Notifications
Clear all

அத்தியாயம் 25

 
Admin
(@ramya-devi)
Member Admin

அதற்குள் உள்ளே இருந்து “வாங்கா மாமா.. மாசமா இருக்கிற மருமகளை ரொம்ப சீக்கிரமா பார்க்க வந்துட்டீங்க போல” என்று கனிகா நக்கலுடன் அவரை வரவேற்றாள்.

அதோடு இல்லாமல்,

“வாயும் வயிறுமா இருக்குற மருமகளுக்கு கை நிறைய வாங்கிட்டு வந்து இருக்கீங்க போல” என்று இன்னும் நக்கல் பண்ணினவளை கொஞ்சம் கூட கண்டு கொள்ளது,

“அம்மாடி ஆதினி இந்தா” என்று ஒரு குட்டி மூட்டையை கொடுத்தார். வெள்ளை துணியால் சுற்றி முடிச்சு போட்டு உள்ளங்கையில் அடங்கி இருக்குமாறு இருந்த மூட்டையை பார்த்த கனிகாவுக்கு அதில் என்ன இருக்கிறது என்று தெரிந்துக் கொள்ள ஆர்வமாக இருந்தது. ஆனால் விசாகன் அப்படி எல்லாம் தூக்கி குடுத்து விட மாட்டாரே... அதனால் பொறுமையுடன் நின்றிருந்தாள்.

அந்த சிறு மூட்டையில் என்ன இருக்கும் என்பதை அறிந்த ஆதினி,

“வேணாம்” என்று தலையசைத்தாள்.

“இல்லம்மா பிடி” என்று அவளிடம் கொடுக்க,

“இதுக்கு எந்த பொருளும் இல்லை மாமா. அதனால என்னை கம்பல் பண்ணாதீங்க ப்ளீஸ்” என்று கைக்கூப்பினாள்.

“அப்போ உனக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை இல்லையா...?” என்று தீர்க்கமாக கேட்டவரை நிமிர்ந்துப் பார்த்தவள் ஆமாம் என்றாள்.

“அப்போ நான் ஒரு மாப்பிள்ளை பார்த்து வச்சி இருக்கேன். அந்த மாப்பிள்ளையை கல்யாணம் செய்துக்கணும்” என்றார் அழுத்தமான குரலில்.

அதை கேட்டு ஒரு கணம் உயிர் துடித்துப் போனது ஆதினிக்கு.

“மாமா” என்று அவள் பதற,

“இல்ல ஆதினி ஒன்னு இதை பிடி. இல்லையா கல்யாணத்துக்கு சம்மதி. இது ரெண்டுல எது எடுத்தாலும் அது உன்னோட முடிவு தான்” என்று கழுத்தில் கத்தி வைத்தது போல பேசியவரை கண்டு துடித்துப் போனவள்,

“நான் கல்யாணம் செய்துக்க சம்மதிக்கிறேன் மாமா” என்று தன் மனதை கொன்றுவிட்டு அவருக்கு ஒப்புதல் கொடுத்தாள் ஆதினி. அதை கேட்ட கனிகா மிகவும் மகிழ்ந்துப் போனாள்.

“நல்ல வேலைக்கு என் மாமனார் வந்தாரு. இல்லன்னா என் வாழ்க்கை என்ன ஆகி இருந்து இருக்கும். இதுக்கு தான் மாமனார் மாமியார் வேணும்னு சொல்றது” என்ற கனிகாவின் பேச்சில் பெற்றார்களே முகம் சுழித்தார்கள் எனில் விசாகனை பற்றி சொல்லவும் வேண்டுமா...?

