அதுவரை தன் வேதனையை காட்டாமல் ஜடமாய் இருந்தவள், வேகமாய் அவனை நோக்கி வந்து அவனது கன்னத்திலே ஒண்ணு ஓங்கி விட்டாள்.
“இது தான் நீங்க புள்ளைய பார்த்துக்குற லட்சணமா...? இதுக்கு தான் உங்க கிட்ட என் பிள்ளைய குடுத்தனா...? போனை கூட எடுக்காம அப்படி என்ன பண்ணிக்கிட்டு இருந்தீங்க... டாக்டர் மட்டும் அந்த நேரம் நம்ம வீட்டுல இல்லன்னா இன்னைக்கு என் பிள்ளை நிலைமை எண்ணத்துக்கு ஆகி இருக்கும்...” என்று அவனது சட்டையை பிடித்து கேள்வி கேட்டவள் நெஞ்சிலே சாய்ந்து கதறினாள்.
“பாருங்க மாமா இவன் எப்படி படுத்து இருக்கான்னு... ஒரு இடத்துல நிற்கமாட்டானே. இன்னைக்கு வேரறுத்த செடியா வாடி கிடக்குறானே... இதுக்கு தான் என்கிட்டே இருந்து என் பிள்ளைய தூக்கிட்டு போனீங்களா...?”
“ஐயோ இந்த நிலையில இவனை இப்படி பார்க்க முடியலையே...?” கத்தி கதறினாள். அவளுக்கு என்ன பதிலை சொல்ல முடியும் அவன்.
வெறுமனே அவளை அனைத்து நின்றான் அவ்வளவு தான்... அவனுக்கு கண்களில் இருந்து கண்ணீர் இறங்கியது... போன் எடுக்காமல் விட்டது அவனது தவறு தானே... ஒரு வேலை அவன் எடுத்து இருந்தால் இந்த அளவுக்கு வந்து இருக்காதே... வேதனையில் உழன்றான்...
அவனது கண்ணீரை பார்த்து நொறுங்கியவள்,
“இல்ல மாமா அவனுக்கு ஒண்ணும் ஆகாது... சீக்கிரமா சரியாகிடுவான் பாருங்க.. நீங்க அழாதீங்க...” என்று அவனுக்கு ஆறுதல் சொல்ல, அவளது நிலையை கண்டு இவனுக்கு பாவமாய் போனது.
இறுக அணைத்தவன் அடுத்த நொடி அவளை விட்டு விலகிச்சென்றான்.
“மாமா...”
“ம்ம்ம்..” என்றானே தவிற அவனால் எதுவும் பேசமுடியவில்லை. அதை உணர்ந்தவளுக்கு வேதனையாய் போனது...
அதன் பிறகு ஒருவாரம் மருத்துவமனையிலே இருந்தார்கள் இருவரும். குழந்தை மெல்ல மெல்ல தேறி வந்தான். அதற்கு பொழிலி தான் முதல் காரணம். அவனது அருகிலே இருந்து கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்டவள் கொற்கையன் கண் முழிக்கும் நேரமெல்லாம் அவனது அருகிலே இருந்தாள். தூங்கும் பொழுது மட்டுமே குளிக்க செல்வதோ இல்லை மற்ற வேலை செய்வதோ என்று இருந்தாள்.
அதுவும் சிறிது நேரம் தான். தூங்கும் பொழுது கூட அவனருகில் அமர்ந்து ஏதாவது ஒன்றை பேசிக்கொண்டே இருப்பாள். பாண்டியன் அதையெல்லாம் பார்த்துக்கொண்டு தான் இருந்தான் மெளனமாய்.
கிட்டத்தட்ட அவர்களுக்குள் பேச்சு வார்த்தை என்பதே இல்லாமல் இருந்தது. அந்த மெளனத்தை உடைக்க இருவருமே முயலாமல் இருக்க, கொற்கையன் நன்றாக பேச ஆரம்பித்த பிறகு தான் அங்கு சத்தமே எழுந்தது.
