கோடி மின்னல் ஓடி வந்து பாவை ஆனது...
இவள் ரதியினம் குழல் மலர்வனம்
இதழ் மகரதம் அதில் மதுரசம்
இவள் காமன் வாகனம்
இசை சிந்தும் மோகனம்..
அழகை படைத்தாய்
ஓ...
பிரம்ம தேவனே...!
பாடல் வரிகள் அந்த பேருந்தில் ஓடிக்கொண்டு இருக்க, அந்த பாடலுக்கு ஏற்றவாறு பெண்ணொருத்தி சாம்பல் வண்ணத்தில் அதில் மெரூன் நிறத்தில் தங்கசரிகைகள் கோர்த்து கரை வைத்து இருந்த பருத்தி நூல் புடவையில் பெண்ணுக்கு இலக்கணமாய் பேருந்தின் படியில் ஏறி உள்ளே வந்து கூட்டத்தோடு கூட்டமாக நின்றாள்.
காதில் ஆடிக்கொண்டு இருந்த சிமிக்கி அவளின் அசைவுக்கு ஏற்றவாறு அசைந்துக் கொண்டு இருந்தது. இதழ்களில் மெலிதாய் சிவப்பு, ஆளை சுண்டி இழுக்கும் கண்களில் மையை தீட்டி இருந்தாள்.
விரித்து விட்டு இருந்த கூந்தல் பட்டு போல அவளின் முதுகை தழுவி இருந்தது. பேருந்தில் இருந்த ஆண்களின் கண்கலும் சில பெண்களின் கண்களும் அவளை தொட்டு மீண்டது.
அதிக கூட்டமில்லை. ஆனாலும் அவளுக்கு உட்கார இடமிருக்கவில்லை. கம்பியை பிடித்து நின்று இருந்தவளின் வனப்பை விழியகலாது ஒருவன் பார்த்துக் கொண்டு இருந்தான்.
அவளின் பக்காவாட்டு தோற்றத்திலே அவனின் நெஞ்சில் பல சூறாவளி எழுந்தது. அதை தாங்க முடியாமல் இடது கையால் தன் நெஞ்சை தடவி விட்டுக் கொண்டவன், அந்த பேருந்தில் இருந்த எல்லோரையும் விட அதிக உயரமாக இருந்தான்.
“உன் காதோரம் ஆடும் சிமிக்கியின் மீது
அதிக கோபம் வருகிறதடி பெண்ணே...
உன் கன்னத்தை உரசும் உரிமை
என் இதழ்களுக்கு மட்டும் தானே...!
என் உரிமையை எப்படி நீ அதற்கு தரலாம்..
என் முதல் வில்லனே அவன் தான்” என்று அவனின் மனம் சடுதியில் பொறாமை கவிதையை விரித்தது.
தன்னை ஒருவன் விழி எடுக்காமல் பார்த்து இரசிப்பதை உணராதவள் வெளியே தெரிந்த காட்சிகளை பார்த்துக் கொண்டு வந்தாள்.
அவளின் கருவிழி அசைவில் அவனின் இதயம் பல மடங்கு துடித்தது.. நெஞ்சை பிடித்துக் கொண்டவன் கண்கள் கொஞ்சமும் கூச்சமில்லாமல் அவளை அடி முதல் நுனி வரை மேய்ந்தான்.
ஏன் அவளை இரசிக்கிறோம் என்று தெரியாமலே அவளை விட்டு அங்கும் இங்கும் பார்வையை நகர்த்தாமல் பார்த்துக் கொண்டு இருந்தான்.
இன்னும் நான்கு நிறுத்தங்களின் அவள் இறங்கிவிடுவாள் என்ற பொழுதே அவனது நெஞ்சம் அதிர்வில் குலுங்கியது.
அவளோடு பயணிக்கும் இந்த முக்கால்மணி நேரம் போதாமையாக இருந்தது.. நாள் முழுக்க அவளோடு பயணித்து, அவளை விழிகளில் அள்ளி பூசி நெஞ்சோடு அவளின் அசைவுகளை பதுக்கிக்கொள்ள சிறு பிள்ளையாய் ஆர்வம் கொண்டது.
