Notifications
Clear all

அத்தியாயம் 30

 

Admin
(@ramya-devi)
Member Admin
Joined: 1 year ago
Posts: 977
Topic starter  

 

யாரோ ஒருவருடைய குழந்தை என்று எண்ணி இருந்தவன், இன்று அந்த குழந்தைக்கு உரிய தகப்பன் தங்களின் கண் முன்னாடி இருக்கவும் இதை எப்படி எடுத்துக் கொள்வது என்றே தெரியவில்லை.

கனிகாவிடம் அவனது உரிமை கொஞ்சம் கொஞ்சமாக தகர்ந்து போவதை உணர்ந்தவன் முற்றிலுமாக நொந்துப் போனான். ஆனால் வெளியே எதையும் காட்டிக் கொள்ளாமல் இரு கரத்தையும் நெஞ்சோடு கட்டிக் கொண்டு அழுத்தமாக நின்றுக் கொண்டான்.

“இப்ப என்ன செய்யிறது மாப்பிள்ளை?” என்று குமுதா இவனிடம் கேட்க,

“உங்க பெண்ணோட விருப்பம்” என்று கனிகாவிடம் முழு சுதந்திரத்தையும் கொடுத்து விட்டான். ஏற்கனவே அவன் மீது ஒரு அபிப்ராயமும் கனிகாவுக்கு கிடையாது. இடையில் ஆதினியோடு சண்டை இட்டது கூட பெருவளத்தானின் மீது உள்ள பொசசிவ்னெஸினால் லாம் இல்லை. தன் கணவனின் மீது உள்ள கோவத்தை அவளுக்கு வெளிபடுத்தனும்.

அதை எப்படி அவனிடம் வெளிப்படுத்துவது என்று தெரியாமல் தன் தங்கையின் காதலை கையில் எடுத்து தன் மூட் சிவைங்குக்கு பலியாடு ஆக்கி விட்டாள். அவ்வளவு தான். மத்தபடி பெருவளத்தான் மீது எந்த ஒரு உணர்வும் அவளுக்கு கிடையாது.

தன் குழைந்தைக்கு தகப்பன் தன் எதிரில் உள்ளவன் என்று வேதா அறிமுகம் செய்து வைக்க தன் எதிரில் இருந்தவனை நிமிர்ந்துப் பார்த்தாள்.

கண்கள் சிவந்து போய் அடக்கப்பட்ட வேதனையை சுமந்துக் கொண்டு பட்டு வேட்டி சட்டையில் கலைந்த தலையோடு எதிலும் பிடிப்பு இல்லாமல் இருந்தவனின் மீது கனிகாவின் மொத்த பார்வையும் விழுந்தது.

பெரிதாக எதுவும் அவன் மீது தோன்றவில்லை. என் பிள்ளையின் தகப்பன் என்கிற உணர்வில் மட்டுமே அவனை பார்த்தாள்.

விசாகனுக்கு இந்த இடத்தில் என்ன செய்வது என்று தெரியவில்லை. இவர்களின் ஒட்டு மொத்த நெருங்கிய சொந்தமும் அந்த சபையில் கூடி இருந்தது. தன் மகனை ஏறிட்டு பார்க்கவே அவரால் முடியவில்லை. எவ்வளவு பெரிய அவமானம். சபைக்கு நடுவே கூப்பிட்டு வைத்து சாணியை கரைத்து ஊற்றி செருப்பால் அடித்தது போல உணர்ந்த தன் மகனை பார்த்தவருக்கு கண்கள் எல்லாம் கலங்கிக்கொண்டு வந்தது.

தான் அவமானப் பட்டாலும் தன் பிள்ளைகளை சிங்கம் போல வளர்க்கும் தகப்பனுக்கு தன் கண் முன்னே தன் மகன் பெரும் அவமானத்தை ஏந்தி நிற்கும் இந்த நிலையை அவரால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

கருத்து சிறுத்து போன தன் மகனை காண காண விசாகனுக்கு உயிரை யாரோ உருவி எடுத்தது போல நெஞ்சில் வலி எடுத்தது.

பெருவளத்தானுக்கு சொல்லவே வேண்டாம்... இப்படி கூட்டிட்டு வந்து ஊரு முழுக்க தண்டோரா போடாத குறையாக தான் ஆண்மை இல்லாதவன் என்பதை நிரூபிக்கும் வண்ணம் ஒவ்வொரு செயலும் இருப்பதை பார்த்து உள்ளம் நொறுங்கிப் போனான்.

தீயில் தள்ளி விட்டது போல தேகம் எங்கும் மனமெங்கும் எரிந்துப் போனது.