அருவெறுப்பில் அவருக்கு முகம் சுருங்கிப் போனது. கனிகாவின் புறம் அவர் திரும்பவே இல்லை. “சரிம்மா அப்போ நான் வந்த காரியம் முடிஞ்சது... நான் வரேன். இனி உனக்ககா யாரும் இல்லன்னு நினைக்காத உனக்காக நான் இருக்கேன். இனி உன் மேல யாரோட கையாவது படட்டும். அப்புறம் தெரியும் இந்த விசாகனை பத்தி” என்று மறைமுகமாக ஆதினியின் பெற்றவர்களை எச்சரித்தவர்,

“நீ வாயும் வயிறுமா இருக்கிறதால மட்டும் தான் உன்னை சும்மா விடுறேன். இல்லன்னா நீயும் உன் தங்கையும் ஆதினியை பற்றி பேசினதுக்கு இல்லாம ஆக்கி இருந்து இருப்பேன். பெண்ணா நீங்கலாம். கூடப்பிறந்தவன்னு கூட பார்க்காம எவ்வளவு அசிங்கமா பேசி இருக்கீங்க. உங்களுக்கும் ஒரு நேரம் வரும். அப்போ பார்த்துக்குறேன்” என்று கனிகாவை எச்ச்சரித்தர்வர் ஆதினியிடமும் விதுலிடமும் அன்பாக விடை பெற்றுக் கொண்டு வாசற்படியை கூட தாண்டி இருக்க மாட்டார்...

அதற்குள்,

“என் புருஷனை தான் வளைச்சி போட்டன்னு பார்த்தா என் மாமனாரையும் வளச்சி போட்டுட்டியே நீயெல்லாம் பொம்பளையாடி. வயசானா ஆளுன்னு கூட பார்க்க மாட்டியா... நல்லா கட்டு கோப்பா இருந்தா போதுமே உடனே உன் மடில...” மேற்கொண்டு சொல்லும் முன்பே விசாகனுக்கு மொத்த உயிரும் போய் விட்டது.

கனிகாவின் தரமற்ற பேச்சுகளால். பெற்ற மகள் போல பாவித்த பெண்ணை போய் எப்படி வைத்து பேசுகிறாள் என்று கடும் கோவம் எழுந்தது. திரும்பி பதில் பேச வந்தவரை கண்களாலே ஆதினி அடக்கி விட்டாள் “ப்ளீஸ்” என்ற கைக்கூப்பலுடன்.

இன்னும் ஏதாவது பேச போய் கனிகா இதை விடவும் கீழே இறங்குவாள் என்று அறிந்த ஆதினி விசாகனை அவ்விடத்தை விட்டு போகுமாறு கெஞ்ச ஆதரவற்று தனித்து நிற்கும் பெண்ணவளை சொல்லம்புகளில் பாதுகாக்க முடியாமல் தலைக்குனிந்து சென்றார்.

அவர் செல்லவும் சப்பென்று ஒரு சத்தம் கேட்கவும் திரும்பி பார்த்தார். குமுதா தான் அவளின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டிருந்தார். “தொலைச்சி கட்டிடுவேன்டி இன்னொரு முறை அவளை பத்தி தவறா பேசுனன்னா.. ச்சீ இப்படில்லாம் பேச உன்னால எப்படிடி டி முடியுது. அவ போட்ட பிச்சையில தான் நீ வாழ்ந்துட்டு இருக்கன்றதை மறந்திடாத.” என்று ஆவேசமாக பேசிய தாயை மிரண்டு போய் பார்த்தாள் கனிகா.

“இங்க இருக்கணும்னு நினைச்சா வாயை மூடிட்டு இரு. உன்னை தான் கட்டி குடுத்தாச்சுல்ல போய் உன் புருசன் வீட்டுல போய் இருக்க வேண்டியது தானே எதுக்கு இங்க வந்து உட்கார்ந்துக்கிட்டு இருக்குற எங்க உயிரை வாங்குற...” என்று மனம் தாங்காமல் எரிந்து விழுந்தார்.

“மரியாதையா இங்க இருக்கணும்னா வாயை திறக்காத அவ்வளவு தான் சொல்லுவேன்” என்ற குமுதா தன் சின்ன மகளை பார்த்தார் கண்களில் நீருடன்.

“இன்னும் என் பெண் எவ்வளவு தான் பேச்சு வாங்குவாளோ கடவுளே என் பெண்ணுக்கு சீக்கிரம் ஒரு விடிவு காலத்தை குடு” என்று வேண்டினார்.

