வீட்டுக்கு வந்தவன் ஒரு கணம் பிரம்மித்து தான் போனான். வீடு ரொம்பவே அழகாய் மாறி இருந்தது. அளவான பொருட்கள் தான். ஆனால் அதது இருக்க வேண்டிய இடத்தில் அழகாய் இருந்தது. சமையல் அறையிலிருந்து மணக்க மணக்க வாசம் வந்தது.
எட்டி பார்த்தான். அவனது உடையில் தான் இருந்தாள். அடுப்பில் எதையோ போட்டு கிண்டிக்கொண்டு இருந்தாள். அரவம் செய்யாமல் சென்றவன் என்ன செய்கிறாள் என்று எட்டிப்பார்க்க அல்வா கிண்டிக்கொண்டு இருந்தாள்.
அதன் வாசம் இன்னும் நன்கு நாசியில் ஏறியது. அதோடு அவளது நெருக்கமும் அவனை மயக்க அவனையும் அறியாமல் அவளை படுக்கையில் தவிர்த்து மற்றைய நேரம் முதல் முறையாக அவளின் இடையைத் தொட்டான்.
அவனது தொடுகையில் அதிர்ந்து சட்டென்று திரும்பி பார்த்தாள். காலையில் இருந்து அலைந்து இருந்தவனின் தோற்றத்தில் ஒரு சோர்வு இருந்தது. ஆனாலும் அதையும் மீறி அவனது கம்பீரம் பளிச்சென்று தெரிந்தது.
அவனை பார்த்து புன்னகைத்தவள், அவனது தொப்பியை எடுத்து தன் தலையில் மாட்டிக்கொண்டு ஒற்றை புருவத்தைத் தூக்கி ‘எப்படி இருக்கு?’ என்று அவனை போலவே கண்களால் கேட்டாள். அவளது இந்த செய்கையில் அவன் பெரிதாக தடுமாறிப் போனான்.
படுக்கையில் மட்டுமே அவர்களது நெருக்கம் இருக்கும். அதை தவிர வேறு எங்கும் அவளை நெருங்கவே மாட்டான். அவளும் அப்படி தான். ஆனால் முதல் முறையாக இருவரும் இயல்பான கணவன் மனைவியாக இருந்தார்கள்.
அவளது செயலை கண்டு லேசாக அவனது முகத்தில் புன்னகை அரும்பியது. அதை மீசையில் அடக்கிக் கொண்டவன் முறைப்பது போல ஒரு பார்வை பார்த்து புருவத்தை தூக்கி “என்னடி?” என்று கேட்டான்.
அவனது முதல் அழைப்பில் நெஞ்சுக்குள் என்னவோ போல் இருக்க அவனது நெஞ்சில் தன் முகத்தை பதித்துக்கொண்டு அவனது முகத்தை தன் முகம் நோக்கி இழுத்துக்கொண்டாள்.
அவளது இந்த நெருக்கம் அவனை திகைக்கச் செய்தது. ஆனாலும் அவளோடு இன்னும் நெருங்கியவன் அவளின் செயல்களுக்கு ஒத்து அவளிடம் ஒடுங்கி நின்றான். அவனது நெருக்கம் அவளை இன்னும் பித்தம் கொள்ள வைக்க அவனிடம் முதல் முறையாக அத்து மீறினாள்.
அவனது கண்களில் மின்னல் வந்து தெறிக்க அவளை அப்படியே கைகளில் அள்ளிக்கொண்டான். அடுப்பை அனைத்தவனுக்கு அவளே உலகமாக மாறிப்போனாள்.
அவனுக்காக பார்த்து பார்த்து செய்த அல்வா கேட்க ஆளின்றி கிடந்தது. அவளை அள்ளிக்கொண்டவன் படுக்கையில் போட்டு கூடளில்லா ஒரு கூடலை நடத்த அவனது செயல்களில் முகம் சிவந்துப்போனாள். கூடலை விட இந்த நெருக்கம் இருவரின் நெஞ்சையும் நிறைத்து இருந்தது.
கூடல் என்றால் கூடி முடித்த அடுத்த நிமிடம் அந்த உணர்வுகள் போய் விடும். ஆனால் தேடல் இருந்தும் எல்லையோடு தேடி கலைத்த பின்பும் கூடாமல் ஒரு தேடலோடு இருக்கும் இந்த நேரம் இருவருக்கும் கட்டிக்கரும்பின் சுவையைக் கொடுத்தது.
