பெருவளத்தான் வந்து அவளை பார்த்துவிட்டு போவன். இன்னொரு பக்கம் செல்வமும் அடிக்கடி வீட்டுக்கு வந்து விட்டு போகவும் குமுதாவுக்கு தலையை பிய்த்துக் கொண்டு எங்காவது ஓடிவிடலாமா என்று தோன்றும். அதுவும் அக்கம் பக்கம் உள்ளவர்களுக்கு பதில் சொல்லி மாளவில்லை அவருக்கு பாவம்.
இப்படியே அனைவரையும் கலங்கடித்துக் கொண்டு இருந்த நாட்களில் ஒரு நாள் நள்ளிரவில் கனிகாவுக்கு இடுப்பு வலி எடுத்தது. இடுப்பு எலும்பு நொறுங்கி விடுவது போல அப்படி ஒரு வலி எடுக்க,
“அம்மா ஆதினி” என்று கனிகா இரவு பொழுதில் அலறிவிட, அவளின் அருகில் படுத்து இருந்த ஆதினி சட்டேன்று எழுந்து,
“என்னக்கா ஆச்சு... ஏன் இப்படி வேர்த்து போய் இருக்க” என்று அவளுக்கு துடைத்து விட வர,
“ஆதினி ரொம்ப இடுப்பு வலிக்கிதுடி. பிள்ளையை எப்படியாவது காப்பாத்துடி” என்று கண்ணீருடன் சொன்னவளை பார்த்து பதறியவள்,
“ஒன்னும் ஆகாதுக்கா... நீ எதுக்கும் மனசை போட்டு உழப்பிக்காத” என்றவள், “இரு அம்மா கசாயம் வைக்க சொல்லி சொல்லியிருக்காங்க. அதை வச்சு எடுத்துட்டு வரேன்..” என்பதற்குள்,
“ஆதினி அடி வயிற்ரை என்னவோ பண்ணுதுடி” என்று சொல்லி முடிக்கும் முன்பே அவளுக்கு கீழே ஒரே உதிர போக்கு போக ஆதினி ரொம்பவே பயந்துப் போனாள்.
“இருடி நான் போய் அம்மாவை கூட்டிட்டு வரேன்” என்று இன்னொரு அறைக்கு போனாள். இரவு பொழுது எல்லாம் கனிகா முழித்து இருக்கவும் இவரும் முழித்து இருக்க வேண்டி இருந்தது. அதனால் இன்றைக்கு காலையில் தலை சுத்தல் மாதிரி இருக்கவும் ஆதினி தான் “இன்னைக்கு ஒரு நாள் நான் அவக்கிட்ட படுத்துக்குறேன். என்ன செய்யனும்னு மட்டும் சொல்லுங்க” என்றாள்.
“வலி வந்தா சீரகம் தண்ணி வச்சு குடு... சூட்டு வலி படி படியா குறைஞ்சிடும். வேற எதுவும் பண்ண வேணாம். அவளுக்கு பசிச்சா சாப்பிட குடு” என்று சொல்லிவிட்டு குமுதா தூங்க போய் விட்டார். அதோடு மருத்துவர் டேட் கொடுத்தது இன்னும் பதினைந்து நாள் இருக்கே என்பதால் அவர் கொஞ்சம் அசால்ட்டாக இருந்து விட்டார்.
உதிரம் சொட்ட சொட்ட நின்றவளை கண்டு உள்ளம் துடித்துப் போக கனிகா என்று அனைத்துக் கொண்டார்.
“ஸ்... அழறதை முதல்ல நிறுத்துங்க. தைரியம் சொல்லுவீங்கன்னு பார்த்தா இப்ப தான் அவளோட அழுதுட்டு இருக்கீங்க” அதட்டியவளிடமும் படபடப்பு தன். ஆனால் வெளியே எதையும் காட்டிக் கொள்ளாமல் கார் சாவியை எடுத்துக் கொண்டவள் விதுலும் வைகுந்தனும் கனிகாவை தூக்கி வந்து கார் இருக்கையில் அமர வைத்து விட்டு குமுதா ஒரு பக்கமும் வைகுந்தன் ஒரு பக்கமும் அமர்ந்துக் கொண்டார்கள்.
