Notifications
Clear all

அத்தியாயம் 22

 

Admin
(@ramya-devi)
Member Admin
Joined: 12 months ago
Posts: 961
Topic starter  

“ப்ச் அத்தை இதென்ன சின்ன பிள்ளை தனமா... உடம்பு முழுக்க காயம் கண்டு போய் இருக்கா. அவளை போய் இப்படி நோகடிக்கிறீங்க” என்றவனை கனிகா இளக்காரமாக பார்த்து,

“ஓ.. சஞ்சு சொன்னதை நீங்க செயல் மூலமா நிரூபிச்கிட்டு இருக்கீங்க போல. ரொம்ப தான் அவ மேல அக்கறை. அப்படி என்னத்தை காட்டி மயக்கினா” என்று தேள் கொடுக்கக கொட்டியவளை அறையவே போய் விட்டான் பெருவளத்தான்.

“ச்சீ நீயெல்லாம் ஒரு பொண்ணாடி. இப்படி அபாண்டமா அந்த புள்ளை மேல பழியை போடுற. பிஞ்சு மனசு அவளுக்கு. உன் வக்கிரத்தை அவக்கிட்ட இறக்கி வைக்காத...” என்றான்.

அதற்கு இன்னும் கனிகா கேவலமாக பேச வெறுத்துப் போனான் அவன். ஆதினி முற்றும் முழுதுமாக உணர்வை இழந்துப் போய் தன் முன்னாடி நின்ற பெருவளத்தானின் முதுகில் அப்படியே சரிந்து விழுந்தாள்.

அவள் அப்படி சரியவும் பெருவளத்தானுக்கு உயிரே நடுநடுங்கிப் போனது. பின்னாடி கை விட்டு தன்னோடு சேர்த்து அவளை அனைத்துக் கொண்டவன் சடுதியில் அவளை தனக்கு முன்பு கொண்டு வந்து அவளின் கன்னத்தை தட்ட, அவளிடம் எந்த அசைவும் இல்லை.

அப்படியே பொம்மையாய் அவள் கிடக்க, “அத்தை தண்ணி எடுத்துட்டு வாங்க” என்று அவன் பதறிய பிறகே வேண்டா வெறுப்பாக தண்ணீரை கொண்டு வந்து கொடுத்தார் குமுதா.

தண்ணீர் தெளித்தும் அவள் கண்விழிக்காமல் போக அவளை அப்படியே அள்ளி தூக்கி தோளில் போட்டவன் ஆம்புலன்ஸ்க்காக கூட காத்திருக்காமல் அருகில் இருந்த மருத்துவமனைக்கு ஓடினான்.

அதை வெறுப்பு வழிய கண்களில் தீ வழிய பார்த்துக் கொண்டு இருந்தாள் கனிகா.

“என்ன மிஸ்டர் இது உடம்பெல்லாம் இவ்வளவு காயமா இருக்கு... நீங்க எல்லாம் மனிதனா இல்லை மிருகமா இப்படி போய் பொண்டாட்டியை அடிச்சு இருக்கீங்க. அவங்க முதல்ல கண் விழிக்கட்டும். போலீஸ்ல கம்ப்ளைன்ட் குடுக்க சொல்றேன் கணவன் கொடுமைன்னு நாளைக்கு பேப்பர்ல வரட்டும்” என்ற மருத்துவரின் கூற்று எல்லாம் அவனின் காதிலே விழவில்லை.

“நர்ஸ் வேற யாரும் இல்லை... வந்து ஹெல்ப் பண்ணுங்க மிஸ்டர்” என்று அந்த மருத்துவர் கடித்து குதறினார் பெருவளத்தானை.

“புடவையை ரிமூவ் பண்ணிட்டு இந்த ஓபன் ட்ரெசை போட்டு விடுங்க. எங்கேங்க காயம் இருக்குன்னு தெரியல. இப்படியா மாட்டை அடிப்பது போல அடிச்சி வைப்பீங்க.” என்று மறுபடியும் திட்டியவர்,

“காயங்களை எல்லாம் கிளீன் பண்ணிட்டு மருந்து போட்டு விடணும். குயிக்” என்று சுடுதண்ணீரை எடுக்க விரைந்தார் மருத்துவர்.

பெருவளத்தானுக்கு அந்த நிமிடம் என்ன செய்வது என்று தெரியவில்லை. கைகள் நடுங்க அவளது சேலையை ரிமூவ் பண்ண அதற்கு மேல் அவனால் முடியவில்லை. ஏனெனில் அவளின் கழுத்துக்கும் மார்புக்கும் இடையிலான இடத்திலே மூன்று வரி பதிந்து இருந்தது விரல் அளவுக்கு.. அதில் உதிர்ந்துக் கொண்டு இருந்த உதிரத்தை பார்த்து கண்களை அழுந்த மூடிக் கொண்டான்.