அவன் அவளை கொண்டாடுவதும் அவள் அவனை கொண்டாடுவதும் இருவருக்கும் பொழுது போனதே தெரியவில்லை. உடை பாதி கலைந்து கட்டில் போர்க்களமாகி போய் கூடல் நடந்த இடம் போல காட்சி அளித்தது. ஆனால் இருவரும் கூடலே இல்லாமல் அழகிய படுக்கையறைப் பாடத்தை சில்மிஷத்தோடு செய்துக்கொண்டு இருந்தார்கள்.
அந்த நேரம் அவனது போன் அலறியது. எடுத்து பேசியவனுக்கு முகம் தணலை வீசியது போல இருந்தது. அவனை தொந்தரவு செய்யாமல் அவனையே பார்த்துக்கொண்டு இருந்தாள்.
அவளது பார்வையை உணர்ந்து தன் கோவத்தைக் குறைத்துக்கொண்டு, “வாட். இந்த நேரத்துலையா? ஆர் யூ மேட்?” கர்ஜித்தான்.
அந்த பக்கம் என்ன பதில் வந்ததோ இவன் போனை அனைத்து போட்டான் கடும் கோவத்துடன். அவனை நெருங்க சற்றே தயக்கமாய் இருந்தது நறுமுகைக்கு.
அவனின் தோளை மெதுவாகத் தொட்டாள். அந்த தொடுகையில் நிமிர்ந்து அவளை பார்த்தான். அவளது பார்வையில் இருந்த தவிப்பில் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு,
“குளிச்சுட்டு வரேன். சாப்படு எடுத்து வை.” என்று குளியல் அறைக்குள் நுழைந்துக்கொண்டான். அவன் இயல்பாக பேசியதைக் கண்டு ஒரு கணம் திகைத்தவள் பின் சிரிப்புடன் அவனுக்கு வேண்டியவற்றை செய்ய ஆரம்பித்தாள்.
சாப்பிட வந்தவன் அவள் பரிமாறிய பதார்த்தைக் கண்டு மெச்சுதலாய் ஒரு பார்வை பார்த்தான். பின் நிதானமாக உண்டு முடித்தவன்,
“வேலை இருக்கு. நீ கதவை பூட்டிக்கோ. என்கிட்ட சாவி இருக்கு நான் வரேன்.” என்று கிளம்பிவிட்டான்.
கடைசியாக அவள் கொடுத்த அல்வாவின் சுவை அவனது நாவை விட்டு அசையவில்லை. அதை சுவைத்துக்கொண்டே தீபனுக்கு போனை போட்டான்.
“மச்சான்.” தூக்க கலக்கத்திலே போனை எடுத்து பேசினான்.
“ஐடி பார்க் வா.” என்று வைத்துவிட்டான். புலம்பிக்கொண்டே தீபனும் வந்து சேர்ந்தான்.
“இந்நேரத்துக்கு எதுக்குடா இங்க வர சொன்ன?” தலையை சொரிந்துக்கொண்டே வண்டியை நிறுத்திவிட்டு வந்தான்.
“ம்ம்ம் வேண்டுதல்.” என்றான் முறைப்புடன்.
“சரி சரி விடு மச்சான். என்னவாம் இவனுங்களுக்கு? பொழுது போகலன்னா நம்மளை உருட்டி விளையாடுவாணுங்களா?” கடுப்படித்தான்.
“இங்க இருக்க எல்லா சிசிடிவி புட்டேஜும் வாங்கிட்டு வா.” என்றான்.
“அதெல்லாம் தான் ஏற்கனவே கலெக்ட் பண்ணிட்டமோ மச்சான்? இப்போ எதுக்கு புதுசா?”
“அது அந்த மரமண்டைங்களுக்கு தெரியாதேடா?”
“அது சரி.” என்றவன் போக்கு காட்டுவது போல போய் வந்தான் தீபன். அதுவரை விக்ரமன் அங்கு முன்புறம் இருந்த காவலாளியை விசாரித்தான்.
