இதையெல்லாம் போனில் கேட்டுக் கொண்டு இருந்த பெருவளத்தானுக்கு ஆதினியின் மீது இரக்கம் சுரந்தது. அதை மனதோடு பூட்டி வைத்துக் கொண்டவன் கனிகாவுக்கு மட்டும் அல்லாது மீதமிருந்த மூவருக்கும் சேர்த்து உணவை ஆர்டர் போட்டுவிட்டான்.
ஆதினி என்ன செய்வாளோ என்று பதறிப்போனது. சாப்பிடுவாளா மாட்டாளா என்று அவனது உள்ளம் துடிக்க ஹெல்மெட்டை தலையில் மாட்டிக்கொண்டு அவளை பாலோ செய்ய ஆரம்பித்தான்.
நேற்றிரவு அவனுடைய வீட்டுக்கு போகும் மன நிலையில் இல்லாததால் கடையிலே படுத்து விட்டான். அதனால் காலையில் ஆதினியை பின்தொடர வசதியாக இருந்தது. அவன் எதிர்பார்த்தபடி அவள் எதுவுமே சாப்பிடாமல் தான் அலுவலகம் சென்றாள்.
இவனுக்கு வயிற்ருக்குள் சுருக்கென்று ஏதோ குத்தியது. அப்பொழுது தான் நேற்றிலிருந்து எதுவும் சாப்பிடாததே நினைவுக்கு வந்தது. ஆதினி நேற்றிரவு சாப்பிட்டது தெரியாமல் இவன் கொலை பட்டினியாக இருந்தான்.
அந்த நேரம்,
“அக்கா சாப்பிட்டுட்டா நீங்க சாப்பிடுங்க மாமா” என்று விதுலிடம் இருந்து மெசேஜ் வர எடுத்து படித்தான். படித்து விட்டு கண்கள் சுறுங்க யோசனையாக யாரை சொல்கிறான் என்று பார்க்க அடுத்த மெசேஜ் “ஆதினி அக்கா சாப்பிட்டுட்டா” என்று இருக்க சற்றே இறுக்கம் தளர்ந்தது அவனுக்கு.
ஆதினியின் அலுவலகத்தின் கீழே ஒரு புட் கோட் இருக்க அதற்குள் நுழைந்து அவன் சாப்பிட ஆரம்பித்தான். அதிக பசி என்ன சாப்பிட்டோம் என்று கூட தெரியாது சாப்பிட்டு முடித்தான். பில் என்ன ப்பா என்று கேட்க,
“கட்டியாச்சு சார்” என்று பதில் வர
“இல்லப்பா நான் இன்னும் பணம் குடுக்கலயே” “அவங்க குடுத்துட்டாங்க சார்” என்று ஆதினியை கை காண்பிக்க அங்கு ஆதினி அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தாள்.
“என்னென்ன சாப்பிட்டேன்னு ஒரு லிஸ்ட் குடுக்க முடியுமா..?”
“சார்..”
“இல்ல நான் கேட்டது ரெண்டே ரெண்டு இட்லி. ஆனா அதை விட அதிகமா சாப்பிட்ட மாதிரி இருக்கு. அது தான் என்று பெருவளத்தான் சொல்ல,
“நாலு இட்லி, ரெண்டு தோசை, ஒரு செட் பூரி, நாலு இடியாப்பம். கடைசியா ரெண்டு வடை ஒரு கப் காபி சார்” என்றான்.
“இதெல்லாம் யார் ஆர்டர் பண்ணுனது?”
“மேடம் தான் சார்” என்றவன் தன் வேலையை கவனிக்க போய்விட அப்படியே அந்த இருக்கையில் அமர்ந்துவிட்டான்.
திரும்பி ஆதினியை ஒரு பார்வை பார்த்தான். அவள் இவன் பக்கம் திரும்பவே இல்லை. அவள் பாட்டுக்க ஒரே ஒரு தோசையை ரொம்ப நேரமாக வைத்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தாள்.
“ஏன்டி உன் வயித்தை கூட கவனிச்கிக்கமா என்னை இப்படி விழுந்து விழுந்து கவனிக்கிற...?” என்று அவளிடம் சண்டை போட மனம் விளைந்தது. ஆனால் இந்த சொல்ல்நிலையில் அவளை நெருங்க மிகவும் யோசித்தான். அவனுக்கு எவ்வளவு கெட்ட பெயர் வந்தாலும் தாங்குவான்.
ஆனால் ஆதினிக்கு ஒன்று என்றால் இவனால் தாங்க முடியாது. அவ்வளவு தான் பொங்கி விடுவான். அதனாலே தன்னால் அவளுக்கு எந்த இடையூறும் வரக் கூடாது என்று அமைதி காத்து தள்ளி நிற்கிறான். அதோடு அவள் கேட்ட கோரிக்கை கண் முன் வர அவளை நெருங்கவே இல்லை பெருவளத்தான்.
அவளுக்கு போதுமான இடைவெளி விட்டு நிற்க ஆரம்பித்தான். அது அவனது மனதை வெகுவாக வாட்டி எடுத்த பொழுதும் மொத்த வேதனையையும் தாங்கி அவளின் வைராக்கியத்துக்கு உரம் சேர்த்தான்.
சாப்பிட்டு எழுந்தவள் தன் அலுவலகத்துக்கு செல்ல, இவனும் கிளம்பி விட்டான் கடைக்கு. அதன் பிறகு இருவரும் சந்தித்துக் கொள்ளவே இல்லை. ஆதினி வீட்டில் யாருடனும் பேசவில்லை. விதுல் மூலம் அவள் நேரத்துக்கு உண்டு விடுகிறாளா என்பதை மட்டும் கவனித்துக் கொண்டான்.
