அந்த பையை பார்த்த ஆதினிக்கு நெஞ்சே உறைந்துப் போனது போல ஆனது. யாருக்கும் தெரியாது என்று அவள் மறைத்து வைத்த அத்தனையையும் இன்று வெட்ட வெளிச்சமாகிப் போனதில் கூனி குறுகி நின்றாள்.
அந்த பையின் கிளிப் தூக்கிப் போட்டதில் தானாகவே திறந்துக் கொள்ள அதில் இருந்த அத்தனையும் தெரித்து வெளியே வந்து விழுந்தது. அதில் சிலவை பெருவளத்தானின் காலில் வந்து விழ கீழே குனிந்து எடுத்துப் பார்த்தான்.
எடுத்து பார்த்தவனுக்கு அதிர்ச்சியில் பேச்சே மறந்துப் போனது. “ருத்தான்” என்று ஆடை மொழியோடு ஒரு குட்டி நாட்குறிப்பு. அதில் முதல் பக்கத்தில் இருந்தது அவனுடைய பள்ளிப் பருவத்து புகைப்படம்.
அதற்கு கீழே ஆதினி பெருவளத்தான் என்று எழுதி இருந்தது.
“இப்போ புருஞ்சதா நான் ஏன் அவள் மீது பழி போட்டேன்னு. அக்கா புருசன்னு கூட பார்க்காம எவ்வளவு கேவலமா உங்களை அவ மனசுல சுமந்து இருக்கான்னு பார்த்தீங்களா? என்னவோ ரொம்ப உத்தமி மாதிரி அவளுக்கு குடை பிடிச்சீங்களே. இப்போ சொல்லுங்க நான் பேசுனது தப்பான்னு” என்று கேட்டவள் ஆதினியை வெறுப்பு நிறைய பார்த்தாள்.
அவள் மட்டும் இல்லை அவளின் ஒட்டு மொத்த குடும்பமும் ஆதினியை அருவெறுப்புடன் பார்த்தது. அவர்களுக்கு இந்த செய்தி புதிது. முன்பு செய்த ஒரு தவறால் கனிகா ஆதினியை பேசுகிறாள் என்று எண்ணி இருந்தவர்கள் இந்த விசயத்தை ஆதினியிடம் இருந்து கொஞ்சம் கூட எதிர் பார்க்கவே இல்லை.
“ச்சீ நீ எங்க பிள்ளை தானா...? இவங்களை பெத்த வயித்துல தான் உன்னையும் பெத்தனா நானு. அக்காவோட வாழ்க்கையையே பங்கு போட பார்க்குறியே நீயெல்லாம் நல்லாவா இருப்ப... அப்படி ஆம்பளை சுகம் வேணும்னா முன்னவே சொல்லி இருந்து இருக்கலாமே சஞ்சுவுக்கு கல்யாணம் செய்யிறதுக்கு முன்னாடியே உனக்கு ஒருத்தனை பார்த்து கட்டி வச்சு இருப்பனே” என்று கேட்ட குமுதா ஆதினியை அடித்து வெளுக்க பெருவளத்தானுக்கு தாங்கவே முடியவில்லை.
வைகுந்தனும் “யாராவது அக்கா கணவனை வளைச்சிப் போட நினைப்பாங்களா...? அப்படி தான் உன்னை வளர்த்தனா...? என் வளர்ப்புக்கு இப்படி களங்கமா வந்து நிக்கிறியே. உருப்புடுவியா நீயெல்லாம் உன்னால அவ தான் வாழாம இருக்கா. பெரிய படிப்பு படிச்சி இருக்கன்ற திமிர் தானே இப்படி எல்லாம் செய்ய வைக்குது.” என்று அவர் கீழ் தரமாக பேசி ஆதினியை பெல்ட்டால் அடிக்க அதற்கு மேல் பெருவளத்தானால் பொறுக்க முடியவில்லை.
“மாமா அத்தை போதும் அவளை விடுங்க. நீங்க இப்படி பேசி பேசி அவளை இன்னும் வேதனை படுத்தாதீங்க. அவக்கிட்ட நான் பேசுறேன்” என்று சொன்னதை காதிலே வாங்கிக்கொள்ளாமல்,
“நீங்க விடுங்க மாப்பிள்ளை. இந்த் மாட்டுக்கு எல்லாம் சொன்னால்லாம் ஏறாது. இந்த விசயத்தை நான் பார்த்துக்குறேன். ஏங்க கிட்ட விட்டுடுங்க” என்று குமுதா சொல்ல,
பெருவளத்தான் ஆதினியை அவரிடம் கொடுக்காமல் தனக்கு பின்னாடி நிறுத்திக் கொண்டு,
“அது தான் நான் சொல்றேன்ல அத்தை விடுங்க. இது நானும் அவளும் சம்மந்தப்பட்ட விசயம். நான் பேசி பார்க்கிறேன். அதுக்கு பிறகு நீங்க என்ன சொன்னாலும் கேட்கிறேன்” என்றான் அழுத்தமாக.
