Notifications
Clear all

அத்தியாயம் 32

 
Admin
(@ramya-devi)
Member Admin

உன் பிள்ளையை உன் மனைவி சுமக்கல. வேற ஒருவருடைய குழந்தையை உன் மனைவி சுமந்துக்கிட்டு இருக்கலாமே என்று கேட்ட பொழுது கூட உடைந்து போகதவன் தான் சொன்ன சொல்லில் அடிவரை ஆட்டம் கண்ட மரமாய் உடைந்து சிதறிய மனதுடன் தன்னையே பார்த்துக் கொண்டு இருந்தவனை பார்த்தவளுக்கு கண்கள் கலங்கிக்கொண்டு தான் வந்தது.

ஆனால் அதை அடக்கிக்கொண்டு பெருவளத்தானிடம் இரு கரம் கூப்பி, “எனக்காக எவ்வளவோ பொறுத்துக்கிட்டீங்க. எவ்வளவோ செய்துட்டீங்க. இந்த ஒரு விசயத்தையும் பொறுத்துக்கோங்க.” என்று கேட்டவளின் கோரிக்கையில் உயிரும் உள்ளமும் சுக்கு நூறாய் உடைந்து சிதறியது பெருவளத்தானுக்கு..

“கனிகா நீ செய்யிறது ரொம்ப அநாகரீகம். உன் வீட்டுக்காரரை ஒரு நிமிடம் பாரு. அவரு எப்படி நொறுங்கிப் போய் இருக்குறாருன்னு... வேணாம் க்கா அவர் பாவம்... உங்க வாழ்க்கையில இதனால பல சிக்கல் ஏற்படலாம். ப்ளீஸ் யாரோ ஒருவருக்காக உங்க வாழ்க்கையை சிக்கல் ஆக்கிக்காத” என்று ஆதினி அவளை தடுக்க வர, அவளை தீர்க்கமாக பார்த்த கனிகா,

“நான் முழு மனதுடன் தான் இந்த முடிவை எடுத்து இருக்கேன் ஆதினி. அதனாலா நீ இதுல தலையிடாத... என் கணவனே ஒத்துக்கிட்டாரு. இதுல உனக்கு என்ன பிரச்சனை” என்று கேட்டவள்,

“அதோட இது என் வாழ்க்கை. எனக்காக நீ முடிவெடுக்காத. எனக்கானதை எனக்கு முடிவெடுக்க நல்லாவே தெரியும்” என்று முகத்தில் அடித்தது போல பேசியவள்,

சஞ்சுவின் குடும்பத்தை பார்த்து கைக் கூப்பியவள், “நீங்க உங்க முறையை செய்ங்க... யாரும் தடுக்க மாட்டாங்க” என்று மீண்டும் இருக்கையில் போய் அமர்ந்துக் கொண்டாள்.

அவளின் இந்த செயல்களை அடிவாங்கிய மனதுடன் பார்த்த பெருவளத்தான் கண்களை மூடிக் கொண்டான். வாணியும் விசாகனும் “இதையெல்லாம் எங்களால பார்க்க முடியாது தம்பி. அந்த அளவுக்கு இளகின மனது இல்லை. வா போகலாம்” என்று அவனை கூப்பிட,

“நீங்க போங்கப்பா. நான் இங்க இருந்துட்டு வரேன்” என்றவனை வேதனையுடன் பார்த்தார்கள் அவனின் பெற்றவர்கள்.

“சொன்னா கேளுப்பா” என்று விசாகன் அவனை அழைக்க, செல்வமும் அவனது குடும்பமும் கனிகாவுக்கு சீர் செய்ய மேடை ஏற,

“இப்போ வரை அவ என்னோட மனைவியா தான் ப்பா இருக்கா... அவளுக்கான அனைத்தும் நான் எப்பொழுதும் விட்டுக் கொடுக்கவே மாட்டேன். குழந்தையை மட்டும் தான் விட்டுக் கொடுத்து இருக்கேன். அங்க இருக்கது என் மனைவி ப்பா” என்று நின்றவனை கண்டு வாணி தலையிலே அடித்துக் கொண்டார். செல்வம் மேடை ஏறி நின்று அனைவரையும் ஏளனமாக பார்த்தவன் மிதப்பான புன்னகையுடன் கனிகாவை நெருங்க அதற்கு மேல் அங்கு அவர்களால் இருக்க முடியவில்லை.

பெருவளத்தான் வைத்த கண் வாங்காமல் கனிகாவையே பார்த்துக் கொண்டு இருந்தான். அவனது மன நிலையை உணர்ந்த ஆதினிக்கு அவனை எப்படி தேற்றுவது என்று தெரியவில்லை.

விதுலை கண் காட்டி அவனிடம் போக சொல்ல,

“மாமா இங்க இருந்து போயிடலாமே...”

“அங்க இருக்கது என் மனைவி விதுல். சபையில அவளை மட்டும் உட்கார வச்சிட்டு எப்படி என்னால இங்க இருந்து போக முடியும்” என்று கேட்ட கணவனை கண் எடுக்காமல் பார்த்த கனிகா அதற்ன் பிகு செல்வம் வீட்டில் இருந்து செய்த அத்தனையையும் ஏற்றுக் கொண்டாள்.