விசாரித்த வரையில் அவரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. ‘அதெப்படி இவ்வளவு விசாரித்தும் எதுவுமே சிக்க மாட்டிகிது. நான் சரியான பாதையில போகலையா? இல்ல இந்த பாதையில தான் விசாரணை போகுமுன்னு நினைச்சி அந்த பாதையெல்லாம் கவனமா கையாண்டு இருக்காங்களா?’ கேள்வி எழுந்தது.
‘எல்லாவற்றையும் அவ்வளவு எளிதாக சரியாக செய்துவிட முடியாது. எப்படியும் ஏதாவது ஒரு தடையம் இருந்தே ஆகணும். அதை தான் இப்போ நான் தேடணும்.’ எண்ணியவன் அந்த இடத்தை அலசி ஆராய்ந்தான். கண்களை கூர் தீட்டி அங்கு நடக்கும் நிகழ்வுகளை எல்லாம் ஒருங்கே கூட்டி நினைவில் அடுக்கினான்.
பின்புறம் சென்றான். அங்கேயும் காவலாளிகள் இருக்க அவர்களிடம் விசாரிக்க எண்ணினான். ஆனால் அதற்குள் தீபன் வந்துவிட அதை ஒத்திவைத்து விட்டு திரும்பி க்ரைம் ப்ரெஞ் அலுவலகம் வந்தவன் தனக்கு ஒப்படைக்கப்பட்டு இருந்த வேலையை கொடுத்துவிட்டு வெளியே வந்தவன் வீட்டுக்கு சென்றுவிட்டான்.
அவனது யோசனை எங்கும் அந்த கொலை வழக்கிலே இருந்தது. வீட்டுக்கு வந்த பின்பு நறுமுகையை நாடி சென்றவன் அவளை படுக்கையில் சரித்து அவளிடம் ஒன்றி மேற்கொண்டு செல்ல, ஒரு கட்டத்துக்கு மேல் முடியாமல் அந்த கொலை வழக்கே அவனது சிந்தை எங்கும் நிறைந்து இருக்க, போர்வையை அவள் மீது வீசிவிட்டு எழுந்து அலுவலக அறைக்குள் நுழைந்துக்கொண்டான்.
பாதியிலே வந்துவிட்டவனை தேடி உடைகளை திருத்திக்கொண்டு வந்தாள். அங்கு எதிர்புறம் உள்ள போர்டில் நகரத்தில் நடந்து இருக்கும் அனைத்து கொலை வழக்குகள் கொள்ளை வழக்குகள் எல்லாமே எழுதி வைத்து அதை ஒன்றோடு ஒன்று தொடர்பு படுத்தி நூல் கொண்டு இணைத்து இருந்தான். அதை தான் இப்பொழுது பார்த்துக்கொண்டு இருந்தான்.
அதோடு தொடர் கொலை வழக்கான ஐடி நிறுவனத்தில் நடந்த ஆறு கொலைகளைப் பற்றிய குறிப்புகள் நிறைந்து இருந்த கோப்புவைக் கையில் வைத்து இருந்தான்.
இது சவாலான கேஸ் என்று பார்த்தவுடனே புரிந்தது. அவளுக்கு அந்த கேஸ் பற்றி தெரிந்து தான் இருந்தது. அவனை தொந்தரவு செய்யாமல் அவனருகில் நின்று அந்த போர்டில் உள்ள செய்திகளை எல்லாம் பார்த்தாள். வீட்டில் இருக்கும் பல நேரம் போரடிக்க அவனது அலுவலகத்தில் வந்து தான் குடி இருப்பாள்.
அதிலிருந்தே அவனது வேலையின் சுமையும் கடினமும் நன்கு புரிந்தது. தமிழ்நாட்டில் உள்ள மொத்த முக்கிய குற்றங்களும் அதன் சாரமும் அவனது போர்டில் பின் பண்ணி இருந்தான்.
‘எங்கேயோ ஏதோ நடக்குது என்று விடாமல் எல்லாவற்றையும் தன் பார்வையின் கீழ் கொண்டு வந்து அதை நோக்கி பயணிப்பவனின்’ பணிச்சுமைக் கண்டு நெஞ்சம் நெகிழ்ந்தது.
