அந்த நேரம் அவனிடம் தொடர்ச்சியாக அசைவு தெரிய கூர்ந்து பார்த்தாள். அப்பொழுது தான் அவன் குளிரில் வாடிக்கொண்டு இருப்பது புரிய, தன்னிடமிருந்த ஒற்றை போர்வையை எடுத்துகொண்டு அவனிடம் விரைந்தாள்.
கதவை சத்தமில்லாமல் திறந்தவள் வெளியே வந்து தன் தந்தையை பார்த்தாள். அவர் அசந்து தூங்கிக்கொண்டு இருந்தார். அதனால் கொலுசின் ஓசை கேட்காதவாறு பைய நடந்து வந்து பாண்டியனுக்கு போர்வையை போத்திவிட்டாள்.
போத்திவிட்டு விலகிய நேரம் அவளின் கையை இறுக பற்றினான் பாண்டியன். அதை எதிர்பாராதவள் ஒரு கணம் திடுக்கிட்டு போனாள்.
“ஐயோ என்ன பண்றீங்க நீங்க... அதுவும் அப்பாவுக்கு முன்னாடி... விடுங்கங்க... அவரு முழிச்சா எதாவது வம்பாகிட போகுது..” மெல்லிய குரலில் பதரியவளை கூர்ந்து நோக்கியவன்,
“குடியிருந்த வீட்டை விக்கிற அளவுக்கு அப்படி என்ன பணத்தேவை வந்தது... என்ன பண்ண அவ்வளவு பணத்தையும்.” ஆத்திரத்துடன் கேட்டான். அவனது ஆத்திரத்தை கண்டு உள்ளுக்குள் பயந்து போனவள்,
“அது நகை வாங்கிட்டேன்...” என்றாள்.
“பொய் சொன்ன தோளை உரிச்சி உப்புகண்டம் போட்டுடுவேன்டி. மரியாதையா சொல்லு அதை என்ன பண்ணன்னு...”
“அதை கேக்க நீங்க யாரு... எங்க அப்பாவே ஒண்ணும் கேக்கல.” என்றாள் கடுப்புடன்.
“அவரை தான் நீ நல்லா ஏமாத்தி வச்சி இருக்கியே... இல்லன்னா பெத்த பொண்ணுக்கு கல்யாணம் ஆகி அவ புருசனோட ஒரு மாசம் குடும்பம் நடத்தி இருப்பது தெரியாம இருக்குமா...? இல்ல அப்படி கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்தினவனை பாதியிலே விட்டுட்டு வந்தது தான் தெரியுமா..?”
“உன் மேல அவ்வளவு நம்பிக்கை வச்சு இருக்கிறவர நீ இப்படி ஏம்மாத்திட்டு தான் இருப்பியா..? சொல்லுடி...” என்று அவளின் கைகளை முறுக்கி இறுக்கி பிடிக்க வலி உயிர் போனது.
“நிஜமா நான் நகை தான் வாங்கினேன்.. விடுங்க வலிக்கிது.” துடித்தாள்.
“அதை என் மாமானார் வேணா நம்பலாம் ஆனா நான் நம்ப மாட்டேன்... சொல்லுடி அவ்வளவு பணத்தை என்ன பண்ணின...”
“இல்லங்க நிஜமாவே நான் நகை தான் வாங்கினேன்...”
“சரி அப்போ அந்த நகையை காட்டு...” என்றான். அதில் அவள் தலையை குனிந்துக்கொண்டாள்.
அவளது முகத்தை நிமிர்த்தி, “என்னடி பண்ணி தொலைச்ச. யாருக்கிட்டயாவது குடுத்து ஏம்மாந்துட்டியா...?”
“இல்லை...” என்று தலையசைத்தாள்.
“அப்போ என்னதான்டி பண்ணின..” அவள் மீண்டும் மெளனம் சாதிக்க, பாண்டியனுக்கு ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது.