இதழ் குவித்து காற்றிலே அவளுக்கு முத்தம் கொடுத்தான். அந்த நேரம் சட்டென்று இவன் புறம் அவள் திரும்பினாள். அவளின் பார்வையில் படாமல் தன் கால்களை மடக்கி குனிந்துக் கொண்டான் அவன்.
அவளின் விழிகளில் இருந்த தேடலை மறைந்து நின்று பார்த்தவனுக்கு ஏனோ இதழ்களில் ஒரு சின்ன முறுவல் முகிழ்த்தது.
கவிதையாய் அவளை மனதுக்குள் விரித்தான் அந்த நெடியவன்.
“இன்னும் எவ்வளவு நேரம்டா இப்படி அந்த பெண்ணை வெறிக்க வெறிக்க பார்ப்ப.. விட்டா கடிச்சு குதறிருவ போலையே” அவனது காதுக்குள் நாராசமாய் ஒரு குரல் விழ, தலையை திருப்பி குரல் கொடுத்தவனை முறைத்து பார்த்தான்.
அவனது பார்வையில் கொஞ்சம் பயம் வந்தாலும்,
“போதும்டா... நீ பார்க்கிறதை பார்த்தா எனக்கே பயமா இருக்கு... விட்டா இப்பவே அந்த பெண்ணை கடிச்சு முழுங்கிடுவ போல.. இப்படியா முன்ன பின்ன தெரியாத பெண்ணை பார்த்து வைப்ப” என்று அவனின் நண்பன் பரசுராம் கொஞ்சம் அழுத்தமாகவே சொன்னான்.
ஏனெனில் அந்த நெடியவனின் பார்வை அப்படி தான் இருந்தது. ஏதோ பெரும் பசியில் இருந்தவனுக்கு அமிர்தத்தை முன்னாடி வைத்து இருந்தால் அவன் என்ன மாதிரி பார்ப்பானோ அந்த பார்வை அல்லாவா பார்த்துக் கொண்டு இருந்தான்.
“ப்ச் அந்த பக்கம் போய் அனத்துடா. தேவை இல்லாமல் தொந்தரவு பண்ணிக்கிட்டு” என்றவன் தான் செஞ்சன்... நம் கதையோட தலைவன். வானொலியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் மிகச்சிறந்த தொகுப்பாளர். ஆர்ஜே செஞ்சன் என்றால் அப்படி ஒரு மயக்கம் மக்களிடையே.
அவனது குரல் வளத்துக்கு இந்த மாநிலமே மயங்கி போய் தான் இருக்கிறது.. ஆனால் வெளியே யாருக்கும் தெரியாது இவன் தான் அந்த அழுத்தமான ஆழமான இதயத்தை தொடும் குரல் கொண்டவன் என்று. பல முக்கிய நிகழ்ச்சிகளை நேர் காணல்களை தொகுத்து வழங்குவதில் வல்லவன்.
அப்படி பட்டவன் ஒரு பெண்ணை நிமிர்ந்து பார்ப்பதே அரிது. ஆனால் இப்பொழுது மிக சமீப காலமாக அவனது விழிகள் இந்த சேலை கட்டிய பெண் மீது படிக்கிறது...
பரசு எவ்வளவு சொல்லியும் அவனது காதில் ஏறவே இல்லை. அவனின் விழிகளில் இருந்த இரசனையில் பரசுவே திகைத்துத்தான் போனான்.
“என்னடா இப்படி பச்சையா பார்க்கிற?” இம்சையாய் சஞ்சனின் காதுக்குள் ரீங்கரித்துக் கொண்டே இருந்தவனை ஒரு முறை முறைத்தவன் தன் புடவை பெண்ணிடமே பார்வையை நிலைக்க விட்டான்.
அவனது இடைவிடாத பார்வை சரத்தில் அசவுகாரியத்தை உணர்ந்த பெண்ணவள் திரும்பி பார்த்தாள். தினமும் இதே வேலை தான்.. ஏதோ ஒன்று அவளை தொடர்வது போல பிரம்மை.
இதழ்களை சுழித்துக் கொண்டவள் வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டாள்.