“பொண்ட்டாடி இவனோடது தான். ஆனா அவ சுமந்துக்கிட்டு இருக்கிற பிள்ளை இவனோடது இல்லையாம். வேறு யாரோடையோ பிள்ளையாம்..” என்ற பேச்சு மண்டபம் முழுவதும் எழ பெருவளத்தானால் தலையை நிமிர்த்த முடியவில்லை.

ஆயிரம் பேர் மத்தியில் அவன் மட்டும் ஆடை இழந்தவன் போல கூனி குறுகி பெரும் அவமானத்துடன் நின்றிருந்தான். வாழ்நாளில் இதுவரை பெருவளத்தான் கண்டிருக்கவே முடியாத அளவுக்கு பெருத்த அவமானம். அனைவரின் முன்னிலையிலும் அவனின் இல்லறவியலை கடை பரப்பியது போல ஆகி விட்டது.

முதுகுக்கு பின்னாடி ஆயிரம் பேசினாலும் யாரும் கவலை படப்போவது இல்லை. ஆனால் இப்படி நேருக்கு நேராக அவனை வைத்துக் கொண்டே அவனது அந்தரங்கத்தை விமர்சிப்பது அவனுக்கு பெரும் கொடுமையாக இருந்தது.

உடல் முழுக்க கொதிக்கும் எண்ணையை வாரி கொட்டி விட்டு அது போதாமல் நெருப்பு கங்குகளால் அங்கம் அங்கமாய் சுட்டு எடுத்தால் எப்படி நோகுமோ அந்த அளவுக்கு நொந்துப் போனான்.

வார்த்தையில் வடிக்கவே முடியாத அளவுக்கு வாழ்வின் உச்ச பட்ச அவமானத்தை அந்த தருணத்தில் உணர்ந்தான் பெருவளத்தான்.

அவனுக்கு கீழே கடையில் வேலை செய்யும் ஆட்கள் முதற்கொண்டு அவனது அக்கம் பக்கத்து வீட்டார்கள், உறவினர்கள், நண்பர்கள் என அந்த விழாவுக்கு ஏகப்பட்ட பேர் வந்திருக்க அந்த அத்தனை பேரின் மத்தியிலும் தான் ஒன்றுக்கும் உதவாதவனாய் அமைந்துப் போன சூழலை இந்த செயலை அவனால் கொஞ்சமும் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

இப்பொழுதே இந்த கணமே இதயம் வெடித்து சிதறி விட மாட்டமா என்று பெருவளத்தானின் உயிர் துடி துடித்துப் போனது.

ஏற்கனவே அவமானத்தில் குறுகிக் கொண்டு இருப்பவனிடம் சென்று,

“என்னப்பா இதெல்லாம்... இங்க என்ன நடக்குது... அப்போ உன் பொண்டாட்டி வயித்துல இருக்குற பிள்ளைக்கு நீ அப்பன் இல்லையா...?” என்று பரிதாபமாக கேட்பது போல கேட்டு நக்கலாக சிரித்து வைத்தார்கள்.

அத்தனை அவமானத்தையும் ஒற்றை ஆளாக தாங்கி நின்றவனுக்கு தொண்டை குழியில் அடைத்துக் கொண்டு வந்த வேதனை, துக்கும், ஆற்றாமை, சினம், கடுங்கோவம் என எல்லாவற்றையும் மலையை முழுங்குவது போல முழுங்கி விட்டு தன் உயரத்துக்கு நிமிர்ந்து நின்றான்.

தன் கணவனின் முகத்தில் இருந்த வேதனையை பார்த்த கனிகாவுக்கு இந்த சூழல் இப்படி மாறும் என்று எண்ணி இருக்கவே இல்லை.   

குமுதாவும் வைகுந்தனும் பதறிப் போனார்கள்,

“என்னங்க சம்மந்தி இப்படி செய்துட்டீங்க... ஒரு வார்த்தை முன்னாடியே சொல்லி இருந்து இருக்கலாம் இல்லையா... இப்படி கடைசி நேரத்துல வந்து இப்படி பிரச்சனை பண்ணா எப்படி...?” என்று சஞ்சுவின் வீட்டு ஆட்களிடம் கேட்க,

அவர்கள் சும்மா இருந்தாலும் சஞ்சு சும்மா இருக்காமல்,

“யாரு வந்து பிரச்சனை பண்ணா...? குழந்தைக்கும் அவங்களுக்கும் கொஞ்சம் கூட சம்மந்தமே இல்லை. அவங்க வந்து தட்டு வைக்கலாம். ஆனா குழந்தைக்கு முழு உரிமையும் உள்ள நாங்க தட்டு வைக்க கூடாதா..? தட்டு வச்சா நாங்க பிரச்சனை பண்றோம்னு சொல்லுவீங்களா?” என்று பெத்த தாய் என்று கூட பார்க்காமல் சண்டைக்கு வந்தவளை கண்டு வாயடைத்துப் போனார் குமுதா.

