“நீங்க ஆயிரம் சொல்லுங்க. ஆனா கனிகா செய்தது தப்பு. ஒரு ஆம்பளையை இப்படி தான் பேசுறதா?” என்று ஆதினி கொதிகலனாய் கொதித்துக் கொண்டு இருந்தாள்.
ஒரு கட்டத்தில் பெருவளத்தானே ஆதினியின் போனை பிடுங்கி அனைத்து போட்டுவிட்டான்.
“நீங்க இப்படி இருக்குறதுனால தான் அவங்க எல்லோரும் ரொம்ப ஓவரா போறாங்க. நீங்க ஆரம்பத்துலையே ரொம்ப இறங்கிப் போனதுனால இப்போ பாருங்க எல்லோரும் உங்களை தூசியா கூட மதிக்க மாட்டிக்கிறாங்க” என்று குமுறியவளை இன்னும் ஆழ்ந்துப் பார்த்தான்.
அவனது பார்வையில் சட்டென்று மௌனமானவள் அதற்கு மேல் அங்கு இருக்க முடியாமல் அவன் கண்ணில் தென்பட்ட ஒரு உணர்வில் சுதாரித்து,
“நான் கிளம்புறேன்” என்று தன் கை பையை எடுத்துக் கொண்டு வெளியே போக பார்க்க, அவளின் கையை பிடித்து நிறுத்தினான். அதில் வெடவெடத்துப் போனவள் திரும்பி அவனை முறைத்துப் பார்த்தாள்.
சுதாரித்து சட்டென்று தன் கரத்தை எடுத்துக் கொண்டவன், “சாப்பிட்டுட்டு பிறகு போகலாம் குட்டி” என்று வண்டி சாவியை கையில் எடுத்தான். “இல்ல வேணாம்” என்று இவள் மறுக்க,
“முடியாது...” என்று அவன் உறுதியாக மறுக்க சட்டென்று அவனை நிமிர்ந்துப் பார்த்தாள். அவனது கண்களில் தென்பட்ட உரிமையும் அழுத்தமும் அவளை அசைத்துப் பார்க்க வேறு வழியின்றி அவனோடு வெளியே சென்றாள்.
“என்னோட காரை எடுத்துட்டு வரேன்” என்றாள். “தேவையில்ல. என்னோட வண்டியிலேயே போகலாம்” என்று அவனுடைய இரு சக்கர வாகனத்தை கிளப்ப பக்கென்று ஆனது இவளுக்கு.
ஒரே பைக்கில் இருவருமா...? நினைக்கும் பொழுதே மூச்சை அடைத்துக் கொண்டு வந்தது. ஆனாலும் எதுவும் சொல்லாமல் முந்தானையை மடியில் எடுத்து போட்டுக் கொண்டு அவனின் பின்னாடி ஏறி அமர்ந்தாள் ஆதினி.
இருவரும் ஒரே பைக்கில்... இருவரின் நெஞ்சிலும் அழுத்தி வைக்கப்பட்ட காதல் வேரோடு கிளை பரப்பி நிற்கிறது. ஆனாலும் கண்ணியம் காத்து விலகி இருந்தார்கள்.
“நிழலுக்கும் நிதர்சனத்திற்கும் இடையில்
சிக்கி சிறுத்து சிதறுகிறேன்...
தீரா காதல் கொண்டு பார்த்த
பார்வைகள் எல்லாம் எங்கோ
களவு கொடுத்துவிட்டு
என்னிரு வெற்று பார்வைகளால்
உனை வருடிச் செல்கிறேன்...!
அந்த வெற்றுப் பார்வையிலும்
நிறைந்திருப்பது என்னவோ
உன் பிம்பம் மட்டுமே...!”
காதல் மனம் சட்டென்று கவிதை வாசித்தது பெண்ணவளுக்காக.
ஒரு நல்ல உணவு விடுதியில் வந்து நிறுத்தியவன் அவளை கைப்பிடித்து கூட்டி செல்ல எண்ணினான். ஆனால் அதற்கு தான் தகுதி இல்லை என்று எண்ணி கையை மடக்கிக் பாக்கெட்டில் விட்டுக்கொண்டு அவளை முன்னே விட்டு இவன் பின் தொடர்ந்தான்.
