Notifications
Clear all

அத்தியாயம் 10

 

Admin
(@ramya-devi)
Member Admin
Joined: 12 months ago
Posts: 962
Topic starter  

“அச்சோ ஓரே ஈரமா இருக்கு..” அவனின் வியர்வை அவள் மேனியில் பட்டு ஈரமாக அலறினாள்.

“அதனால என்ன.. போய் குளிச்கிக்கோ..” என்றவன் விடாமல் தண்டால் எடுத்தான்.

அவன் மீது ஒய்யாரமாக படுத்துக் கொண்டவள்,

“ஆமா இப்படி எல்லாம் வெயிட் தூக்குனா உடம்புக்கு எதுவும் ஆகாதா.. ஏற்கனவே உங்களுக்கு  ஸ்ட்ரெஸ் அதிகம். இதுல இதை வேற இழுத்து வச்சுக்கிட்டா என்ன பண்றது..” கேட்டவளை இழுத்து தனக்கு கீழ் போட்டு அவள் மீது தன் முழு எடை படும் மாதிரி பரவி படர்ந்தவன்,

“என்னை பத்தி ரொம்ப தான் கவலை படுற.. என்ன விசயம். உன் பேமஸ் லவர் பாய் இதை பார்த்தா நெஞ்சு வெடிச்சு செத்துட மாட்டானா?” நக்கல் குரலில் கேட்டான்.

“ப்ச் அவன் தான் இங்க இல்லையே.. அதனால ஒன்னும் தவறு இல்ல..” சொன்னவள்,

அவன் தன் மீது இருப்பதை உணராமல், “ஆமா எப்படி உங்களுக்கு இவ்வளவு ஸ்ட்ரெஸ் ஆச்சு.. நீங்க முன்னாடி நல்லா தானே இருந்தீங்க” என்று கேட்டவளின் கேள்விக்கு பதில் சொல்லாமல்,

“அதை பத்தி என்ன இப்போ விசாரணை. அதை விடு காலையில எழுந்து குளிச்சுட்டு சேரி கட்ட சொன்னனே.. கட்டல” என்று கேட்டான்.

“ஏதே சேரியா? அட போங்கப்பா சுடிதார் போட்டுறதே பெருசா இருக்கு. இதுல உங்களுக்கு சேரி வேற வேணுமாக்கும். ரொம்ப கம்பர்ட் த்ரீ போர்த் டீசேர்ட் தான்..” என்றாள்.

“அதுக்கு வாய்ப்பே இல்ல சேரி கட்டியே ஆகணும்” என்றவனின் பார்வை அவளின் மீது அத்துமீறி பாய,

“வேணவே வேணாம் ப்பா” என்றவள்,

“எழுந்திரிங்க மூச்சு முட்டுது” என்று சொல்லி அவனிடம்  இருந்து எழுந்துக் கொண்டவளை அன்று மாலை நேரம் கடை தெருவுக்கு அழைத்துச் சென்று வேணும் வேணாங்குற அளவுக்கு சேரியாக வாங்கிக்குவித்தான்.

“எதுக்கு இவ்வளவு? எனக்கு கட்டவே தெரியாது” என்று அவள் மறுக்க,

“நான் கட்டி விடுறேன்.. நீ தினமும் சேரியா கட்டுற”

“எதுக்கு என் இடுப்பை பிடிச்சு கிள்ளவா?” முறைத்தாள்.

“அதை அப்புறம் பார்த்துக்கலாம்.. இப்போ எடு” என்றவனின் முன்பு குவிந்து இருந்த புடவை குவியல்களில் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்தான்.

“சார்..” என்ற குரலில், “சொல்லுங்க” என்று திரும்பியவன், அந்த கடை முதலாளில் வந்து நிற்க, லேசாக அதிர்ந்தான்.

