இருபத்தி நான்கு மணி நேரத்துக்கு பிறகு ஒவ்வொருவராய் பார்க்க அனுமதித்தார்கள். இன்னும் அவனுக்கு மயக்கம் தெரியவில்லை. மயக்கத்தியோ இருக்கும் பொழுதே அவனை அனைவரும் சென்று பார்த்து விட்டு கனிகாவையும் விசாகனையும் மட்டும் அங்கே அவனுக்கு கூட இருத்தி விட்டு மற்ற அணைவர்களும் வீடு வந்து சேர்ந்தார்கள்.
வீட்டுக்கு வந்தால் ஆதினிக்கு கண்களை திறக்க முடியாத அளவுக்கு காய்ச்சல இருக்க அருகில் இருக்கும் மருத்துவருக்கு போன் செய்து வீட்டுக்கு வர செய்து அவளுக்கு என்னெவென்று பார்க்க அந்த நாள் முழுவதும் அதிலே கழிந்துப் போனது.
மெல்ல மெல்ல காய்ச்சலின் வீரியம் குறைய விழிகளை திறந்துப் பார்த்தாள். வீட்டில் யாருமில்லை. வைகுந்தன் மட்டும் இருந்தார்.
“அப்பா” என்று அவரை அழைக்க,
“சரியா போச்சு ப்போ.. இப்படியா ஒரு பொண்ணு இருப்ப. உன்னால பாரு எத்தனை பேருக்கு துன்பம்னு. அபப்டி என்ன வண்டி ஓட்டும் பொழுது சிந்தனை. ரோட்டுல எண்ணத்தை வச்சு ஓட்டனும். அதை விட்டுட்டு புத்தியை புள் மேய விட்டா இப்படி தான். உனக்கு ஏதாவதுன்னா கூட பரவாயில்ல. ஆனா மாப்பிள்ளைக்கு இப்படி ஆகிபோச்சே” என்று அவர் பாட்டுக்கு குதிக்க ஆயாசமாக வந்தது அவளுக்கு. \மீண்டும் கண்களை மூடிக் கொண்டாள்.
நாக்கு எல்லாம் வறண்டு போய் இருக்க ஒரு வாய் தண்ணீர் கேட்க கூப்பிடவளுக்கு இவ்வளவு பேச்சு இலவசமாக கிடைத்தது. அவளே எழுந்து குடிக்க தான் பார்த்தாள்.
ஆனால் உடம்பெல்லாம் ஏதோ ஐந்து ஆறுபேர் சேர்ந்து அடித்து போட்டது போல அவ்வளவு வலி எடுக்க அவளால் எழுந்துக் கொள்ளவே முடியவில்லை. உடம்பும் மனதும் பெரிதும் காயப்பட்டுப் போனது.
அந்த நேரம் விதுல் உள்ளே வந்து, “அக்கா” என்க, கையை அசைத்து தண்ணீர் என்று செய்கை செய்தாள். “ஏன்ப்பா ரெண்டு நாள் கழிச்சு இப்ப தான் கண்ணே முழிக்கிற அக்காக்கிட்ட இப்படி தான் பேசுவீங்களா? பாவம் ப்பா அக்கா” என்று அவளுக்கு பரிந்து வந்தவன் ஆதிநியை சற்றே எழுந்து உட்கார வைத்தவன் அவளுக்கு ஒரு மிடறு தண்ணியை கொடுத்தான். அதை குதித்தவளுக்கு இன்னும் ஆயாசமாக இருக்க அப்படியே கண்களை மூடிக் கொண்டாள். தூக்கமா, மயக்கமா, அசதியா என்று எதுவும் புரியவில்லை. கண்களை சுழட்டிக் கொண்டு வர முயன்று கட்டுப் படுத்திக் கொண்டவள்,
“அவரு கண்ணு முழிச்சுட்டாராடா? மருத்துவர்கள் எல்லோரும் என்ன சொன்னாங்க.. வீட்டுக்கு எப்போ கூட்டிட்டு போக சொன்னாங்க” என்று கேட்டவளுக்கு,
“மாமா இன்னும் கண்ணு முழிக்கலக்கா, கண்ணு முழிச்சா தான் எதா இருந்தாலும் சொல்லுவாங்களாம், எப்படியும் இன்னும் ஒரு வாரம் மாமா அங்க தான் இருக்குற மாதிரி இருக்கும்னு சொன்னாங்க” என்றவனை பதற்றத்துடன் பார்த்தவள்,
“ஏன்டா இன்னும் கண்ணு விழிக்கல?, வேற எதுவும் பிரச்சனையா? தலையில எதுவும் அடிபடலடா, முகம் தான் ஒரு பக்கம்” என்று சொல்லும் போதே அவளுக்கு தொண்டையை அடைத்துக் கொண்டு வந்தது.
