மீனாச்சியம்மை சிரிப்புடன் தன் பேரனோடு அடுப்படி பக்கம் ஒதுங்கிக்கொள்ள,
நந்தினியோ “இதென்ன இப்படி பண்ணுதுங்க இந்த கிழவிங்க...?” முறைத்து பார்த்துக்கொண்டு இருந்தாள். மாறன் தொலைகாட்சியில் மூழ்கி இருக்க, நின்ற பாண்டியர் தாத்தா அப்பாவியாய் அவர்களை பிரிக்கும் வேளையில் இருந்தார்.
வாழ்க்கையில மனுஷனுக்கு சோதனை வரலாம்... ஆனா சோதனையே வாழ்க்கையா வந்தா யாரால தாங்க முடியும்... புலம்பிய படியே தாத்தா இரு கிழவிமார்களுக்கும் இடையில் மாட்டிக்கொண்டு நின்றார்.
“ஏன்யா என்னை பார்த்தா உனக்கு எப்படி இருக்கு... இல்ல எப்படி இருக்குன்னு கேக்குறேன். ஏன் எனக்கு கன்னம் இல்லையா...? இல்ல வாயி இல்லையா...? இல்ல நீ முத்தம் குடுத்தா நான் வாங்கிக்க மாட்டன...? ஏதோ அவளுக்கு தான் எல்லாம் இருக்குற மாதிரி எப்போ பாரு அவளையே கொஞ்சிக்கிட்டு இருக்குறவரு...”
“அப்பவே எங்க ஆத்தா சொல்லுச்சு... அடியே இரண்டாவது கல்யாணம் வேணான்னு.. நான் தான் கேக்காம உம்மட பாத்தா உடனே கட்டுனா இந்த பாண்டியர தான் கட்டுவேன்னு சொல்லி வந்ததுக்கு நல்லா கூலி குடுத்துட்டய்யா...?” என்று ஒப்பாரி வைக்க,
“பிச்சாயி இது தான் சாக்குன்னு என்ற பேர சொல்றடி...” என்றார் பாவமாய்.
“அப்படி தான் சொல்லுவேன். என்ன பண்ணுவீரு... இல்ல என்ன பண்ணுவீரு... உம்மட பேரு மட்டும் இல்லையா... உம்ம வம்சத்தோட பேரையும் சேர்த்து சொல்லுவேன்...” என்று அவிழ்ந்த கூந்தலை கொண்டையாக போட்டுக்கொண்டே காளியாக துள்ளிக்கொண்டு இருந்தவரை கண்டு பயமாக இருக்க, திரும்பி ராக்காயியை பார்த்து
“ஏதாவது செய்யிடி...” என்று ரகசியமாக வாயசைத்து கண்ணை காட்ட...
“யோவ் பெரிய மனுசா இவ்வளவு நேரம் இங்க உம்மட கிட்ட நான் நாயம் கேட்டுக்கிட்டு இருக்கேன்... நீரு என்னமோ புதுசா கல்யாணம் ஆனவன் புது பொண்டாட்டிக்கிட்ட கொஞ்சிக்கிட்டு இருக்குறவன் போல இப்போ தான் அவக்கிட்ட கொஞ்சிக்கிட்டு இருக்குறீக..”
“இல்லடி சும்மா விசாரிச்சுக்கிட்டு இருந்தேன்...”
“ஏன் அந்த விசாரனைய எம்மடக்கிட்ட வச்சுக்கிட்டா உம்மட பகுமானம் கொறைஞ்சி போகுமாக்கும்...”
“அதுயில்ல ராக்காயி...”
“எத ராக்காயியா... யோவ் நான் பிச்சாயியா... ஓ ஓ... இப்போல்ல தெரியுது இவ என்னமோ உனக்கு சொக்கு போட்டு வச்சு இருக்காய்யா... அது தான் நீ இவ பின்னாடியே திரியிற...”
“அது இல்ல புள்ள...”
“யோவ் போயா நான் என் அப்பன் வீட்டுக்கு போறேன்... என் பொறந்தவன் அப்பவே சொன்னான் இந்த மீசைக்காரனை நம்பாத. அவன் முழி திருட்டு முழியா இருக்குதுன்னு...”