“உள்ளதை சொன்னா என்னையவே அடிச்சுட்டீங்கள்ள. இனி தெரியும் இந்த கனிகா யாருன்னு. எப்படி அவளுக்கு கல்யாணம் செய்து வைப்பீங்கன்னு நானும் பார்க்கிறேன். எனக்கென்ன போக்கிடம் இல்லன்னு நினைச்சீங்கலா?” ஆத்திரத்துடன் கேட்டவள்,

உடனே தன் கணவனுக்கு போன் போட்டு தன்னை வந்து அழைத்து போகுமாறு சொல்ல, அவனோ கார் பார்கிங் பண்ணும் ஐந்தாவது தளத்தில் வெறும் தரையில் தலைக்கு கையை கொடுத்து படுத்து இருந்தான். போன் வர எடுத்து காதில் வைத்தவன்,

கனிகா பேசியதை கேட்டு சலிப்பு தட்ட,

“வர முடியாது வேலை இருக்கு. கேப் புக் பண்றேன் போ” என்று வைத்து விட்டு கார் புக் பண்ணி ஓடிபி மெசேஜை அனுப்பி வைத்து விட்டு போனை சைலண்டில் போட்டு விட்டான்.

மீண்டும் கண்களை மூடிக்கொண்டான். அவனது கண் முழுக்க ஆதினி மட்டுமே நிறைந்து நின்றாள்.

“ஏன்டி இப்படி காலம் கடந்து என்கிட்டே வந்த... உங்க அக்காவை கல்யாணம் செய்யிறதுக்கு முன்னாடி என்கிட்டே வந்து இருக்க கூடாதா? உன்னை என் உயிருல முடிஞ்சி வச்சு இருப்பனே. இப்படி கண்டவர்களும் உன்னை பழி போட்டு பேசுற அளவுக்கு விட்டு இருக்க மாட்டனே” வேதனை பட்டவனுக்கு மூளையில் ஒரு காட்சி வர பட்டென்று எழுந்து அமர்ந்தான். குப்பென்று வியர்த்துப் போனது. தன் தலையிலே அடித்துக் கொண்டான் பெருவளத்தான்.

“நான் மாப்பிள்ளைக்கிட்ட தனியா பேசணும்” என்று சொன்னள் ஆதினி. பெருவளத்தானின் பக்கம் இருந்து வந்தவர்கள் எல்லாம் சிரித்தார்கள். பின் இந்த வார்த்தையை பெண் பார்க்க வந்த கனிகா சொன்னால் கூட பெரிதாக தோன்றி இருக்காது. அவளின் குட்டி தங்கை இவள் சொல்லவும் எல்லோருமே சிரித்து வைத்தார்கள்.

“போங்க தம்பி எங்க பொண்ணு ரொம்ப சுட்டி. நேத்துல இருந்து வரப்போற அக்கா புருசனுக்காக கேள்வி தாள் எல்லாம் ரெடி பண்ணி இருக்கா... அதுக்கு பதில் சொல்லி பாஸ் ஆகிடுங்க. எங்க பொண்ணை கட்டி கொடுக்கிறோம்” என்று தேவையில்லாமல் வைகுந்தைனின் பக்கம் இருந்து வந்த சொந்தக்கார தாத்தா சொல்ல அனைவரும் கொல்லென்று சிரித்தார்கள்.

பெருவளத்தானுக்கும் சிரிப்பு வந்தது. இதென்ன சின்ன பிள்ளை தனமாக என்று அவன் யோசிக்கவில்லை. சின்ன பிள்ளை ஆசைப்பட்டு கேட்கிறாள் நிறைவேற்றுவோமே என்று தலையை ஆட்டி ஒப்புதல் கொடுத்தவன்,

ஆதினி போன பக்கம் இவனும் போனான். போன உடனே, “இந்த கல்யாணத்தை நிறுத்திடுங்க” என்று சொன்னாள்.

Loading spinner

Quote
Topic starter Posted : January 29, 2026 2:48 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top