தான் செய்த வேலையால் தான் அவள் தன்னை ஒத்துக்கி வைத்து இருக்கிறாள் என்று நன்கு புரிந்துக் கொண்டான். ஆனால் உண்மை காரணம் அவளுக்கும் உடம்பு சரியில்லை என்று தெரியாமல் போனது.
நாட்கள் செல்ல செல்ல அவனது உடல் நன்றாக தேறியது. ஆனால் மனம் மிகவும் நோய்வாய் பட்டது. விசாகன் பெருவளத்தனை வீட்டுக்கு கூட்டிக்கொண்டு போக,
“அங்க வேணாம் சம்மந்தி, இங்க நம்ம வீட்டுலையே வச்சி பார்த்துக்குறோம். இங்கன்னா எடுபிடிக்கு நிறைய பேர் இருக்காங்க” என்ற வைகுந்தன் பெருவளத்தான் மறுக்க மறுக்க தங்களின் வீட்டுக்கு கூட்டிக்கொண்டு போய் விட்டார்.
மூன்று அறையில் ஒரு அறையை அவனுக்கு என்று ஒதுக்கி விட்டார்கள். அங்கு வந்தால் ஆதினியை எதிர்நோக்க வேண்டி வருமே என்று அவன் மறுக்க வைகுந்தனும் கனிகாவும் அவனை வலுக்கட்டாயமாக கூட்டிக்கொண்டு போய் விட்டார்கள். உள்ளுக்குள் பெரும் அளவு உறுத்தலோடு அவன் ஆதினியின் வீட்டுக்குள் நுழைந்தான் ஊன்றுகோல் உதவியுடன்.
தனித்து நடக்க முடியாது காலில் உள்ள காயமும், எலும்பில் மைனர் பிராக்ஷனும் இருந்தது. அடி எடுத்து வைக்கவே மிகவும் சிரமாக இருந்தது. மருத்துவர் ஒரு மாதத்துக்கு முழு ஓய்வு எடுக்க சொல்லி அறிவுறுத்தி இருந்தார்.
வீட்டுக்கு வந்த மாப்பிள்ளைக்கு ஆரத்தி சுத்தி வீட்டுக்குள் அழைத்துக் கொண்டு வந்தார்கள். வீட்டுக்குள் நுழைந்தவுடன் பெருவளத்தானின் கண்கள் யாரை தேடியதோ இல்லையோ ஆதினியை தான் தேடியது. கூடத்தில் சுவரோரம் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் தலை களைந்து முன்பை விட ஒரு சுத்து இன்னும் இளைத்துப் போய் ஒரு கசங்கிய வீட்டு உடையில் நின்றிருந்தவளை தாண்டி அவனது கண்கள் எங்கும் செல்ல மறுத்தது.
குமுதா, “அறைக்குள்ள போய் படுக்க வைங்க தம்பியை” என்று தன் கணவனிடம் சொல்ல,
“இல்ல வேண்டாம்” என்று சைகையால் சொல்லி கூடத்திலே அமர்ந்துக் கொண்டான் பெருவளத்தான். வாய் அசைத்தால் அதிக வலி ஏற்பட பேசாமல் அடிபடாத ஒரு கையை மட்டும் அசைத்து தன் கருத்துக்களை சொல்லிக்கொண்டு இருந்தான்.
“வாங்க மாமா உடம்பு எப்படி இருக்கு?” சஞ்சு கேட்டாள். அதற்கு தலையை மட்டும் அசைத்தவன் கண்கள் ஆதினியிடமே நிலைத்து நின்றது. அவள் அவனை நிமிர்ந்தே பார்க்கவில்லை. ஆனால் அவ்விடம் விட்டு அவள் போகவும் இல்லை. அதை பார்த்தவன் அப்படியே சோபாவில் முதுகை சாய்த்து சரிந்துக் கொண்டான்.
