Notifications
Clear all

அத்தியாயம் 28

 

Admin
(@ramya-devi)
Member Admin
Joined: 1 year ago
Posts: 977
Topic starter  

“சாரி நீங்க யாரா இருந்தாலும் பரவாயில்லை. வேலை நேரத்துல எங்க மேடம் யாரையும் அனாவசியமா மீட் பண்றதை விரும்ப மாட்டாங்க... சோ நீங்க ஆபிஸ்லையோ இல்ல அவங்க வீட்லையா மீட் பண்ணலாம்” என்றனர்.

“இப்போ ஒருத்தர் மீட் பண்ணிட்டு போறாரே. அவர மட்டும் அந்த மேடம் சந்திப்பாங்களா வேலை நேரத்துல?” படு நக்கலுடன் கேட்டாள்.

“நீங்க தப்பா புரிஞ்சி இருக்கீங்க. அவர் தான் இங்க பொருட்களை எல்லாம் சப்ளை பண்ணிட்டு இருக்காரு. டு டேஸ் பொருட்கள் எதுவும் வராததுனால தான் இந்த மீட்டிங். இல்லன்னா அதுவும் இருந்து இருக்காது” என்று விளக்கம் சொல்லிவிட்டு அவர்கள் போய் விட, கனிகாவுக்கு மனமே ஆறவில்லை.

எட்டி நின்று ஆதினி எங்கே இருக்கிறாள் என்று பார்த்தாள். காலையில் அணிந்து வந்திருந்த டாப் ஜீன்ஸில் தலையில் எல்லோ கலர் ஹெல்மெட்டுடன் ப்ளு பிரிண்ட்டை வைத்து எக்ஸ்ப்ளைன் பண்ணிக் கொண்டு இருந்தாள். அவளின் கையில் ஒரு மார்க்கரும், இன்னொரு கையில் ஸ்டைலாக கண்ணாடியையும் சுழற்றிக் கொண்டு இருந்தாள்.

அவளை சுற்றி டை அணிந்து பெரியவர்கள் முதல் இள வயது உள்ளவரை பணிவுடன் நிற்பதை பார்த்து வாயடைத்துப் போய் நின்றாள் கனிகா. ஆதினியின் உயரம் கண்டு வாய் பிளந்து நின்றாள்.

அந்த நேரம் ஒரு சித்தாள் பெண் தலையில் கல்லை சுமந்துக் கொண்டு படி ஏறியபடி,

“எம்மா உங்கள மாதிரி ஆக என்னா படிப்பை படிக்கணும்..? என் பிள்ளையை உங்கள மாதிரி ஆக்கணும் தாயி” கேட்க, அதற்கு சிரித்தவள்,

“இன்ஜியர் படிப்பு படிக்கணும் க்கா. கண்டிப்பா உங்க பொண்ணு என்னை விட அதிக உயரத்துக்கு போவா.. நல்லா படிக்க வைங்க” என்று தங்களின் டிஷ்கசனை நிறுத்தி விட்டு அந்த சாதாரண பெண்ணை மதித்து அவள் பேசிய விதம் அங்கிருந்த அத்தனை பேரையும் கவர்ந்தது. ஏன் கனிகா கூட அவளின் இந்த சின்ன ஒரு குணத்தை கண்டு வியந்து தான் போனாள்.

அந்த பெண்ணை மதிக்க வேண்டிய எந்த அவசியமும் ஆதினிக்கு இல்லை. ஆனால் அவள் அதை செய்தாள். கனிகா அப்படியே திரும்பி போய் விட்டாள்.

அடுத்து வந்த நாட்கள் அதி வேகமாக கழிந்தது. ஆதினி யாரிடமும் பேசவில்லை. அவள் உண்டு அவள் வேலை உண்டு என்று இருந்தாள். வீட்டில் சாப்பிடக் கூட இல்லை. அது இன்னும் பெற்றவர்களை துன்புறுத்தியது. அவளிடம் பேச முயன்ற பொழுது எல்லாம் அவர்களை ஒரு பொருட்டாக கூட மதிக்காமல் ஆதினி போய்க்கொண்டு இருந்தாள்.