“இல்லல்ல க்கா, அவருக்கு ரெஸ்ட்டே இல்லல்ல அதனால கூட இப்படி ஆகும்னு சொன்னாங்க. நல்ல ஒய்வு கிடைத்தாலே போதும்னு சொல்லி சொன்னாங்க. கான்சியஸ் எல்லாம் இருக்கு. பட கண்ணை மட்டும் திறக்க மாட்டேங்குறாரு” என்று அவன் சொல்ல ஆதினிக்கு மூச்சை அடைத்துக் கொண்டு வந்தது. அதோடு அவளுக்கு மயக்கமும் சேர்ந்து வர அப்படியே அவனிடம் பேசிக் கொண்டு இருக்கயிலே மயக்கமாகி விட்டாள்.
ஆதினி மற்றும் பெருவளத்தானின் நிலையை கண்டு விசாகனும் விதுலனும் தான் அதிகம் கவலை கொண்டார்கள். சஞ்சுவும் குமுதாவும் ஆதிநியை பார்த்துக் கொண்டார்கள்.
விசாகனும் கனிகாவும் மருத்துவமனையில் பெருவளத்தானை பார்த்துக் கொள்ள, அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்துக் கொண்டு வைகுந்தனும் விதுலனும் வீட்டுக்கும் மருத்துவமனைக்கும் அலைந்துக் கொண்டு இருந்தார்கள். அதோடு விசாகன் வாணியை பார்த்துக் கொள்ள ஒரு மெய்ட் ஒருவரை ஒரு வாரத்துக்கு ஏற்பாடு செய்து இருக்க வாணியை பற்றிய கவலையின்றி தன் மகனின் ருகில் இருந்தார்.
அடுத்த நாள் காலையில் இந்த பக்கம் பெருவளத்தான் கண் விழிக்க, அங்கே ஆதினி கண்களை விழித்தாள். இருவரும் சொல்லி வைத்தது போல கண் விழிக்க அதை மற்றவர்களுக்கு தெரிவிக்க குடும்பமே ஒரு கணம் ஆடி தான் போனது. ஆனாலும் எதையும் வெளிகாட்டிக் கொள்ளாமல் அவரவர் இருந்துக் கொண்டார்கள்.
பெருவளத்தான் கண்ணை விழிக்கவும் அவனை பார்க்க குடும்பமே உள்ளே நுழைந்தது. வந்திருந்த அத்தனை பேரிலும் ஆதினியை அவனது கண்கள் தேட அவள் அங்கு இல்லை.
வாயை அசைக்கவே முடியாத அளவுக்கு கன்னத்து சதை கிழிந்து தையல் போட்டு இருக்க ஆதினியை பற்றி அவனால் கேட்க முடியவில்லை.
ஆனால் அவனது எண்ணம் எங்கு இருக்கும் என்று அறிந்த விசாகன் யாரும் இல்லாத நேரம் பார்த்து அவனிடம் ஆதினியை பற்றி சொன்னார். அதோடு இந்த இடைப்பட்ட நாளில் ஆதினியை பேசிய பேச்சை எல்லாம் அவனிடம் சொல்ல அவனுக்கு மனம் வெறுமையில் சூழ்ந்தது. கனத்தும் போனது.
இந்த குடும்பம் சும்மாவே அவளை ஏதாவது சொல்லிட்டு இருக்கும். கனிகாவின் வாயை பற்றி சொல்லவே வேண்டாம் என்று எண்ணியவனுக்கு ஆதினியின் நிலையை எண்ணி வதங்கிப் போனான்.
“ப்பா அவளை பார்க்கணும்” என்றான் கையசைத்து.
“இப்ப எப்படிப்பா ஆதினியை வரச்சொல்ல முடியும்... அவ இருக்குற நிலையில ரொம்ப கட்டல்(கஷ்ட்டம்)” என்றார்.
பெருவளத்தானுக்கு புரியுது தான். ஆனால் ஏனோ அவளை பார்க்கவேண்டும் என்று அவனது மனம் அடித்துக் கொண்டே இருக்கிறது. கண் முன்னாடி அவள் லாரியில் மோத இருந்த காட்சி வர நெஞ்சம் நடுநடுங்கிப் போனது.
ஏன் என் உயிரை விட அவ உயிர் எனக்கு மிகப் பெரியதா பட்டது அந்த நொடியில் என்று அவனுள் கேள்வி எழ விதிர்விதிர்த்துப் போனான்.
