Notifications
Clear all

அத்தியாயம் 36

 

Admin
(@ramya-devi)
Member Admin
Joined: 1 year ago
Posts: 979
Topic starter  

செல்வத்துக்கு கண்ணை கட்டிக் கொண்டு வந்தது... அவனின் ஒரே ஒரு பிடிப்பு அவனது குழந்தை தான். அந்த குழந்தைக்கு இவ்வளவு க்ரிட்டிகல் என்று அறிந்த உடனே அப்படியே இருட்டிக் கொண்டு வந்தது.

பணம் கட்ட சொல்ல செல்வத்திடம் அவ்வளவு பணம் இல்லை. அவர்களும் நடுத்தர வர்க்கம் தான். அதுவும் தற்பொழுது செல்வம் எந்த வேலைக்கும் போகாததால் அவனிடம் சுத்தமாக பணம் எதுவும் இல்லை.

எதை வைத்து தன் பிள்ளைக்கு பணம் கட்டுவது என்று அவன் தவித்துக் கொண்டு இருக்க, அவனோடு சேர்ந்து மற்றவர்களும் தவித்துக் கொண்டு தான் இருந்தார்கள். விதுலிடம் பெருவளத்தானும் ஆதினியும் பணம் கொடுத்து வைத்திருக்க

“பணம் எல்லாம் இருக்கு.. எப்படியும் தேவை படும்னு அக்கா போன வாரமே பேங்க்ல இருந்து எல்லா பணத்தையும் எடுத்து வச்சிட்டாங்க. அதே போல டெலிவரிக்கு பணம் தேவை படும்னு மாமாவும் கடையில வர்ற பணத்தை எல்லாம் பேங்க்ல போடாம கையில வச்சு இருந்தாங்க இந்த நான்கு மாதமா. அதனால கேஷ் ரெடியா இருக்கு. வாங்க போய் கட்டிட்டு வந்திடலாம்” என்று செல்வத்தை அழைத்தான்.

அன்றைக்கு யாரை மண்டபத்தில் வைத்து அசிங்கப்படுத்தி அவமானப்படுத்தினானோ இன்றைக்கு அவர்கள் தான் அவனின் குழந்தையை காப்பாற்றி இருக்கிறார்கள். பணம் காசாக்காட்டும், நான் இருக்கிறேன் என்று கூட நிற்ப்பதாகட்டும், உதிரம் கொடுத்து தலை காத்தவர்களின் பண்பில் கூனி குறுகிப் போனான்.

தக்க சமயத்தில் செய்த உதவி மலையளவு உயர்ந்து தெரிந்து அவனுக்கு. விதுலோடு சென்று பணம் கட்டிவிட்டு வர, பிரபு அங்கிருந்த அத்தனை பேருக்கும் டீ காபி வங்கி வந்து கொடுத்தான். செல்வத்துக்கு மனமே இல்லை.

உதிரம் கொடுத்து விட்டு பெருவளத்தானும் சஞ்சுவும் வெளியே வந்தார்கள். ஆதினி வரவே இல்லை. உள்ளேயே இருந்தாள். அவர்களிடம் விசாரிக்க “எதுவும் தெரியல” என்றார்கள்.

மூன்று மணி நேரம் கடந்த பிறகும் ஒரு தகவலும் வரவில்லை. கனிகாவை பற்றிய செய்தியும் வரவில்லை. குழந்தையை பற்றிய செய்தியும் வரவில்லை. அப்படியே சரிந்து அமர்ந்து விட்டான் செல்வம். யாரும் யாரையும் தேற்ற முடியவில்லை. அவரவர் மன வேதனையில் அவரவர் இருந்தார்கள்.

அப்பொழுது கனிகா இருந்த கதவு மட்டும் திறந்தது. “ரொம்ப இஞ்சுரி ஆகி இருக்கு. இப்போ காப்பாத்திட்டோம். பட் அவங்களால இன்னொரு குழந்தைக்கு தாயாக முடியாது. சேபா பாத்துக்கோங்க” என்று சொல்லிவிட்டு போக பெரிய உயிரை காப்பாத்தின மகிழ்ச்சி ஒரு புறம், ஆனால் இனி குழந்தை பிறக்காது என்று எப்படி அவளிடம் சொல்வது என்று மறுகிப் போனார்கள்.

