“என் மேல உங்களுக்கு கோவமே இல்லையா மாமா...?”
“நான் இந்த பேச்சு வேணான்னு சொன்னதா ஞாபகம்...” சட்டென்று அவனது உடம்பில் ஒரு இறுக்கம் வந்து ஒட்டிக்கொண்டது.
“மாமா... ஒரே ஒரு முறை நான் சொல்றத கேளுங்களேன்....”
“நீ குடுக்குற எந்த விளக்கமும் எனக்கு வேணான்னு எப்பவோ சொல்லிட்டேன் பொழிலி... எதுக்கு மறுபடியும் மறுபடியும் அதையே தோண்டுற... இங்க நாம மகிழ்ச்சியா இருக்க தான் வந்து இருக்கோம்...” என்றான் சுல்லேன்று.
“ஆனா எனக்கு நெருடலா இருக்கு மாமா...”
“பொழிலி....” கர்ஜித்தான்.
“ஆமா மாமா... உங்களுக்கு வேணா நான் அவங்க கிட்ட காசு வாங்குனது ரொம்ப சுளுவா தெரியும்... ஆனா அதை வாங்கிக்கிட்டு உங்க படுத்தது எனக்கு எவ்வளவு வேதனையா இருந்தது தெரியுமா...?” கண்ணீருடன் கேட்டாள்.
“அது தான் முடிஞ்சி போச்சே டி... பொறவெதுக்கு அதையே கட்டிக்கிட்டு அழற... விடுடி...”
“எப்புடி மாமா விடுறது... நான் என்னை அசிங்க படுத்தல... உங்களை வே....யாக்கி இருக்கேன். காசு குடுத்து கட்டுன புருசனையே அசிங்கப்படுத்தி வச்சு இருக்கேன்...” என்று முகத்தில் அடித்துக்கொண்டு அழுதவளை ஆழ்ந்து பார்த்தவனின் இதழ்களில் மெல்லிய நகை மொட்டு தோன்றியது.
“பொண்ணுங்க மட்டும் தான் கட்டுன புருசனுக்கு படுக்கையில் .... இருக்கணும்னு அவசியம் ஒண்ணும் இல்லையே...? சந்தர்ப்பம் வரும் பொழுது புருசனும் அவங்கவங்க பொண்டாட்டிக்கு ... இருக்கலாம்... தப்பு இல்ல...” என்றான்.
அதை கேட்டு திகைத்தவள்,
“மாமா...” என்று அலறியே விட்டாள்.
“நிஜம் தான்டி... இதுல அப்படி என்ன பெருசா இருக்கு... உன் சூழ்நிலை எனக்கு நல்லாவே தெரியும். தெரிஞ்சும் நான் உன்கிட்ட கோவப்பட்டா நான் மனுசனே இல்லடி... நான் உன்னோட எல்லாத்தையும் தான் காதலிக்கிறேன்... இதோ இப்போ சிரிக்கிறியா அதையும் காதலிக்கிறேன். என்னை பார்த்து முறைக்கிறியா அதையும் காதலிக்கிறேன். கோவப்படுவியா அதையும் காதலிப்பேன் டி... அணுஅணுவா உன்னை எனக்குள்ள நிறைச்சி வச்சு இருக்கேன் கண்ணம்மா...”
“நீ கட்டல்(கஷ்டம்) பட்டா நானும் கட்டல் படுவேன்... நீ என்னவா இருக்கணும்னு ஆசை படுறியோ அப்படியே உன்னை முழுசா நான் ஏத்துக்குவேன்.... ஏன்னா நான் உன்னை அந்த அளவு காதலிக்கிறேன்டி... உன் காதலோட ஆழமும் எனக்கு தெரியும் டி... அதை நீ வாய் விட்டு தான் சொல்லனும்னு அவசியம் இல்ல...” அவளது இதயத்தை தொட்டு காட்டி,
“இந்த மனசு முழுசும் நான் நிறைஞ்சி இருக்கேன்னு உன் கண்ணுல அன்னைக்கு வந்த கண்ணீர் எனக்கு உணர்திடுச்சு... அது போதும் டி. எனக்கு. உன் சூழ்நிலையில நீ காசு வாங்கி இருக்க அவ்வளவு தான். அதை இவ்வளவு நாள் தூக்கி சுமக்கனும்னு அவசியம் இல்ல...” என்றவன்,
“நீ சுபஸ்ரீ கிட்ட வாங்குன அந்த காசை அப்பவே ஆத்தா மார்கள் கொண்டு போய் குடுத்துட்டாங்க... அதனால அதை பற்றி இனி நீ யோசிக்கவே கூடாது. அதோட இல்லாம எனக்கு அந்த விசயத்துல எப்பவும் உன் மேல கோவம் வரவே வராது... என்னோட கோவம் எல்லாம் நீ என்னை விட்டு எப்படி பிரிஞ்சி போனன்றது மட்டும் தான்...”
