மகரியாளை பயம் காட்டவே ஆதி பெட் ஷேரிங்கை பத்தி சொன்னான். ஆனா அவளோ கொஞ்சமும் பயப்படாமல் அவனின் அறைக்குள் நுழைந்து எப்பொழுதும் போல இருந்தாள்.
“கொஞ்சமாச்சும் அசையுறாளா பாரு.. பிடிவாதம்னா பிடிவாதம். எல்லாம் மறந்து போனாலும் இந்த பிடிவாதம் பிடிக்கிற குணம் மட்டும் அவளை விட்டு கொஞ்சமும் போகல” அவளை வாய்க்குள் வறுத்து எடுத்தவன் அவளை முறைத்துப் பார்த்தான்.
அவனின் பார்வையை கண்டு கொள்ளாமல்,
“வீட்டுக்குள்ளயே இருக்குறது எனக்கு ரொம்ப போரிங்கா இருக்கு. சோ நான் நாளைக்கு அவுட்டிங் போறேன்” என்றாள். அவளும் எவ்வளவு தான் தான் வீட்டுக்குள்ளே அடைந்து கிடப்பாள்.
அவளுக்கு சுதந்திரமாக ஷாப்பிங் செய்வது ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஆனால் இங்க வந்த இரண்டு நாளிலே மூச்சு முட்டிப் போக, ஆதியின் கண் பார்வையில் இருந்து கொஞ்ச நேரம் விலகி இருக்க ஆசைப்பட்டாள்.
அதனாலே இந்த அவுட்டிங் ப்ளான்.
“சரி போ.. ஆனா நானும் வருவேன்” என்றான் ஆதி.
“ஏதே.. இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லையே இருக்கலாம்” முணுமுணுத்துக் கொண்டவள்,
“ப்ளீஸ்.. ப்ளீஸ்.. நான் மட்டும் தனியா போயிட்டு வரனே.. ரொம்ப நாள் ஆச்சு அவுட்டிங் போய்” கெஞ்சியவளை பார்த்த ஆதிக்கு மறுக்க மனம் வரவில்லை.
“சரி ஆனா ரெண்டு மணி நேரம் தான்” என்றான்.
“ஓகே ஓகே.. அதுக்குள்ள வீட்டுக்கு வந்திடுவேன். யூ டோன்ட் ஒரி” துள்ளியவள், வேகமாக கிளம்ப ஓடினாள்.
ஓடியவளின் துள்ளலை கண்டு பெருமூச்சு விட்ட ஆதி, செக்யூரிட்டிக்கு ஏற்பாடு செய்து விட்டான்.
தன் ஸ்கூட்டியை எடுத்து வர செய்து இருந்தவள் அதில் ஏறி ஊர்கோலம் போக ஆரம்பித்தாள். நீண்ட நாட்களுக்கு பிறகு அவள் கையில் அவளது வண்டி.. அவளுக்கு ரெக்கை முளைத்தது போல அப்படி ஒரு உணர்வு.
சின்ன சின்ன சந்து பொந்தை கூட விடாமல் சுற்றி வந்தாள். அப்படியே இரண்டு மணி நேரம் கழிய, போனில் ஆதி அழைத்து விட்டான் அவளை.
“அய்யயோ நான் இன்னும் ஷாப்பிங்கே போகலையே” நாக்கை கடித்துக் கொண்ட மகரி,
“ஆதி ப்ளீஸ்.. ரொம்ப நாள் கழிச்சு நாங்க ரெண்டு பேரும் சேர்ந்தமா.. ஸ்கூட்டி ஒரே அழுகை. நீ என்ன கண்டுக்கவே இல்லைன்னு. அவன் அழுகுறதை பார்த்து எனக்கும் அழுகை வந்திடுச்சு.. சாவி போட்டு ஓட்ட ஆரம்பிச்ச உடனே ஓவர் பீலீங் ஆகிடுச்சு.. அவனை விடவே மனசு வரல..” போனில் பார்த்திபன் கதையை உல்டா பண்ணி சொல்லியவளின் பேச்சில் சிரிப்பு வந்து தொலைத்தது ஆதிக்கு.