“சார் புது கலக்ஷன் வந்தா எடுத்து வைக்க சொல்லி சொல்லுவீங்க இல்லையா? எடுத்து வச்சு இருக்கேன். மூணு மாசமா அந்த கலெக்ஷன் எல்லாம் அப்படியே இருக்கு. எல்லாமே புது ரக புடவைகள், கலரும் அருமையா வந்து இருக்கு. எல்லா கஷ்டமரும் கேட்டுட்டே இருக்காங்க. நான் தான் உங்களுக்கு போக மீதியை எடுத்து போடலாம்னு தேக்கி வச்சு இருக்கேன்”

“குடோனுக்கு வாங்க சார்.. அங்க தான் புடவை ரக ரகமா அடுக்கி வச்சு இருக்கோம்” என்று சொல்லி அழைத்துப் போக,

“புடவையா? உங்களுக்கு எதுக்கு புடவை.. அதுவும் மாசம் மாசம் வாங்க வருவதா சொல்றாரு..” குறுக்கே கேள்வி கேட்டவளை அது இது என சமாளித்து வருவதற்குள் இவனுக்கு போதும் போதும் என்றாகிப் போனது.

“அவன் எடுக்கும் புடவை ரகங்களை பார்த்து இவள் தான் வாயை பிளந்தாள்.

“அம்மாடி என்னாமா புடவை சூஸ் பண்றீங்க.. கேர்ள்ஸ் நாங்க கூட இப்படி எல்லாம் புடவை சூஸ் பண்ண மாட்டோம். நீங்க பார்த்து பார்த்து தேடி தேடி எவ்வளவு மெனக்கெட்டு எடுக்குறீங்க.. ர்ர்ர்..ரொம்ப அனுபவம் போல” அவனின் காதுக்குள் பேசியவளை ஒரு பார்வை பார்த்தவன் மீண்டும் புடவைகளை பார்க்க ஆரம்பித்து விட்டான்.

“ம்ம் குடுத்து வச்ச மகராசி தான் இவரோட மனைவி. எப்படி பார்த்து எடுக்குறாரு பாரேன்” என அங்கு வேலைக்கு இருந்த பெண்கள் தங்களுக்குள் சொல்லி பொறாமை பட, அதை கேட்ட மகரியோ,

“ம்கும்.. இங்க பொண்ணுக்கே வழியில்லையாம். இதுல பொண்டாட்டிக்கு எங்க போக.. இதெல்லாம் எனக்கு பார்க்கிற கலெக்ஷன்” என்று முணகியவள்,

“எனக்கே இப்படி பார்த்து எடுக்குறீங்களே.. ஒரு வேலை உங்களுக்கு கல்யாணம் ஆகி பொண்டாட்டி வந்தா அவளுக்கு எப்படி எல்லாம் பார்த்து எடுப்பீங்க.. உங்க பொண்டாட்டி ரொம்ப குடுத்து வச்சவ தான்..” லேசாக பொறாமை எட்டிப் பார்த்தது அவளின் பேச்சில். அதை இனம் கண்டுக் கொண்டவனின் இதழ்களில் லேசாக புன்னகை அரும்பியது.

“ஏன் உன் வேர்ல்ட் லெவல் பேமஸ் லவர் பாய் உனக்கு இப்படி பார்த்து பார்த்து ட்ரெஸ் எடுத்து கொடுத்தது இல்லையா?” நமட்டு சிரிப்புடன் கேட்டான் ஆதி.

“அவன் என்னைக்கு என்னோட கடைக்கு வந்து இருக்கான். ட்ரெஸ் எடுத்து குடுக்க.. சரியான கஞ்சப்பய” சொன்னவள்,

அவனின் இதழ்களில் கேலி புன்னகை உதயமாக, சட்டென்று சுதாரித்து,

“இல்லல்ல என் லவர் பாய் அப்படி எல்லாம் இல்ல.. நான் சொன்னதை மறந்திடுங்க. அவன் ரொம்ப நல்லவன்” சிறு பிள்ளையாய் அவள் சொல்ல, இன்னுமே சிரிப்பு வந்தது. அவனின் ஸ்ட்ரெஸ் எல்லாம் எங்கோ ஒளிந்துக் கொண்டது போல இருந்தது அந்த நிமிடம்.