“அந்த ஒரு வாரம் உன்னை விட்டு பிரிஞ்சி நான் தவிச்ச தவிப்பு எனக்கு மட்டும் தான் தெரியும். அதனால அந்த வலியை மட்டும் எப்படி போக்குரதுன்னு யோசி...” என்று தன் முரட்டு மீசையை வைத்து அவளுக்கு வலிக்க வலிக்க முரட்டு தனமாய் முத்தம் கொடுத்தவன்,
அவளை தன் நெஞ்சில் போட்டுக்கொண்டு காதல் படித்தான். அவனது இந்த முரட்டு காதலை எதிர் பார்க்காதவள் அவனை நிமிர்ந்து பார்க்க முடியாமல் வெட்கத்தில் தலை குனிந்து அவனுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க ஆரம்பித்தாள். அதில் கண்களில் அவனுக்கு மின்னல் வர, அதை தன் துணையிடம் காட்ட, அவள் சிவந்து போனாள்.
அவனது மூச்சின் சூட்டிலும் கரத்திலும் அவள் தலையில் இருந்த காட்டு பூக்கள் உதிர்ந்து போனது மலர் மஞ்சத்தில்...
காதோரம் உரசும் அவனது மீசையின் கூச்சம் தாங்காமல் திணறியவளின் தேகம் எங்கும் அவனது உதட்டின் ஈரம் படிந்தது...
காதலை அதிரடியாக சூரனை போல அவளிடம் காட்டிய நேரம் அவனை இழுத்து தன் நெஞ்சில் போட்டுக்கொண்டவள், அவனது காதோரம்,
“இழுத்துவிட்ட மூச்சினிலே
உதிர்ந்து புட்ட மல்லியப்பூ...
வாசம் இன்னும் வீசுதய்யா
என் மனசுக்குள்ள மனசுக்குள்ள...
நீ கொடுத்த முத்தத்துல
நனஞ்சுபுட்டேன் உடல் முழுக்க...
ஈரம் இன்னும் காயலையே
என் உசுருக்குள்ள உசுருக்குள்ள....
கண் மூடி போகும் போதும்
காதல் அது போகாது...
மண் மூடி போகும் போதும்
மனசு மட்டும் மூடாது...
உன்னை தான் நெனைச்சேன்
உள்ளுக்குள் தவிச்சேன் தூங்காமலே....
என் மாமன் மதுரை வீரன்
என் மனசுக்கேத்த சூரன்
அந்த கரும்பு காட்டுக்குள்ள
இரும்பு கை புடிச்ச
அரும்பு மீசை காரன்..
என் மாமா....
மனந் தூங்குதில்ல
உன் ஆசை அது நீங்குதில்ல...
உன்னை தான் நினைச்சேன்
உள்ளுக்குள் தவிச்சேன்
தூங்காமலே....
என் மாமன் மதுரை வீரன்...” என்று சொல்லி அவனது மீசையை இரு பக்கமும் முறுக்கி விட்டு அவனது கண்ணின் பார்வையில் அவனது முகத்தை பார்க்க முடியாமல் சிவந்து போய் அவனது நெஞ்சிலே தலை குனிந்து கொண்டாள்.
நிறைவான பொழுதாய் இருந்தது இருவருக்கும் அந்த நிமிடங்கள்....
அதுவும் அவளது வாயாலே பாடி கேட்ட பாடலின் வரிகளில் உள்ள உணர்வுகளை உள் வாங்கியவனுக்கு காதலில் நெஞ்சு பெருமையில் விருந்தது.
தனக்குள் அவளை பொத்தி வைத்துக்கொண்டான். இறுக அணைத்தவன் சற்று நேரம் எதுவும் பேசவில்லை. அதன் பிறகே அவளுக்கு தன் காதலினால் பதில் சொன்னான்.
அதில் சிலிர்த்து பசும் பூண் பாண்டியனுள் அடங்கினாள் பூம் பொழிலி மாதுமையாள்..
திகட்ட திகட்ட இரண்டாவது தேனிலவை அந்த மலை கரட்டில் கொண்டாடியவர்கள் அடுத்த ஒரு வாராம் குடும்பமாய் சென்று ஒரு வாரம் பொழிலி இருந்த அந்த சின்ன குடிசையில் இருந்தார்கள்.