அவனை தொந்தரவு செய்யாமல் தேனீர் போட்டு வந்து அவனிடம் கொடுக்க ஒரு கணம் அவளை கூர்ந்து பார்த்தான். அவளை படுக்கையில் பாதியில் விட்டு வந்ததற்கு சிறிதும் கோவப்படாமல் தேனீர் கொண்டு வந்து கொடுக்கும் பெண்ணவளை எதில் சேர்ப்பது என்று தெரியாமல் அவளது சேவையை மனதில் பொதிந்து வைத்துக்கொண்டான்.
“என்னால....” என்று அவளிடம் படுக்கையில் கூட முடியவில்லை என்று சொல்ல வர, அவனது வாயை பொத்தி,
“முதல்ல உங்க வேலையைப் பாருங்க. எனக்கொண்ணும் அவசரம் இல்லை. இந்த வழக்குல எவ்வளவு அழுத்தம் இருக்கும் என்று எனக்கு நல்லாவே புரியுது.” என்றாள் ஒரு புரிதலோடு.
அவளின் இந்த புரிதலில் தலையசைத்தவன் அதன் பிறகு அந்த வழக்குகளில் மூழ்க ஆரம்பித்தான். அதோடு அடுத்த நாள் காலையில் அந்த வழக்கில் அந்த பெண்ணுக்கு ஆதரவாக வாதாடும் வக்கீலை சென்று பார்த்து வந்தான். அவரிடம் ஏதாவது தகவல் சிக்கும் என்று போனவனுக்கு சுவரில் முட்டிய கதை தான்.
அவருக்கும் எதுவும் புலப்படவில்லை. இதற்கு இடையில் இன்னொரு புகார் அவனது அலுவலகத்துக்கு வந்தது. என்ன என்று விசாரித்து பார்த்தால் மிஸ்ஸிங் கேஸ் என்று தெரியவந்தது.
‘யார்? என்ன? எப்பொழுது காணாமல் போனார்கள்’ என்று எல்லாவற்றையும் தீபன் விசாரித்துக்கொண்டு இருந்தான். ரைட்டர் அந்த வழக்கை புகாராக எழுதிக்கொண்டார்.
அடுத்த சில நாட்களிலே அந்த மிஸ்ஸிங் கேஸை கண்டுபிடித்தவனுக்கு இந்த தொடர் கொலை வழக்கில் மட்டும் எதுவுமே புலப்படவில்லை. ‘ஏதோ இருக்கு ஆனா எதுவுமே சிக்க மாட்டிக்கிது. அதெப்படி ஒரு கொலையை இவ்வளவு நேர்த்தியாக செய்ய முடிந்தது? ஒருவேளை கொலை செய்த ஆள் ஏற்கனவே பல கொலைகளை செய்து இருப்பனோ? அப்படி இருந்தால் மட்டும் தான் இவ்வளவு நேர்த்தியாக செய்ய முடியும்.’ எண்ணியவன் பழைய கொலை வழக்குகளில் உள்ள கைதிகளைப் பற்றிய கோப்புகளைத் தூசித் தட்டினான்.
அதில் இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பு விடுதலையான ஆட்களை பற்றிய தகவல்களை எடுத்தவன், அவர்கள் இப்பொழுது என்ன செய்கிறார்கள் என்று அவர்களது நடவடிக்கையை பாலோ செய்ய எண்ணினான்.
தனக்கு கீழ் உண்மையாக விசுவாசத்துடன் பணிபுரியும் சில முக்கியமான ஆட்களை அழைத்து,
“இந்த கோப்பில் உள்ள ஆட்களை நீங்க ஒரு மாதத்திற்கு பின் தொடர்ந்து சென்று கண்காணிங்க. அவர்களோட நடத்தையில் சிறிது சந்தேகம் வந்தாலும் கொத்தா தூக்கிட்டு வந்திடுங்க. நாம அவனுங்க பின்னாடி சுத்துற விசயம் வெளியல தெரியவேக் கூடாது. இது ரொம்ப இரகசியமா இருக்கணும்.” என்று சொன்னவன்,
யார் யாருக்கு என்ன ஆட்கள் என்று பிரித்து கொடுத்தான். அதே போல தீபனுக்கும் அவனுக்கும் சில ஆட்களை தேர்ந்தேத்துக் கொண்டான்.