“அடி வாங்க போறடி” முயன்று கோவப்பட்டான்.
“ப்ளீஸ் ப்ளீஸ்.. கோவப்படாதீங்க ஆதி.. இன்னும் ஒரு மணி நேரத்துல ஷாப்பிங் போயிட்டு வந்திடுறேன்.. வரும் பொழுது உங்களுக்கு ஸ்நேக்ஸ் வாங்கிட்டு வரேன்” என்று அழும் பிள்ளைக்கு முட்டாயை காட்டுவது போல அவள் சொல்ல,
இவனுக்கு கோவப்படவே முடியவில்லை.
“படுத்துறாளே..” முணகியவன், “ஹாபனவர் தான்” என்றான்.
“அச்சோ அதுக்குள்ள என்ன ஷாப்பிங் பண்ண முடியும். கர்சீப் கூட டிசைன் பார்த்து வாங்க முடியாது”
“அப்போ இப்பவே வா” அவன் அதட்டலாக சொல்ல,
“சரி ஹாபனவர்ல வரேன்” உள்ளேப்போன குரலில் சொன்னவள் வேணும் என்றே ஒரு மணி நேரம் கழித்து வந்தாள்.
வந்தவளை வாசலிலே நிற்க வைத்து விட்டான்.
“அடப்பாவி..” வாய்க்குள்ளே அவனை திட்டியவள் நேராக தன் அண்ணனுக்கு போன் போட்டு காச்சு மூச்சு கத்தினாள்.
பாதி தூக்கத்தில் எழுந்தவனுக்கு தலையும் புரியவில்லை காலும் புரியவில்லை. கான்பரென்ஸ் காலில் கேசவனை வரச்செய்து அவனை மாட்டி விட்டுட்டு இவன் தூங்கி விட்டான்.
கேசவனால் காதில் கேட்க முடியாத வார்த்தைகளை எல்லாம் கேட்டு நொந்துப் போனவன், போனை அவனின் தந்தையிடம் கொடுத்து விட்டு எஸ்கேப் ஆகி விட்டான்.
வசமாக சிக்கிக் கொண்டார் துளசிநாதன்.
“யம்மாடி யம்மாடி.. கொஞ்சம் கேப் குடுடா. வயசனாவன் டா.. இவ்வளவு நல்ல சொற்களை எல்லாம் கேட்க முடியல” என்று கெஞ்சோ கெஞ்சி அவளை மலை இறக்கினார்.
“இங்க பாருங்க பெரியப்பா இப்ப மட்டும் அந்த சிடுமூஞ்சி என்னை வீட்டுக்குள்ள விடல.. அந்த மூஞ்சியிலையே சுடுதண்ணி ஊத்திடுவேன். ஏற்கனவே பார்க்க சகிக்கல.. இதுல சுடுதண்ணி ஊத்துனா மூஞ்சி எல்லாம் வெந்து புண்ணா போய் கோரத்தாண்டவம் ஆடுன மாதிரி ஆகிடும். சொல்லி வைங்க உங்க மருமகன் கிட்ட” எகிறியவள் பின்னால் திரும்பி பார்க்க, நிலைப்படியில் இரு கையையும் கட்டிக் கொண்டு அசையாத சிலை போல நின்றுக் கொண்டு இருந்தவனின் கண்களில் இருந்த உக்கிரம் கண்டு வாய் தந்தி அடிக்க ஆரம்பித்து விட்டது அவளுக்கு.