“விதுல் ஸ்கூட்டி தேவை படும், நீ ஸ்கூட்டில வந்திடு. அப்படியே உங்க மாமாவுக்கும், வேதாவுக்கும், செல்வத்துக்கும் போன் போட்டு வர சொல்லு” என்று சொன்னவள் வேகமாக வண்டியை ஓட்டினாள். இரவில் அதிக நெரிசல் இல்லாததால் மேடு பள்ளம் எல்லாம் பார்த்து நேர்த்தியாகவே வண்டியை ஓட்டினாள்.
“ஆதினி” என்று கனிகா முனக,
“என் மேல உள்ள கோவத்துல என் பிள்ளையை ஒன்னும் செய்துட மாட்டல்லடி”
“அறைஞ்சேன்னு வை” என்று திட்டியவள்,
“லூசடி நீ உன் வயித்துல இருக்க பிள்ளை எனக்கும் பிள்ளை தான். அவனுக்கு நானும் அம்மா தான். உனக்கு இருக்கிற அக்கறை அதை விட ஒரு படி மேலையே எனக்கு இருக்கு. சித்தின்னா இன்னொரு தாய்க்கு சமம்டி கண்டபடிக்கு உலராத... உனக்கும் ஒன்னும் ஆக விட மாட்டேன். என் பிள்ளைக்கும் ஒன்னும் ஆக விடமாட்டேன்” என்றவளுக்கு கண்கள் கலங்கிக்கொண்டு வந்தது.
கனிகாவை உதிர போக்கில் பாரத்தவுடனே நெஞ்சமெல்லாம் நடுநடுங்கிப் போனது ஆதினிக்கு. இந்த பிள்ளையை பெறுவதற்கு எவ்வளவு எவ்வளவு போராட்டங்கள். அவ்வளவையும் வேணாக்க முடியுமா என்ன...? இந்த மழலையின் சிரிப்பில் தான் ஒட்டுமொத்த குடும்பமே அடங்கி இருக்கிறது எனபதை உணராமல் பேசியவளின் சிறுபிள்ளை தனமான மனம் கண்டு கனத்துப் போனது.
யாரோ ஒருவருடைய பிள்ளை என்று இவளால் ஒதுக்கி வைக்க முடியவில்லையே... என் அக்காவின் பிள்ளை அது என்னுடைய பிள்ளையும் தானே... என்கிற உரிமை உணர்வு எப்பவோ வந்து இருந்தது ஆதினிக்கு. ஆனால் அதை காட்டிக் கொள்ளாமல் அடக்கி வைத்திருக்க,
“உள்ளயே வச்சு இருந்தா எனக்கு எப்படி தெரியும்..?” என்று பிள்ளை எண்ணியதோ என்னவோ அவளின் பிடிவாதத்தை உடைத்து எரிய அவனால் என்ன செய்ய முடியுமோ அதை செய்ய தொடங்கிவிட்டான்.
இனி அவனது ஆட்டம் தொடரும் போல..
ஒருவழியாக மருத்துவமனைக்கு வந்து விட போனில் அழைத்து சொல்லி இருந்ததால் வாசலில் அனைத்து ஏற்பாட்டோடு நின்று இருந்தார்கள்.
கனிகாவுக்கு உதிரப் போக்கு குறையாமல் போகவே மருத்துவர்கள் அனைவருக்கும் பெரும் கவலையாய் போனது.
“சின்ன உயிரை மட்டும் தான் காப்பாத்த முடியும்” கையெழுத்து போடுங்க. அதோட அவங்களோட பின் பக்கம் இடுப்புல ஏதோ அடிபட்ட மாதிரி இருக்கு. அதனால தான் இந்த ப்ளீடிங்” என்று விட்டு போக அதிர்ந்துப் போனாள் ஆதினி.