“சரி காமடி பண்ணது போதும்.. இங்க பாரு” என்று அவளின் கவனத்தை தன் பக்கம் திருப்பிக் கொண்டவன்,

“இது போதுமா இல்ல இன்னும் எடுக்கவா?” கேட்டவனின் கையில் இருந்த புடவைகளை கண்டு மயக்கம் போட்டு விழாத குறையாக,

“எதுக்கு இவ்வளவு புடவை.. என்னால எல்லாம் கட்ட முடியாது.. ப்ளீஸ் என்னை நம்பி இவ்வளவு வாங்கி குவிக்க வேணாமே. எல்லாம் வீணா போகும்” கெஞ்சியவளை கூர்ந்து பார்த்தவன்,

“எதுவும் வீணா போகாது..” சொல்லி விட்டு பில் போட சென்றவன், அவள் எப்பொழுதும் தைக்கும் கடைக்கு சென்று கையோடு எல்லாத்தையும் கொடுத்து தைக்க சொல்லி விட்டு அவளோடு ஹோட்டளுக்கு சென்றான்.

“எப்படியும் நான் மட்டும் தான் சாப்பிடுவேன்.. இதுக்கு எதுக்கு ஹோட்டலுக்கு வரணும்” அலுத்துக் கொண்டாள்.

“பரவாயில்ல... இன்னைக்கு தோசைமேலாவாம். பல வெரைட்டி கிடைக்கும்.. எல்லாம் ட்ரை பண்ணு.. உனக்கு தான் தோசைன்னா ரொம்ப பிடிக்குமே..” என்று சொன்னவனின் பேச்சில் ஒரு கணம் திகைத்தவள்,

“எனக்கு என்ன பிடிக்கும்ன்னு உங்களுக்கு எப்படி தெரியும்” என்று அதிர்ந்துப் போய் கேட்டாள்.

“உனக்கு பிடிச்சது, பிடிக்காதது, என எல்லாமே தெரியும்டி.. குறிப்பா உன் உடம்புல எத்தனை மச்சம் இருக்கு, அது எங்கங்க இருக்குன்னு வரை எல்லாமே தெரியும்” வாய்க்குள் முணகியவன்,

“உன் அண்ணன் சொன்னான்” என்று முடித்துக் கொண்டான்.

“அது தானே பார்த்தேன்” என்றவள், உண்ண மெனு கார்டை பார்த்து என்னென்ன தோசை வெரைட்டி இருக்கு என்று பார்த்து ஒவ்வொரு வகையிலும் சின்ன சின்ன தோசையாக ஆடர் பண்ணி சாப்பிட தொடங்கினாள்.

அவள் சாப்பிடும் அழகை அவளுக்கே தெரியாமல் பார்த்து இரசித்தான்.

“ஒரே ஒரு தோசையாவது சாப்பிடலாம் இல்ல..” முறைத்து பார்த்தும் அவனிடம் வேலைக்கு ஆகவில்லை.

“நான் சாப்பிடுறத பார்த்து உங்களுக்கு ஜொள் வரல” கேட்டவளை முறைத்தவன்,

“ம்ஹும்..” என்றான் தலையை ஆட்டி.

“ரொம்ப தான்” என்று சொல்லியவள் வயிறு முட்ட சாப்பிட்டு விட்டு கிளம்பினாள். முன் இருக்கையில் அவனோடு அமர்ந்து தன் அண்ணனுக்கு போனை போட்டு பேச ஆரம்பித்தாள்.

“மச்சான் எங்க?” என்று கேட்டான் ராஜா.. ஆதி பக்கம் போனை திருப்பி,

“வண்டி ஓட்டுறாரு” என்றாள்.

“ஹாய் மச்சான்” இருவரும் ஹாய் சொல்லிக் கொண்டார்கள்.