ஒரு மேசையில் இருவரும் எதிரும் புதிருமாக அமர்ந்துக் கொண்டார்கள். இருவருக்கும் சேர்த்து அவனே ஆர்டர் பண்ண இவள் சுற்றிலும் கண்களை ஓட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தாள். அதற்கு நேர் மாறாக அவனது கண்கள் முழுவதும் அவளையே சுற்றி சுற்றி வந்தது.
ஒரு கட்டத்துக்கு மேல் அவனின் பார்வையை தாங்க முடியாமல் நேரடியாக அவனது கண்களை சந்தித்து,
என்ன என்பது போல ஒற்றை புருவத்தை மேலேற்றி பார்வையாலே கேட்டாள். அதற்கு பதில் சொல்லாமல் உணவை கண் காட்டி உண்ணு என்பது போல சைகை செய்தான்.
‘நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் இவரு ஒன்னு சொல்றாரு’ என்று எண்ணியவள் உணவில் கவனத்தை வைத்தாள்.
இருவரும் உண்டு விட்டு வெளியே வர, அவளை நிறுத்தி அவளுக்கு பிடித்தமான ஐஸ்க்ரீமை வாங்கி குடுத்தான். இவளை தனிப்பட்ட முறையில் கவனிக்கிறான் என்று ஆதினியால் குற்றம் சுமத்த முடியவில்லை. ஏனெனில் இதெல்லாம் அவன் எப்பொழுதுமே செய்வது தான். வித்தியாசமாகவும் பார்க்க முடியவில்லை.
பெருமூச்சுடன் அதை சாப்பிட்டு முடித்தவள், “வீட்டுக்கு வரீங்களா இன்னைக்கு” கேட்டாள். இல்ல என்பது போல அவன் தலையாட்ட அவளுக்கு மனம் வேதனை கொண்டது.
வாங்க என்று அவனை வற்புறுத்தவும் முடியவில்லை. வந்து அவன் இன்னும் அதிகமாக காயப்படுவான் என்று எண்ணினாள்.
“இப்போல்லாம் வீட்டுக்கு வரதே இல்லன்னு அப்பா சொன்னாரு” என்றான் பொதுப்படையாக.
“வரணும். இந்த வாரம் வரேன்” என்றாள்.
“இப்போ ஆபிஸ்க்கா இல்ல சைட்டுக்கா” என்று கேட்டான்.
“சைட்டுக்கு தான்”
“சரி வா நானே கொண்டு போய் விடுறேன்” என்றவனை ஏமாற்ற மனம் வராமல் அவனது வண்டியிலே போய் இறங்கிக்கொண்டாள்.
“கிளம்பும் பொழுது கால் பண்ணு நான் வந்து கூப்பிட்டுக்குறேன்”
“இல்ல நான் பார்த்துக்குறேன். காலையில கடைக்கு வந்து வண்டியை எடுத்துக்குறேன்” என்று நாசுக்காக மறுத்து விட்டு கிளம்பி விட்டாள்.
அன்று இரவு வீட்டுக்கு வந்தவள் கனிகாவிடம் சற்றே கடுமையாக நடந்துக் கொண்டாள்.
கனிகா அவளை ஏற இரங்க ஒரு பார்வை பார்த்து விட்டு,
“உனக்கு ஏன்டி குடையுது. என் புருசனை நான் என்னவோ சொல்றேன். உனக்கு என்ன வந்தது? என்னவோ நீ தான் அவர் கையாள தொங்க தொங்க தாலி கட்டிக்கிட்டவ மாதிரி பேசுற?” என்று நக்கலாக கேட்டவளை பல்லைக் கடித்து பார்த்தாள் ஆதினி.
“ஏய் கனிகா சின்ன பிள்ளைக்கிட்ட என்ன பேசணும்னு தெரியாதா...? இப்படி தான் பேசுறதா...? அவ சின்ன பிள்ளை கனிகா” என்று பெருவளத்தான் கண்டிப்புடன் கனிகாவிடம் சொல்ல,
கனிகா ஏளனமாக ஒரு பார்வை ஆதினியின் மீது வீசினாள். அந்த பார்வையில் கூனிக் குறுகிப் போனாள் ஆதினி.
