எல்லோரும் சமாதானம் பேசி, இயல்புக்கு திருப்பி மேற்கொண்டு கொஞ்சம் நடைமுறை பேச்சுக்களை பேசி முற்றிலும் அவளின் அழுகையை நிறுத்தி விட்டே தூங்க விட்டார்கள் அனைவரும்.
அறைக்கு வந்த பாண்டியன் மறுபடியும் அவளை சிறிதும் சீண்டாமல் தன் பாட்டுக்கு தூங்க போக, கடுப்பின் உச்சத்துக்கு சென்றாள் பொழிலி.
“யோவ் உன் மனசுல நீ என்ன நினைச்சுக்கிட்டு இருக்க... இவ்வளவு நேரமும் இதுக்கு தானே பஞ்சயாத்து வச்சிட்டு வந்தேன்... இப்போ மறுபடியும் முதல்ல இருந்தா...?” என்று அவனின் மேல் ஏறி அமர்ந்தவள் அவனது முதுகில் நன்றாக நாலு மொத்து மொத்தினாள்.
அதையெல்லாம் சிறிதும் காதிலே வாங்கி கொள்ளாமல் கண்களை மூடி தூங்க தொடங்கினான். அதை கண்டு ஆத்திரமாய் வந்தது பொழிலிக்கு.
“இப்படி ஒண்ணுத்துக்கும் அசையமாட்டேன்னு இருக்குற மனுசனை எப்படி தான் கரெக்ட் பண்றது...” வாய்விட்டு யோசித்தவள் குப்புற படுத்து இருந்தவனின் முதுகில் அப்படியே படுத்துக்கொண்டாள்.
அவனது முகத்தை எட்டி பார்த்தாள். அவன் விழிகளை மூடிக்கொண்டு என்னவாவது செய்... என்பது போல தூங்கி இருந்தான்.
“அவ்வளவு முயற்சியும் வீணா கோபால் வீணா...?” முணகியவள் குழந்தையை பார்த்தாள். கொற்கையன் பொக்கைவாயை பிளந்துக்கொண்டு ஆழ்ந்து தூங்கி இருந்தான்.
இவரை இப்படியே விட்டால் வேலைக்கு ஆகாது என்று எண்ணி தன் கட்டி வைத்திருந்த கூந்தலை அவிழ்த்துவிட்டு, கணுக்கால் தெரியுமாறு இருந்த புடவையை இன்னும் கொஞ்சம் கீழே இறக்கி கட்டிவிட்டு முந்தானையை ஒற்றையாக எடுத்து போட்டுவிட்டி கண்ணாடியை பார்த்தாள்.
அவளிடம் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை...
‘இப்ப என்ன பண்றது...?’ யோசித்தவள் தன் குங்குமத்தை எடுத்து இதழில் பூசி சிவக்க வைக்க முயன்ற பொழுது பாண்டியன் வந்து அவளது கையை பற்றி தடுத்தான்.
“உனக்கு இந்த அலங்காரம் எல்லாம் தேவையே இல்லடி... நீ எப்படி இயல்பா இருந்தியோ அப்படி பார்த்து தான் உன்னை காதலிச்சேன்... எனக்கு அந்த பொழிலியை தான் பிடிக்கும். இதெல்லாம் வெளி பூச்சு... இத பண்ணிக்கிட்டு வந்தா தான் நான் மயங்குவேன்னு இல்லடி... இதோ என்னா பண்ணா நான் மயங்குவேன்னு எனக்காக துடிக்கிற உன் துடிப்ப தான் டி நான் காதலிக்கிறேன்...” என்றவன், அவளை இழுத்து வன்மையாக அவளின் இதழ்களை கடித்துவைத்து விட்டு நிமிர்ந்தவன்,
ஒரு கையால் விளக்கை அணைத்துவிட்டு அவளை அனைத்து தன் கோவம் முழுவதையும் காண்பிக்க பெரிதாக தடுமாறி திகைத்து போனாள்.
அவளின் திகைப்பை கண்டவனுக்கு உள்ளுக்குள் வலித்தது...
“உனக்கு இந்த வலியை குடுக்க கூடாதுன்னு தான் நான் உன்னை விட்டு விலகி விலகி போனேன்... ஆனா நீ என்னை ரொம்ப சீண்டி பார்த்துட்ட... அது தான்...” என்றவன் அவளை விலக்காமல் மேற்கொண்டு மேக்கொண்டு செல்ல, அவனது வன்மையிலும் அவளுக்கு காதல் வந்தது...
ஏற்கனவே அவன் முரடன் தான். இப்பொழுது கோவத்தில் வேறு இருக்கிறான்... அவனது சண்டமாருத்தத்தை காட்டாமல் அவளை விடுவானா என்ன...? செம்மையாக அவளை வைத்து செய்துவிட்டு விடியும் பொழுது தான் அவளிடமிருந்து விலகினான்.
அவன் விட்டு சென்ற பின்பு தன்னை பார்த்தவளுக்கு புயல் அடித்து ஓய்ந்த பின்பு இருக்கும் விளைநிலம் போல பெருத்த சேதாரத்தில் ஆட்பட்டு இருந்தாள்.