“ஏங்க போய் நாட்டு கோழி பிடிச்சுட்டு வாங்க. தம்பிக்கு ரசம் வைத்துக் குடுத்தா கொஞ்சம் உடம்பு தேறும்” என்று பெருவளத்தனின் கார்டை தூக்கிக் கொடுக்க கொஞ்சமும் கூச்சமில்லாமல் எடுத்துக் கொண்டு போனார் வைகுந்தன். அதை ஒரு பார்வை பார்த்தவள் பெருவளத்தனை ஒரு முறை முறைத்தவள்,
“நீ எல்லாம் திருந்தவே மாட்ட” என்ற பார்வையை அவனிடம் வீசி விட்டு உள்ளே போய் விட்டாள். அவள் போன பிறகு வெறுமையை உணர்ந்தவனாய் கனிகவிடம்,
“உள்ளே போறேன்” என்று சொல்ல,
“விதுல் மாமாவுக்கு உதவி பண்ணு. எனக்கு டையர்டா இருக்கு நான் பொய் படுக்கிறேன்” என்று சொன்ன மனைவியை ஒரு பார்வை பார்த்தவன் தானே எழுந்து உள்ளே போக முயற்சித்தான். அதற்குள் விதுல் வந்து ஒரு கை பிடித்துக் கொண்டான்.
அடுத்த நாள் காலையில் கனிகா,
“ம்மா ஹாஸ்பிட்டல் போயிட்டு வரேன். சஞ்சுவையும் துணைக்கு கூட்டிட்டு போறேன்” என்று சொல்லிவிட்டு அவள் பாட்டுக்கு போக,
“அடியேய் தம்பி இங்க படுக்கையில இருக்கும் போது நீ பாட்டுக்கு போறேன்ற. ஒரு மாதம் கழிச்சு போனா ஆகாதா?” குமுதா கேட்க,
“இல்லம்மா இன்னைக்கு தான் அந்த டேஸ்ட்டுக்கு நாள் குடுத்து இருக்காங்க. எப்படியும் இன்னும் இரண்டு நாள் ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆகி இருக்குற மாதிரி இருக்கும். அவர் கிட்ட சொல்லிட்டேன்” என்று விட்டு முதல் தங்கையை கூட்டிட்டு கிளம்பி விட்டாள்.
அவள் போவதை பெருமூச்சுடன் பார்த்துக் கொண்டு கூடத்தில் அமர்ந்து இருந்தான் பெருவளத்தான். போகும் பொழுது அவனிடமும் சொல்லிவிட்டு போனாள்.
அவன் வெறுமென தலையை மட்டும் அசைத்தான்.
“என்ன மாப்பிள்ளை இது அவ தான் இப்படி ஆடுறான்னா நீங்களும் அதுக்கு தாளம் போடுற மாதிரி நடந்துக்குறீங்க? இதெல்லாம் அசிங்கமா இல்லையா...? யாரோடையோ உயிர் விந்துவை எடுத்து இவ கர்பப்பைல வச்சி டெஸ்ட் எடுத்து, குழந்தை உருவாகுதா இல்லையான்றது எல்லாம் நான் கேள்விபடததா விசயமா இருக்கு தம்பி” என்று அவர் புலம்ப,
“நான் சொல்லி பார்த்துட்டேன் அத்தை. நமக்கு இன்னும் வயசு இருக்குன்னு. ஆனா அவ தான் கேட்க மாட்டிக்கிறா. இந்த டெஸ்ட் எடுத்து தான் ஆகணும்னு நிக்கிறா நான் என்ன பண்ணட்டும்” என்றவனுக்கு மனமே ஆறவில்லை.
திருமணம் ஆகி ஆறு மாதம் ஆன உடனே உறவுகள் எல்லாம் குழந்தையை பற்றி கேட்க ஆரம்பிக்க கனிகாவுக்கு அது பெரும் தலை இரக்கமாய் போனது.
அப்போதிருந்து ஒவ்வொரு மருத்துவமனைக்கும் ஏறி இறங்கிக் கொண்டு தான் இருக்கிறார்கள். எடுக்காத பரிசோதனை இல்லை. எல்லாமும் எடுத்து பார்த்து விட்டார்கள். இருவருக்கும் ஒரு குறையில்லை. ஆனால் குழந்தை மட்டும் தரிக்கவே இல்லை. இரண்டு வருடங்களாக இதே அலைச்சல் தான். கூடவே மன வேதனையும் சேர்ந்துக் கொண்டது.