“யாரு சின்ன பிள்ளை.. இவளா சின்ன பிள்ளை இங்க இருக்க யாரையாவது இவளை சின்ன பிள்ளைன்னு சொல்ல சொல்லுங்க. நான் நம்புறேன். சின்ன பிள்ளைன்னு நீங்க நம்பிட்டு இருக்குரவ எவ்வளவு பெரிய வேலை செய்து இருக்கான்னு உங்களுக்கு தெரியாது. தெரிஞ்சா நீங்க தாங்க மாட்டீங்க. நான் உங்களோட வாழாம இருக்குறதுக்கு காரணமே இவ தான்..” என்று இவ்வளவு நாள் அடக்கி வைத்திருந்த ஆற்றாமையை எல்லாம் கொட்டி கவிழ்த்து விட்டாள்.
அபாண்டமாய் தன் மீது பழியை போடும் தமக்கையை அடிபட்ட பார்வை பார்த்தாள். கனிகா சுயநலம் மிக்கவள் என்று தெரியும். ஆனால் இப்படி அவள் வாழ்க்கையை கெடுத்தது தான் தான் என்று முழு பழியையும் போட்டு அவள் தப்பித்துக் கொள்ளும் அளவுக்கு சுயநலமாக இருப்பாள் என்று எண்ணி இருக்கவில்லை ஆதினி.
தன் பெற்றவர்களை ஒரு பார்வை பார்த்தாள் ஆதினி. அவளின் பார்வையை எதிர்க்கொள்ள முடியாமல் அவர்கள் தடுமாற, உண்மை தெரிஞ்ச அவளின் கூட பிறந்தவர்கள் கூட யாரும் வாயை திறக்கவில்லை. ஏனெனில் கனிகா இப்பொழுது இரண்டு உயிராக இருக்கிறாள் அல்லவா. அதனால் ஏதாவது சொல்ல போய் அது அவளின் உயிருக்கு ஏதாவது ஆகிவிட்டால் என்ன செய்வது என்று பயந்து ஒருவரும் வாயை திறக்கவே இல்லை.
“ஜஸ்ட் சட் அப் கனிகா.. தேவையில்லாம ஆதினியை எதுக்கு உனக்கும் எனக்கும் இடையில இழுக்குற.. உன் வாழ்க்கை பாலா போனதுக்கு ஆதினி எப்படி காரணம் ஆவா. என் மேல உனக்கு அன்பு இல்லாம போனதுக்கு காரணம் நீ என்னை லவ் பண்ணல. அதை விட்டுட்டு அவளை காரணம் காட்டாத..” என்றான் கடும் கோவத்துடன்.
முதல் முறையாக அவனது கோவம் வெளிப்பட்டது. எதற்குமே கோவப் படாதவன் இன்று ஆதினியை குற்றம் சுமத்த பெருவளத்தானால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.
ஆதினி அவள் உண்டு அவள் வேலை உண்டு என்று இருக்கிற ரகம். அவளை போய் குற்றம் சொன்னால் அவனால் தாங்க முடியுமா என்ன...?
“உங்களுக்கு அவளை பற்றி என்ன தெரியும்... ஒரு மண்ணும் தெரியாது...” என்று ஆத்திரமாக உள்ளேப் போனவள் ஒரு குட்டி கை பையை தூக்கிக்கொண்டு வந்து அத்தனை பேரின் மத்தியிலும் தூக்கிப் போட்டாள்.
அந்த பையை பார்த்த ஆதினிக்கு நெஞ்சே உறைந்துப் போனது போல ஆனது. யாருக்கும் தெரியாது என்று அவள் மறைத்து வைத்த அத்தனையையும் இன்று வெட்ட வெளிச்சமாகிப் போனதில் கூனி குறுகி நின்றாள்.
அந்த பையின் கிளிப் தூக்கிப் போட்டதில் தானாகவே திறந்துக் கொள்ள அதில் இருந்த அத்தனையும் தெரித்து வெளியே வந்து விழுந்தது. அதில் சிலவை பெருவளத்தானின் காலில் வந்து விழ கீழே குனிந்து எடுத்துப் பார்த்தான்.
அச்சோ இப்ப என்ன செய்ய????
இப்படி வந்து முடிச்சிடுங்களே ரைட்டர்....இன்னொரு ud தாருமோ





