மெல்ல மெல்ல இருவரது வாழ்க்கையும் ஓரளவுக்குப் பழகிப்போனது. அவனிடம் இப்பொழுதும் எந்த பேச்சுக்களும் இல்லை. ஆனால் வீட்டில் இருக்கும் பொழுது அவள் எங்கு இருப்பாளோ அங்கு தான் போனில் ஏதாவது நொண்டிக்கொண்டு இருப்பான்.
முதலில் அதை உணராதவள் போக போக அது புரிய அவனை புரியாமல் நெற்றி சுருக்கினாள். கண்ணில் ஒரு மின்னல் வந்தது. ஆனாலும் இடைவிடாமல் ஒவ்வொரு இரவும் அவளை தேடிக்கொண்டே தான் இருந்தான். அதில் அவளுக்கே ஒரு சலிப்பு வந்தது.
பேச்சுக்களற்ற கூடல் பெண்ணவளின் மனதில் ஒரு வலியைக் கொடுத்தது. இன்னும் அவளுக்கு உடை வாங்க அழைத்துச் செல்லவில்லை. இப்பொழுது வரை அவனின் உடையிலே தான் இருந்தாள். வெளியே எங்கும் செல்லவில்லை. கடைக்குப் போக கூட நேர்ந்தது இல்லை. அதனால் உடையை பற்றி இருவரது சிந்தனையும் இல்லாமல் போனது.
ஒருவேளை இருவருக்கும் இந்த நெருக்கம் தான் வேண்டி இருந்ததோ என்னவோ. மெல்ல மெல்ல அவனை முழுமையாக உணர ஆரம்பித்தாள் நறுமுகை. அவன் நெருக்கம் தரும் நிமிடங்களை விட தான் இருக்கும் இடமெல்லாம் அவனது இருப்பு தான் மனதை நெகிழச் செய்தது.
அதோடு அவனது வேலையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது. தொடர் கொலைகள் மர்மமாகவே இருந்தது. அவனுக்கு அந்த டென்ஷன் வேறு இருந்தது. அதை பற்றி யோசித்துக்கொண்டு இருக்கும் பொழுது தயக்கமாய் அவனின் முன்பு வந்து நின்றாள்.
“வாட்?” கத்தினான்.
“இல்ல இன்னும் எவ்வளவு நாள் இப்படி கடையிலேயே வாங்கி சாப்பிடுறது? அதான் வீட்டுல சமைக்கலாம்னு” இழுத்தாள்.
“இப்போ சோறு தான் ரொம்ப முக்கியமா?” கத்தியவன், “ச்சை வீட்டுல நிம்மதியே இல்லை.” சொல்லி தன் பர்சை திறந்து அதிலிருந்த பணத்தை எடுத்து அவளின் முன்பு வீசியவன் சட்டையை மாற்றிக்கொண்டு வெளியே போய் விட்டான்.
போனவனின் நெஞ்சில் முழுவதும் அந்த கேஸ் மட்டுமே நிரம்பி இருந்தது. எங்கிருந்து ஆரம்பிப்பது என்றே தெரியவில்லை. அவனுக்கு மட்டும் இல்லை. அவனது மொத்த குழுவுக்குமே இது பெரிய சவாலாய் இருந்தது.
ஒரு நுனி கூட கிடைக்கவில்லை. எல்லா பக்கமிருந்தும் விசாரணையைத் தொடங்கியாச்சு. ஆனாலும் எந்த முன்னேற்றமும் இல்லை. அதோடு மேலிடத்தில் இருந்து பிரஷர் வேறு. வீட்டிற்கு வந்தால் அதில் ஈடுபடலாம் என்று எண்ணினால் நறுமுகை முன்னால் வந்து நின்றாள்.
முன்பு இரவெல்லாம் கேஸ் பார்ப்பதிலே துப்பு துலக்குவதிலே கழிந்துப்போகும் அவனுக்கு. ஆனால் இப்பொழுது புதிதாக இவள் தான் அவனது சிந்தை எங்கும் ஆக்கிரமிப்பு செய்திருந்தாள். இரவு ஆனது என்றாலே நறுமுகையின் முகம் முன்னால் வந்து அவனை சோதிக்கும். அவளை தவிர்த்துவிட்டு அவனால் வேலையோடு ஒன்ற முடியாமல் இருந்தது.