“நான் அப்படி சொல்லலடி. நீங்க தான் குழந்தைக்கு உடமை பட்டவங்கன்னா நாங்க அழைக்க வரும் பொழுதே சொல்லி இருந்து இருக்கலாமே... இப்படி கடைசி நேரத்துல ஊருக்கே தெரியிற மாதிரி பண்ணி முதல் மாப்பிள்ளை குடும்பத்தை அசிங்கப்படுத்துன மாதிரி ஆகிடுச்சுல்ல” என்று தலைந்து போய் குரல் கமற கேட்டா தாயை ஏளனமாக பார்த்து,

“ஏன் உன் மூத்த மருமகன் கையாலாகதவன்னு இந்த ஊருக்கு தெரியாம பொத்தி வைக்க பார்த்தியாக்கும்?” என்று கேட்டு முடிக்கும் முன்பே அவளின் கன்னம் தீயென எரிந்தது.

அதன் பிறகே அடித்த சத்தம் கேட்டது..! எல்லோரும் ஒரு கணம் சதம்பித்து போய் விட்டார்கள். சஞ்சு அதிர்ந்து எரிந்த தன் கன்னத்தை பற்றியபடி தன்னை அறைந்தது யார் என்று பார்த்தாள். அந்த ஒற்றை அறையில் கண்கள் கலங்கிக்கொண்டு இருக்க எதிரில் இருந்த உருவம் சற்று கலங்கிப் போய் தான் தெரிந்தது. அடி அந்த அளவுக்கு பயங்கரமாக இருந்தது.

கண்களை கசக்கி விட்டு கூர்ந்து பார்த்தாள் எதிரில் யார் இருக்கிறார்கள் என்று. சுற்றிலும் பொன்னும் பாட்டுமாக ஆயிரம் பேர் நின்றுக்கொண்டு இருந்தார்கள். அதில்  உயர்தர காட்டன் புடவையில் கொஞ்சமும் கம்பீரம் குறையாமல், கல்வி கொடுத்த மிடுக்குடன் கூடவே ஒரு செருக்கு மிகுந்து இருக்க அங்கிருந்த அத்தனை பேர்களிலும் தனித்து நின்றிருந்தாள் ஆதினி.

அவளை அங்கு எதிர்பார்க்காத சஞ்சு ஒரு கணம் திகைத்து தான் போனாள். ஆனாலும் சட்டென்று சுதாரித்துக் கொண்டு “ஏய் என்னைய எதுக்குடி அடிச்ச..? என்னை அடிக்கிற அளவுக்கு உனக்கு திமிர் வந்திடுச்சா?” என்று எகிறிக்கொண்டு வந்தவளை அற்பமாக பார்த்தவள்,

“இங்க பாரு எனக்கு உன்கிட்ட பேசவே பிடிக்கல. ஒழுங்கா ஒரு ஓரமா போய் நின்னுடு... இல்லன்னா இன்னும் என்கிட்டே வாங்கி கட்டிக்குவ சொல்லிட்டேன்” என்றவள் சஞ்சுவின் மாமனார் மாமியாரிடம் திரும்பி பேச வர,

“எதா இருந்தாலும் என் கிட்ட பேசுடி. அதென்ன அவங்க கிட்ட பேசுற... இங்க பிள்ளைக்கு உடமை பட்டவங்க நாங்க தான். நாங்க தான் தட்டு வைக்கணும்” என்று குதி குதி என்று குதித்துக் கொண்டு இருந்தவளை எரிச்சலுடன் பார்த்தவள்,

மருத்துவர் வேதாவின் பக்கம் திரும்பி,

“ப்ளீஸ் எந்த ஆர்ப்பாட்டமும் பண்ணாம வழியை விட்டு ஒதுங்கி நில்லுங்க. இது இவங்க குடும்ப விழா. இவங்க செய்யிறது தான் சரி” என்று நிதானமாக பேசியவளை இரக்கத்துடன் பார்த்த வேதா தன் பெரிய அண்ணனை பயத்துடன் பார்த்தாள்.

Loading spinner


   
Gowri reacted
Quote
(@gowri)
Reputable Member
Joined: 12 months ago
Posts: 296
 

யாரா இவன்????

புது பீஸ்..... வேதாக்கு ஏன் இந்த வேண்டாத வேலை.....

Loading spinner


   
ReplyQuote
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top