இன்னொரு பக்கம் சின்னப் பிள்ளைக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. ஒரே கலக்கமாகவே இருந்தது அனைவருக்கும்.

நேரம் சற்று செல்ல ஆதினி மட்டும் வெளியே வந்தாள். அவ்வளவு சோர்வு அவளிடம்.

“பேபி எப்படி இருக்கு?” எல்லோரையும் முந்திக்கொண்டு பெருவளத்தானும் செல்வமும் ஒரே குரலில் கேட்க இருவரையும் பார்த்தவள்,

“பெட்டர்னு சொல்லி இருக்காங்க. பட் ஆக்சிஷன் மாஸ்க் போட்டா தான் ப்ரீத் பண்றதா சொல்றாங்க. நாளைக்கு ஒரு ஸ்பெஷலிஸ்ட் வரதா சொல்லி இருக்காங்க. அவங்கக்கிட்ட சஜஷன் கேட்டுட்டு மைனர் ஆபரேஷன் பண்ணனும். வெயிட் பண்ணி பார்க்கலாம்னு சொன்னாங்க” என்று உதடு துடிக்க சொன்னவளுக்கு கண்ணீர் நிற்கவில்லை.

பிறந்த பிள்ளையை ஆக்சிஷன் மாஸ்க்கோடு பல ஒயர்களுக்கு மத்தியில் பார்த்த காட்சி அவளின் கண்ணை விட்டு நீங்கவே இல்லை.

“எப்படியாவது எங்க கிட்ட வந்திடுடா கண்ணா. சித்தி உன்னை என் கண்ணுல வச்சி பார்த்துக்குறேன்” என்று கலங்கிப் போனாள்.

அனைவரின் வேண்டுதலும் ஒன்றே ஒன்று தான். பிள்ளையை திருப்பி எங்க கிட்டயே குடுத்திடு கடவுளே என்பது மட்டும் தான்.

நாளைக்கு ஆபரேஷன் சொல்லி இருக்க இன்னும் பணம் தேவை பட்டது. அதோடு குழந்தையின் உதிர வகையில் இரண்டு பாட்டில் உதிரம் ஏற்பாடு செய்ய சொல்லி சொல்லி இருக்க, பிரபு அவனது செவிங்க்சை கொண்டு வந்து கொடுக்க அது பத்தாதே.. பெருவளத்தான் விதுலை கடைக்கு ஓடிப்போய் இன்னும் பணத்தை எடுத்துக் கொண்டு வர சொன்னான். நாளைக்கு லோடுக்கு எடுத்து வைத்திருந்த மொத்த பணத்தையும் கட்ட சொல்லி சொல்லி விட்டான்.

யாரோட பிள்ளையோ என்று அவன் நினைக்கவில்லை. அவனது பிள்ளையாகவே அவன் பார்க்க காசை பெரிதாக எண்ணத் தோன்றவில்லை.

ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு ஆதினியும் பெருவளத்தானும் ஒவ்வொரு ப்ளட் பேங்க்காக ஏறி இறங்கினார்கள் அந்த அதிகாலைப் பொழுதில்.

இரவு முழுவதும் ஓடியே கலைத்து இருந்தார்கள். இரத்தம் கொடுத்தது வேறு அவர்களை சோர்வுற வைத்திருக்க,

“ஜூஸ் ஒன்னு குடிச்சுட்டு போவமோ” கேட்டான்.

“ம்ம்...” என்றவளுக்கு மனமே ஆறவில்லை.

“என்ன ஆச்சு உன் முகம் ஏன் இப்படி இருளடைஞ்சி போய் இருக்கு?” கேட்டான் யோசனையுடன்.

“கனிகா வேணும்னே அவளோட பின் பக்கம் இடுப்பு அடி படுற மாதிரி என்னவோ செய்து இருக்கா” என்று சொன்னாள்.

“என்ன குட்டி சொல்ற?” அதிர்ந்துப் போனான்.

“ம்ம் அங்கிருந்த நர்ஸ் எல்லாம் இதை தான் பேசிட்டு இருந்தாங்க. ஆக்சுவலி இப்படி செய்துக்கமா இருந்து இருந்தா அவளுக்கு இந்த க்ரிட்டிகல் வந்து இருக்காதுன்னு சொல்றாங்க. ஆனா குழந்தைக்கு இது இயற்க்கையாவே இருந்ததுன்னு சொன்னாங்க..” என்றவள் அவனை பார்த்தாள்.