அதனாலே அவளை அதிகம் தேடினான். அப்படி தேடினாலாவது அவளின் மீது இருக்கும் மயக்கம் குறையும் என்று எண்ணினான். ஆனால் அவன் தேட தேட அவளது நெருக்கமும் அண்மையும் அவனை மேலும் மேலும் உள் இழுத்தது.
அதுவே அவனுக்கு பெரிய கோவத்தைக் கொடுத்தது. ஏன் தான் இப்படி அவளிடம் மயங்கி போய் இருக்கிறோம் என்று அவனை நினைத்தே அவனுக்கு பெரும் கோவம் வந்தது. அவளிடமிருந்து விலகி இருக்க எண்ணினான். ஆனால் அது முடியாமல் அவனை இன்னும் அழுத்தத்துக்குள் தள்ள, தலையைப் பிடித்துக்கொண்டு அவளிடம் ஒன்றினான்.
அவளிடம் ஒன்றிய பின்பு முன்பு இருந்த அந்த அழுத்தம் அவனிடம் இல்லாமல் போக வேலையில் ஆழ்ந்தான். அப்படி அவன் வேலையில் ஆழ்ந்திருக்கும் பொழுது நறுமுகை வந்து நிற்கவும் அவனுக்கு கோவம் சுல்லேன்று வந்தவிட்டது.
கலங்கி இருந்த அவளின் கண்களை பார்க்க முடியாமல் வெளியே கிளம்பி வந்துவிட்டான். மெல்லிய காற்று வீசி அவனை சமாதனப்படுத்த பார்க்க அவனது தேகம் அதற்கு எல்லாம் கட்டுப்படவே இல்லை. மீண்டும் மீண்டும் தன் உதாசீனத்தில் கலங்கி போய் இருந்தவளின் முகமும் கண்களும் வந்து வந்து போனது.
அவளிடம் மீண்டும் போக கூடாது என்று எண்ணியே வெளியே கிளம்பி வந்தான். வந்த பின்பும் அவளே அவனது சிந்தையில் நிறைந்து இருக்க “ஆஆஆ...” என்று கத்தினான்.
அவனது கத்தலில் அருகில் இருந்தவர்கள் எல்லாம் திரும்பி பார்க்க அதிவேகமாக ஓட ஆரம்பித்தான். கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் ஓடி கலைத்துப் போனான். அப்பொழுதும் நறுமுகையின் முகமே கண்ணில் வர, ‘அதற்கு மேல் முடியாது’ என்று எண்ணி வீட்டுக்கு வந்தான்.
வீட்டில் விளக்குகள் எல்லாம் அனைத்து இருக்க படுக்கை அறைக்கு சென்றான். அங்கு தரையில் படுத்து தூங்கி இருந்தாள். அவளை அள்ளி எடுத்து தன்னருகில் போட்டுக்கொண்டு படுக்க அவள் விழித்து விட்டாள். அவள் விழித்தது தெரிந்தும் அவன் எதுவும் பேசவில்லை.
நறுமுகைக்கு அவன் மீது கோவம் இருந்தது. ஆனாலும் அதை வெளிப்படையாக பேசி அவனை இன்னும் டென்சன் பண்ண வேண்டாம் என்று அமைதி காத்தாள். அவன் தன்னை தொடுவானோ என்று மனம் அலைந்தது.
அவன் இப்பொழுது தன்னை நெருங்கினால் கண்டிப்பாக தன்னால் அவனுக்கு உடன்பட முடியாது என்று எண்ணியே ஒரு வித பயத்தில் இருந்தாள். நேரம் போனதே தவிர அவனிடம் எந்த அசையவும் இல்லை. போட்டது போட்ட படி அமைதியாக படுத்து இருந்தான்.
திருமணமாகி கிட்டத்தட்ட இரு வாரம் கழிந்து இருந்த நிலையில் முதல் முறை கூடலின்றி இந்த இரவு கழிந்தது இருவருக்கும். அவளுக்கே ஆச்சரியம் தான். ‘எப்படி இவரால் இவ்வளவு நெருக்கமாக இருந்தும் தன்னை தொடாமல் இருக்க முடிகிறது?’ என்று சிந்தித்தவள் ஆழ்ந்த நித்திரைக்குச் சென்றாள்.
நன்றாக விடிந்தும் அவன் அவளை விட்டு விலகவே இல்லை. அதுவே அவளுக்கு ஆச்சரியம் தான். ஒரு நாள் கூட காலையில் அவனது முகத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை இதுநாள் வரை. முதல் முறையாக படுக்கையில் அவளை அணைத்த படி படுத்து இருந்தான்.