ஒரே ஊர் என்பதால் எங்காவது அடிக்கடி சந்தித்துக் கொள்ள வேண்டி இருந்தது. எல்லாம் ஒரே ஒரு நொடி பார்வை பரிமார்கள் தான். அதிலும் ஆதினி கூலர்ஸ் போடுவதால் அவள் தன்னை பார்க்கிறாளா இல்லையா என்று குழம்பி போனான்.
இருந்தாலும் அவளை பார்ப்பதை அவன் நிறுத்தவில்லை. தனக்கு ஒரு மனைவி இருக்கிறாள் அவள் தற்பொழுது மாதமாக இருக்கிறாள் எனப்தெல்லாம் அவனது கருத்தில் இல்லவே இல்லை. எப்பொழுது ஆதினியின் மனதில் தான் இருக்கிறோம் என்று அறிந்தானோ அப்பொழுது இருந்து அவனது கண்கள் ஆதினியை மட்டும் சுற்றி வந்தது.
இது தவறு என்று அவனது மனம் அறிவுறுத்தினாலும் ஏனோ அவனது நெஞ்சம் சூட்டை விரும்பும் விட்டில் பூச்சியாய் அவளை மற்றுமே அவனது எண்ணங்கள் சுற்றி வந்தது. அதை தடுக்க எந்த முயற்சியும் அவன் எடுக்கவில்லை என்பது தான் இன்னும் கூடுதல் சிறப்பு.
நடந்த சம்பவத்துக்கு பிறகு ஆதினியின் வீட்டுக்கு அவன் போவதே இல்லை. அதே போல அவனது வீட்டுக்கும் அவன் போகவில்லை. என்னவோ யாரையும் பார்க்க தோணவே இல்லை.
அவனது வீட்டுக்கு ஒருத்தனை விட்டு இரண்டு செட் துணிகளை மட்டும் எடுத்து வர சொல்லி கடையிலே இருந்துக் கொண்டான். தட்டிக் கேட்க யாரும் முன்வரவில்லை.
அப்படி இப்படி என்று விசாகனுக்கு நடந்த விசயங்கள் எல்லாம் தெரியவர வேகமாய் ஆதினியின் வீட்டுக்கு விரைந்தார். “எப்படி இப்படி அந்த சின்ன பொண்ணு மேல அபாண்டமா பழியை சுமத்தலாம்... நடந்ததது என்னன்னு தெரிஞ்சும் எப்படி இவங்களால அந்த பிள்ளையை போட்டு மாட்டை அடிக்கிற மாதிரி அடிக்க முடிஞ்சது. கேட்க யாரும் இல்லன்னு நினைச்சாங்களா...? ஆதினிக்காக நான் இருக்கேன்... நாக்கை பிடுங்கிற மாதிரி நாலு வார்த்தை எல்லோரையும் கேட்காம விடமாட்டேன்.” என்று வீட்டுக்குள் அவர் ஆவேசமாக நுழைய அதற்குள் ஆதினியும் விதுலனும் வந்து இருந்தார்கள் வீட்டுக்கு.
வீட்டுக்குள் நுழைந்த விசாகன் அந்த நேரம் ஆதினி அங்கு இருப்பதை பார்த்து அவரின் மொத்த வேகமும் உடைந்துப் போக அவளின் முகத்தை வேதனையுடன் பார்த்தார் அவர்.
“ஆதினி” என்று அவர் பரிதவித்துப் போக, கண்களிலே கெஞ்சலாக “வேணாம் இந்த இரக்கம் எனக்கு வேண்டாம் மாமா” என்று அவள் சொல்ல, சட்டென்று தன்னை மீட்டுக் கொண்டவர்,
“முடியாதும்மா” என்று அவர் தலையசைக்க,
“செத்து போய் மண்ணுல புதைத்த பொணத்தை தோண்டி எடுத்து மனையில வச்சு விழா நடத்தி என்ன ஆக போகுது மாமா” என்று அவள் விரக்தியின் உச்சியில் இருந்து சோழ துடிதுடித்துப் போனார்.
“ஆதினி...” என்று அவர் தன்ன மீட்டுக்கொள்ள மிகவும் சிரமப்பட்டார். ஆத்திரம் கண்களை மறைக்க அங்கு ஓரமாய் நின்று இருந்த ஆதினியின் பெற்றவர்கள் இருவரையும் உண்டு இல்லை என்று பண்ணும் முடிவோடு தான் வந்தார். ஆனால் ஆதினியின் கண்ணசைவில் அத்தனை உணர்வுகளையும் கோவத்தையும் தனக்குள் போட்டு புதைத்துக் கொள்ள முயன்றார். எல்லா உண்மைகளும் அறிந்த ஒரே மனிதர் இவர் மட்டுமே. ஆதினியின் அனைத்து பக்கங்களும் இவர் ஒருவருக்கு தான் தெரியும். எனவே தேவையில்லாது பழி சுமப்பவளை கண்டு நெஞ்சம் கனத்துப் போனது.
அதற்குள் உள்ளே இருந்து “வாங்கா மாமா.. மாசமா இருக்கிற மருமகளை ரொம்ப சீக்கிரமா பார்க்க வந்துட்டீங்க போல” என்று கனிகா நக்கலுடன் அவரை வரவேற்றாள்.
இந்த கோனி மாசமா இருகறதில் ஒரு சாபம் கூட விட முடியலா......
மனுஷ ஜெனமமா இது எல்லாம்....
விசாகன் அது என்ன என் பிள்ளையோட பிள்ளையா அப்படினு கேட்க எவளோ நேரம் ஆகும்?????