இருந்தாலும் அவளின் முகம் செக்கசிவந்த வானமாய் குங்குமத்தை குலைத்து பூசி இருந்தது...
குளித்து கீழே வரும்பொழுது வீடே அமர்க்களமாய் இருந்தது... அப்பொழுது தான் தன் தந்தையின் வருகை நினைவுக்கு வர, மலர்வுடன் தானும் வேலைகளை இழுத்து போட்டுக்கொண்டு செய்ய ஆரம்பித்தாள்.
மலைச்சாமி காலையில் ஒன்பது மணிக்கே செவுனப்பனை அழைத்துக்கொண்டு வந்து சேர்ந்தார்.
வாசல் வரை வந்து வடிம்பலம்ப நின்ற பாண்டியரும், வெள்ளியம்பலத்தாரும் செவுனப்பனை வரவேற்று, கை பிடித்து அழைத்துக்கொண்டு உள்ளே வந்தார்கள்.
மலைச்சாமிக்கு தான் வியப்பாய் இருந்தது செவுனப்பனுக்கு கிடைக்கும் மரியாதையை கண்டு...
தங்களுக்கு சமமாக அவரையும் அமரவைத்து அவரின் நலனை விசாரித்து காடு கரையை பற்றி நீர் வளத்தை பற்றி நாட்டு நடப்பை பற்றி பேசிக்கொண்டு இருந்தார்கள்.
செவுனப்பனுக்கு தான் மிகவும் கூச்சமாய் இருந்தது...
“அய்யாருங்க... உங்க முன்னாடி எப்படிங்க அமர, நீங்க எங்களுக்கு படியளக்குற சாமிங்க...” என்று அவரை கை பிடித்து அமர சொன்ன பொழுது மறுத்தவரை பேசி பேசியே வெள்ளியம்பலத்தார் தங்களின் போக்குக்கு கொண்டு வந்துவிட்டார்.
அதே நேரம் பெண்கள் நால்வரும் வெளியே வர, தன் மகள் பொழிலியை கண்டவருக்கு பேச்சு எழ வில்லை... நாக்கு மேல் அன்னத்தில் ஒட்டிக்கொண்டது.
ஏனெனில் அவரிடம் இருந்த பொழுது நைந்த புடவையில் ரப்பர் வளையலுமாக இருந்தவள் இங்கு தங்க கரையிட்ட புடவையும், கழுத்து காதில் கையிலும் நாற்ப்பது அம்பது பவுனுக்கு நகைகளை போட்டு இருந்தவளை கண்டு அவ்வளவு வியப்பு.
அதற்க்கு காரணமான இரு ஆத்தாமார்களையும் அவர் கையெடுத்து கும்பிட,
“யய்யா... நீரும் எனக்கு மவன் தான்யா... அன்னைக்கு சொன்னது போய்யி கிடையாது... எங்க மனசுல இருந்து தான் உன்னை எங்க மகன்னு சொன்னோம்... பணம் காசுல என்னைய்யா சோகம்... நாலு மனுஷ மாறுங்க வாய்வுட்டு சிரிச்சி பேசி நம்மோட ஆத்தாமைய தீர்த்டுக்கிட்டு இருக்குற வரை மகிழ்ச்சியா இருப்போம் ய்யா...” ராக்காயி சொல்ல,
“ஆத்தா...” என்றார் நெகிழ்வாக,
“ஆமாய்யா... நீரு எதை பத்தியும் யோசிக்காத, பூ மாதிரி ஒரு பொண்ணை பெத்து எங்க குலம் தழைக்க குடுத்து இருக்க, என் பேரனோட மனசு முழுசும் நிறைஞ்சி இருக்குறது உம்மட மவ மட்டும் தான்ய்யா... எங்க சந்தோஷம் எங்க பேரன். எங்க பேரனோட சந்தோஷம் உம்மட மவ... உன்ற மவளோட சந்தோஷம் நீ.. அவ்வளவு தான் ய்யா...” என்று பிச்சாயி சொல்ல,
“சரிங்க ஆத்தா....” என்றார் செவுனப்பன் மனபூர்வ சம்மதமாய்...
பசும் பூண் பாண்டியன் தன் மாமனாரை எந்த வித தயக்கமும் ஏற்படமால் அவரை இயல்பாக புழங்க விட, அதை பார்த்துக்கொண்டு இருந்த பொழிலிக்கு அவ்வளவு ஆசையாகி போனது தன் மாமன் மீது.
செவுனப்பனிடமும் நன்கு ஒட்டிக்கொண்டான் கொற்கையன். அதன் பிறகு மலைச்சாமியிடம் மறைப்பதை மறைத்து லேசு பாசாக சொல்ல வேண்டியதை மட்டும் சொல்லி மற்றவற்றை மறைத்தார்கள் ஆத்தாமார்கள்.
செவுனப்பனுக்கு அவ்வளவு நிம்மதியாய் இருந்தது. ஏனெனில் பொழிலியின் செயலை அவ்வளவு எளிதாக யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது அல்லவா...? அதனால் அவருக்கு ஒரு சங்கடம் இருந்தது. ஆனால் அவர்கள் அதை ஒரு வார்த்தை கூட கோடிட்டு காட்டாமல் அவளை தாங்கியே பேசினார்கள்.
Nice