அவளே அடி படட்டும் என்று விட்டு இருந்து இருக்க வேண்டியது தானே.. எதுக்காக என் உயிரை பணையம் வைத்து அவளின் உயிரை காக்கணும்... ஆதினிக்கு பதில் அங்கு வேறு யாராவது இருந்து இருந்தால் இந்த அளவுக்கு தன் உயிரை பணையம் வைத்து இருப்பேனா இல்லையா சந்தேகம் தான். அவ மட்டும் எனக்கு அப்படி என்ன ஸ்பெஷல் என்று யோசித்தவனுக்கு அவளின் இதழ்களில் முத்தமிட்டது நேரம் காலமின்றி நினைவுக்கு வர,
சட்டென்று அவனது உடலில் ஒரு மாற்றம். ஏதோ ரொம்ப விரும்பி சாப்பிட்ட அமிர்தமாய் அவனுக்கு அந்த முத்தம் தோன்ற வறண்டு போய் இருந்த முரட்டு இதழ்களில் ஒரு மென்னகை மிளிர்ந்தது.
அதோடு தான் அடிபட்டு லாரியில் சிக்கிய சமயம் அவளது வாயில் இருந்து இது வரை வராத மாமா என்ற சொல், அவன் நிறைய முறை கேட்டு இருந்த பொழுதும் கூப்பிட மாட்டேன் என்று அவள் முரண்டு பிடித்த சொல், இன்றைக்கு அவன் கேட்க்காமலே அவள் உரக்க ஆயிரம் பேர் கேக்குமாறு கத்தி இருந்தது அவனை அந்த நிலையிலும் மகிழ்ச்சியுற வைத்தது...
ஏன் இந்த மகிழ்ச்சி என்று அவன் கொஞ்சமே கொஞ்சமாக ஆராய ஆரம்பித்தான்... அதோடு அவளை வெகு இயல்பாக முத்தமிட்ட நிமிடங்கள், அவளை தன் மீது தாங்கிய நிமிடங்கள், அவளுக்காக தன் உயிரையும் கொடுக்க நினைத்த நிமிடங்கள் என எல்லாமும் வரிசை கட்டி ஒன்றன் பின் ஒன்றாக வர கண்களை கட்டிக்கொண்டு வந்தது பெருவளத்தானுக்கு.
“என்ன காரியம் செய்து வைத்திருக்கிறேன். கடவுளே அதனால் தானே குட்டி தன் உயிரை விட பார்த்தாள். யாருமே செய்ய கூடாத காரியத்தை அல்லவா நான் செய்து வைத்திருக்கிறேன். தந்தை போல அல்லவா நான் அவளை பார்த்து இருக்கணும். ஒரு காமுகனை போல நடந்துக்கொண்டேனே. சிறு பெண்ணிடம் போய் எப்படி நான் இப்படி....” என்று தனக்குள் மறுகியவன், “எனக்கு மன்னிப்பே கிடையாது. நான் வளர்த்த பிள்ளையிடமே நானே தவறாக நடந்துக் கொண்டேனே” என்று மனதளவில் நொந்துப் போனான்.
கண் விழித்த நாளில் இருந்து அடுத்த ஒரு வாரம் வரை ஆதினியை அவனது கண்கள் எதிர்பார்த்தது. ஆனால் அவளது வருகை இல்லாமலே போக அவனது மனம் இன்னும் கனத்துப் போனது.
தான் செய்த வேலையால் தான் அவள் தன்னை ஒத்துக்கி வைத்து இருக்கிறாள் என்று நன்கு புரிந்துக் கொண்டான். ஆனால் உண்மை காரணம் அவளுக்கும் உடம்பு சரியில்லை என்று தெரியாமல் போனது.
குடும்பமே இப்படி தான் அர மெண்டலா இருக்கும் போல🤦♀️🤦♀️🤦♀️🤦♀️🤦♀️
டேய் உன் எண்ணம் போகும் திசை யாருக்குமே நல்லது இல்ல டா .....
அச்சோ ஆதி🥺🥺🥺🥺🥺🥺
Unleash your desires alongside a seductive partner - nMm5id.short.gy/?piess
குடும்பமே இப்படி தான் அர மெண்டலா இருக்கும் போல🤦♀️🤦♀️🤦♀️🤦♀️🤦♀️
டேய் உன் எண்ணம் போகும் திசை யாருக்குமே நல்லது இல்ல டா .....
அச்சோ ஆதி🥺🥺🥺🥺🥺🥺
அதே அதே..
ஆதி தான் பாவம் இதுல.. அவனோட உணர்வுகள்.................