“நான் கேட்டன்னா இல்லையே... எனக்கு இந்த மீச காரனை தான் பிடுச்சி இருக்குதுன்னு ஒத்த கால்ல நின்னு கட்டிக்கிட்டேன். இப்ப காலம் போன கடைசில முச்சந்தியில நிக்கிறேன்...” என்று மூக்கை சிந்தி முந்தானையில் துடைக்க,
“அடியேய் ரொம்ப பேசாதடி நீ என்ன யோக்கியம்... கல்யாணம் ஆன புதுசுல இந்தா இவரு பெத்தவக்கிட்ட என்னைய மட்டும் ஒண்டியா கோத்துவிட்டுட்டு நீ இவரு கூட தென்னந்தோப்பு மாந்தோப்புன்னு சுத்துனவ தானேடி...” ராக்காயியும் சண்டைக்கு வர, பெரிய வாய் தகராறே நடந்தது.
எல்லாம் வெள்ளியம்பலத்தார் வருகிற வரை தான். அதன் பிறகு கப் சிப் என்று அவரவர் வேலையை பார்த்துக்கொண்டு சென்றுவிட்டார்கள்.
“என்ன டக்குன்னு சண்டைய நிறுத்திட்டாங்க..” வியப்பாய் நந்தினி மாறனிடம் கேட்டாள்.
“அவங்க எங்க சண்டை போட்டாங்க.. நிறுத்த...”
“அப்புறம் இப்போ அப்படி முடிய பிடிக்காத குறையா பேசிக்கிட்டாங்களே..”
“அது அவங்களுக்குள்ள இருக்க என்ட்டர்டைமென்ட்...”
“ஆஆஆ...” என்று வாயை பிளந்தாள்.
கீழே அவ்வளவு சத்தம் கேட்டும் இந்த இருவரும் கொஞ்சம் கூட தங்களது நிலையிலிருந்து விலகவில்லை.
“விடுங்க மாமா விளக்கு ஏத்தணும்...”
“இன்னைக்கு ஒரு நாள் உன் மாமியார் ஏத்தட்டும். நீ உன்ற மாமனை கவனிடி...” என்று தனக்குள் இழுத்துக்கொண்டான்.
விடிய விடிய அவனது ஆளுமை தொடர்ந்துக்கொண்டே இருந்தது.
“இதென்ன புது பழக்கம் பிள்ளையை கூட கவனிக்காம...” என்று மீனாச்சியம்மை பெரியவர்களின் காது பட புலம்ப,
“மீனாச்சி பேரனை கவனிக்க தான் நாம இருக்கமே... அப்புறம் எதுக்கு இப்படி வையிற... புள்ளைங்க மகிழ்ச்சி தான் நம்ம மகிழ்ச்சி...” என்று பிச்சாயி சொல்ல,
“நீ எங்க கிட்ட உன் மூணு பிள்ளைங்களையும் குடுத்துட்டு வாய்க்கா வரப்புன்னு இருந்தது மறந்து போச்சா...” சுல்லேன்று ராக்காயியும் கேட்க, மீனாச்சியம்மை அதன் பிறகு வாயை திறக்கவே இல்லை.
பிச்சாயி கொற்கையனுக்கு உணவு ஊட்டி விட, உணவு கிண்ணத்தையும் தண்ணீர் நிறைந்த குவளையையும் கைகளில் வைத்துக்கொண்டு அவர்களின் பின்னோடு ராக்காயியும் சுற்றிக்கொண்டு இருந்தார்.
தூங்க வைக்க பேரனை வாங்க மீனாச்சி வந்து கேட்க, தர மறுத்து இரவு அவனை தங்களோடே படுக்க வைத்துக்கொண்டார்கள் இருவரும்.
நின்ற பாண்டியர் ஆளுமையோடு மீசையை முறுக்கிகொண்டார். அதென்னவோ ராக்காயும் சரி பிச்சாயும் சரி எல்லாவற்றிலும் சரியாகவே இருப்பார்கள். அதனாலே நின்ற பாண்டியர் எங்கும் எப்பொழுதும் கர்வமாகவே இருப்பார்.