“இங்க என்னால கத்தவும் முடியல...” வார்த்தையை கடித்து துப்பியவன் படுக்கையிலிருந்து இறங்கி அவளை தன் கைகளில் தூக்கிக்கொண்டவன் கிணற்றடிக்கு சென்றான்.
“ஐயோ அய்யாரு எழுந்துட போறாருங்க...” பதறினாள்.
“பின் பக்கம் ஒரு வாசப்படி இருக்குள்ள அவரு எழுந்தா அந்த பக்கமா உள்ள போயிடு..” என்றவன் வேகமாக நடந்தான்.
கிணற்று சுவரில் ஏறி அமர்ந்தவன் தன் கால்களுக்குள் அவளை கொண்டு வந்து நிறுத்தியவன் தன் கேள்வியை தொடர, தலைக்குனிந்து நின்றாள்.
“பொழிலி உன்கிட்ட தான் பேசிக்கிட்டு இருக்கேன். உனக்கே தெரியும் எனக்கு பொறுமை ரொம்ப கம்மின்னு. அதுவும் உன் விசயத்துல எனக்கு இன்னமும் கம்மி தான்... மரியாதையா என்ன நடந்தது அதை. சொல்லு. பணத்தை யாருக்கிட்டவாவது குடுத்து தொலைச்சுட்டியா...?” என்றான்.
“நகை தான் எடுத்தேன்..” என்றாள்.
“அப்புறம் எங்கடி ஒத்தை நகைய கூட போடாம வெறுமென நிக்கிறவ... இப்பவே உள்ள போய் என்ன நகை எடுத்தன்னு எடுத்துட்டு வா... நான் பார்க்கிறேன்..” என்றான் ஆராய்ச்சியாய்.
அதற்கு அவள் பேசாமல் இருக்க பொங்கிய ஆத்திரத்துடன்,
“ஏன்டி உன்கிக்கிட்ட பேசிக்கிட்டு இருக்குறவன் என்ன கேனையனா...? இல்ல கேனையனான்னு கேக்குறேன்...? மரியாதையா என்ன நடந்ததுன்னு இப்போ நீ சொல்லல கன்னம் பழுத்திடும் பார்த்துக்க..” கேட்டான்.
அப்பொழுதும் அவள் பதில் எதுவும் பேசாமல் இருக்க, பெருகிய சினத்துடன் அவளை அறைய போனவனின் கரம் பாதியிலே நின்றது. மூளைக்குள் பளிச்சென்று ஒரு மின்னல் வெட்டி போனது.
“அவளுக்கு தாலி வாங்கி குடுத்தியா...?” என்று கேட்டான் கரகரத்த குரலில்.
ஒரு கணம் திகைத்தவள் பின் இல்லை என்று தலையாட்டினாள். அதில் அவனது இதழ்களில் மெல்லிய புன்னகை உதயமாக, அவளை தன்னோடு இறுக அணைத்துக்கொண்டான்.
“சரி போய் தூங்கு..” என்றான்.
“இல்லங்க அவங்களுக்கு நான் எதுவும் வாங்கி தரல...” என்றாள் தவிப்புடன்.
“ஏதோ ஒரு காரணத்துக்காக அவ தாலிய கழட்டி மேசை மேல வச்சி இருந்தா. உன் மகனை அவ வலுக்கட்டாயமாக தூக்கிக்கொண்டு வந்து அறையில விளையாட விட, கோவத்துல என்ன செய்யிறதுன்னு தெரியாமல் அவன் தூக்கி வீசிட்டான். அது என் கையில வந்து விழுந்துச்சு...” என்றான்.
“அவங்க தாலிய கழட்டி கேட்டாங்க. நான் குடுத்துட்டேன். அவ்வளவு தான்.” என்றாள்.
“ம்ஹும்...” என்று அவளை நக்கல் பண்ணியவன்,
“அப்போ நீ புதுசா தாலி செஞ்சு அவக்கிட்ட குடுக்கல இல்லையா...?”
