“ஹாங்..” பெரிதாக அதிர்ந்தவள் ஒரு கணம் திகைத்து அதிர்ந்து பின் தன் சுயத்தை மீட்டுக் கொண்டு ஆதியை பிடித்து தள்ளி விட்டாள் தன்னிடம் இருந்து. ஆனால் அவனை இம்மி கூட நகர்த்த முடியவில்லை. அவனின் அக்கப்போரில் மூச்சு முட்டிப் போய் மூச்சு விட சிரமம் கொண்டு வேகமாய் அவனின் தோளை படப்படவென்று அடித்து தன் நிலையை அவனுக்கு உணர்த்தினாள் மகரியாள்.
அதில் தலையை மட்டும் லேசாக நகர்த்திக் கொண்டவன், அவளது முகத்தை பார்த்தான். நொடியில் அவளது மொத்த முகமும் நொடியில் ரெட்டிஷாகி இருந்தது. அவ்வளவு இரத்த ஓட்டம் அவளின் முகத்தில் பாய்ந்து இருந்தது.
அதை பார்த்தவனுக்கு மேலும் அவளை முத்தமிட தோன்ற முகத்தை அவளுக்கு அருகில் நகர்த்த, பதரிப்போனவள் தன் முகத்தை இடது பக்கமாக திருப்ப, அவன் தேடியதை அவள் மறுக்கவும் கோவம் வர, அவளின் இடுப்பை பற்றி இருந்தவன், சட்டென்று கசக்கி பிடிக்க, விக்கித்துப் போனாள்.
அவளின் அதிர்வை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டவன், அவளின் தேன் சிந்தும் இதழ்களை மீண்டும் சிறை எடுத்துக் கொண்டான்.
மூச்சு அடைத்துக் கொண்டு வந்தது என்றாலும் அவளால் அவனை தள்ளி விடவே முடியவில்லை. அவளின் இயலாமையை தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்டவன் இன்னும் நெருக்கமாக இழுத்துக் கொண்டான் ஆதி.
“ப்ளீஸ்..” கிடைத்த சின்ன இடைவெளியில் அவள் மன்றாட,
“ஐ நீட்..” சொன்னவன், அவளின் மூக்கோடு மூக்கு உரசி,
“உன்னை கிஸ் பண்ணும் பொழுது என் டென்ஷன் குறையிற மாதிரி இருக்கு. சோ காலைல நைட் ரெண்டு நேரமும் மெடிசன் மாதிரி கிஸ் பண்ணிட்டு போ” என்றான்.
“ஏதே.. மெடிசன் மாதிரியா? இதெல்லாம் உங்களுக்கே கொஞ்சம் ஓவரா இல்ல. கிஸ் என்ன டேப்லட்டா.. அது ரெண்டு உயிரை உருக்கி அப்படியே மெல்ட் ஆகி ரொம்ப ஈடு பாட்டாடோட குடுக்குற ஒரு விசயம். அதை போய் மெடிசன் மாதிரி யூஸ் பண்ண சொல்றீங்க. என்னால எல்லாம் முடியாது. நான் வேணா நம்ம வீட்டு மெயிட் வாணியை மார்னிங் நைட் ரெண்டு நேரமும் குடுக்க சொல்றேன். என்னை விடுங்க” என்று ஈரமான இதழ்களை துடைத்துக் கொண்டே அவள் சொல்ல, அதில் கடுப்பானவன்,
“அவளா என் டென்ஷனை குறைக்கிறேன்னு என் வீட்டுல டேரா போட்டு இருக்கா.. நீ தானே என் வீட்டுல டேரா போட்டு இருக்க. சோ எனக்கு கிஸ் பண்ற ரெஸ்பான்சிபிளிட்டி உன்னோடது தான்..” என்றான் முறைத்துக் கொண்டே.
“அந்த வழில மட்டும் தான் உங்க ஸ்ட்ரெஸ குறைக்கணும்னு எந்த அவசியமும் இல்ல.. நான் வேற வழியில ட்ரை பண்றேனே” கெஞ்சியவளின் மினுமினுக்கும் ஈர இதழ்கள் அவனை சுண்டி இழுத்து அவனின் தாபத்தை அதிகரிக்க செய்ய,
“எனக்கு தான் தெரியும் எந்த வழிமுறையை பின் பற்றினா சீக்கிரம் என் ஸ்ட்ரெஸ் குறையும்னு. சோ நான் சொல்றதை செய்” அதிகாரம் செய்தான்.