அவள் அங்கே அதை ஏற்றுக் கொள்ள கொள்ள இங்கே ஒருவன் முற்றும் முழுதாக உடைந்து சிதறிப் போனான். எல்லா சடங்கையும் அவர்கள் செய்து விட்டு ஆழமும் கரைத்து சுற்றி எடுக்க, சாப்பாட்டையும் அவளுக்கு அவர்களே போட்டு ஊட்டி விட, பெருவளத்தானின் இதழ்களில் விரக்தி புன்னகை.

பெருவளத்தான் இன்று வரையிலும் சரி நாளையும் சரி அவன் எப்பொழுதும் அவனது கடமையில் இருந்து நழுவியதே இல்லை. நழுவவும் மாட்டான். உள்ளத்தில் ஆதினி குடி இருந்தாலும் கனிகாவை எதற்கும் ஏங்க விட்டது இல்லை. அவளுக்கான அனைத்துமாக பெருவளத்தான் இருந்து இருக்கிறான். இனிமேலும் இருப்பான் என்பதில் துளியளவு சந்தேகம் இல்லை.

விழா நன்றாக முடிய அனைவரும் சாப்பிட செல்ல பெருவளத்தானையும் சாப்பிட வர சொல்லி சஞ்சு நக்கலாக சொல்லிவிட்டு போக அகோர தீயில் தள்ளி விட்டது போல இருந்தது ஆதினிக்கு.

“இந்த அவமானம் தேவையா உங்களுக்கு...?” என்று கண்களில் கண்ணீருடன் கேட்ட ஆதினியை ஒரு பார்வை பார்த்தவன்,

“எனக்கு உன் மடியில படுக்கணும் போல இருக்கு.. படுத்துக்கட்டுமா?” என்று கேட்டவனின் வார்த்தையில் உள்ளம் நூறு துண்டுகளாய் சிதறிப் போனவள் அவனை இழுத்து அனைத்து தன் நெஞ்சுக்குள் பொத்தி வைக்க முடியாமல் போன சூழலை அடியோடு வெறுத்து தள்ளினாள்.

அவளின் மனம் கவர்ந்தவன் வாய் விட்டு கேட்ட ஆறுதலை கொடுக்க முடியாமல் போய் விட்டதே என்று மருகியவள் அவனை அடக்க இயலா வேதனையோடும் காதலோடும் பார்த்தாள். கண்களில் அது ஒரு பாட்டுக்க கண்ணீர் அரும்பியது. இன்னொரு பக்கம் காதல் நிரம்பி வழிந்தது.

அதை கவனிக்கும் நிலையில் பெருவளத்தான் இல்லை.

“ப்ச் அம்மான்னு நினைச்சி உன்கிட்ட கேட்டுட்டேன்... மறந்துடுடி..” என்றவன்,

“இன்னைக்கு ஒரு நாள் மட்டும் நான் என்னை மறக்கணும்” என்றவன் கனிகாவை ஒரு பார்வை பார்த்து விட்டு வெளியே போய் விட்டான். அதன் பிறகு அவனை யாரும் பார்க்க முடியவில்லை. அவன் நிலைக் கொள்ளாமல் இருப்பதை பார்த்த ஆதினி அவனின் பின்னோடு தன் தம்பியை அனுப்பி வைத்தாள்.

அதன் பிறகே கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. ஆனால் பெருவளத்தான் சொன்ன “இன்னைக்கு ஒரு நாள் நான் என்னை மறக்கணும்” என்ற சொற்கள் அவளின் காதில் வந்து அறைந்துக் கொண்டே இருந்தது.

“என்னடா பண்றாரு அவரு” என்று விதுலிடம் அவ்வப்பொழுது கேட்டுக் கொண்டே இருந்தாள்.

“ஒன்னும் இல்லன்னா எப்பொழுதும் போல பார்க்கிங் டாப்ல படுத்து இருக்காரு” என்று சொன்னவனிடமிருந்து போனை வாங்கி அனைத்துப் போட்டான் பெருவளத்தான்.

“உங்க அக்காக்கிட்ட மாட்டி விட்டுடாதடா...” என்றவன் போதை தரும் மதுவை வாயில் சரித்தான். எந்த அக்காவை என்று இவனும் சொல்லவில்லை. அதே போல அவனும் எந்த அக்கா என்று கேட்கவும் இல்லை.

“நீங்க இன்னைக்கு ஒரு நாள்னு சொன்னதுனால தான் இந்த எஸ்கியூஸ். நாளைக்கு கண்டினியூ பண்ணீங்க அக்காக்கிட்ட போட்டு குடுத்துடுவேன். அப்புறம் அவ மங்காத்த ஆடிடுவா” என்று சொன்னவனின் நினைவில் இருந்தது எல்லாம் ஆதினி தான். இருவரும் பயப்படும் இடம் அது ஆதினி தானே.. அதனால் நேரடியாக அவளது பெயரை சொல்லாமல் மறைமுகமாகவே உணர்த்திக் கொண்டார்கள். சொல்ல வேண்டிய அவசியமும் இல்லையே...