“எப்படி இருக்க?” என்று என்னவோ தினமும் பேசிக்கொள்ளதவர்களை போல பேச ஆரம்பிக்க,

“ஹலோ போன் போட்டது உன் தங்கச்சி.. என்னவோ அவரு போன் போட்ட மாதிரி அவர் கிட்ட பேசுற, நீ அவர் கிட்ட பேசணும்னா அவர் போன் போடும் போது பேசு.. இல்லையா அவரோட போனுக்கு நீ போட்டு பேசு. அதை விட்டுட்டு நான் போட்ட போனுல நீங்க ரெண்டு பேரும் பேசாதீங்க.. காதுல இருந்து புகை வருது. இப்ப நான் தானே போட்டேன். அதனால நீ என் கிட்ட மட்டும் தான் பேசணும்” அதட்டல் போட்டவளின் பேசும் அழகை காதால் கேட்டுக் கொண்டே வண்டியை ஒட்டிக்கொண்டு இருந்தான் ஆதி.

“சரி  தாயே.. நீ மட்டும் பேசு நான் உன் கிட்ட மட்டும் பேசுறேன்” என்றான் ராஜா சிரிப்போடு.

“அது..” மிரட்டியவள், குரலை ஹஸ்க்கி வாய்சில் மாற்றி, “உன் பிரெண்டு தான் ஒரு தோசை மேளாவுக்கு என்னை கூட்டிட்டு போயிட்டு அவரு ஒரு தோசை கூட சாப்பிடல.. ஆனா நான் வயிறு முட்ட சாப்பிட்டுடேன்” சொன்னவள்,

“ஆனாலும் உன் பிரெண்டு ரொம்ப பிடிவாதம் சாமி. ஒரு வாய் கூட வாங்கிக்கல.” அலுத்துக் கொள்ளவும் செய்தாள். ஆதி அவளை கண்டுக் கொள்ளாமல் வண்டியயை ஓட்டிக் கொண்டு இருந்தான்.

“எவ்வளவு சேரி வாங்கி குடுத்தாரு தெரியுமா? நான் ஏதோ தினமும் சேரி கட்டி கிழிக்கிற மாதிரி.. அத்தனையும் வேஸ்டாக தான் போகுது. அதுக்கு எதுக்கு இவ்வளவு காசை போடணும்” இரகசியாமாய் அவள் சொல்ல, ராஜாவின் இதழ்களில் புன்னகை.

“என்னடா சிரிக்கிற?” முறைத்தாள்.

“அதெல்லாம் ஒன்னும் இல்ல.. நீ தனியா இருக்கும் பொழுது எனக்கு கூப்பிடு அப்போ உன் கிட்ட ஒன்னு சொல்றேன். இப்ப வைக்கிறேன்னு அவன் வைத்து விட, இவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

“சரி வீட்டுக்கு போய் பேசிக்கலாம்” என்று அவளும் விட்டுட்டு விட்டாள்.

வீட்டுக்கு போனதுக்கு பிறகு மறக்காமல் அண்ணனுக்கு போனை போட்டு தனியாக போய் பேசினாள்.

“என்னண்ணா என்னவோ சொல்ல வந்தியே என்ன அது?” விவரம் கேட்டாள்.

“அது வேற ஒன்னும் இல்லடா..” என்றவன்,

“ஆதி ஒரு கபோர்ட் முழுவதும் சேரியா வாங்கி வச்சு இருக்கான்.. அந்த கலெக்ஷனை போய் பாரு.. அதை சொல்ல தான் கூப்பிட்டேன்” என்றான் ராஜா.

“ஏதே.. ஒரு கபோர்ட் முழுசுமா? இதோ இப்பவே போய் பார்க்கிறேன்” என்றவள்,

“ஆமா உன் பிரெண்டுக்கு லவர் யாரும் இருக்காங்களா? எதுக்கு இவ்வளவு சேரி வாங்கி வச்சு இருக்காரு” கேள்வி கேட்டவளிடம் என்ன சொல்வது என்று தெரியாமல்,

“அதெல்லாம் நீ அவன் கிட்ட தான் கேட்கணும்” என்றான்.

