அவளின் முகத்தில் வந்து போன ஆர்வத்தை பார்த்துக் கொண்டே “இங்க தான் கத்துக்கிட்டேன்” என்று சொல்லி அவளின் இதழ்களில் மீண்டும் ஆழமாக முத்தமிட்டான்.
“ஹாங்..” என்று மீண்டும் அதிர்ந்துப் போனவளை அதிகம் யோசிக்க விடாமல் அவனுடன் தண்டால் எடுக்க வைத்தான்.
“இதெல்லாம் போங்கு.. நான் ஒல்லியா தான் இருக்கேன். என்னை எதுக்கு தண்டால் எடுக்க சொல்றீங்க?” சிணுங்கிக் கொண்டே அவனுடன் தண்டால் எடுத்தாள்.
தண்டால் எடுத்தவளின் முணுமுணுப்பை கண்டுக் கொள்ளாமல் அவளுக்கும் தரைக்கும் நடுவில் புகுந்தவன் தன் மீது அவளை இழுத்துக் கொண்டு அவளை அப்படியே புரட்டி கீழே தள்ளி அவளின் மீது முழுமையாக ஏறி படர்ந்துக் கொண்டவன், அவளின் வியர்வை மணத்தை உள்ளுக்குள் இழுத்துக் கொள்ள பார்க்க, அவனின் மீசை முடி உரசலில் சிலிர்த்துப் போனவள்,
“வேணாம்.. நீங்க ரொம்ப எல்லை மீறுறீங்க..” என்று சொன்னவள் அவனின் வன்மையான இதழ்கள் அவளின் கழுத்தில் பதிந்து கீழே இறங்க, அப்படியே மயக்கம் போட்டு விழுந்தாள்.
அவளின் தலை துவண்டு விழ, தன்னையே நொந்துக் கொண்டவன்,
“இதுக்கு தான்டி அதிகமா உன்னை தேடுறதே இல்லை..” வாய் விட்டு தன் இயலாமையை வெளிப்படுத்தியவன் அவளை பூப்போல கட்டிலில் படுக்க வைத்து விட்டு காரை எடுத்துக் கொண்டு வெளியே போய் விட்டான்.
அவன் காரை எடுத்துக் கொண்டு வெளியேப் போன அடுத்த நிமிடமே கேசவிடம் இருந்து போன் வந்து விட்டது ஆதிக்கு.
“நிம்மதியாவே இருக்க விட மாட்டியாடா” போனிலே அப்படி கத்தினான் ஆதி.
“டேய் ஏன்டா உன் நிலைமை பத்தி உனக்கு தெரியாதா?” என்று அவன் தவித்துப் போக,
“அவக்கூட இருந்தா நான் மூச்சு முட்டி செத்துப் போயிடுவேன் அப்போ பரவாயில்லையாடா உனக்கு?” கண்கள் சிவக்க ஆத்திரத்துடன் கேட்டவனின் கேள்வியில் கேசவனுக்கு உயிர் துடித்துப் போனது.