“நம்ம மேல உள்ள கோவத்துல இப்படி பண்ணிக்கிட்டாளா...?” அதிர்ந்துப் போனான்.

“இல்ல இவ மனதுல வேற என்னவோ இருக்கு.. ஆனா அவ நினைக்கிறதை நாம நடக்க விட கூடாது” என்று ஆதினி குறிப்புக் காட்ட, பெருவளத்தானுக்கு நெஞ்சு கனத்துப் போனது.

“ஒரு உயிர் போய் தான் நீயும் நானும் சேரணும்னா நாம அப்படி சேரணும்னு எந்த அவசியமும் இல்லை” என்றான் விரக்தியுடன்.

“ம்ம்ம் அதே தான். அந்த ஒரு காரணத்துக்காக மட்டும் தான் உங்க அப்பா பார்த்து இருக்கிற மாப்பிள்ளையை கல்யாணம் செய்துக்க போறேன்” என்றாள். தன் சோகத்தை கொஞ்சம் கூட வெளியே காட்டிக் கொள்ளாத குரலில்.

அதை கேட்டு உள்ளம் துடித்தாலும், “நல்ல முடிவு. கீப்பிட்டப்” என்றான். சொல்லும் பொழுதே உடலை விட்டு உயிர் தனியே வெளியே வந்து நெருப்பில் விழுந்தது போல துடித்தது. அவனாலும் கனிகாவை இப்படி விட்டுட்டு ஆதினியோடு போய் விட முடியாதே. அதனால் இருவரும் இந்த முடிவில் மிகத் தெளிவாக இருந்தார்கள்.

இருவரும் பக்குவம் நிறைந்தவர்கள். பொறுப்புகளை சுமந்து வாழ்கிறவர்கள். இவர்களால் யாருடைய மனதையும் அவ்வளவு எளிதாக காயம் செய்துவிட முடியாது. மற்றவர்களால் இவர்கள் தான் அதிகம் காயம் பட்டு போவார்கள்.

நமக்காக வாழ்வதை விட மற்றவர்களுக்காக வாழ்வது தானே சிறப்பு.. என்று அதை தங்களின் வாழ்க்கையிலும் கடை பிடிக்கிறார்கள். நடப்பவை யாவும் நல்லவையாக நடக்கட்டும். இதை தவிர வேறு என்ன சொல்ல முடியும்.

பெருவளத்தான் வண்டியை ஓட்ட, அவனின் பின்னாடி அமர்ந்து இருந்தாள் ஆதின். போனில் சேர்ச் பண்ணிக்கொண்டே ஒவ்வொரு ப்ளட் பேங்க்காக ஏறி இறங்கி கடைசியாக ஒரு இரத்த வங்கியில் இவர்களுக்கு தேவைப்பட்ட உதிரம் இருக்க வாங்கிக்கொண்டு வந்தார்கள்.

அதற்குள் அந்த ஸ்பெஷலிஸ்ட் வந்து இருக்க ஆதினியும் செல்வமும் ஓடிபோய் அவரை பார்த்தார்கள். அவர் சொன்னதை கேட்டு கொஞ்சம் நம்பிக்கை வந்தது இருவருக்கும்.

“என்ன சொன்னாங்க..?” என்று எல்லோரும் கண்ணீரை துடைத்துக் கொண்டு கேட்க,

“நூறு சதவீதம் அவங்களோட முயற்சியை குடுக்குறதா சொல்லி இருக்காங்க. பதினோரு மணிக்கு ஆபரேஷன் ஆரம்பிக்குமாம். எப்படியும் மூணு மணி நேரம் ஆகுமாம். கனிகா எப்படி இருக்கா? இடையில கண் முழிச்சாளா?” என்று கேட்டார்கள்.

Loading spinner


   
Sowmya reacted
Quote
(@gowri)
Reputable Member
Joined: 12 months ago
Posts: 299
 

Ithu romba அநியாயம் ரைட்டர் 🥺🥺🥺🥺🥺

Loading spinner


   
ReplyQuote
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top