“என்னடி இப்படி சொல்லிட்டு போறாங்க” குமுதா குமுற, ஆதினிக்கு அடி வயிற்றில் ஒரு பயம் பிடித்துக் கொண்டது.
“நான் நல்லா தூங்கிட்டு இருந்தேன். இவ தான் வலிக்கிதுன்னு என்னை எழுப்புனா... தெரியா தனமா கால் அவ வயிற்று மேல பட்டிடும்னு கீழ தான் படுத்து இருந்தேன். பிறகு எப்படி அடிபட்டது.” என்று யோசித்தவளுக்கு பாத்ரூம் போகும் பொழுது எங்கும் கீழே விழுந்தளா ஒன்றும் புரியவில்லையே...
யோசித்துக் கொண்டு இருக்கும் பொழுதே பெருவளத்தானும், வேதாவின் வீட்டில் இருந்து அனைவரும் வந்து இருந்தார்கள்.
“அவங்களோட இரத்த வகை இங்க யாரும் இருக்கீங்களா? இருந்தா வாங்க” என்று சொல்ல, பெருவளத்தான் முன் வந்தான்.
கனிகாவும் இவனும் ஒரே இரத்த வகை. அதனால் தான் குழந்தை பிறக்கவில்லையோ என்னவோ. இருவரும் ஒரே உதிர வகை என்றால் குழந்தை பிறப்பது அரிதிலும் அரிது.. அதே போல சஞ்சுவும் ஒரே வகை. அதனால் இருவரும் உள்ளே சென்றார்கள்.
அவர்கள் உள்ளே சென்ற சிறிது நேரத்திலே சிசேரியன் செய்து குழந்தையை வெளியே எடுத்து விட்டார்கள். ஆண் மகவு என்று வெளியே அறிவித்து விட்டு சென்றார்கள். ஆனால் இப்போ பார்க்க முடியாது. கொஞ்சம் க்ரிட்டிகல் பொசிஷன், மேஜர் ஆபிரேஷன் செய்யணும். அதே போல தான் அம்மாவும் இருக்காங்க... பிரேயர் பண்ணிக்கோங்க” என்று விட்டு போக எல்லோரின் தலையிலும் இடி விழுந்தது.
பிள்ளை மூச்சே விடாமல் இழுத்து பிடித்துக் கொண்டு இருந்ததில் மருத்துவராய் வேதாவே நடுநடுங்கிப் போனாள்.
அவளின் சீப் டாக்டர் “தட்ஸ் ஓகே இதெல்லாம் இயல்பு” என்று குழந்தயின் முதுகை தட்டிக் கொடுத்து அடித்து அவனை பரீத் பண்ண வைத்தார்கள். சில மூச்சுகளை இயல்பாக விட்டவன் அதற்கு மேல் மறுபடியும் அவன் மூச்சு விட சிரமப்பட வேறு வழியின்றி மேஜர் ஆப்ரேஷனுக்கு எல்லா ஏற்பாடும் செய்யப்பட்டது.
“குழந்தைக்கு கொஞ்சம் சிவியரா இருக்கு. பேபியின் இரத்த வகை இது. இந்த இரத்த வகை இருந்தா பிள்ளையை காப்பாற்ற முயலலாம். இல்லன்னா” என்று மருத்துவர் கையை விரிக்க ஆதினிக்கு இந்த வகை தான். அதனால் அவள் முன் வந்து உதிரம் கொடுக்க வர, அவளை உள்ளே அழைத்துக் கொண்டு சென்றார்கள்.
செல்வத்துக்கு கண்ணை கட்டிக் கொண்டு வந்தது... அவனின் ஒரே ஒரு பிடிப்பு அவனது குழந்தை தான். அந்த குழந்தைக்கு இவ்வளவு க்ரிட்டிகல் என்று அறிந்த உடனே அப்படியே இருட்டிக் கொண்டு வந்தது.
அட writer! ஏன் இப்படி🥺🥺🥺🥺🥺
கோனி பேச்சி பிடிக்கல தான்....அதுக்குன்னு அவளை போட்டு தள்ள பார்க்காதீங்க டா