மகன் உடல் தேறியதும் பாண்டியனுக்கு சொல்லாமல் கொள்ளாமல் கோவம் வந்து ஒட்டிக்கொண்டது.
‘அன்னைக்கு என்னவோ அப்படி பேசுனா... இன்னைக்கு என்னை அடிக்கிற அளவுக்கு வந்துட்டா.. அவ்வளவு உரிமை உள்ளவ எதுக்காக எங்களை விட்டுட்டு போனா...’ கடுப்புடன் எண்ணியவன்,
“உன் அப்பாரு கிட்ட என்ன சொல்லிட்டு இங்க வந்த...” என்று கேட்டான் தன் மெளனத்தை களைத்து.
“கொற்கையனுக்கு உடம்பு சரியில்லன்னு சொல்லிட்டு தான் வந்தேன்...” என்றாள்.
“இரண்டு நாள் பழக்கத்துல அப்படி என்ன ஈர்ப்புன்னு கேக்கலையா...?” சிங்கத்தின் கர்ஜனையுடன் கேட்டான்.
அமைதியாக இருந்தாள்.
“சொல்லுடி.. எதுக்கு தலை குனிஞ்சி நிக்கிற...” அதட்டினான்.
“நான்... நான்...” அவனது அதட்டலில் உடம்பு தூக்கிவாரிப்போட திணறினாள்.
“நீ தான் சொல்லு...”
“அய்யாருக்கிட்ட சொல்லிட்டேன்...”
“என்னன்னுடி சொன்ன...” இருக்க இருக்க அவனது கோவம் அதிகமாகிக்கொண்டே போனது.
“இப்போ எதுக்கு இப்படி கத்துறீங்க... எங்க அய்யாருக்கிட்ட நம்ம விஷயத்தை சொல்லிட்டேன்...” என்றாள் குரலை உயர்த்தி..
“இந்த குரலை உசத்துற வேலையெல்லாம் இங்க வச்சுக்கிட்ட தொலைச்சி கட்டிடுவேன் பார்த்துக்க...” என்று அவளது கழுத்தை நெருக்கி பிடித்தான். அந்த நேரம் சுபஸ்ரீ உள்ளே வர, இருவரும் நின்ற நிலையை கண்டு திகைத்து போனாள்.
அவளது திகைப்பை கொஞ்சமும் சட்டை செய்யாமல் பொழிலியின் கழுத்தை இன்னும் அழுத்தி பிடித்தான் பாண்டியன்.
“யோவ் முதல்ல கை எடுய்யா...” என்று சத்தமே இல்லாமல் பொழிலி கையை தட்டி விட பார்க்க, பாண்டியனுக்கு இன்னும் கோவம் வந்தது.
கோவத்திலும் கூட பாண்டியனின் கண்களில் காதல் இருந்ததை கண்ட சுபஸ்ரீக்கு பொழிலியை கண்டு பொறாமையாக இருந்தது...
ஒரு மருத்துவராக பொழிலியின் தந்தையையும் கொற்கையனையும் காப்பாற்றி கொடுத்தவளால் ஏனோ பாண்டியனை விட்டு கொடுக்க மனம் வரவில்லை...
“திஸ்இஸ் ஹாஸ்பிட்டல்.. நாட் பார் ஹவுஸ்..” என்றாள் சற்றே அதட்டலாக... ஆனால் அது பாண்டியனுக்கு காதில் ஏறனுமே.
அவனோ கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் தான் பிடித்த பிடியிலே இருந்தான்.
“மிஸ்டர் பசும்பூண் பாண்டியன் உங்க கிட்ட தான் சொல்லிக்கிட்டு இருக்கேன்...”
“இப்போ இங்க ஏதாவது எங்களால சத்தம் வந்ததா...? நீ வந்து தான் இங்க சத்தம் போட்டுக்கிட்டு இருக்க... அதனால இப்போ நீ தான் வெளியே போகணும்...” என்றான்.
“மிஸ்டர் இது என்னோட ஹாஸ்பிட்டல்...”
“சோ வாட்... தவறு யார் செஞ்சாலும் ஒரே பனிஷ்மெண்ட் தான்... சோ அவுட்...” என்றான்.