அவர்கள் தயங்க,
“நான் பார்த்துக்குறேன்” என்றான் இறுதியிட்டு. அந்த உறுதியான குரலில் எல்லோரும் சற்று அடங்கி தான் போக வேண்டி இருந்தது.
ஆனால் சஞ்சு,
“நாங்க இப்பவே கிளம்புறோம் ம்மா. எனக்கு இங்க இருக்கவே பயமா இருக்கு. வாங்கங்க நாம போகலாம்” என்று தன் கணவனை கூட்டிக்கொண்டு போக பார்க்க,
“என்னடி ஆச்சு நீயேன் இப்போ உடனே கிளம்புற. ரெண்டு நாள் இருந்துட்டு போகலாம்னு தானே வந்த” என்று குமுதா கேட்க,
“இனி ஏங்க ரெண்டு நாள் இருக்குறது. இனி இந்த வீட்டு பக்கம் தலை வைத்துக் கூட படுக்க மாட்டேன்”
“அபப்டி என்னடி ஆச்சு? இப்படி பேசிட்டு இருக்க” ஆதங்கத்துடன் கேட்டார்.
“இதுக்கு மேல இன்னும் என்ன ஆகணும். இப்படி அடுத்தவ புருசனுக்கு அலையிரவளை வீட்டுக்குள்ள வச்சிக்கிட்டு நான் எப்படி என் புருசனோடு வந்து போறது. முதல்ல அவளுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி வச்சுட்டு அப்புறம் என்னை வீட்டுக்குள்ள கூப்பிடுங்க. இல்லன்னா என் புருசனுக்கு உத்திரவாதம் இருக்காது” என்றவளின் பேச்சில் ஆதினி மரித்தே போய் விட்டாள்.
கூடப்பிறந்த தமக்கைகளே தன்னை இவ்வளவு கேவலமாக பேசிய பிறகு இன்னும் வேறு என்ன வேதனை வந்து அவளின் உயிரை குடிக்கப் போகிறது. இந்த நிமிடமே ஆதினியின் உயிர் போய் விட்டது.
அங்கு இருந்த அனைவரையும் ஒரு வெற்று பார்வை பார்த்தாள். அவளின் கண்களில் சீவனே இல்லை.
“சஞ்சு அவ உன் தங்கச்சி... அவளை ஏன் இவ்வளவு கீழ்தரமா பேசுற. பாவம் அவ” என்று பரிந்து வந்த பெருவளத்தானை பார்த்து ஏளனமாக சிரித்தவள்,
“கனிகாவுக்கு வேணா பெரிய மனது இருக்கலாம் மாமா... ஆனா எனக்கு இல்லை” என்று சொன்னவளின் பேச்சில் சுருக்கென்று ஆனது பெருவளத்தானுக்கு.
“சஞ்சு” என்று பிரபு அதட்ட,
“நீங்களும் அவ செஞ்சதை நியாயப்படுத்த பார்க்காதீங்க. அது சரி நீங்களும் ஆண் வர்க்கம் தானே” என்று பிரபுவையும் பெருவளத்தானோடு சேர்த்து பேச,
“சாரி சகல... இதுக்கு மேல நான் இங்க இருந்தா இன்னும் இந்த பிரச்சனை வேற மாதிரி தான் போகும். அதனால நாங்க கிளம்புறோம்” என்றவன், ஆதினியை பார்த்தான்.
அத்தனை பேரின் முன்னிலையிலும் அவள் கூனி குறுகி நின்றதை பார்க்கையில் பாவமாக இருந்தது. கல்யாணம் ஆன புதிதில் கனிகா சஞ்சு மாதிரி இவனும் அவள் மீது ஒரு காழ்ப்புணர்ச்சி இருந்தது. ஏனெனில் அவள் யாரையும் மதிக்க மாட்டாள். பெருவளத்தனை அவ்வபொழுது கவனிக்கும் கவனிப்பு கூட பிரபுக்கு இருக்காது.
அவளின் பணி சுமை ஒரு காரணமாக இருந்தாலும் பெரும்பாலும் அவள் வீட்டில் இருப்பதே இல்லை. வேலை வேலை என்று காலையில் விடிந்து கிளம்பினால் இரவு தான் வீட்டுக்கு வருவாள்.
அதோடு அவளின் படிப்பு, வேலை செய்யும் நிறுவனம், வாங்கும் சம்பளம், வரப்போக சொந்த பயன்பாட்டுக்கு கார் வசதி என எல்லாமும் இருக்க தன்னை விட குறைந்த வயதில் இவ்வளவு அச்சிவ்மேன்ட்டா என்று பிரபுக்கு அவளிடம் ஒரு தாழ்வு மனப்பான்மை இருந்து. அது காழ்ப்புணர்ச்சியாக மாறியது.