“அதெல்லாம் முடியாது.. நான் என் லவர் பாய்க்கு என்ன சொல்றது..”
“முத்தம் குடுத்தா கற்பு போகாதுடி” இதழ்களை கடித்து வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு சொன்னான்.
“ப்ச்..” அலுத்துக் கொண்டவள்,
“எல்லாம் ராஜாவை சொல்லணும்” முணுமுணுத்துக் கொண்டவள்,
“வெறும் கிஸ் மட்டும் தான்” என்றாள்.
“ம்ம்” என்று கண்ணை மூடி திறந்து அவன் ஒப்புதல் கொடுத்தான்.
“சரி விடுங்க நான் போறேன்” என்று அவள் நகர பார்க்க,
“ஏய் இருடி.. இப்ப வரை உனக்கு டியூஷன் தான் எடுத்தேன்.. எங்க இப்ப நான் செஞ்ச மாதிரி செஞ்சு காட்டு” என்று தன் முகத்தை அவளின் முகம் நோக்கி காட்டினான். அதில் பதறியவள்,
“ரொம்ப சீட் பண்றீங்க” முறைத்தாள்.
“அதெல்லாம் இல்ல.. நீ எப்படி ட்ரைன் ஆகி இருக்கன்னு நான் பார்க்கணும் இல்லையா. சோ செய்து காட்டு” என்றான் உல்லாசமாய்.
அவனின் உல்லாசத்தை பார்த்து முறைத்துக் கொண்டே அவனின் இதழ்களில் தன் இதழ்களை வைத்து அழுத்தினாள்.
“போதுமா?” அவனின் இதழ்களை உரசிக் கொண்டே இவள் கேட்க,
“இப்படி தான் உன்னை கிஸ் பண்ணினனா?” எதிர்பார்த்து ஏமாந்து போய் விட்டான் போல.. கோவம் வந்தது சடுதியில்.
“ப்ச்” அலுத்துக் கொண்டவள், அவன் சொல்லிக் கொடுத்ததை தப்பும் தவறுமாக செய்தவள், கொஞ்சம் கொஞ்சமாக இளம் சூடு இருவருக்குள்ளும் பரவ, கண்களை மூடி அவனின் முரட்டு இதழ்களோடு ஒன்றிப் போய் விட்டாள்.
என்னவோ பல காலம் அவனின் முரட்டு இதழ்களோடு உறவாடியது போல தோன்ற, அவனின் வன்மையான இதழ்களில் இருந்து அவளால் பிரிந்து செல்லவே முடியவில்லை.
அவனின் முகத்தோடு முகம் வைத்து அழுத்தமாக அழுத்திக் கொண்டு நின்றாள். பெண்ணவளின் நெஞ்சுக்குள் என்னவோ இலகியது. இரு கையாலும் ஆதியின் பின்னந்தலையை இறுக்கமாக பற்றிக் கொண்டாள். இருவரின் மூச்சுக் காற்றும் ஒரே லயமாக வெளிவர, அதை முழுமையாக உணர்ந்தாள்.
முத்தமிடும் பொழுது ஊசியாய் குத்தும் அவனின் முரட்டு மீசையில் அவளின் நெஞ்சம் சிக்கி தவிப்பது போல தோன்றியது. அவனை விட்டு விலகவே முடியாமல் ஏதோ ஒன்று தடுத்தது. சுடியின் மீது படிந்து இருந்த ஆதியின் உள்ளங்கை சூட்டை அவளின் மென் இடை அனுபவிக்க வேண்டும் போல உணர்வுகள் பொங்கி எழுந்தது.
தானே அவனது கையை எடுத்து தன் சுடியை லேசாக விலக்கி வெற்று இடையில் வைத்து விடுவமோ என்று பயந்துப் போனவள், பட்டென்று அவனின் இதழ் மீது இருந்து தன் இதழ்களை எடுத்துக் கொண்டு விலக பார்த்தாள்.
ஆனால் என்னவோ ஒன்று அவளை அவனிடம் கட்டி இழுக்க மீண்டும் அவனின் இதழ்களில் தன் இதழ்களை வைத்து அழுத்திக் கொண்டவள்,
“என்னவோ சொக்குப்பொடி போட்ட மாதிரி இருக்கு..” முணகினாள்.
“ம்கும்ம்.. மேடம்கு தனியா சொக்கு பொடி வேற போடனுமாக்கும்..” முறைத்தவன், அவளின் உள்மன எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றும் பொருட்டு, சுடியின் இடைவெளியில் தன் கையை விட்டு அவளின் இடையை இறுக்கிப் பிடிக்க அவளின் தேகம் தூக்கிவாரிப் போட்டது.