“ஹலோ நான் இங்க உங்க மகனை செக் பண்ண வந்து இருக்கேன்...”
“அப்போ அந்த வேலையை மட்டும் பார்க்கணும்.. ரைட்...” என்றான் அமர்த்தலாக...
“ஏன் மாமா இப்படி அவங்க கிட்ட வாக்குவாதம் பண்றீங்க... முதல்ல கழுத்துல இருந்து கையை எடுங்க... எப்போ பாரு ஏட்டிக்கி போட்டியா பண்ணிக்கிட்டு...” முணுமுணுத்தாள்.
“நான் அப்படித்தான்டி பண்ணுவேன்... இப்போ என்னாங்குற...?” கடுப்படித்தான்.
“உங்க கிட்ட போய் பேசுனேன் பாருங்க என்னை சொல்லணும்...” என்றவள் அவனது கையை தட்டிவிட்டு சுபஸ்ரீயிடம் சென்று நின்றுக்கொண்டாள்.
கொற்கையனை பரிசோதித்துக்கொண்டே,
“ஆமா நீ எப்போ கிளம்புற...” என்றாள் அவளுக்கு கேட்குமாறு.
“கொற்கையனுக்கு சரியானதுக்கு பொறவு தான் போகணுங்க...” என்றாள் பொழிலி.
“நீ போனா மறுபடியும் கொற்கையனுக்கு உடம்புக்கு ஏதாவது வந்திடும்...”
“இல்லைங்க இந்த முறை இந்த மனுசனை நம்பி என் பிள்ளையை விட்டுட்டு போக முடியாது. கையோட தூக்கிட்டு போயிடுவேன்...” என்றாள்.
அதை கேட்டுக்கொண்டு இருந்த பாண்டியனுக்கு ஆத்திரம் ஆத்திராமாய் வந்தது.
“நான் இல்லாம புள்ள மட்டும் இவளுக்கு எங்க இருந்து வந்சுச்சு...” கடுப்புடன் முணகியவன் அப்பொழுது தான் அவள் கருவுற்று இருப்பது நினைவுக்கு வர, கையோடு அதையும் பரிசோதிக்கணும் எண்ணியவன், சுபஸ்ரீ டியூட்டி முடிந்து கிளம்பிய பிறகு மகப்பேறு மருத்துவரிடம் முன் பதிவு செய்து பொழிலியை இழுத்துக்கொண்டு சென்றான்.
“என்னங்க பண்றீங்க... என்னை எதுக்கு இழுத்துக்கிட்டு வர்றீங்க...” என்றவளுக்கு அப்பொழுது தான் புரிந்தது..
“அய்யய்யோ இன்னும் நாள் செல்லாம இப்படி இவிங்க கிட்ட எல்லாம் காட்ட கூடாதுங்க... புள்ளைக்கு ஏதாவது ஆகிடும்...” என்று சொல்ல, பாண்டியன் அவளை பாசப்பார்வை பார்த்தான்.
“ஆமா அம்மணி அப்படியே டாக்டர் டிகிரிய கரைச்சி குடிச்சி இருக்கீங்க... எல்லாமே தெரியிரதுக்கு... ஒழுங்கா வாடி...” என்றவன் மருத்துவரிடம் அழைத்து சென்று ஸ்கேனும் செய்து பார்த்தான்.
ஸ்கேன் பார்த்தவனுக்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை... மனமெல்லாம் மகிழ்ச்சியில் திளைத்தது.
அப்படியே வானில் பறப்பது போல உணர்ந்தான்.
“ஹேய் உனக்கு இது முன்னாடியே தெரியுமாடி...” அவனது குரலில் உற்சாகம் வழிந்து நிறைந்தது.
“ம்ம்ம்...” என்று முணகினாள்.
“நாடி பிடிச்சி பார்த்தியா...?” கோவமாய் கேட்டான்.
“ம்ம்ம்...”
“மூணு நாடி தெரிஞ்சதா...?” பரவசமாய் கேட்டான்.