எப்பொழுதும் தெரியும் அதே காட்சி தான். புதிதாக எதுவும் இல்லை தான். அதே மரம், அதே கட்டிடம். ஆனால் மனிதர்கள் மட்டும் ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டே இருந்தார்கள் காட்சியில். சில நேரம் அறிந்த முகம். சில நேரம் அறியாத முகம்.
ஆனாலும் அவள் பார்த்துக் கொண்டே தான் வந்தாள். சில மரத்தில் புதிதாக துளிர் விட்டு இருந்தது. சில மரத்தில் பழைய இலைகள் உதிர்ந்து போய் இருந்தது. பறவை இனங்கள் தங்களின் தேவைக்காக அங்கும் இங்குமாய் பறந்துக் கொண்டு இருந்தன... அவைகளை எல்லாம் பார்த்துக் கொண்டே வந்தாள்.
இதோ அடுத்த நிறுத்தத்தில் இறங்கவேண்டும்.. புடவை கொசுவத்தை இரு விரலால் பற்றியபடி வண்டி நின்ற உடன் இறங்கினாள். அவள் இறங்கவும் அவளை பின் தொடர்ந்தன இரண்டு விழிகள்.
போகும் பெண்ணை லாட்ஜை இன்றி பார்த்துக் கொண்டு இருந்த செஞ்சனை முறைத்துப் பார்த்தவன், “இவனெல்லாம் தேறவே மாட்டான்” என்று வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டான்.
“நான் தேறாட்டி போறேன் போடா வெண்ண” என்று திட்டிய செஞ்சன் தன் விழிகளால் போகும் அவளை சிறை எடுக்க முயன்றான். ஆனால் அவள் நளினமாக நடந்து அவனது பார்வையை கடந்து சென்று விட்டாள்.
அவள் போன பிறகே இயல்புக்கு திரும்பினான் செஞ்சன். “இப்படி வழிஞ்சு போய் பார்க்கிறதுக்கு அந்த பெண்ணையே கல்யாணம் கட்டிக்க வேண்டியது தானேடா”
“அது மட்டும் நோ” என்று உறுதியாக மறுத்தவன் அடுத்த நிறுத்தத்தில் இறங்கி ரேடியோ ஸ்டேஷனுக்குள் நுழைந்தான்.
இங்கே பேருந்தை விட்டு இறங்கிய சேலை பெண்ணோ மிகப்பெரிய ஸ்டுடியோவுக்குள் நுழைந்தாள்.
“ஹாய் சங்கவை” என்று முன்னாள் வரவேற்பில் இருந்த பெண் சொல்ல,
“குட் மார்னிங் ஸ்டெல்லா” பதிலுக்கு வாழ்த்தி விட்டு பல இடங்களை தாண்டி உள்ளே இருந்த டப்பிங் தியேட்டருக்குள் நுழைந்தாள்.
“மார்னிங் சங்கவை” என்று சவுண்ட் இஞ்சினியர் சொல்ல,
“மார்னிங் சார்” சிரித்தவள்,
“என்ன மூவி சார்” கேட்டவளிடம் அன்றைக்கு அவள் டப்பிங் செய்ய வேண்டிய படத்துக்கு உரிய டைலாக் பேப்பரை கொடுத்தார்.
“மேல் போஷன் யார் சார் பண்றாங்க” கேட்டுக் கொண்டே சோபாவில் அமர்ந்து அந்த பேப்பரை திருப்பி பார்த்து ஒரு முறை வாசிக்க ஆரம்பித்தாள்.
“நம்ம முகேஷ் சார் தான்”
“ஓ... சூப்பர்” என்ற நேரமே முகேஷ் வந்து விட்டார்.
“ஹலோ சார்” என்று அவனை வரவேற்க,
“ஹலோ சங்கவை.. பேப்பர் பார்த்தியா? உன்னால முடியும் தானே? சக தோழமையோடு அவர் கேட்க,
“ரைட்டிங் சூப்பரா இருக்கு சார்... வேர்ட்ஸ் எல்லாம் பக்காவா போட்டு இருக்காங்க. மேக்சிமம் எமோஷனலா பேச ட்ரை பன்றேன்” என்றாள்.