ஆனால் இப்படி வஞ்சம் வச்சி பேசும் ஆதினியின் கூடப்பிறந்தவர்கள் அளவுக்கு இல்லை. எனவே அவளின் மீது இரக்கம் சுரந்தது அவனுக்கு. விதுல் அந்த நேரம் வீட்டில் இல்லை. இல்லை என்றால் அவன் ஒவ்வொருவரையும் கேட்கும் கேள்வியில் நாக்கை பிடுங்கிக்கொண்டு சாக வேண்டி வந்து இருக்கும். இவர்களின் நல்ல நேரம் போல.
எல்லோரும் ஒட்டு மொத்தமாக ஆதினியை பழி சுமத்தி, வார்தையால் கொண்டு, கை மற்றும் பெல்ட்டால் அடித்து உயிரோடு சமாதி ஆக்கி இருந்தார்கள்.
ஆதினி வாய் திறந்து ஒரே ஒரு வார்த்தை நடந்தை சொல்லி இருந்து இருந்தால் ஒருவராலும் தலை நிமிர்ந்து நின்றிருக்க முடியாது. ஆனால் சொன்ன சொல்லை காப்பாற்ற எண்ணியவள் அத்தனை பழியையும் ஏற்று கூனி குறுகி நின்றாள்.
அவளை எப்பொழுதும் தலை நிமிர்ந்து கம்பீரமாக பார்த்து இருந்த பெருவளத்தானுக்கு அவளை இப்படி தளர்ந்து குற்ற உணர்வோடு தலை குனிந்து நின்றதை கண் கொண்டு பார்க்க முடியவில்லை.
அதோடு அவள் கட்டி இருந்த புடவைக்கு வெளியே தெரிந்த ஆடை இல்லா இடங்களில் எல்லாம் இரத்தம் உறைந்து போய் பெரும் காயங்கள் இருப்பதை பார்த்தவனுக்கு நெஞ்சு பற்றி எரிந்தது.
தொட்டு தடவி தன் கண்ணீரால் அவளின் காயங்களுக்கு மருந்துப் போட அவனது உள்ளம் தவியாய் தவித்தது. அவளுக்கு வரும் அத்தனையையும் அவன் தாங்கி ஒரு மாதமாக படுக்கையில் இருந்து இருக்க இன்று அவனின் கண் முன்னே அவளை இப்படி வதைத்து இருந்ததை கண்டு நெஞ்சு வறண்டுப் போனது.
விழிகள் கலங்கிவோடுமோ என்று பயந்துப் போனான். ஆதினி தன் மீது வைத்த காதலுக்கு சாட்சியாக அவனின் கையில் இருந்த டைரி அவனது மனதை கணக்க செய்தது.
அந்தக் குட்டி டைரியை யாரும் கவனிக்கும் முன்பு தன் பாக்கெட்டில் பத்திரப் படுத்தியவன் ஆதினியிடம் இப்பொழுது பேச வேண்டாம், அவளுக்கு முதலில் மருத்துவம் தேவை படுகிறது என்று எண்ணி,
“மாமா ஆதினியை மருத்துவர் கிட்ட கூட்டிட்டு போங்க... காய்ச்சல் வந்திடும்” என்றான்.
“இது ஒன்னு தான் அவளுக்கு கேடு. நீங்க விடுங்க மாப்பிள்ளை. அவளுக்கு இப்படி கிடந்தா தான் புத்தி வரும்” என்ற குமுதாவை ஒரு பார்வை பார்த்த ஆதினி தனக்குள் இன்னும் உடைந்துப் போனாள்.
இன்னும் இந்த குடும்பத்தை ஏன் ரைட்டர் காப்பாத்தி விடரிங்க?????
அவளோ காண்டு ஆகுது🤬🤬🤬🤬🤬🤬
இப்ப கனி அவளை நியாய படித்த சொந்த தங்கச்சியை பலி கொடுக்க பார்க்கற.....
எப்படியோ போய் தொலையுதுங்க......ச்சீ என்ன குடும்பம் இது எல்லாம்
இன்னும் இந்த குடும்பத்தை ஏன் ரைட்டர் காப்பாத்தி விடரிங்க?????
அவளோ காண்டு ஆகுது🤬🤬🤬🤬🤬🤬
இப்ப கனி அவளை நியாய படித்த சொந்த தங்கச்சியை பலி கொடுக்க பார்க்கற.....
எப்படியோ போய் தொலையுதுங்க......ச்சீ என்ன குடும்பம் இது எல்லாம்
வேற வழி இல்லடா.. இது தான் கதை போக்கு.. இதுல இருக்க மாதிரி தானே சந்தர்ப்பத்துக்கு தகுந்த மாதிரி பல மனிதர்களை நாம கடந்து வர வேண்டி இருக்கு.
எல்லோரும் மாறுவாங்க..