“அய்யயோ இவரை திட்டுனது எல்லாம் கேட்டுட்டு தான் இருந்தாரா?” பயம் பரவ ஆரம்பிக்க,
“எஸ்கேப் ஆகிடு மகரா” சொல்லிக் கொண்டவள், பேசிக் கொண்டு இருந்த போனை அவனிடம் வீச, அனிச்சை செயலாக தன்னை நோக்கி வரும் பொருளை கேட்ச் பிடிப்பான் என்று போட்டு விட்டு அவனை தள்ளி விட்டு உள்ளே ஓடப்போக பார்க்க, அவனோ அவளின் போனை பிடிக்காமல், இருந்த இடத்தை விட்டு கொஞ்சமும் அசையாது அப்படியே நிற்க, அவனின் நெஞ்சில் மோதி வாசலிலே பரிதாபமாக நின்றாள்.
அவளின் போனோ அவன் நெஞ்சை மோதி கீழே விழுந்து நொறுங்கி சிதறியது.
அவனின் விழிகளில் ஏறிய உக்கிரம் வேறு அவளை மிகவும் அச்சுறுத்தியது. எல்லோரிடமும் விளையாடுவது போல அவனிடம் விளையாட முடியாது. முறைத்தே பார்வையாலே பயம் காட்டுவான்.
அவனது சொல் பேச்சை மீறி ஏதாவது செய்தால் அவ்வளவு தான். இதோ அதற்கான விளைவை அனுபவிக்கப் போகிறாள் மகரி.
“ப்ளீஸ்.. நான் வேணும்னே எதுவும் பண்ணல. வீட்டுக்குள்ள என்னை விடுங்களேன்” என்ற பொழுதே ஒற்றை விரலை நீட்டி வாயின் மீது வைத்தவன்,
“இங்க நிக்கிறியா? இல்ல கேட்டுல நிக்கிறியா?” அழுத்தமாக கேட்டான்.
மேற்கொண்டு ஏதாவது பேசினால் நிச்சயம் கேட்டில் நிறுத்தி விடுவான் என்று புரிந்து,
“இல்லல்ல இங்கயே நிக்கிறேன்” என்றாள் தலையின் குனிந்துக் கொண்டாள்.
“ஒரு மணி நேரம் நிக்கிற” என்றவன் உள்ளே போக,
“அரை மணி நேரம் தானே லேட்டா வந்தேன். அப்போ நான் அரை மணி நேரம் தானே வெளியில நிக்கன்னும். நீங்க ஒரு மணி நேரம் பனிஷ்மென்ட் குடுக்குறீங்க?” அவனை நிறுத்தினாள்.
“நான் சொன்ன உடனே கேட்டு இருந்தா அரை மணி நேரத்துக்குள்ள விட்டு இருப்பேன். ஆனா நீ தேவை இல்லாம தூங்குறவனை போன் பண்ணி டிஸ்ட்டப் பண்ணி, போதாதற்கு ஆபிஸ்ல இருக்குற ரெண்டு பேரையும் டார்ச்சர் பண்ண உன்னை எப்படி சும்மா விட முடியும்? சோ ஒரு மணி நேரம் நிக்கிற.. அப்படி இல்லன்னா கேட்டுக்கு வெளியில நிக்கணும். சாய்ஸ் இஸ் யுயர்ஸ்” என்றவனின் கட்டளையில் எச்சில் விழுங்கியவள் முகத்தை தொங்கப்போட்டுக் கொண்டு வாசலில் நின்றாள்.
கொஞ்சமும் வெயிலே இல்லை. மேலே சிட்டவுட் க்காக போடப்பட்ட மேற்கூரை இருக்க காற்று சிலுசிலுவென்று அடிக்க ஒரு பிரச்சனையும் இல்லை.
ஆனால் கொஞ்சமே கொஞ்சம் அவமானமாக இருந்தது அவளுக்கு.
தொடரும்..
ஆதி ரொம்ப strict பா🤣🤣🤣🤣🤣
ரைட்டர் இன்னைக்கு ஆதினி வரலையே





