“நான் தான் உன்னை தொட்டதே இல்லன்னு சொன்னியே.. அதை இப்போ செயல் படுத்தலாம்னு இருக்கேன்... வாடி..” என்றவன் அவளை இழுத்து தன் மேல் போட்டுக்கொண்டு,
“அவளை தொட்டேன்னு சொன்னில்ல. அவக்கிட்ட என்ன இருந்தது என்ன இல்ல... உன்கிட்ட என்ன இருக்குன்னு பார்த்து வித்யாசம் சொல்றேன் சரியா...?” என்று அவளின் காதோரம் கூறியவன், அவள் மறுக்க மறுக்க அவளை தனக்குள் எடுத்துக்கொண்டவன் அவளின் காதோரம் வாய் வார்த்தையால் எதை எதையோ சொல்ல, ஒரு கட்டத்துக்கு மேல் அவளால் தாங்க முடியாமல் போக,
அவனை அடக்கும் வழி தெரியாமல் அவளின் இதழ்களை சிறை எடுத்தாள் மிக கோவமாக. அதில் பாண்டியனின் கண்களில் மின்னல் வெட்டு ஒன்று வந்தது.
அதன் பின்பு அவனது வேகம் இன்னும் கூட, அவளால் தான் தங்க முடியாமல் போனது. புயலை விட அதிக வேகத்தை அவனிடம் கண்டவளுக்கு நன்கு விளங்கியது.
அந்த பெண்ணின் நிழலை கூட இவன் தொட வில்லை என்று. அதில் அவளையும் அறியாமல் முகம் புன்னகையில் மலர்ந்து போனது.
அதை கண்டு கொண்டவன் அந்த புன்னகையில் விரிந்த இதழ்களை தனக்குள் பதுக்கிக்கொண்டான். அவனது இந்த பொசசிவ் கூட அவளை மிகவும் கவர்ந்தது. அதனாலோ என்னவோ அவனுக்கு அவனறியாமலே முழு ஒத்துழைப்பும் கொடுத்தாள்.
அதை அறியாதவனா பசும்பூண் பாண்டியன். ரகசிய சிரிப்பில் மலர்ந்தவன் முதல் கூடலை போல ரசித்து ரசித்து அவளிடம் கூடினான்.
அதில் உள்ளம் நடுங்கியவள், அவனை பார்த்தாள் தயக்கமாக...
“இப்போ என்னடி சொல்லற... இப்பவும் நான் அவ கூடத்தான் ...” சொன்னவனின் வாயை பொத்தியவள், அவனது போக்கிற்கு வந்துவிட்டாள்.
தன் காதலை அவளிடம் காட்டிவிட்டு விலகிப்படுத்தவன் கண்களை மூடிக்கொண்டான்.
“மாமா...” என்றாள் அவனது நெஞ்சில் படுத்துக்கொண்டு.
“இந்த செஞ்சோற்று கடன் வெங்காய கடன்னு எதையாவது பினாத்திக்கிட்டு இருக்காத சொல்லிட்டேன்.. நான் முதல் முறைய வயக்காட்டுல பார்த்தது உன்னை தான். நான் தாலி கட்டுனதும் உனக்கு தான். உன் கூட தான் நான் வாழ்ந்தேன்...”
“எனக்கு உன் வாசம் தனிச்சு தெறியும் டி... அதைவிட உன் மகனுக்கும் உன்னை பத்தி நல்லா தெரிஞ்சி வச்சு இருக்கான்..” என்றான்.
“என்னங்க சொல்றீங்க...”
“நீ இருக்க வேண்டிய இடத்துக்கு வேற ஒருத்திய அனுப்பி வச்சு இருக்கியே அவ கிட்டக்கூட அவன் போகல தெரியுமா...?”
சட்டென்று எழுந்து அமர்ந்துவிட்டாள். எழுந்தவளை இழுத்து தன் நெஞ்சின் மீது போட்டுக்கொண்டவன்,
“இப்பவும் நீ அவ கூட தான் இருந்தேன்னு சொல்லுவியா டி...”
“அழுதானா...” என்றாள் தாய்மையின் தவிப்போடு.
“நானும் சேர்ந்து அழுதேன்...” என்றான்.
அவளுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.
“தப்புங்க... நீங்க அவங்க கூட தான் வாழனும்...” என்றாள் விழிகளில் நீருடன்.
“நான் யார் கூட வாழணும்னு நான் தான்டி முடிவு பண்ணும்... நீ இல்லை.”
“அப்போ அந்த உரிமை எனக்கும் இருக்கு தானே...” என்றாள்.
“இருக்கு ஆனா என் கையாள தாலி வாங்குறதுக்கு முன்னாடி வரை. இப்போ இல்ல.” என்றான் ஆத்திரமாக.
“மாமா...”
“ஏன்டி என் வாழ்க்கைய இப்படி சின்னா பின்னம் பண்ற. எனக்கு உன் கூட வாழணும்னு ஆசையா இருக்குடி.. முதல் வாழ்க்கை நான் நினைச்ச படி எனக்கு அமையல. சரி இரண்டாவது வாழ்க்கையாவது நல்ல படியா அமையும்னு நினைச்சேன். ஆனா அதையும் நீ இப்படி சிக்கல் ஆக்கி வச்சு இருப்பன்னு நான் நினைக்கல...”