“ஆமாங்க...”
“பொறவு ஏன்டி என்கிட்டே சொல்லல்ல...” கடுப்படித்தான்.
“யோவ் சும்மா சும்மா மலை ஏறாதாய்யா... உன்கிட்ட மறைக்கணும்னு எல்லாம் இல்ல... நீயா தெரிஞ்சுக்கிட்டா இன்னும் சந்தோசமா இருப்பல்ல... அது தான்..” என்றாள் தயக்கத்துடன்..
“அப்போ என் கூட வாழ நீ ஆசைபடுற தானே...” விவரமாய் அவன் நாடியை பிடிக்க, சட்டென்று தன் நாக்கை கடித்துக்கொண்டாள்.
“பிராடுடி... இல்லாத கேடி வேலையெல்லாம் செஞ்சுட்டு என்னை உன் பின்னாடியே அலையை வைக்கிறியே நீ வசமா மாட்டுடி... ஜூஸ் புளியிறேன்...” என்றான் கடுப்பாக.
“ஆனா உங்களோட நான் வாழ் மாட்டேன்...” என்றாள் மறுபடியும் ஆரம்பத்திலிருந்து...
“ஏன்டி கேக்குறவன் கேனைன்னா கேழ்வரகுல நெய் வடியிதுன்னு சொல்லுவியாடி நீ...”
“ப்ளீஸ் கோயிட்...” மருத்துவர் இருவரையும் அமைதியாக இருக்க சொல்ல, கப் சிப்பென்று அமைதியாகி எதிரே தெரிந்த மானிட்டரில் கண்ணை வைத்தார்கள்.
அங்கு இரு உயிர் சுண்டுவிரல் நகத்தின் அளவுக்கு வெள்ளையாக துடித்துக்கொண்டு இருந்தது. அதோட சத்தம் டிடிஹெச் சவுன்ட் எபெக்டில் தும் தும் தும் என்று இரண்டு இரண்டாக கேட்க இருவரும் சிலிர்த்து போனார்கள்.
பாண்டியன் பொழிலியின் கைகளை பற்றிக்கொண்டான் ஆனந்தத்தில்... அவளும் அவனது கைகளில் நெகிழ்ந்து போனாள்.
மருத்துவர் சென்றவுடன் பாண்டியன் அவளது வயிற்று பக்கம் குனிய வேகமாய் முந்தானையை இழுத்து திரை போட்டாள். அதில் கடுப்பானவன்,
“கோவமா இருக்க வேண்டியது நானு... ஏதோ போனா போகுதேன்னு கோவத்தை கொஞ்ச நாள் தள்ளி வச்சு இருக்கேன்... நீ இப்படியே சீன போட்டுக்கிட்டு இருந்தேன்னு வை... பொறவு நீ வேற பாண்டியன பார்க்கவேண்டியது வரும்...” கர்ஜித்தவன் அவளது கரத்தை வலிக்க பிடித்து திருகிவிட்டு, மூடிய முந்தானையை எடுத்து விலகியவன் தன் இதழ்களை கொண்டு அவ்விடம் முத்தமிட்டான்.
அப்பொழுது அவளது வயிற்றில் தடவி இருந்த ஜெல் அவனது இதழ்களிலும் மீசையிலும் ஓட்ட, பக்கென்று சிரித்துவிட்டாள்.
“அய்யோ ச்சீ...” என்று அலறியவன் வேகமாக அவளது தோள் சீலையில் தன் வாயை துடைத்துக்கொண்டான்.
“ஏதோ பெருசா பேசுனீங்களே... இப்போ பேசுங்க.. இப்போ பேசுங்க...” நக்கல் பண்ணினாள்.
“ஏய், வேணாண்டி நன் கோவமா இருக்கேன்...”
“நீங்க கோவமா தான் இருங்க.. இல்ல காமா தான் இருங்க... எனக்கு தேவையில்லை..” என்று அங்கு இருந்த நாப்கினை எடுத்து துடைத்து தன் வயிற்றை சுத்தம் செய்தவள், புடவையை சரி செய்துக்கொண்டு வெளியே வந்தாள்.