“ம்கும் உன் பிரெண்ட் நான் கேட்டவுடன் அப்படியே சொல்லிடுவாறாக்கும்.. போண்ணா” என்றவள் ஆதி எங்க இருக்கிறான் என்று நோட்டம் விட்டவள், அவன் குளியல் அறையில் இருப்பதை உறுதி செய்துக் கொண்டு ராஜா சொன்ன கபோர்டை திறந்துப் பார்த்தாள்.

அந்த கபோர்ட் முழுவதும் வித விதமாய் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த புடவைகளை கண்டு வாயை பிளந்த மகரியாள்,

“டேய் என்னடா இவ்வளவு புடவை வாங்கி அடுக்கி வச்சு இருக்காரு.. ஒருவேளை நமக்கு தெரியாம உன் பிரெண்டு யாரோடவாவது குடும்பம் நடத்துறாரா? இருக்கும் இருக்கும்.. இல்லன்னா இவ்வளவு புடவை எப்படி” ராஜாவிடம் பேசிக் கொண்டே இருந்த நேரம் ஒரு புடவை அவளை வெகுவாக ஈர்க்க அந்த புடவையை கையில் எடுத்து பார்த்தவளின் கண்கள் நிலைக்குத்திப் போக அப்படியே மயக்கம் போட்டு விழுந்தாள்.

மகரி அந்த கபோர்டை திறக்கும் பொழுதே ஆதி குளியல் அறையை விட்டு வெளியே வந்து விட்டான்.

அதுவும் அவளின் அண்ணனிடம் பேசியதை முழுமையாக கேட்டவன் பல்லைக் கடித்தான்.

“டேய் என்னடா இவ்வளவு புடவை வாங்கி அடுக்கி வச்சு இருக்காரு.. ஒருவேளை நமக்கு தெரியாம உன் பிரெண்டு யாரோடவாவது குடும்பம் நடத்துறாரா? இருக்கும் இருக்கும்.. இல்லன்னா இவ்வளவு புடவை எப்படி” அவளின் சந்தேகமான பேச்சில் கண்கள் நொடியில் சிவந்துப் போனது.

“அந்த பொண்ணே நீ தான்டி” என்று அவளை பிடித்து உலுக்க எண்ணி அருகில் வந்தவன், அவள் குறிப்பிட்ட புடவையை எடுத்துப் பார்த்து மயக்கம் போட்டு விழவும் இவன் அவளை தாங்கிப் பிடிக்கவும் சரியாக இருந்தது.

போனில் இருந்த ராஜாவை முறைத்தவன்,

“வெளிநாட்டுல இருக்குற திமிர்ல கண்டதையும் பண்ணிட்டு இருக்க.. ஊருக்கு வா உன்னை வச்சுக்குறேன்” பல்லைக் கடித்தவன், மயங்கி விழுந்தவளை படுக்கையில் படுக்க வைத்து விட்டு ராஜாவிடம் சண்டைக்கு போனான்.

“இப்படியே பண்ணிட்டு இருந்த சாவடிச்சுடுவேன்டா..”

“பூனைக்கு மணி கட்ட நீ பயந்துக்கிட்டு இருக்க.. ஆனா எனக்கு என் நண்பன் வாழ்க்கை ரொம்ப முக்கியம்.. அதனால நீ என்ன பேசுனாலும் சண்டை போட்டாலும் இனி உன் பேச்சை நான் கேட்கிறதா இல்ல.. நினைவுகளை மறந்துப் போய் இருக்குறவளுக்கு எதையாவது நினைவு படுத்தி தான் ஆகணும். அவளை நினைச்சு நினைச்சு நீ ஓடா தேய்ந்துக்கிட்டு இருக்க.. அது உனக்கு தெரியுதா?” வேதனையுடன் கேட்ட ராஜாவுக்கு எந்த பதிலையும் சொல்லாமல் போனை அணைத்து போட்டு விட்டான் ஆதித்யன்.

Loading spinner


   
Quote
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top