கனிகா முரண்டு பிடித்து வீட்டிலே இருந்து விட்டாள். மருத்துவமனைக்கு போனால் வயிற்றில் இருக்கும் பிள்ளையை எடுத்து விடுவார்களே என்று அச்சம் கொண்டவள் அறைக்கதவை கூட திறக்கமால் முரண்டு பண்ண என்ன செய்வது என்று தெரியாமல் குமுதா கையை பிசைந்தார். ஆதினி இப்பொழுது தான் ஒரு வாரமாக வேலைக்கு சென்றுக் கொண்டு இருக்கிறாள். அதனால் காலையிலேயே கனிகாவுக்கு வாழ்த்துக்கள் சொல்லிவிட்டு கிளம்பி போய் விட்டாள்.
சஞ்சு குமுதாவிடம் காச் மூச் என்று கத்த, இங்க இந்த பக்கம் கனிகா கதவை திறக்காமல் உள்ளிருப்பு போராட்டம் நடத்த வேறு வழியின்றி பெருவளத்தானையும் ஆதினியையும் கூப்பிட்டு விட்டார். பெருவளத்தான் உடம்பு தேறி கடைக்கு போக ஆரம்பித்த பிறகு தான் ஆதினி வேலைக்கு போக ஆரம்பித்து இருந்தாள்.
இப்பொழுது இருவருமே பிசியாக இருக்க அவர்களை எப்படி கூப்பிடுவது என்று தவித்தவர் வேறு வழியின்றி இந்த சூழ்நிலையை சமாளிக்க இவர்களால் தான் முடியும் என்று இருவருக்கும் அழைத்து விட்டார்.
அடித்து பிடித்துக் கொண்டு வந்தவர்கள் சூழ்நிலையை உணர்ந்து பெருமூச்சு விட்டார்கள்.
“இதுக்கு தான் சொன்னேன் எங்க இவ கேட்டா” என்ற பெருவளத்தான் கனிகாவின் பிடிவாதம் உணர்ந்து வேதாவிடம் பேசலாம் என்று ஆதினியிடம் சொன்னான். அவளுக்கும் அது தான் சரியாக பட, இருவரும் சேர்ந்து மருத்துவமனைக்கு சென்றார்கள்.
“புரியாம பேசாதீங்க ண்ணா. இங்க சிக்கல் அது இல்ல” என்று வேதா அதில் உள்ள சிக்கலை சொல்ல பெருவளத்தானுக்கு எதிலோ தோற்ற உணர்வு. தொண்டையை அடைத்துக் கொண்டு வந்தது. இருந்தாலும் கனிகாவின் ஆசைக்காக எல்லாவற்றையும் இழக்க துணிந்தான்.
அவன் சமம்தமாய் கனிகாவின் முடிவுக்கு துணை நிற்க,
“நீங்க புரியாம இதுக்கு சம்மதம் குடுக்காதீங்க. முதல்ல உங்க மனைவிக்கு புத்தி சொல்லுங்க. அதை விட்டுட்டு அவ விருப்பத்துக்கு நீங்க ஆடாதீங்க.. இதுல பாதிக்கப்படபோவது நீங்க மட்டும் தான். அதுக்கு நான் விட மாட்டேன்” என்று ஆதினி பெருவளத்தானின் முடிவை எதிர்த்து நின்றாள். அவளை ஆழ்ந்துப் பார்த்தவன்,
“உன் அக்கா எப்பவும் என் பேச்சை கேட்க மாட்டா... இன்னைக்கா கேட்க போறா. இந்த முடிவுனால அவளாவது மகிழ்ச்சியா இருக்கட்டுமே குட்டி. விட்டுடு” என்றான் விரக்தியாக.
“புரியாம பேசாதீங்க. நீங்க அழுத்தி சொன்னா அவ கேட்பா. ப்ளீஸ் நீங்க இதுக்கு சம்மதிக்கிறது எனக்கு என்னவோ பெரும் உறுத்தலா இருக்கு. ப்ளீஸ் இந்த ஒரு முறை மட்டும் என் பேச்சை கேளுங்க” என்றவளின் மன்றாடல்கள் எல்லாம் காற்றில் எழுதிய ஓவியமாய் ஆனது.
ஆதினி அவ்வளவு சொல்லியும் யாரும் அவளுடைய பேச்சை கேட்க தயாராக இல்லை. என்னவோ கனிகா தாங்கி இருக்கும் கருவினால் ஏதோ பிரச்சனை வர இருப்பது போலவே ஒரு உணர்வு.
பெருமூச்சு விட்டவள் கையை மீறி நடக்கும் நிகழ்வுகளை கட்டுப் படுத்த முடியாமல் கையறு நிலையில் நின்று பார்த்துக் கொண்டு இருந்தாள்.