நெஞ்செல்லாம் பற்றி எரிந்தது. என்னை சுமந்த இந்த நெஞ்சுக்கா இவ்வளவு காயங்கள்.. என்று மறுகிப் போனான்.

“உன்னை அள்ளி எடுத்து கைக்குள்ள நெஞ்சுக்குள்ள வைத்து சீராட்ட எனக்கு தகுதி இல்லாம போச்சுடி... என் கண்ணு முன்னாடியா உனக்கு இந்த அநியாயம் எல்லாம் நடக்கணும். என்னால தாங்க முடியலயே..” என்று கண்ணீருடன் அவளின் நெற்றியில் அழுத்தமாக முத்தம் கொடுத்தான்.

“இந்த வலி எல்லாத்தையும் என்கிட்டே குடுத்துடி. உன் பூப்போல மனதை யாரும் புருஞ்சுக்கமா போயிட்டாங்களே... என் நிழல் உன் மேல பட்டதுக்கே உன்னி அழிக்க பார்த்தியே அப்படி பட்டவளின் உயர்ந்த குணத்தை கேவலமா பேசி உன்னை காயப்படுத்திட் டாங்களே குட்டிம்மா. எப்படிடி அவ்வளவு பேச்சையும் தாங்கி நின்ன...” என்று என்று விழிகளில் நிறைந்த கண்ணீருடன் அவளின் முகத்தோடு முகம் புதைத்து தன் தவிப்புகளையும் ஆற்றாமையையும் போக்கிக்கொள்ள முயன்றான்.

ஆனால் அவனது தவிப்பும் ஆற்றாமையும் அவ்வளவு எளிதாக விலகிவிடுமா என்ன...? அவளின் ஒட்டு மொத்த காயங்களுக்கும் தன் முத்தத்தால் மருந்திடுவது போல முகம் முழுக்க வன்மையாக முத்தம் வைத்தான். அவனின் கண்ணீர் அவளின் முகத்தில் தெரித்ததில் மெல்ல மெல்ல ஆதினிக்கு உணர்வு வந்தது... ஆனால் கண்களை விழிக்க முடியவில்லை. பெருவளத்தானின் பேச்சுக்களும் முத்தமும் அவளுக்கு எதையோ உணர்த்த கண்களின் ஓரம் நீர் கசிந்தது.

அது காயத்தின் ஏற்பட்ட வலி காரணமாக வருகிறது என்று எண்ணியவன், அவளது கண்ணீரை துடைத்து விட்டு,

“இல்ல குட்டிம்மா நீ அழாத... உனக்கு சரியா போயிடும். உன்னை பழி சொன்னவங்களை நான் சும்மா விட மாட்டேன். எல்லோருக்கும் பதிலடி குடுக்கணும். அதுக்கு நீ முதல்ல தெம்பா இருக்கணும். என் ஆதினி குட்டி எப்பொழுதுமே கம்பீரமா யாருக்கும் தலை குனியாம ஒரு திமிரோட இருப்பா. எனக்கு அந்த ஆதினி தான் வேணும். என் ஆதினி குட்டி எந்த தவறும் செய்யல. செய்யவும் மாட்டா. அவளுக்கு உரிமை இல்லாததை எப்பொழுதும் அவ திரும்பி கூட பார்க்க மாட்டா. எனக்கு அது நல்லாவே தெரியும். உன் காதல் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. உன் மௌனம் உடையும் வரை நான் காத்திருப்பேன்.” என்று அவளின் கண்ணீரை அழுந்த துடைத்தவன் அவளது நெற்றியில் மீண்டும் அழுத்தமாக முத்தம் வைத்து தன் கண்ணீரையும் துடைத்துக் கொண்டான்.

ஆனால் அவனது மனம் கொதித்துக் கொண்டு இருந்தது. அதை அடக்கவே முடியவில்லை. அப்படியே அவன் தரையில் அமர்ந்து விட்டான் உடைந்துப் போய். அவளின் உடைகளை மேற்கொண்டு கலைக்க அவனால் முடியவில்லை. அவளது காயங்களை பார்க்க தெம்பு இல்லை. அவளின் காயங்களை கண்டு விழிகளில் கண்ணீர் நிறைந்துப் போனது பெருவளத்தானுக்கு.  

அந்த நேரம் மருத்துவர் வந்து அவனை முறைத்துப் பார்த்தார்.

“என்ன மேன் டிரெஸ ரிமூவ் பண்ண சொன்னா கீழ உட்கார்ந்து புதையல் எடுத்துட்டு இருக்க. குயிக் மருந்து போடணும்” என்று அவர் சொல்ல அதற்கு மேல் முடியாமல் மீண்டும் எழுந்தவன் ஆதினியை பார்த்து இன்னும் கண்கள் கலங்கினான்.

மீண்டும் அவளின் நெற்றியில் முத்தம் வைத்தவன், அவளின் முகத்தில் கண்ணீர் தெறிக்க அவளின் இரவிக்கை ஊக்கில் கை வைக்க ஆதினி கடினப்பட்டு கண்களை விழித்தாள்.