முழுவதும் குடித்து விட்டு மட்டையாகி விட்டான் பெருவளத்தான். விதுல் அவனை இரசித்து பார்த்தான். எவ்வளவு துன்பம் வந்தாலும் அனைத்தையும் கல்லை முழுங்குவது போல முழுங்கிவிட்டு நிமிர்ந்து நிற்கும் தன் ஆதினி அக்காவுக்கு இவரை ஏன் குடுக்காம போன கடவுளே...

‘கனிகாவை விட என் மாமனுக்கு ஆதினி அக்கா தான் ரொம்ப பொருத்தமா இருப்பாங்க. எப்படியாவது இவங்க ரெண்டு பேரையும் சேர்த்து வச்சிடேன்’ என்று வேண்டிக் கொண்டான்.

கனிகாவை ஆழம் சுற்றி வீட்டுக்கு கூட்டிட்டு வந்த குமுதாவுக்கு மனமே இல்லை. என்னென்னவோ தங்கள் மகள்களின் வாழ்க்கையில் நடந்துக் கொண்டு இருப்பதை பார்த்து வேதனை படுவதை தவிர வேறு எதுவும் அவரால் செய்ய முடியவில்லை.

கனிகா தன் வயிறை பிடித்துக் கொண்டு கூடத்தில் அமர்ந்து இருந்தாள். அவளுக்கு எதிராக சுவரில் சாய்ந்து கீழே அமர்ந்த ஆதினி கனிகாவை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை. தன் போனில் எதையோ செய்துக் கொண்டு இருந்தாள். அவளையே பார்த்துக் கொண்டு இருந்தாள் கனிகா. சிறிது நேரம் அவளின் பார்வையை தாங்கி இருந்த ஆதினி ஒரு கட்டத்துக்கு மேல் முடாமல் நிமிர்ந்து தன் அக்காவை முறைத்துப் பார்த்தாள்.

அப்பொழுதும் அவளின் பார்வை மாறவே இல்லை.

“எதுக்கு இப்போ வச்ச கண்ணு வாங்காம பார்த்துக்கிட்டு இருக்க...?”

“இல்ல என் மாமனாரு உனக்கு ஒரு வரன் பார்த்து இருக்காரே அதுக்கு நீ ஓகே சொன்னதா சொன்னாரு அது தான் எப்போ கல்யாணம் பண்ணிக்க போறேன்னு பார்த்தேன்” என்றாள் நக்கலுடன்.

அதை கேட்டு ஆதினிக்கு உள்ளம் வேதனையில் துடித்தது. கல்யாணம் செய்ய ஒத்துக் கொண்டதே கனிகாவும் பெருவளத்தானும் நன்றாக வாழ வேண்டும் என்பதால் தான். அவர்களுக்கு இடைஞ்சலாக தான் ஒரு காலும் இருந்துவிட கூடாது எனபதால் தான்.

அதையே கனிகா இன்னும் குத்திக் காட்ட வேதனையுடன் ஒரு புன்னகை சிந்தியவள்,

“கூடிய சீக்கிரம்” என்றவள் எழுந்து உள்ளே போய் விட்டாள். போனவளின் முதுகையே வெறித்து பார்த்தாள் கனிகா..

அப்படியே நாட்கள் செல்ல செல்ல செல்வத்தின் குடும்பம் கனிகாவை வந்து பார்க்க ஆரம்பித்தது. அதில் குமுதாவுக்கு அதிக விருப்பம் இல்லை என்றாலும் வெளியே எதையும் காட்டிக் கொள்ளாமல் கடந்து விடுவார்.

முதலில் செல்வத்துக்கு இங்க வரேவே பிடிக்கவில்லை. ஆனால் என்றைக்கு கனிகா தன் குழந்தையை சுமந்து இருக்கிறாள் என்று தெரிந்த உடனே அவளின் வயிற்றை  தொட்டு தடவி தன் பிள்ளையை வருடி விட ஆசையாக இருந்தது. ஆனால் அவள் இன்னொருவரின் மனைவி என்பதால் எல்லை கோட்டுடன் நின்றுவிட்டான்.

செல்வத்துக்கு உண்மை தெரிய வந்ததே வளைகாப்புக்கு முந்தின நாள் தான். வேதா யாருக்கும் தெரியாமல் தன் அன்னையிடம் மட்டும் இரகசியமாக சொல்லிக் கொண்டு இருக்க அதை அந்த பக்கம் வந்த செல்வம் கேட்க நேர்ந்தது.

Loading spinner

Quote
Topic starter Posted : February 3, 2026 2:28 pm
(@gowri)
Reputable Member

அவ்வா.... ஏன் இந்த வேலை வேதாக்கு???

இவனுக்கு கல்யாணம் ஆகிட்டா இல்லையா????

 

Loading spinner

ReplyQuote
Posted : February 4, 2026 12:29 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top