அதன் பிறகு பெருவளத்தானும் ஆதினியும் கனிகாவை கூட்டிக்கொண்டு மருத்துவர் வேதாவை பார்க்க சென்றார்கள்.
“ப்ளீஸ் ம்மா. கனிகாவோட வேதனை என்னன்னு ஒரு பொண்ணா, மருத்துவரா உனக்கு ரொம்ப நல்லாவே தெரியும். அவ ஆசையை கொஞ்சம் கன்சிடர் பண்ணலாமே”
“அது அப்படி இல்லண்ணா. நான் எப்படி அதை உங்கக்கிட்ட சொல்றது. ஆக்சுவலி இது இன்னொருத்தங்களோட பேபிக்காக ட்ரை பண்ணது. இப்போ அவங்க கேட்டா என்ன பதில் சொல்றது. அவங்களும் ரொம்ப நம்பிக்கையா இருக்காங்க” என்று பெரிதாக தயங்கையவளிடம் கனிகா அவளின் கையை பிடித்துக் கொண்டு,
“நீ முன்பு சொன்னள்ள சரகன்ட் மதரோட வயித்துல தான் இந்த பேபியை வைக்க போறதா. இப்போ அந்த சர்கன்ட் மதரா நான் இருக்கேனே ப்ளீஸ். எனக்கு இந்த பீல் வேணும். ஜஸ்ட் நான் எலிஜிபில்னு இந்த உலகத்துல நான் நிரூபிச்சா எனக்கு போதும். வேதா. கொஞ்சம் மனது வைய்யேன். நான் வேணா அந்த களைன்ட் கிட்ட பேசுறானே” என்று சொன்னதை கேட்டு பதறிப் போனவள்,
“இல்லல்ல அதெல்லாம் வேணாம். இது கொஞ்சம் சீக்ரட் ப்ரோசிஜர்.” என்று கொஞ்சம் யோசித்தவள்,
“கனிகா அண்ணி எனக்கு உங்க உணர்வுகள் புரியுது. ஆனா அதுக்காக இப்படி இல்லீகலா” என்று அவள் ஆரம்பிக்கும் போதே,
“என்னையும் ஒரு சரகன்ட் மதரா பாரேன் வேதா. ப்ளீஸ். நான் பிள்ளை பெத்து உன் கையிலையே குடுத்துடுறேன்” என்று தாய்மையின் வீரியத்துடன் கெஞ்சியவளை தடுக்க மனம் வரவில்லை வேதாவுக்கு.
சரி என்று ஒப்புதல் கொடுத்து விட்டாள். அதன் பிறகு கனிகாவின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஆனால் இதை எல்லாம் பார்த்துக் கொண்டு இருந்த ஆதினிக்கு தான் மனதே சரியில்லை. என்னவோ பெருவளத்தான் மட்டும் தனித்து இருப்பது போலவே தோன்றியது. சும்மாவே கனிகா பெருவளத்தானை கண்டுக் கொள்ள மாட்டாள். இப்பொழுது மார்னிங் சிக்னெஸ், பிளஸ் அவனை கையாலாகத கணவனாகவே அவள் முடிவெடுத்து விட முற்றும் முழுதாக அவனை ஒதுக்கி வைத்து விட்டாள் கனிகா.
அவன் ஏதாவது பேச வந்தால் கூட கனிகா பெரிதாக காது கொடுத்து கேட்பதே இல்லை. ஆனால் பெருவளத்தானின் வருகை மட்டும் குறைவதாகவே இல்லை. கனிகா இப்பொழுது முழுவதும் அவளின் அம்மா வீட்டிலே தங்கிக்கொண்டாள். மருத்துவமனை செக்கப்புக்கு போகவும், மார்னிங் சிக்னெஸ் இதுக்கெல்லாம் தாய் வீடு தான் தோது என எண்ணிவிட்டாள் போல. இங்கே இருக்கவும் சஞ்சுவும் அவளின் கணவனோடு அடிக்கடி வீட்டுக்கு வந்து வந்து போக அவர்களின் அன்னியோன்யம் கண்டு கனிகாவுக்கு பெருவளத்தான் மீது இன்னும் கோவம் வந்தது.
சஞ்சுவும் அவளின் கணவனான பிரபுவும் சிறுபிள்ளைகள் வீட்டில் இருக்கிறார்கள் என்று கூட பார்க்காமல் அனைவரின் முன்னிலையிலும் சரசமாட ஆதினியும் விதுலும் முகத்தை சுறுக்கிக் கொண்டு அவர்களை கடந்து விடுவார்கள். இல்லை என்றால் இவர்கள் இருக்கும் பக்கம் கூட தலை வைத்து படுக்காமல் ஒதுங்கி விடுவார்கள்.
