ஒன்றும் சொல்லாமல் இப்படியே எவ்வளவு நேரம் இருக்க முடியும். அவனை நிமிர்த்தலாம் என்றால் அவன் அசையவே மறுக்க அவனை கலைக்க இவளுக்கு மனமே வரவில்லை.
“என்ன ஆனதுன்னு சொல்லாம இதென்ன சிறு பிள்ளையாட்டாம்” என்று முணகியவள் அவனை கலைக்காமல், கடைக்கு டீ வாங்குபவரிடம்,
“இரண்டு டீ. கொஞ்சமா ஸ்நேக்ஸ் வாங்கிட்டு வாங்க” என்று போன் போட்டு சொன்னவள் அவனது தலையை கோதி விட்டாள். அதில் தாய்மையை உணர்ந்தவன் கண்களை இன்னும் அழுந்த மூடிக் கொண்டு அவளிடம் இன்னும் ஒன்றினான். அவளின் மெல்லிய இடை மேலும் நொறுங்கிப் போனது அவனது பிடியில்.
சிறிது நேரம் அப்படியே அவனுடன் நின்று இருந்தவள் அவன் இப்போதைக்கு தன்னை விட மாட்டான் என்று உணர்ந்து மெல்ல அவனின் தலையை தன் கரத்தால் நிமிர்த்தினாள். முகத்தை நிமிர்ததினான் ஆனால் விழிகளை திறக்கவில்லை.
“என்ன தான் ஆச்சு...? ஏன் இப்படி என்னவோ போல இருக்கீங்க... நான் ஒரு நல்ல செய்தியோட வந்து இருக்கேன். நீங்க என்னன்னா இப்போ தான் சின்ன பிள்ளையா ஏதோ பள்ளிக்கூடத்துக்கு போற பையன் அம்மா முந்தானையை விடாம இருக்கிறவனாட்டம் பண்ணிட்டு இருக்கீங்க” என்று அவள் சொல்ல,
“பேசாம பள்ளிக் கூட பையனாகவே இருந்து இருக்கலாம்” என்று அவன் சொல்ல ஆதினிக்கு பக்கென்று இருந்தது.
“ஏன் என்ன ஆச்சு?” என்று பதறிப் போனாள்.
பெருமூச்சு விட்டவன், “ஒண்ணுமில்லை நீ உட்காரு” என்று அவளை விட்டு விலகினான். அவளும் ஒன்றும் சொல்லாமல் எதிர் இருக்கையில் அமர, கதவை தட்டிக் கொண்டு வேலையாள் வந்து டீ மற்றும் ஸ்நேக்ஸ் கொண்டு வந்து வைத்தார்.
“நீங்கல்லாம் குடிச்கிடீங்களா ண்ணா?” அவர்களை விசாரித்தாள்.
“ஆச்சும்மா. நீங்க சாப்பிடுங்க” என்றுவிட்டு அவர் வெளியே போய் விட்டார். பெருவளத்தானுக்கு டீயை ஊத்திக் கொடுத்தவள்,
“குடிங்க முதல்ல” என்று அவனை உபசரித்தாள். சூடான கோப்பையை கையில் எடுத்துக் கொண்டவன் எழுந்து குறுங்கண் ஓரம் போய் நின்றுக் கொண்டான். அவனது செயல்களை எல்லாம் பார்த்துக் கொண்டே தானும் தேனீரை அருந்தினாள்.
“நீ என்னவோ நல்ல செய்தின்னு சொன்னியே என்ன அது..?” கேட்டான் தன் வேதனைகளை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு.
“இந்தாங்க இதை படிச்சு பாருங்க” என்று அவனிடம் ஒரு ஒப்பந்த காகிதத்தை கொடுத்தாள்.
எடுத்து வாசித்துப் பார்த்தான். அந்த காகிதம் ஆதினி வேலை செய்யும் நிறுவனத்தின் முத்திரை பதித்து வந்து இருந்தது. கூடவே ஒரு செக்கும். அதில் பத்து இலட்சம் வேறு நிரப்பி இருந்தது. அதோடு அதில் போட்டு இருந்த விசயம் அந்த ஊரில் அந்த நிறுவனம் எடுத்து இருக்கும் காண்ட்ராக்டர் பில்டிங் அனைத்துக்கும் இவன் தான் கட்டுமான பொருட்கள் அனைத்தும் சப்ளை செய்ய வேண்டும் என்று போட்டு இருந்தது.