“வர வர ரொம்ப தான் ஓவரா பண்றா...” முணகியவன் அவளின் பின்னோடு சென்றான். மருத்துவர் சில அறிவுரைகளை சொல்ல கேட்டுக்கொண்டு வந்தார்கள். கூடவே சில மாத்திரைகளும் கொடுக்க அதையும் பார்மசி போய் வாங்கிக்கொண்டு வந்தான் பாண்டியன்.
அதுவரை கொற்கையனுடன் ராக்காயும் பிச்சாயும் இருந்தார்கள். வந்தவுடன் இருவரையும் தூக்கி சுற்றினான் பாண்டியன்.
ஏற்கனவே தெரியும் தான். இருந்தாலும் இரண்டு குழந்தை என்ற செய்தி பாண்டியனுக்கு அதிக உற்சாகத்தை கொடுத்தது. அதை அவர்களிடம் சொல்ல, பொழிலிக்கு திருஷ்டி கழித்தார்கள் நெட்டி முறித்து.
அந்த நேரம் சுபஸ்ரீ உள்ளே வர, பாண்டியன் நக்கலுடன் அவளிடம் ஒரு ஸ்வீட் பாக்சை நீட்டினான்.
“எதுக்கு இது...” என்றாள்.
“நான் அப்பா ஆக போறேன். அதுக்கு தான்..” என்றான்.
“வாட்...” என்று அதிர்ந்தாள்.
“ஆமாம்டி யம்மா.. அதுவும் என் பேரனுக்கு ரெட்டை குழந்தையாம்... உங்க மருத்துவமனையில தான் பார்த்தோம்.” என்றார் ராக்காயி.
சுபஸ்ரீயால் இந்த நிகழ்வை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை...
“இருந்தும் ஒரு ப்ரோயோசனமும் இல்லையே மிஸ்டர் பாண்டியன்..” என்றாள்.
“ஏன்...” என்றான் நக்கலுடன்.
“பொழிலி தான் உன்கூட வந்து வாழ மாட்டாளே... பிறகு உனக்கு எப்படி இந்த சந்தோஷம் நிலைக்கும்...” என்றாள் அவனை விட நக்கலாக..
சட்டென்று பொழிலியை திரும்பி பார்த்தான். அவள் தலைக்குனிந்து கண்களில் கண்ணீர் வழிய நின்றாள். அதுவரை அவனோடு வாயாடிக்கொண்டு இருந்த பூம்பொழிலி மாதுமையாள் ஊமையாக நின்றாள்.
“ஏன்டி...” என்றான் அவளிடம்..
“அவ எதுவும் சொல்ல மாட்டா மிஸ்டர் பாண்டியன்... நான் சொல்றேன்..” என்று பொழிலியை பார்த்தாள்.
பொழிலி வேண்டாம் என்பது போல கையெடுத்து சுபஸ்ரீயை கும்பிட, அவள் அதை கண்டு நக்கலாக சிரித்து,
“டூ லேட்...” என்றாள்.
“வேணாம்மா எதையும் சொல்லாதீங்க... எனக்கு என் பிள்ளைங்க மட்டும் போதும்... நான் கொற்கையனை கூட்டிக்கிட்டு எங்கயாவது போயிடுறேன்... தயவு செஞ்சு அவருகிட்ட எதையும் சொல்லாதீங்க...” கெஞ்சிக்கொண்டு இருந்தவளை சிறிதும் கண்டுக்கொள்ளாமல்,
“என்கிட்டே பத்து லட்சம் பணத்தை வாங்கிட்டு தான் உன் கூட இருந்தா... தென் படுத்து பிள்ளையை வாங்கிக்கிட்டா...” யாரு இருக்கிறார்கள் என்று கூட பாராமல் பொழிலியை இழிவு படுத்த வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக சுபஸ்ரீ உண்மையை போட்டு உடைத்தாள்.
அதைக்கேட்டு ஒரு ஆண்மகனாக உடலெல்லாம் எரிந்தது...
Nice