ஆனால் பெருவளத்தான் அப்படி கனிகாவோடு இளையாதது இவளுக்கு பெரும் வருத்தமாகிப் போனது. பெருவளத்தான் அவனது வீட்டில் இருக்கும் பொழுது எல்லாம் இவளிடம் நெருங்கி வருவான். அப்பொழுது எல்லாம் “இப்ப தான் வேலை செய்துட்டு வந்தேன். அதுக்குள்ள உங்களுக்கு சேவை செய்யணுமாக்கும்” என்று முகத்தை தூக்குவாள். சரி விடுடா “வேலையாள் போட்டுக்கலாம்” என்று அவளை சமாதானம் செய்தாலும் இறங்கி வரவே மாட்டாள்.
இங்கே ஆதினி வீட்டுக்கு வார விடுமுறையில் வரும் பொழுது எல்லாம் அடுத்தடுத்து என வயது பிள்ளைகள் வீட்டில் இருக்கும் பொழுது எப்படி அவளை நாடுவது என்று நாகாரிகமாக எட்டி நிற்பான். அப்பொழுதும் எல்லோரும் உறங்கிய பிறகு மாடிக்கு கூப்பிடுவான். கொஞ்ச நேரம் பேசிட்டு வரலாம் என்று..
அதற்கும் சடைத்துக் கொள்வாள் கனிகா. “ம்கும் அங்க தான் தூங்க விடுறதே இல்லை. வேலை வேலைன்னு. இங்க வந்தும் இப்படி தொந்தரவு பண்ணா எப்படி... கொட்டுற பனியில உட்கார்ந்து ரொமான்ஸ் பண்ண எல்லாம் என்னால முடியாது... பேய் தான் பக்கத்துல வரும். மூடு வராது...” என்று உதாவத ஒரு காரணத்தை சொல்லி குப்புறப்படுத்து தூங்கி விடுவாள்.
அவளை சொல்லியும் குற்றமில்லை. இங்கே தாய் வீட்டில் வேலை செய்ய அவளோடு சேர்த்து தாயும் இரு தங்கைகளும் உடன் இருந்தார்கள். கட்டிக் கொண்ட வீட்டில் இவளே அனைத்து வேலைகளும் செய்ய வேண்டும். மாமியாருக்கு முடியாது. விசாகன் என்ன உதவி செய்தாலும் அதை கணக்கிலே எடுத்துக் கொள்ள மாட்டாள். நான் தான் முழு வேலையும் செய்தேன் என்று சடைத்துக் கொள்வாள். அவளின் இந்த மன போக்கும் பெருவளத்தானை அதிக அளவில் நாடாதற்கு ஒரு காரணமாய் போனது.
இது எல்லாவற்றையும் விட அவளின் நெஞ்சை அரிக்கும் ஒரு விசயம் தான் இது அத்தனைக்கும் காரண கர்த்தா என்று அவளுக்கு மிக நன்றாகவே தெரியும். ஆனாலும் எதயும் காட்டிக் கொள்ளாமல் பெருவளத்தானோடு கடமைக்கு என்று குடும்பம் நடத்தினாள்.
இப்படி ஒவ்வொரு காரணமாக தன் மனதுக்குள் அடுக்கி வைத்து அதற்கெல்லாம் சேர்த்து வைத்து இப்பொழுது அவனை உதாசீனப்படுத்தி அவன் ஆண்மை இல்லாதவன் என்றும் நாகரீகத்துடன் கண்ணியமாக நடந்துக் கொண்டவனின் மீது முழு பழியையும் வன்மையாக அநியாயமாக சுமத்தினாள் கனிகா.
பெருவளத்தனை பார்க்கும் பொழுது எல்லாம் அவளின் வாழ்க்கை பட்டுப் போனதாகவே அவளுக்கு தோன்ற ஆரம்பித்து இருந்தது குழந்தை வந்த பிறகு. இவன் ஆரோக்கியமாக இருந்து இருந்தால் இவன் மூலமாகவே எனக்கு குழந்தை பிறந்து இருக்குமே. நான் ஏன் யாரோ ஒருவருடைய குழந்தைக்கு இந்த அலைச்சல் அலைய வேண்டும் என்று உள்ளுக்குள் அதிக வேதனை கொண்டாள்.
அவன் முழு ஆரோக்கியத்துடன் தான் இருக்கிறான் என்று நம்ப மறுத்தாள். கரு உண்டான பிறகு குறை அவனிடம் தான் இருக்கிறது என்று முடிவே செய்து விட்டாள். வெறும் பணம் காசை வைத்து எங்க அப்பா அம்மாவை ஏமாற்றி என் வாழ்க்கையையே நாசம் செய்துட்டாங்க என்று அவள் பாட்டுக்க ஒரு கற்பனையில் வாழ ஆரம்பித்து விட்டாள்.
Sariyana பைத்தியக்காரி intha கனி 🤦♀️🤦♀️🤦♀️🤦♀️🤦♀️🤦♀️