ஆத்தாமார்கள் முதற்கொண்டு மீனாச்சியம்மை வரை அனைவரும் அங்கு வந்து இருந்தார்கள். அனைவரோடும் ஒன்று கூடி அந்த சின்னஞ்சிறு இடத்தில் வசித்தது மனதுக்கு பெரும் இதமாய் இருந்தது.
பிள்ளைகள் வீட்டின் முன்புறம் ஓடியாடி விளையாட அவர்களை கவனித்துக்கொண்டு போனை நொண்டிக்கொண்டு இருந்தான் மாறன். மூத்த ஆண்கள் விவசாயத்தை பார்த்துக்கொள்ள, ஆத்தாமார்களும் மீனாச்சியம்மையும் சமையலை பார்த்துக்கொள்ள, பாண்டியனும் பொழிலியும் கிணற்றில் ரகசிய குளியளில் இருந்தார்கள்.
“உன்னை எப்போடி வர சொன்னேன். இப்படியா ஆடி அசைஞ்சி வருவ... எவ்வளவு நேரம் உனக்காக காத்துக்கிட்டு இருக்குறது....” வந்தவுடனே திட்டினான்.
“ப்ச் சத்தம் போடாதீங்க... பொறவு பிள்ளைக உங்களை விட மாட்டாங்க....” என்று சிரித்தாள்.
“சிரிச்சது போதும்... உடம்புக்கு சோப்பு போட்டு குளிக்க வைடி...” கடுப்படித்தான். அவனுக்கு தானே தெரியும். இந்த குடும்பத்தில் பொழிலியை தனியே தள்ளிக்கொண்டு வருவது எவ்வளவு பெரிய கட்டல் என்று...
அதுவும் பிள்ளைகள் பாண்டியன் இல்லை என்றால் அவ்வளவு தான். வீட்டையே உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவார்கள். அதிலும் கொற்கையன்...
அவனை சமாளிக்கவே முடியாது... பொழிலி வந்த பிறகு தான் இருவருக்கும் நெருக்கம்.. அந்த நெருக்கத்தை உண்டாக்கியவளே அவள் தானே...
இருவரின் நெருக்கத்தை கண்டு அவளுக்கு தான் அவ்வளவு சந்தோசமாக இருந்தது. இப்பொழுது அவர்களோடு இந்த புதிதாக வந்த வாண்டுகளும் சேர, அவர்களின் கொட்டத்தை அடக்கவா முடியும்...
அவ்வளவு சேட்டை செய்வார்கள் நால்வரும்... ஒரே தட்டில் போட்டு நால்வருக்கும் ஊட்ட வேண்டும்... அதில் யாராவது ஒருவர் இல்லை என்றாலும் மற்ற மூவரும் முகத்தை தூக்கி வைத்து கொள்வார்கள்...
அதுவும் பாண்டியன் தான் அதில் அதிகம் மிஸ் ஆகுவான். வேலை பளு அதிகம் இருக்கும் பொழுது அவனால் பிள்ளைகளுடன் இருக்க முடியாமல் போகும்...
பிள்ளைகள் முகம் சுருக்குவதற்க்காகவே வேலையை எல்லாம் ஒத்தி வைத்துவிட்டு அவர்களுடன் ஒன்றாக அமர்ந்து பொழிலி ஊட்டும் உணவை காதலுடன் வாங்கி கொண்டு பிள்ளைகளுக்கு விளையாட்டு காட்டிக்கொண்டு இன்னொரு சின்ன குழந்தையாய் மாறிடுவான்.
“என்ன தான் சொல்லுடி... உன்கூட இப்படி ஜாலியா தனிச்சு இருக்குற சுகமே சுகம் தான்...” என்று பாவாடையோடு குளித்துக்கொண்டு இருந்தவளை பின் புறமாக அணைத்துக்கொண்டு அவன் உளற ஆரம்பிக்க, அவனுக்கு உம் கொட்டிக்கொண்டே அவனுக்கு வெட்கத்துடன் இயைந்து இசைந்துக்கொண்டு இருந்தாள் பொழிலி...
இனி அவர்களின் வாழ்வில் எந்த தடையும் இல்லாமல் இயல்பாக பாண்டியானின் முரட்டு காதலிலும் அன்பிலும் நகரும்... பெண்ணவளின் காதலில் அவனது மொத்த உலகமும் சுருண்டு இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை...
இதோடு நாமும் இவர்களிடமிருந்து விடை பெறுவோம்...
எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும்....
அனைவரும் இன்புற்று வாழ்வோம்....
நன்றி....
Nice