ஒரு மனைவியின் செயல்கள் தான் கணவனின் மதிப்பு நிலையையும் கம்பீரத்தையும் கொடுக்கும். அதில் இருவரும் எந்த ஒரு நிலையிலும் நின்ற பாண்டியரை தலைகவிழ வைத்ததே இல்லை. அதனாலே அந்த திமிரை வெளிப்படுத்த அடிக்கடி தன் மீசையை முறுக்கிக்கொள்வார்.
இரவு உணவை கூட உண்ணாமல் அவளிடம் முத்தாடிக்கொண்டு இருந்தான் பசும்பூண் பாண்டியன்.
“ப்பா கொஞ்சமாச்சும் இடைவெளி குடுங்க மாமா...” சிணுங்கினாள்.
“அதான் ஒரு வாரம் என் தொல்லை இல்லாம ஓய்வுலயே இருந்தியே... போதும் போதும் ரொம்ப ஓய்வு எடுத்தா உடம்பு துருப்பிடிச்சி போயிடும்... அதனால தொடர்ந்து உழைக்கணும்...” என்று கன்னடித்தவன் அவளை தன்னோடு சேர்த்து எடுத்துக்கொண்டான்.
பாண்டியனுக்கு பொழிலுடன் மட்டும் நேரம் செலவிட வேண்டும் என்று தோன்ற, தன் தாத்தாவிடம் சென்று நின்றான்.
அவனது நிலையை உணர்ந்தவர்,
“நீ எங்க போகணும்னு தோணுதா போடா ராசா. இங்க எல்லாவற்றையும் நான் பார்த்துக்குறேன்...” என்றார்.
அவரின் ஒப்புதலோடும் தன் தகப்பனிடமும் முறையாக அனுமதி வாங்கிக்கொண்டு, தங்களின் தேன்னிலாவை கொண்டாட பூம்பொழிலி மாதுமையாளை அழைத்துக்கொண்டு அவர்களின் மலையில் உள்ள அருவி கரைக்கு சென்றான்.
அங்கு மரவீடு எல்லா வசதியுடன் இருக்க அவ்விடம் சென்றார்கள் இருவரும். அந்த இடத்தை பார்த்து திகைத்து போனாள்.
“என்னங்க இவ்வளவு அழகா இருக்கு இந்த இடம்... ப்பா அதுவும் கொட்டுற அருவி பக்கத்துலையே இப்படி ஒரு வீடா...” என்றவள் வேகமாய் அந்த அருவியில் சென்று நின்றுக்கொண்டாள்.
சூரிய வெளிச்சத்தில் தன்னவள் நீரில் நைந்து நின்ற தோற்றத்தை கண்டு எச்சில் விழுங்கினான் பாண்டியன்.
“பாவி இப்படி டெம்ப்ட் பண்றாளே...” முணகியவன் தானும் பின்னோடு சென்று அவளை பின்னிருந்து இறுக்கி அணைத்துக்கொண்டு தண்ணீருக்கு இதமாக அவளின் உடல் சூட்டை வாங்கிக்கொண்டு அவளிடம் தஞ்சமடைந்தான்.
வாகாக அவனது பிடியில் இருந்தபடியே அவனது அணைப்பை உள்வாங்கியவள்,
“யோவ் மச்சான் ஆனாலும் நீ ரொம்ப ரசனை காரன்யா...” என்று சொல்ல,
“ஏய் இப்போ என்னடி சொன்ன...” அவனது விழிகள் இரண்டும் மோகத்திலும் காதலிலும் பிணைந்து சிவந்து போய் கிடந்தது.
“மச்சான்னு கூப்பிட்டேன்...” என்று முக சிவப்புடன் சொன்னவள் அவனது நெஞ்சிலே முத்தமிட்டு தன் முகத்தை புதைத்துக்கொண்டாள்.
அதில் சிலிர்த்தவன் அவளை தன்னோடு இன்னும் இறுக அனைத்து அருவியின் இடைவெளியிலே தன் காதல் ஜலதரங்கத்தை தொடங்கினான் பசும்பூன் பாண்டியன்.
Nice





