Notifications
Clear all

அத்தியாயம் 50

 

Admin
(@ramya-devi)
Member Admin
Joined: 12 months ago
Posts: 960
Topic starter  

“எனக்கும் ஒரு சந்தேகம் இருந்தது ஆத்தா... எப்படி அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்ள இவ்வளவு பணம் புரட்ட முடிஞ்சதுன்னு... இப்பல்ல தெரியுது...” என்றாள் பொழிலி.

“பொறவு நீ காசை வாங்கிக்கிட்டு நகை கடைக்கு போய் தாலியும் சங்கிலியும் வாங்கி அந்த மேனா மினுக்கி க்கிட்ட குடுத்திட்டு, அன்னைக்கு ராவே உங்க அப்பாவும் மலைச்சாமியும் இருந்த ஊருக்கு போனியா அதுவரை உன்ன பின் தொடர்ந்துக்கிட்டே தான் இருந்தோம். நீ போனது கடைசில நம்ம இடம்... அதுக்கு பிறகு தான் கவலையில்லாம ஊருக்கு வந்தோம்.” பிச்சாயி சொன்னார்.

மேற்கொண்டு ராக்காயி, “இங்க வந்து பார்த்தா அந்த சிங்காரி நடுவீட்டுல உக்கார்ந்து இருக்கா... அப்பனும் மவனும் மூஞ்சில ஈ ஆடாம தோட்டத்துல இருக்கானுவ ரெண்டு பேரும் ராத்திரி பனிய கூட கவனிக்காம...” சொன்னார்.

“ஆத்தா...” என்று அவரின் கைகளை பற்றிக்கொண்டாள்.

அவளின் முகத்தை வருடிக்கொண்டுத்து,

“உன்னோட நாப்பது அம்பது நாள் வாழ்ந்தவனுக்கு தெரியாதா கண்ணு வந்து இருக்கிறவ வேத்து மனுசின்னு...” கேட்டார்.

“ம்கும்... உங்களுக்கு தெரியுது இந்த கூமுட்டைக்கு தெரியலையே... செஞ்சோற்று கடன்னு பாவி என்னை தூக்கி போட்டுட்டு போயிட்டா...” காண்டானான் பாண்டியன்.

“அதோட மட்டுமா விட்டா... தேடி வந்தவனை என்னென்ன பேச்செல்லாம் பேசி வச்சா... கருவாச்சிக்கு இருக்குற கொழுப்புக்கு நல்லா நாலடி போட்டு விடனும். அப்போ தான் இந்த காலு இந்த வீட்டு வாசல் படிய தாண்டாது...” கடுப்படித்துக்கொண்டு கால் கடுக்க வெளியவே நின்றுருந்தான்.

ஏனோ இந்த தருணத்தை அவனால் கலைக்க முடியவில்லை. ரொம்பவும் இயல்பாக தாத்தாவும் தந்தையும் வீட்டு பெண்களோடு சகவாசமாக உரையாடிக்கொண்டு இருந்தார்கள்.

அவனுக்கு விவரம் தெரிந்த வரையில் இதுபோலொரு நிகழ்வு நடந்ததாகவே நினைவில் இல்லை... அதனால் அதை கலைக்க மனமில்லை. தான் போனால் கண்டிப்பாக இந்த பேச்சு முற்று விடும். தன் மனைவியின் மனதில் இருக்கும் சின்ன சின்ன விசயமெல்லாம் வெளி வரவேண்டு என்பதற்காக அங்கேயே நின்றான்.

மேலும் தொடர்ந்த ஆத்தா, “பாண்டின் எந்த அளவுக்கு போவான்னு எங்களுக்கு தெரியனும். அதனால நானும் ராக்காயும் அமைதியா இருந்தோம். அன்னைக்கு ராவே சின்னவனை எங்க கையில குடுத்துட்டு வெளிய போயிட்டான்... சோறு தண்ணி இல்லாம ஆலையே கதின்னு கிடந்தன்... நாங்களும் பொறுத்து பொறுத்து பார்த்தோம். பாண்டியனோ கிடையா கிடந்தான். சின்னவன் அதுக்கு மேல யாரு ஊட்டுனாலும் சோறு திங்காம அவன் பாட்டுக்கு கிடந்தான். அப்போ தான் பாண்டியன் வந்து எங்க கிட்ட இது பொழிலி இல்லன்னு சொன்னான்...”

“அது உனக்கு இன்னைக்கு தான் தெரிஞ்சதாக்கும். இந்த சிங்காரி வந்த அன்னைக்கே எங்களுக்கு தெரியும். போய் என்ற பேத்தியை தூக்கிட்டு வா பாண்டியா ன்னு நாங்க சொல்லவும், உன்னை தேடி வந்து சந்திச்சான் எங்க பேரன்... அதோட இல்லாம உன்னை கொத்தி தூக்கிட்டும் வந்துட்டான்.” என்று சிலாகித்து சொன்னார்கள் ஆத்தாமார்கள் இருவரும்...

“ம்கும் அப்படியே உங்க பேரன் வந்து கொத்திட்டு பொயிட்டாலும்...” என்று நாடியை தோளில் இடித்துக்கொண்டவள்,

“இப்போ உங்க பேரன் கோவிச்சுக்கிட்டு போயிட்டாரே நான் என்ன செய்யிறதாம்...”

“நீ எதுக்கு அவனை விட்டுட்டு போன... அந்த கோவம் இருக்க தானே செய்யும். நீ தான் சமாளிக்கணும் எங்க பேரனை.”