நேற்று பேசியதற்கு தான் அவனது இந்த நிலை என்று புரிய, இதழ்கடையோரம் ஒரு புன்னகை எழுந்தது.
‘சார் சாரியெல்லாம் சொல்ல மாட்டங்க போல. எல்லாமே செயல்ல தான் உணர்த்துவாங்க போல.’ சிரித்துக் கொண்டவள் எழுந்து குளித்துவிட்டு வந்தாள். அவள் வந்தது தெரிந்தும் கூட படுக்கையை விட்டு அவன் எழவில்லை. கண்களை மூடி அப்படியே படுத்து இருந்தான். ஏனோ அவளது கண்ணீர் அவனை மிகவும் பாதித்து இருந்தது.
அதை உணர்ந்தவளுக்கு அவனை அப்படியே விட்டு செல்ல மனம் வரவில்லை. அடம் பண்ணிவிட்டு அம்மாவின் முகம் பார்த்து நிற்கும் பிள்ளை போலவே அவன் அவளின் கண்களுக்குத் தெரிய அவனருகில் வந்து படுத்துக்கொண்டாள்.
அவள் வருவாள் என்று எதிர் பார்க்காதவன் கண்களை திறந்து பார்த்தான். அவனை நெருங்கி வந்து படுத்துக்கொண்டவள் இருவருக்கும் போர்வையை எடுத்து போத்தி அவனது நெஞ்சில் தலை வைத்து படுத்துக்கொண்டாள். அதுவே அவனுக்கு ஒரு உற்சாகத்தை கொடுக்க காலையிலேயே அவளை ஒரு வழியாக்கி எடுத்தான்.
அவனது விடாத தேடலிலும் முரட்டு தனமான தொடுகையிலும் பக்கென்று ஆனது அவளுக்கு. ஆனாலும் அவனை தன்னுள் தாங்கிக்கொண்டாள். அவனது வன்மை மீதூரும் போதெல்லாம் அவனது பிடரியைப் பிடித்து இழுத்து நிறுத்தி அவனை அடக்க பார்த்தாள். ஆனால் அதற்கெல்லாம் அவன் கட்டுப்படுபவனா என்ன? அவன் அவன் போக்கிலே போக இவள் தான் முகம் சிவந்து போனாள்.
“ம்மா... ப்ளீஸ்...” என்று அவளை அலறவிட்டான்.
இது தான் அவனது சமாதனம் என்று எண்ணிக்கொண்டவள் அவனது தேடல் முடிந்த பின்பு மீண்டும் குளித்துவிட்டு கூறைப்புடவையை அணிந்துக்கொண்டு அவன் வீசி சென்ற பணத்தை எடுத்துக்கொண்டு வெளியே செல்ல அவளை நிறுத்தி அவனும் கிளம்பி வந்தவன் அவளை கடைக்கு அழைத்துச் சென்றான்.
முதலில் துணிக்கடைக்கு சென்று அவளுக்கு தேவையான உடைகளை வாங்கிய பின்பு வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கினார்கள். அவளை மறுபடியும் வீட்டில் கொண்டு வந்து விட்ட பின்பே வேலைக்கு சென்றான்.
அலுவலகத்துக்கு சென்ற பின்பு அவனுக்கு பல முக்கிய வேலைகள் காத்து இருக்க அதில் மூழ்கிப்போனான். நேரம் போனது கூட தெரியாமல் அவன் அமர்ந்து இருக்க தீபன் அவனை தேடி வந்தான்.
தீபனும் காவல்துறை அதிகாரிதான். விக்ரமசேனனின் ஆசை காவலர் ஆவது என்று அறிந்து தானும் அவனுடன் பயணிக்க எண்ணி அவனை போலவே தானும் படித்து தேர்வு எழுதி காவலர் ஆகிவிட்டான்.
அவனது இடக்கை வலக்கை எல்லாமே இவன் தான். தொடர் கொலை வழக்கில் தீபனை தனக்கு கீழ் பணிக்கு அமர்த்திக்கொண்டான். க்ரைம் ப்ரெஞ் ஆட்கள் வேறு விக்ரமனை போட்டு பாடாய் படுத்திக்கொண்டு இருந்தார்கள். அவர்களுக்கு ஒரு இளக்காரம் இவனை கண்டு.