“உன்னால முடியும் சங்கவை... இத இதுக்கு முன்னாடி ரெண்டு பேர் ட்ரை பண்ணிட்டாங்க. பட் யாராலும் முடியல. உன்னால கண்டிப்பா முடியும்...” என்று சொன்னார்.
“உங்க நம்பிக்கையை காப்பாத்துவேன் சார்” என்று சொன்னவள் அதன் பிறகு ஒருமுறை நன்றாக பேப்ரை வாசித்துக் கொண்டாள்.
சவுண்ட் அளவு எல்லாம் செக் செய்து டன் என்று காட்டியவுடனே முகேஷோடு சங்கவையும் மைக் முன்னாடி நின்றார்கள்.
ஹாதில் ஹெட்போன் போட்டு பேப்பரை முன்னாடி வைத்துக் கொண்டு ஸ்க்ரீனில் போகும் வீடியோவை ஆழ்ந்து பார்த்தார்கள்.
அதற்கு தகுந்தார் போல ஒருமுறை பேசி பார்த்துக் கொண்டவர்கள், ரெடி என்று கையை காட்டினார்கள்.
சவுண்ட் இஞ்சினியர் அவர்களின் குரலை எந்த பிசிருயும் இல்லாமல் பதிந்துக் கொண்டார்.
சங்கவையின் குரல் அந்த படத்தில் நடித்துக் கொண்டு இருந்த பெண்ணுக்கு பூரணமாக பொருந்திப் போக முகேஷ் பாராட்டினார்.
சவுண்ட் இன்ஜினியருக்கும் மகிழ்ச்சி.அவளுக்கு பின்னாடி படத்தின் டைரெக்டர் நின்று இருந்தார். அதை அவள் கவனிக்கவே இல்லை.
தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை கச்சிதமாக அவள் செய்ய,
“மார்வலஸ்... சங்கவை” என்று பாராட்டாய் குரல் கேட்க திகைத்துப் போனவள், திரும்பி பார்க்க அந்த படத்தின் இயக்குனர் நின்று இருந்தார்.
“சார்” என்று அவள் அதிர,
“முகேஷ் முதல்லயே உன்னை தான் ரெபர் பண்ணாரு. நான் தான் சொந்தக்கார பொண்ணுக்கு வாய்ப்பு குடுக்கலாம்னு சொதப்பிட்டேன்... பட் உன் வாய்ஸ் அருமையா பொருந்தி போகுது சங்கவை.. அப்படியே என் கதா பாத்திரத்துக்கு உயிர் குடுத்து இருக்க... தேங்க்ஸ்” என்றார்.
“அச்சோ இது என்னோட வேலை சார். இதுக்கு எதுக்கு தேங்க்ஸ் எல்லாம் சொல்லிக்கிட்டு” என்றவள் அன்றைய பொழுது வரை அதிலே சென்றது.
ஸ்டுடியோ முழுவதும் ஏசி என்பதால் பெரிதாக அவளின் தோற்றத்தில் எந்த மாற்றமும் இல்லை. அப்படியே தான் இருந்தாள்.
மாலை மூன்று மணி வாக்கில் அவள் கிளம்பும் பொழுது,
“டேக்சி ஏற்பாடு பண்ணவா?” என்று அக்கறையாக இயக்குனர் கேட்க,
“வேணாம் சார்... நான் பார்த்துக்குறேன்” என்று சொல்லிவிட்டு வெளியே வந்தவள், எந்த அலட்டலும் இல்லாமல் அரசு பேருந்து நிலையத்தில் வந்து நின்றாள். அவளது நேரம் பேருந்து உடனே வந்து விட்டது..
அதில் ஏறிக்கொண்டாள்.
உங்க ஹீரோ ஹீரோயின் பேரு எல்லாம் நல்லா இருக்கு ரைட்டர்.....
தமிழ் பேரா வைக்கரிங்க👏🏻👏🏻👏🏻👏🏻
சஞ்சு & சங்கு ரெண்டு பேரும் குரல் வெச்சி தான் வேலை🤩🤩🤩🤩
யாரு டா இந்த டைரக்டர்????
வில்லனா வர வாய்ப்பிருக்க என்ன????
ஏன் கல்யாணம் வேணாம்னு சொல்றான் சஞ்சு?????