அதன் படி அடுத்த ஒரு வார காலமும் அப்படியே நகர்ந்தது. இடையில் நறுமுகை வேலைக்குச் செல்கிறேன் என்று சொல்ல சரி என்று சொன்னான். அவளும் வேலைக்கு செல்ல ஆரம்பித்தாள்.
“நான் கொண்டு வந்து விடணும்னு எதிர் பார்க்காத. வண்டி ஓட்ட தெரியும்னா வண்டி வாங்கி தரேன்.” என்று சொன்னான்.
“இல்ல வேண்டாம் நான் பேருந்திலே போய்க்கிறேன்.” என்று மறுத்துவிட்டாள். அவனும் மேற்கொண்டு அவளை வற்புறுத்தவில்லை. வெறும் ஒரு தோள் குலுக்களுடன் நகர்ந்துவிட்டான்.
அவனது செயலில் உள்ளுக்குள் ஒரு வலி எழுந்தது. ஆனாலும் அதை அவனிடம் காட்டிக்கொள்ளாமல் வேலைக்கு சென்றுவர ஆரம்பித்தாள்.
தினமும் அவனுக்கு பார்த்து பார்த்து சமைத்து வைத்தாள். ஆனால் விக்ரமசேனன் வீட்டுக்கு குளிக்க மட்டுமே வந்து சென்றான். பெண்ணவள் ஒருத்தி அவனை நம்பி வந்து இருப்பதே அவனுக்கு உறைக்கவில்லை.
அவனது செயலில் கண்கள் கலங்கி இரவில் தனிமையில் கரைந்துப் போனாள். ஆனாலும் அவனது வேலை சுமை தெரிந்து வைத்திருந்ததால் அவனை எந்த காரணம் கொண்டும் தொந்தரவு செய்யவில்லை.
ஏற்கனவே அவன் பேச மாட்டான். இப்பொழுது முழு மூச்சாக அவன் இந்த வேலையில் இறங்கிவிட நறுமுகை பற்றிய சிந்தனை அவனது மூளையில் ஒரு இடத்தில் கூட எழவில்லை. அதனால் மனைவி என்ற ஒருத்தி தன் வாழ்க்கையில் இல்லை என்பது போலவே இருந்தான்.
அவனுக்கும் சேர்த்து அவள் அவனை காதலித்துக்கொண்டு இருந்தாள். அன்றைக்கு போர்வையை வீசி சென்றானே அது தான் அவனை கடைசியாக அணைத்து இருந்த நிமிடங்கள்.
அதன் பிறகு அவனை கண்களால் காண்பது கூட அரிதாய் இருந்தது. இவளும் வேலைக்கு செல்வதால் பகல் பொழுதில் வீட்டுக்கு வரும் அவனை காணக்கூட முடியவில்லை. வெறும் தனிமை தான் அவள் அனுபவித்தது.
அவளுக்கு வாங்கிய புது உடைகள் எல்லாம் அப்படியே இருந்தது. எப்பொழுதும் அவனது உடைகளை தான் அவள் அணிந்து இருந்தாள். இப்பொழுது வேலைக்கு போகும் பொழுது மட்டுமே அது பயன்பட்டது. வீட்டுக்கு வந்த பின்பு எப்பொழுதும் அவனது உடைகளில் தஞ்சம் அடைந்தாள். அது மட்டும் தான் அவளுக்கு சற்றே நிம்மதியைக் கொடுத்தது.
அவனது அழுக்கு உடைகள் மட்டுமே அவனது வருகையை அவளுக்கு உணர்த்தும். அதை துவைத்து காயப்போட்டு அடுக்கி வைப்பாள். வார நாட்கள் இப்படியே நகர்ந்தது. ஞாயிறு அன்று விடுமுறை என்பதால் தலைக்கு குளித்து அமைதியாக படுத்து இருந்தாள்.
ஏனோ அவளுக்கு விக்ரமசேனனை இன்று பார்க்க வேண்டும் போல இருந்தது. இந்த ஒரு வாரமும் அவனது முகம் கூட பார்க்க முடியவில்லை. கண்கள் எல்லாம் கலங்கிக்கொண்டு வந்தது. ஆனாலும் அவள் அழவில்லை. மனம் தான் பெரிதாக புண்பட்டுப் போய் இருந்தது.