“வாட்...?” என்று அதிர்ந்தே போனான் பெருவளத்தான். “எப்படி டி இது...” என்று கண்கள் விரிந்து அவனது வியப்பை பெரிதாக காட்டியது. மௌன புன்னகை பூத்து அமர்ந்து இருந்தாள் ஆதினி. முன்பு இருந்த வேதனை சடுதியில் பெருவளத்தானுக்கு மறைந்துப் போனது.
உணர்ச்சிவசப் படும் போது மட்டும் அவனிடம் வெளிப்படும் ‘டி’யை இப்பொழுதும் மனதுக்குள் இரசித்துக் கொண்டாள்.
“சொல்லு ஆதினி இதெப்படி சாத்தியம்.. எந்த டெண்டர் கொட்டேஷனும் நான் அனுப்பலையே... அதோட இந்த நிறுவனத்துக்கு டெண்டர் அப்ளை பண்ணவே சில பல தகுதிகள் வேணும்னு கேள்வி பட்டு இருக்கேன். எந்த முயற்சியும் இல்லாம எப்படிடி எனக்கு தூக்கி குடுத்தாங்க” என்று கேட்டவனை மௌனமான சிரிப்புடன் பார்த்தாள்.
அந்த சிரிப்பிற்கு பின்னால் இருப்பது யார் என்று சடுதியில் அறிந்துக் கொண்டவன்,
“ஹேய் உண்மையாவாடி” என்று இரண்டடியில் வேகமாய் வந்து அவளின் இரு தோள்களையும் பற்றி கண்களில் மின்னல் வெட்ட கேட்டான்.
“உங்க கையில இருக்கிற பேப்பர் சொல்லாததையா என் சொற்கள் உங்களுக்கு உண்மையை சொல்லிவிடும்” என்று கேட்டவளை ஆழ்ந்துப் பார்த்தவன்,
“எனக்கு இந்த காகிதமெல்லாம் வேணாம்டி. நீ சொல்லு. உன் வாய் திறந்து சொல்லு. நம்புறேன்” என்று அவளின் கண் பார்த்து சொன்னான்.
அவனது அந்த சொற்களில் இருந்த அசைக்க முடியாத நம்பிக்கையை உணர்ந்துக் கொண்டவள்,
“நம்ம கடைக்காக நானே டெண்டருக்கு அப்ளை பண்ணி இருந்தேன்” என்றாள். அதோட மேனேஜர் நமக்கு தான் ஆபர் குடுக்கணும்னு சொல்லிவிட ஈசியா நமக்கு கிடைச்சி இருக்கு” என்றாள் அடக்கப்பட்ட மகிழ்ச்சியுடன்.
ஆதினி வார்த்தைக்கு வார்த்தை நம்மளோட என்று சொன்ன சொல் பெருவளத்தானை அதிகம் பாதித்தது. அதை வெளியே காண்பித்துக் கொள்ளாமல் மகிழ்ச்சியுடன் ஏறிட்டவன்,
“இந்த சர்ப்ரைஸ் எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்குடி” என்று முகம் முழுக்க புன்னகையுடன் சொன்னவனை ஏறிட்டவளுக்கு நெஞ்சில் மகிழ்ச்சி நிலைத்தது.
“ஓகே பெரிய டெண்டர் எல்லாம் பிடிச்சு இருக்கீங்க.. ட்ரீட் எதுவும் இல்லையா...?”
“உனக்கு இல்லாததா... இன்னைக்கு மத்தியம் நீயும் நானும் லஞ்சுக்கு வெளியே போகலாம் சரியா?”
“நாம மட்டுமா?” வியந்துப் போய் கேட்டாள். ஏனெனில் ஆதினியின் குடும்பத்தில் ஒருத்தரை கூட விட்டு வைக்காமல் நண்டு சிண்டு என எல்லாரையும் கூட்டிக்கொண்டு தான் எங்கு போனாலும் போவான். இப்படி தனித்து போவது இது தான் முதல் முறை.
ஆதினி அப்படி கேட்கவும் தான் அவனுக்கு காலையில் நடந்தது எல்லாம் நினைவுக்கு வந்தது. சட்டென்று அவனது முகம் இறுகிவிட இவள் முகம் சுறுக்கினாள்.
“எனக்கு தெரியாம வீட்டுல என்ன நடந்துச்சு...?” கத்தியின் கூர்மையோடு அவளின் கேள்வி இருக்க அவளை நிமிர்ந்துப் பார்த்தவன் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்க, வேகமாய் தன் தாய்க்கு போனை போட்டாள். அதை ஏற்க முடியாமல் மீண்டும் குறுங்கண் ஓரம் சென்று நின்றவனின் கரம் தன் ஆத்திரத்தை அடக்க முடியாமல் கம்பிகளை இறுக்கிப் பிடித்து வளைக்க ஆரம்பித்தான்.