‘அதெப்படி ஸ்பெசல் க்ரைம் ப்ரெஞ் ஆட்களான எங்களால முடியாததை இந்த ஏசிபியால கண்டு பிடித்து விட முடியுமா? அதுக்கு நாங்க விடணுமே...’ என்று வன்மம் வைத்து அவனை போட்டு பாடாய் படுத்திக்கொண்டு இருந்தார்கள்.
தேவையில்லாமல் அந்த ‘ஐடி நிறுவனத்துக்கு போய் தகவல்களை விசாரித்துவிட்டு வாங்கன்னு’ அலைய வைத்தார்கள். அதோடு இறந்து போனவர்களின் வீட்டுக்கு போய் இன்னும் தகவல்களை வாங்கிட்டு வாங்கன்னு சொல்லி அனுப்பி வைப்பார்கள்.
இவனும் போவான். போய் சிறிது நேரம் கூட ஆகி இருக்காது. “போதும் நீங்க விசாரித்தது. உங்களை எல்லாம் எப்படி தான் ஏசிபியா போட்டாங்களோ.” நக்கல் பண்ணிவிட்டு அவனை எந்த வேலையையும் உருப்படியாக செய்ய விடாமல் போட்டு பாடாய் படுத்தி எடுத்தார்கள்.
அதையெல்லாம் பல்லைக்கடித்துக் கொண்டு பொறுமையாக இருந்தான் விக்ரமசேனன். கூட இருந்த தீபனுக்கு பத்திக்கொண்டு வந்தது. “மச்சான் அவனுங்க வேணும்னே உன்னை அலைய விடுறானுங்க டா.” கொதித்துப்போனான்.
விக்ரமன் அவனை ஒரு பார்வை பார்த்தான் அதில் எனக்கு தெரியாதா என்பது போன்ற அர்த்தம் பொதிந்து இருந்தது.
“எப்படி மச்சான் எல்லாம் தெரிந்தும் இப்படி இவ்வளவு அமைதியா இருக்க? எனக்கே அவ்வளவு கோவம் வருது.” என்றான் சினத்துடன்.
அவனது தோளை தட்டிக்கொடுத்து, “நானே டென்சன் ஆகி இந்த வழக்கில் இருந்து வெளியே போகணும்னு தான் அவனுங்க இப்படி எல்லாம் பண்ணிக்கிட்டு இருக்காணுங்க. க்ரைம் ப்ரெஞ்க்கு கொஞ்சமும் குறைஞ்சது இல்லை இந்த ஏசிபி வேலை. அதுக்கு இது வாய்ப்பா போகிடக் கூடாதுன்னு தான் பல்லைக்கடிச்சுக் கிட்டு அமைதியா இருக்கேன். இல்லன்னா இவனுங்களுக்கு இருக்கு” என்றவன்,
“இதை பெரிய விசயமா ஆக்கி அவனுங்கக்கிட்ட வம்புக்கு போகாதடா. அமைதியா இரு. இந்த வழக்குல நம்ம பங்கு அதிகமா இருக்கணும்” என்று சொன்னவன் தொப்பியை கம்பீரமாக தலையில் போட்டுக்கொண்டு வீட்டுக்குக் கிளம்பினான்.
வீட்டுக்கு வந்தவன் ஒரு கணம் பிரம்மித்து தான் போனான். வீடு ரொம்பவே அழகாய் மாறி இருந்தது. அளவான பொருட்கள் தான். ஆனால் அதது இருக்க வேண்டிய இடத்தில் அழகாய் இருந்தது. சமையல் அறையிலிருந்து மணக்க மணக்க வாசம் வந்தது.
எட்டி பார்த்தான். அவனது உடையில் தான் இருந்தாள். அடுப்பில் எதையோ போட்டு கிண்டிக்கொண்டு இருந்தாள். அரவம் செய்யாமல் சென்றவன் என்ன செய்கிறாள் என்று எட்டிப்பார்க்க அல்வா கிண்டிக்கொண்டு இருந்தாள்.
அதன் வாசம் இன்னும் நன்கு நாசியில் ஏறியது. அதோடு அவளது நெருக்கமும் அவனை மயக்க அவனையும் அறியாமல் அவளை படுக்கையில் தவிர்த்து மற்றைய நேரம் முதல் முறையாக அவளின் இடையைத் தொட்டான்.