“என்ன பண்றீங்க?” வாய் தந்தி அடித்தது.
“நான் உன்னை பீல் பண்ணனும்.. நாளையில இருந்து சேலை கட்டுடி” என்றவன் அவளின் கழுத்தில் புதைந்துப் போனது.
“நோ...” என்று அலறியவளின் சத்தம் அவளின் வாய்க்குள்ளே முடிந்தது.
வெற்று தோளில் படிந்த அவனின் முகம் அங்கும் இங்குமாய் நகர தவித்துப் போனாள். இடையை இறுக்கிப் பிடித்தவனின் கையோ ஒரு இடத்தில் இல்லாமல் அங்கும் இங்குமாய் நகர கூச்சத்தில் வயிற்றை உள்ளுக்குள் இழுத்துக் கொண்டாள் மகரியாள்.
அதில் புன்னகை வர, அதை அவளின் தோளிலே வைத்து அழுத்தி மறைத்துக் கொண்டவன், அவளின் வயிற்றை கையால் பிடித்து கசக்கி விட்டான்.
அதில் அவளின் உடல் துள்ளி தூக்கிவாரிப் போட்டது.
“ஹேய் என்ன பண்றீங்க?” தடுமாறியவள் வேகமாய் அவன் அசந்த நேரம் அவனை தள்ளி விட்டுட்டு வேகமாய் வெளியே ஓடிப்போய் விட்டாள்.
அவள் போன பிறகு தான் தான் என்ன செய்தோம் என்கிற உணர்வே அவனுக்கு வந்தது. லேசாய் நெற்றியை நீவி விட்டுக் கொண்டவன்,
“எதுக்குடா இப்படி அவசரப்படுற” புன்னகைத்துக் கொண்டவன் அந்த இனிமையான நினைவிலே மீதமிருந்த பொழுதை கழித்தான்.
வெளியே ஓடி வந்தவளின் இதயம் படபடவென்று அடித்துக் கொண்டு இருக்க, வேகமாக ஒரு கையால் நெஞ்சை பிடித்துக் கொண்டு மூச்சு வாங்கியவளுக்கு உடல் பதறியது.
எங்கே பின்னாடியே வருவானோ என்று பயந்து பின்னால் திரும்பிப் பார்க்க ஆதித்யன் வரும் அரவம் எதுவும் தென்படாமல் போக, அதன் பிறகே இயல்பாகினாள்.
“இப்படி பதற வைக்கிறாரே..” திட்டியவள் அதன் பிறகு அவனது அறை பக்கம் போகாமல் நடமாடியவள் இரவுக்கு அவனின் அறையில் வந்து தான் துயில் கொண்டாள். அதே போல பாதி இரவில் அவனின் மீது வந்து விழுந்தாள்.
விழுந்தவளை பூவாக ஏந்திக் கொண்ட ஆதியின் இதழ்கள் அவளின் நெற்றியில் அழுத்தமாக பதிந்து முத்தம் வைத்தது.
விடியலில் எழ முடியாமல் போக, தன்னை அணைத்து படுத்து இருந்தவனை கண்டு “சரியான காம பிசாசு..” வாய்க்குள் திட்டியவள் அவனின் கையை தட்டி விட்டுட்டு எழுந்துக் கொண்டாள்.
“யாருடி காம பிசாசு..” அவளை இழுத்து வைத்து சண்டை போட்டவனை பாவமாக பார்த்தவள்,
“ஹைய்யோ உங்களுக்கு அப்படியா கேட்டுச்சு.. நான் போய் உங்களை அப்படி எல்லாம் சொல்லுவனா.. காலையிலயே கனவுல பிசாசை பார்த்தேன்னு சொல்ல வந்தேன். அது ஸ்லிப் ஆகி உங்களுக்கு அப்படி கேட்டுடுச்சு. நீங்க கேட்டீங்க தானே மெடிசன் அதை குடுக்க நான் போய் பல்லை விளக்கிட்டு வரேன்” என்று ஓடிப்போனவளின் சமாளிப்பில் அவனது இதழ்களில் புன்னகை அரும்பியது.
“காலையிலையே சேட்டையை ஆரம்பிச்சுட்டா..” எண்ணியவன் காலைக்கடனை முடித்துக் கொண்டு உடற்பயிச்சி செய்ய தொடங்கினான்.