அந்த நேரம் கனிகாவுக்கு டேட் நெருங்கியது. அதனால் அவளுக்கு வளைகாப்பு செய்ய குமுதா எண்ண அதை வீட்டில் இருந்த விதுல் மற்றும் தன் கணவனிடம் சொல்ல விதுல் காதிலே வாங்கிக் கொள்ளவில்லை.

வைகுந்தன் மட்டும் “அதுவும் நம்ம கடமை தானே... செய்து விடலாம். எல்லாவற்றையும் நீயே பார்த்துக்கோ குமுதா” என்று மனமொடிந்து போய் சொல்லிவிட்டு வெளியே கிளம்பி விட்டார்.

ஒரு சுவர் மட்டும் அவள் டிசைன் படி இல்லாமல் மாற்றி கட்டி இருக்க கொத்தனார் முதற்கொண்டு மேஸ்த்திரி இன்ஜியர் வரை எல்லோரையும் லேபிட் அண்ட் ரைட் வாங்கிக்கொண்டு இருந்தாள்.

“இதற்குரிய பொருட் செலவுகளை எல்லாம் யார் ஏற்பா. ஒரு வேலைன்னு வந்துட்டா நம்மளை அந்த வேலைக்காக நூறு சதவீதம் ஒப்படைக்கணும். இல்லையா அந்த வேலையில் ஈடுபட கூடாது. அதை விட்டுட்டு இப்படி அரையும் குறையுமா செய்து வச்சா இதோனோட நட்டத்தை எல்லாம் யார் தலையில் கட்டுவது... கொஞ்சமே கொஞ்சம் செய்யிற வேலையில கவனத்தை வைக்கலாம் இல்லையா...?” என்று கேட்டுக் கொண்டு இருந்தவளின் போன் அடிக்க,

குமுதா அழைத்து இருந்தார். எடுத்து இவள் வெறுமென காதில் வைத்தாள்.

“அக்காவுக்கு வளைக்காப்பு செய்யலாம்னு இருக்கோம்டா” என்று குரல் தளைதளைத்து வந்தது. இவள் எதுவும் பேசவில்லை.

“நீ முன்னாடி நின்னு செய்யணும்டா” என்று அவர் கண்கள் கலங்க சொல்ல அதற்கும் பதில் எதுவும் பேசவில்லை.

“இன்னும் எவ்வளவு நாள் தான்டி என்கிட்டே பேசாம என்னை சாவடிக்க போற. உன்கிட்ட பேசாம என்னால இருக்க முடியலடி. ஒரே ஒருமுறை மன்னிக்க கூடாதா? எல்லாம் என் தப்பு தான்டி. ப்ளீஸ்டி அம்மாட்ட பேசு தங்கம்” என்று அவர் கண்கள் கலங்க பேச பட்டென்று போனை வைத்து விட்டாள் ஆதினி.

அவளுக்கும் கண்கள் எல்லாம் கலங்கிக்கொண்டு வந்தது. அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் சமாளித்துக் கொண்டவள் அனைவரையும் பார்த்து,

“போய் வேலையை பாருங்க” என்று விட்டு தனித்து அமர்ந்து விட்டாள். ஏழாவது மாடியில் யாருமற்ற இடத்தில் கடந்துப் போனவைகளை எல்லாம் எண்ணிப் பார்த்தவளுக்கு நெஞ்சில் சுறுக் சுறுக்கென்று நெஞ்சில் ஆணி இறங்கியது.

விழிகள் சிவந்துப் போய் தன் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வர முயன்றாள். இந்த பக்கம் ஆறாவது தளத்தில் பல கார்களுக்கு மத்தியில் படுத்து இருந்தான் பெருவளத்தான்.