“ஆமாம்..” என்றாள் மிடுக்காக. அவளது மிடுக்கை ரசித்தவன், ரவிக்கையின் உள் மறைத்து வைத்திருந்த முதல் நாள் பொழிலியை பார்த்த உடனே அவளது கழுத்தில் போட்ட சங்கிலியையும் அதில் கோர்த்து இருந்த தாலியையும் எடுத்து வெளியே விட்டான். அதை கண்டு திகைத்து போனவள்,
“இது இது...”
“ம்ம்ம் இதுக்கு பேரு தான் தாலி... தாலின்னா என்னன்னே தெரியாம தான் என் கூட குடும்பம் நடத்துனியா..?” நக்கல் பண்ணினான்.
அதில் அவனை முறைத்து பார்த்தவள், வேகமாய் தன் நெஞ்சின் மீது இருந்த தாலியை எடுத்து புடவைக்குள் ஒளித்துக்கொண்டவள்,
“எனக்கு தூக்கம் வருது. நான் போகணும்...” என்று கிளம்ப போக, அவளை வளைத்து இறுக்கி பிடித்தவன் அவளது கழுத்தில் தன் முகத்தை பதித்து அவளது வாசனையை தனக்குள் இழுத்துக்கொண்டவன் மீசையையும் தாடியையும் வைத்து அவளுக்கு குறுகுறுப்பு ஊட்ட அவனது ராஜ லீலைகளில் சிலிர்த்து சிவந்து நாணம் பொங்க அவனது கை வளைவுக்குள் சிறைப்பட்டு கிடந்தாள்.
“மாமா விடுங்க... அய்யாரு எழுந்...” அதற்கு மேல அவளை அவன் பேசவிடவே இல்லை. அவளின் காதலை இந்த ஒரு செயலிலே நன்கு காட்டிவிட்டால் பூம்பொழிலி. இதைவிட பாண்டியனுக்கு வேறு என்ன வேண்டும்.
‘தன் காதலுக்கு ஈடாக அவளின் மனத்திலும் தன் மீது காதல் இருக்கிறது. தன் உள்ளத்து காதலின் அளவை போலவே அவளின் நெஞ்சிலும் நிறைந்து நிற்கிறேன்’ என்று எண்ணியவனுக்கு வானத்தை வசப்படுத்திய உணர்வு.
இது தானே அவனுக்கு வேண்டும். அவளின் முழு காதலிலும் அவன் திளைக்க வேண்டும். வாழ் நாள் முழுவதும் அவளின் கைசிறையிலே மார்பு சூட்டின் கதகதப்பிலே இருக்க எண்ணினான்.
அதை காதலுடன் செய்ய அவள் இருக்கையில் அவனுக்கு வேறு என்ன வேண்டும்... இறுக்கி அணைத்துக்கொண்டவன் அவளின் தேகம் முழுவதும் தன் இதழ்களை பதிக்க, பொழிலிக்கு காற்றில் பறப்பது போல இருந்தது.
அவன் உதடுகள் செய்யும் லீலைகளில் சிக்கி சிதறிப்போனவள் ஒரு கட்டத்துக்கு மேல் முடியாம இம்சை செய்யும் அவனது இதழ்களை கடித்து வைத்தாள். அதில் கண்களில் மின்னல் வெட்டிபோனது பாண்டியனுக்கு.
தன் கரத்தை கொண்டு அவளுடம்பில் வண்ணம் தீட்ட இன்னும் சற்று வன்மையாக அவனது இதழ்களை கடித்து வைத்தாள். அந்த வலி தனக்கு இன்னும் இன்னும் வேண்டும் என்று எண்ணியவன் அவளை மேலும் மேலும் சீண்டிவிட, அவனை துவம்சம் செய்ய ஆரம்பித்தாள் பொழிலி.
அவனுக்கு இது தானே வேண்டும். அதனால் அவளை சீண்டிவிட்டு சீண்டிவிட்டு சுகம் கண்டான் இந்த காதல் வேந்தன்.
Nice