அவளையே பார்த்துக் கொண்டு இருந்தவனுக்கு அவளின் கண் விழிப்பு நீண்ட நேரம் தேடியும் கிடைக்காத தாயை கண்ட பிள்ளையின் உணர்வில் கண்கள் கலங்க அவளை பார்த்தன்.

அவனது பார்வையில் இருந்த நேசத்தையும் தவிப்பையும், அன்பையும் பார்த்தவளுக்கு அந்த நேரம் தேவ கணம் தான். தன் பெட்டகத்தில் முடிந்து வைத்துக் கொண்டாள்.

அப்பொழுது தான் அவன் என்ன செய்துக் கொண்டு இருக்கிறான் என்று புரிய சட்டென்று அவனின் கரத்தோடு தன் கரத்தை வைத்து அவள் தலையை வேண்டாம் என்று அசைக்க,

அவளின் கூச்சம் புரிந்து, கைகளை எடுத்துக் கொண்டான்.

“நீ ஓகே தானே குட்டி. மயக்கம் மீண்டும் வருதா? வலிக்குதாடா?” என்று கேட்டவனை முறைத்துப் பார்த்தார் மருத்துவர்.

“ஏன் மேன் போட்டு அடிச்சதும் இல்லாம வலிக்குதான்னு வேற கேட்குறியா? ரொம்ப தான் தைரியம். இரு உன்னை உள்ள தள்ளி முட்டிக்கு முட்டி தட்ட சொல்றேன்” என்றவர் “நீ இன்னும் ரிமூவ் பண்ணலையா..?” முறைத்தார்.

அதில் சங்கடப் பட்டவன் ஆதினியை பார்க்க,

“நானே ரிமூவ் பண்ணிக்கிறேன் டாக்டர். நோ ப்ராப்ளம்” என்றவள் பெருவளத்தானை ஒரு பார்வை பார்த்தாள். அதில் அவன் தலையசைத்து வெளியே போய் நின்றான். அதன் பிறகு உடை கலைந்து இலகுவான மருத்துவ உடை போட்டுக் கொண்டவளுக்கு தன் உடல் மொத்தமும் காயமாகி இருந்ததை வேதனையுடன் பார்த்தாள்.

வீட்டில் இருந்து யாரும் வரவில்லை என்பதை அறிந்தவளுக்கு விரக்தி இன்னும் அதிகமானது. ஆனால் வெளியே யாரிடமும் காட்டிக் கொள்ளவில்லை.

மருத்துவம் பார்த்து விட்டு உடைகளை மீண்டும் போட்டுக் கொண்டவள், மருத்துவர் போலிஸ் கம்ப்ளைன்ட் குடு என்று அறிவுறுத்த அவரிடம் ஒரு புன்னகையை மட்டும் கொடுத்தவள் தன் விரலில் அணிந்து இருந்த மோதிரத்தை கொடுத்து,

“இப்போ என்கிட்டே எந்த பணமும் இல்லை டாக்டர். நாளைக்கு பணம் குடுத்துட்டு இதை வாங்கிக்கிறேன்” என்ற பொழுதே, “எவ்வளவு டாக்டர் பீஸ்” என்று பர்சை எடுத்துக் கொண்டு பெருவளத்தான் வந்தான் உள்ளே.

“இவங்க குடுத்துட்டாங்க மிஸ்டர்” என்று மோதிரத்தை காட்டினார்.

“இல்ல டாக்டர் என் கிட்ட பணம் இருக்கு” என்று அவன் கொடுக்க வர,

“என்கிட்டே தன்மானம் மட்டும் தான் இருக்கு. ப்ளீஸ் அதையும் நீங்க பறிக்க பார்க்காதீங்க” என்று கையெடுத்து கும்பிட்டவள் வெளியே போய் விட்டாள்.

அவளின் பேச்சில் உறைந்து போய் விட்டான் சில கணங்கள். பின் பெருமையாக சிரித்துக் கொண்டவன் அவளை தொடர்ந்து வெளியே வந்தான். அவனுக்காக காத்திருக்காமல் பொடி நடையாக நடக்க ஆரம்பித்து விட்டாள்.

Loading spinner


   
Quote
(@sowmya)
New Member
Joined: 5 months ago
Posts: 2
 

Ivlo kiltharamana ennamoda iruka family la athini ini irukavey kudathu ava veliya poi nala vazhatum apo than indha ithupona family ku puriyum.

Loading spinner


   
ReplyQuote
Admin
(@ramya-devi)
Member Admin
Joined: 12 months ago
Posts: 961
Topic starter  

Posted by: @sowmya

Ivlo kiltharamana ennamoda iruka family la athini ini irukavey kudathu ava veliya poi nala vazhatum apo than indha ithupona family ku puriyum.

ஆனா அவ போகாட்டாளே.. எல்லோரையும் நேசிக்கிறாள்..‌♥️

 

Loading spinner


   
ReplyQuote
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top