அவனுக்கும் குமுதா போன் செய்து இருக்க அவனுக்கு இதற்கு என்ன செய்வது என்று ஒன்றும் புரியவில்லை. தன் மனைவி தன் குழந்தையை சுமக்காமல் யாரோ ஒருவருடைய குழந்தையை சுமந்துக் கொண்டு இருப்பதே வேதனையின் உச்சம். அதில் அவளின் உதாசீனம் ஒரு பக்கம் வேறு நெஞ்சை கவ்விப் பிடித்தது. போதாதற்கு அவனின் நெஞ்சில் மனைவியின் தங்கை நீக்கமற நிறைந்து இருக்கிறாள்.

“என்ன கொடுமைடா சர்வேசா” என்று நொந்துப் போனான். ‘இடியாப்ப சிக்கலை கூட தீர்த்து விடலாம் போல. ஆனால் என் சிக்கல் தீரவே தீராது...’ என்று அயர்ந்துப் போனான்.

விசாகனிடம் வளைகாப்பை பற்றி பேச, அவரோ “உங்க வீட்டுலயே இந்த நிகழ்வை வைத்துக் கொள்ளுங்கள்” என்று ஒரே வரியில் முடித்துக் கொண்டார். அதன் பிறகு குமுதாவும் வைகுந்தனும் வீட்டுக்கு அருகில் உள்ள சின்ன மண்டபத்தை பார்த்து பேசி முன் பணம் கொடுக்க,

பெருவளத்தான் வளைகாப்புக்கு உண்டான அனைத்து செலவுகளுக்கும் மொத்தமாக பணத்தை போட்டு விட்டான். அதை எதிர்பார்க்காதவர்கள் கொஞ்சம் ஆடி தான் போனார்கள். ஆனாலும் “வேணாம் மாப்பிள்ளை. நாங்களே பார்த்துக்குறோம். இவ்வளவு நாள் நீங்க செய்ததே போதும்” என்று அவன் போட்ட பணத்தை அவனுக்கே திருப்பி கொடுத்து விட்டார்கள் இருவரும்.

சஞ்சுவை அவளின் குடும்பத்தோடு அழைக்க, ஆளுக்கு முந்தி, “ரெண்டு நாளைக்கு முன்னாடி எல்லாம் வர முடியாது. நேரா மண்டபத்துக்கு வரோம். அங்க இருந்தே கிளம்புறோம்” என்று சஞ்சு முகத்தில் அடிப்பது போல பேச சம்மந்தி வீட்டார்கள் ஏறெடுத்து பார்க்க முடியாமல் தலை கவிழ்ந்து வந்து விட்டார்கள்.

கனிகாவும் பெருவளத்தானின் வீட்டில் இருந்துக் கொண்டாள். அதனால் எல்லாவற்றிற்கும் இவர்கள் இருவரும் அலைய,

“விதுல் எங்க போறதுன்னாலும் இந்த கார்ல போயிட்டு வர சொல்லு. ஒரு மாதத்துக்கு ட்ரைவர் அரேஞ் பண்ணி இருக்கேன். இந்தா இதை செலவுக்கு வச்சுக்கு சொல்லு” என்று கார் சாவி மற்றும் மூன்று கட்டு பணத்தை கொடுத்து விட்டு தான் முதல்முறை வாங்கிய ஸ்கூட்டியில் கிளம்பி விட்டாள் அலுவலகத்துக்கு.

போனவளின் உயர்ந்த குணங்களை கண்டு வாயடைத்துப் போய் விட்டார்கள். அதோடு அன்றைக்கே இரண்டு ஆட்கள் வீட்டுக்கு வந்து இருந்தார்கள் வேலைக்கு.

 

Loading spinner


   
Quote
(@gowri)
Reputable Member
Joined: 12 months ago
Posts: 296
 

இந்த பிள்ளை எதுக்கு இப்படி செய்து????

அந்த குரங்குக்கு தானே இவளை அப்படி எல்லாம் பேசி, அடிச்சாங்க.....இப்ப அதே குரங்குக்கு எல்லாம் செய்ய இவ உதவி தான் வேணுமா????

அதுக்கு தான் இந்த போன் எல்லாம்😬😬😬😬😬

பாரேன் ரோசம் வந்துட்டு😏😏😏😏😏

Loading spinner


   
ReplyQuote
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top