திடகாத்திரமான அவனது பிடிக்கு அந்த இரும்பு கம்பி சற்றே வளைந்து தான் போனது. போன் பேசியவள்,
“உங்களுக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லையாம்மா?” என்று நறுக்கென்று கேட்டாள் தன் தாய் என்கிறதை கூட மறந்து.
“இல்லடி எனக்கு அப்போ என்ன செய்யிறதுன்னு தெரியல. வயித்து பிள்ளை காரிடி அவ...”
“அதுக்குன்னு யாரோ பெத்த பிள்ளையை இப்படி தான் அவமானப் படுத்தி அசிங்கப்படுத்தி அனுப்பி வைப்பீங்களா? அவரு ஒன்னும் யாரோ எவரோ இல்லை. நீங்க உங்க மகளுக்கு அருமை பெருமையா தேடி தேடி பார்த்து வைத்த மாப்பிள்ளை. அது மறந்துப் போச்சா உங்க அத்தனை பேருக்கும்” என்று சலங்கை இல்லாமல் ஆதினி ஆட ஆரம்பிக்க, சட்டென்று பெருவளத்தான் அவளை திரும்பி பார்த்தான்.
அவனது கண்களில் அவளுக்கான காதல் எல்லாவற்றையும் மீறி வெளியே வந்தது. தனக்காக அவளின் குடும்பத்தோடு சண்டை இட்டுக் கொண்டு இருந்ததை பார்த்து நெஞ்சமெல்லாம் பாகாய் இளகியது.
எல்லாவற்றிற்கும் முன்னாடி நான் ஏன் இவளை பார்க்காமல் சந்திக்காமல் போனேன் என்று அவனின் மனம் அவனையே நிந்தித்து தள்ளியது. மூன்று மூன்றரை வருடங்கள் கணிகாவோடு வாழ்ந்த போதும் அவளிடம் தோன்றாத ஆத்மார்த்தமான காதல் இவளிடம் தோன்றுகிறதே என்று மறுகிப் போனான்.
இத்தனைக்கும் ஆதினி அவனை சுத்தமாக கண்டுக் கொள்ளவே மாட்டாள். ஆனால் அவளிடம் மட்டும் இவன் தளைந்துப் போகும் மாயம் தான் என்னவோ. தனக்காக அவள் ஒவ்வொரு விசயத்திலும் மெனக்கெடுவது கண்டு இன்னும் அவளை ஆழாமாக நேசிக்க ஆரம்பித்தான் சத்தமில்லாமல்.
பொத்தி வைத்த காதல் கதையாகிப் போனது பெருவளத்தானின் காதல். கல்யாணமாகி நான்கு வருடங்கள் ஆன நிலையில் மனைவியோடு வராத காதல் அவளின் தங்கையின் மீது அசைக்க முடியா அளவுக்கு பொங்கிப் பெருகுகிறது. என்று நொந்துக் கொண்டவன் தன் காதலை எங்கும் அவன் வெளிப்படுத்தவே இல்லை.
எதற்கு வெளிப்படுத்தணும். என் காதல் என்னோடு...
“காலங்கள் தாண்டி காத்திருப்பேன்...
காதலை ஏந்தி காத்திருப்பேன்...
கனவுகளால் காத்திருப்பேன்...
கரைந்திடும் முன்பே உன்னை காண்பேனே..
கணம் ஒவ்வொன்றும் உன் நினைவலைகள்...” இது போதுமே... என் நினைவுகளில் உன்னோடு வாழ்ந்துட்டு போறேனே..
“கிடைக்காது தான் ஆனால் என்னுள் நீ மட்டுமே நிறைந்து இருக்கிறாய் எங்கிருந்து ஆரம்பித்தது இந்த முரண்...” என்று சடுதியில் அவனின் மனம் முண்டி அடித்தது.
தனக்காக பேசிக்கொண்டு இருந்தவளை காண காண அவளை இழுத்து தன் உயிருக்குள் முடிந்துக் கொள்ள வேட்கை எழுந்தது. ஆனால் அதை செய்ய சூழல் இல்லையே என்று இரு கரத்தையும் நெஞ்சுக்கு நேராக கட்டிக் கொண்டு ஆதினியையே விழியகற்றாமல் பார்த்துக் கொண்டு இருந்தான்.
இவளாவது ketkkarale santhosam