“ம்கும் பெரிய கெடா மீசை வச்சுக்கிட்டு மூக்குக்கு மேல கோவப்பட்டுக்கிட்டு இருந்தா எப்படி கோவத்தை தணிக்கிறது... வச்சா குடுமி, சிறைச்சா வழுக்கைன்னு இருக்குற மனுஷன் கிட்ட என்னத்த பேசுறது...”

அந்த நேரம் சரியாய் உள்ளே வந்தான் பாண்டியன். அதுவும் கடைசியாக அவள் சொன்னதை கேட்டு முறைத்து பார்த்தான் அவளை.

“அய்யய்யோ....” உள்ளுக்குள்ளே அலறினாள்.

“ஆமாண்டி நீ செஞ்சு வச்ச வேலைக்கு கோவ படாம உன்னை மடியில போட்டு கொஞ்ச சொல்றியா..? பண்ற வேலையெல்லாம் கேடி தனமா பண்ணி போட்டுட்டு என்னையவே குறை சொல்லிக்கிட்டு திரியிறியா நீ...” வந்து அவளருகில் அமர்ந்து அவளது தலையிலே கொட்டவும் செய்தான்.

“ஆ...” என்று தலையை தேய்த்துக்கொண்டு ஆத்தாமார்களின் மடியில் இருந்து எழுந்தவள் பாண்டியனின் தோளில் இடிப்பது போல அமர்ந்தாள்.

அந்த அளவுக்கு அவளை நெருங்கி அமர்ந்து இருந்தான் பாண்டியன்.

“வாய்யா... ராவு பொழுதுல எதுக்குய்யா அலைச்சல்...” நாலு பேரும் அவனை வரவேற்று கண்டித்தும் கண்டிக்காத அளவிற்கு அவனை கேட்க,

பொழிலி தலையில் அடித்துக்கொண்டாள்.

“ம்கும் நீங்க இப்படி செல்லம் குடுங்க உங்க பேரனுக்கு... பொறவு அவர் சலங்கை கட்டிக்கிட்டு ஆடாம என்ன பண்ணுவாரு...” மோவாயை இடித்துக்கொண்டாள்.

“ஆமான்டி செல்லம் தான் ஆனா உன்னளவுக்கு ஒண்ணும் எனக்கு செல்லம் குடுக்கல... நீ செஞ்சது தப்புன்னு சப்புன்னு கன்னத்துல குடுக்காம மடியில போட்டு சீராட்டுறாங்க பாரு...” கடுபடித்தான்.

“அடேய் பேர புள்ளைகளா சண்டையெல்லாம் உங்க அறையில வச்சுக்கோங்கடா...” நின்ற பாண்டியர் சொல்லிவிட்டு, தன் மனைவி மார்களிடம் திரும்பி,

“ஏட்டி உங்க மகனுக்கு மட்டும் காபி போட்டு குடுத்து காப்பாத்துறீங்களே.. உங்க புருஷன் வந்து எவ்வளவு நேரம் ஆச்சு.. யாருக்காவது ஒரு வாய் காபி தண்ணி குடுக்கணும்னு தோணுச்சா...? இதுல ஒண்ணுக்கு ரெண்டு வேற கட்டி தொலைச்சி இருக்கேன்...” என்று நின்ற பாண்டியர் வாயை விட,

“ஆமா ஆமா நாங்க தான் இவர கட்டிக்க வரிசையில நின்னமாக்கும்... ஆத்தங்கரைக்கு தண்ணி தூக்க போனவள அப்படியே தூக்கிட்டு போய் தாலி கட்டிக்கிட்டு இப்ப பேச்சை பாரு...”

“உன்னை மட்டுமா...? என்னையும் தான்... எங்கப்பனுக்கு சோறு கொண்டு போனவளை இடையில வழி மறைச்சி அப்படியே கம்மங்கொள்ளைக்கு தூக்கிட்டு போயிட்டாரு... இப்ப என்னவோ ரொம்ப தான் சலிச்கிக்குறாரு... ஏன் நாங்க ரெண்டு பேரும் அதுக்குள்ள சலிச்கிட்டமா...? இந்த வயசுலயும் மாப்பிள்ளைக்கு மணபந்தல் பார்க்கணுமாக்கும்...” பிச்சாயும் ராக்காயும் அவரை ஒரு வாய் காபி தண்ணிக்கு வச்சி செய்ய,

“ஏட்டி ஒரு டம்ளரு காபி தண்ணி கேட்டது அம்புட்டு குத்தமா...? அதுக்கு போய் ஏன்டி இப்படி ரவுசு பண்றீங்க...?” தாங்கமாட்டாமல் கேட்டவரை கண்ட அனைவருக்கும் சிரிப்பு பொங்கிக்கொண்டு வந்தது.

“ஆங்... நீரு வெறும் காபி தண்ணி கேட்டு இருந்தா நாங்க குடுத்து இருப்போம்... நீரு எதுக்குய்யா எங்க மவனை இழுத்த.... நாங்களே ஒரே ஒரு மகனை குருத்து கணக்கா பெத்து போட்டு இருக்கோம்... உனக்கு ஏன் கண்ணு உறுத்துது...”

“அடியேய் ரெண்டு பேரும் சேர்ந்து ஒத்த புள்ளைய பெத்து போட்டுட்டு என்ன வக்கனையா பேசிகிட்டு திரியிரிகளா...?” கடுப்படித்தார்.

“ம்கும்... ரொம்ப தான்... அந்த ஒண்ணுக்கே தான் சொத்து பத்து பத்தல... இதுல நாங்க வரிசையா பெத்து போட்டா நாளே நாளுல தெருவுல நிக்க வேண்டியது தான்.” என்றார் ராக்காயி.

Loading spinner


   
Quote
(@megalaveera)
Eminent Member
Joined: 6 days ago
Posts: 43
 

Nice 

Loading spinner


   
ReplyQuote
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top