“உண்மைய சொல்லு உனக்கும் அங்கு இருக்கிறவளுக்கும் என்ன சம்மந்தம். நீயும் அவளும் எப்படி ஒரே மாதிரி இருக்கீங்க... தலையே வெடிக்குதுடி...” தலையை அழுந்த பற்றிக்கொண்டான்.
அவன் எழவும் இவளும் எழுந்து தன்னை சீர் செய்துக்கொண்டவள்,
“இதெல்லாம் உங்களுக்கு எதுக்கு. முதல்ல கிளம்பி ஊருக்கு போய் சேருங்க. அய்யாரும் மாமாவும் வராங்க போல.. நான் போறேன்..” என்று மின்னல் வேகத்தில் அவ்விடத்தை விட்டு சென்றுவிட்டாள்.
அவளின் பின்னாடியே ஓடி வந்தவன் தூரத்தில் பெரியவர்கள் இருவரும் வருவது தெரிய அப்படியே நின்றுவிட்டான்.
முன் மாலை இருளில் அவன் நிற்பது அவர்களுக்கு தெரியவில்லை. ஆனால் அவனுக்கு குடிசையின் முன்பு இருந்த விளக்கு வெளிச்சத்தில் நன்கு தெரிந்தது. அதனால் எதுவும் செய்ய முடியாமல் தலையை கோதி தன்னை கட்டுப்படுத்தியவன் ஓங்கி அருகில் இருந்த மரத்தை குத்தினான்.
தன் கோவம் சற்று அடங்கிய பின்பே அவர்களை நோக்கி சென்றான். வந்தவனை இருவரும் பவ்யமாக வரவேற்க, சின்ன தலையசைப்பில் ஏற்றவன் திண்ணையில் அமர்ந்தான்.
“வாங்க அய்யாரு...” மலைச்சாமி அவனை வரவேற்று குடிக்க தண்ணீரை எடுத்து வர சொன்னார் பொழிலியிடம்.
“இதோ வாறேனுங்க மாமா...” என்று உள்ளிருந்த படியே குரல் கொடுத்தவள் குடிக்கதே தண்ணியோடு வந்தாள்.
“நானே சொல்லனுமுன்னு நினைச்சேன் கண்ணு. நீயே கொண்டு வந்துட்ட...” என்றார்.
“அதனால என்னங்க மாமா... குடிக்கிற நேரம் தான் வந்துடுச்சே...” என்று மூவருக்கும் கொடுத்தாள். அவளை தீப்பார்வை பார்த்துக்கொண்டே இவன் எடுத்துக்கொண்டான்.
கணக்கு வழக்கை எல்லாம் மலைச்சாமி பகிர்ந்துக்கொள்ள, எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டவந்து கவனம் உள்ளிருந்து வரும் வளையலொலியிலும் கொலுசொலியிலுமே இருந்தது.
இரவு பொழுதுக்கு சமையல் செய்துக்கொண்டு இருக்கிறாள் என்று கணித்தவன் சட்டென்று கண்களை மூடி அவளின் சத்தங்களை உள்வாங்க முயல, மலைச்சாமியின் குரல் அதை தடுத்தது.
“அய்யாருங்க...” என்று அழைக்க விழிகளை திறந்து பார்த்தான் என்ன என்பது போல.
அப்பொழுது தான் செவுனப்பன் மலைச்சாமியை சற்று தவிப்பாக பார்ப்பதை உணர்ந்தவன் அவர்களே சொல்லட்டும் என்று அமைதியாக இருந்தான்.
“அது வந்து...” என்று அவர் இழுக்க, அவன் என்ன என்று கூட கேட்கவில்லை. ஆனால் பார்வை முழுவதும் அவர்கள் இருவரிடம் மட்டுமே இருந்தது.
“அது ஒண்ணுமில்லைங்க அய்யாரு நம்ம செவுனப்பன் இவ்வளவு நாளா இருந்த அவன் ஊரை விட்டு ஒரேடியா இங்க வந்துட்டான். தங்க வசதி இல்ல... அதனால நம்ம குடிசை சும்மா இருக்கேன்னு இங்க தங்க சொன்னேனுங்க...” என்றார் தயக்கமாய்.
“அதுக்கு...”
“இல்லைங்க ஐயாரு. இப்போ தான் பெரியவரு பேசுனாரு... நீங்க இங்க தங்க போறதா... அதான்...” என்றவரின் தயக்கம் இப்பொழுது புரிய,
அப்பொழுது தான் இந்த சங்கடத்தையே எண்ணி பார்த்தான். இவ்விடத்தில் பொழிலி மட்டும் இல்லை என்றால் மதிய பொழுதே இந்த வீட்டை காலி செய்து தரும்படி சொல்லி இருப்பான்.
ஆனால் பொழிலி இருக்கவும் அவன் அதை பற்றி கொஞ்சமும் யோசித்து பார்க்கவே இல்லை.
“அதனால ஒண்ணும் இல்ல அவங்களையே தங்கிக்க சொல்லுங்க...” என்றான்.
அவன் இப்படி சொல்லவும் மலைச்சாமி மேலும் கைகளை பிசைந்துக்கொண்டு நின்றார்.
Nice