இந்த வேதனைக்கு தீர்வு காணுவது போல அந்த மருத்துவர் ஒரு ஆலோசனை சொன்னார். அதாவது பெருவளத்தானின் ஸ்பெர்மை எடுத்து வேறு ஒருவரின் கரு முட்டையோடு சேர்ப்பது போலவும், அதே போல கனிகாவின் கற்பபையில் வேறு ஒருவரின் ஸ்பெர்மை சேர்ப்பது போலவும் ஏற்பாடு செய்ய அதற்கு பெருவளத்தான் ஒத்துக் கொள்ளவே இல்லை. ஆனால் கனிகா இதற்கு ஒத்துக் கொண்டாள்.
“இதனால பல பிரச்சனை வர வாய்ப்பு இருக்கு கனிகா. ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்குற? நமக்கு இன்னும் வயசு இருக்கு. எனக்கு என்னவோ இது தேவையில்லாத வேலை மாதிரி தோணுது. இதனால வரப்போற பிரச்சனையை நம்மால எதிக்கொள்ள முடியும்னு தோணல. சோ இதை இப்பவே ட்ராப் பண்ணிடு கனிகா. நமக்கு குழந்தையே இல்லன்னாலும் உனக்கு நானும் எனக்கு நீயும் குழந்தையா கடைசிவரை இருந்துட்டு போகலாம்” என்று பெருவளத்தான் எவ்வளவோ சொல்லி பார்த்தும் கனிகா கேட்கவே இல்லை.
“ஏன் இந்த டெஸ்ட் செஞ்சா நீங்க ஆண்மை இல்லாதவர்னு தெரிஞ்சுடும்னு பயப்படுறீங்களா?” என்று கொடுக்கக கொட்டியவளை ஆழ்ந்து ஒரு பார்வை பார்த்தான்.
“இது தான் உன் முடிவா கனிகா?”
“ஆமான்னா என்ன பண்ண போறீங்க? உங்களால முடியல. சோ அதுக்கு உண்டான வேற ஒரு பிராசசை நான் பண்ண போறேன் அதுக்கு ஏன் இந்த அளவுக்கு அக்கப்போரு பண்றீங்க. இந்த முறை சக்சஸ் ஆச்சுன்னா கண்டிப்பா உங்களை குறை சொல்லாம கடைசி காலம் வரை உங்களுக்கு வாழ்க்கை குடுக்குறேன் சரியா...?” என்று பேசியவளின் பேச்சில் மிகவும் அடிபட்டுப் போனான்.
“கனிகா...”
“போதுங்க வெளியில ஒரு நல்லது கேட்டதுக்கு என்னால தலை காட்ட முடியல. உங்களுக்கு என்ன ஆம்பளை தலை நிமிர்த்தி போயிடுவீங்க. ஆனா பொண்ணுங்க நாங்க உங்களுக்கு ஒரு குறை இருந்தாலும் நாங்க தான் உங்களுக்கும் சேர்த்து அவமானப்பட்டு நிக்கிறோம். என்னால அந்த அவமானத்தை சகிச்சுக்க முடியாது. போதும் இதோட எல்லாத்தையும் நிறுத்திக்குவோம். இதனால என்ன பிரச்சனை வந்தாலும் நான் பார்த்துக்குறேன்” என்று பெருவளத்தானின் மனதை எவ்வளவு கூறு போட முடியுமோ அந்த அளவுக்கு கூறு போட்டு கொன்னு போட்டுவிட்டு,
“எனக்கு எப்படியாவது நான் மலடி இல்லன்னு எல்லோருக்கும் நிரூபிக்கணும். அவ்வளவு தான். அதனால நான் இதுக்கு ஒத்துக்குறேன். ஹாஸ்பிட்டல்ல பணத்தை கட்டிடுங்க...” என்று அதற்கு உண்டான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய தொடங்கி விட்டாள்.
பெருவளத்தானும் எவ்வளவோ சொல்லி பார்த்து விட்டான். ஆனால் கனிகா விடவே இல்லை. வேறு வழியில்லாமல் சிகிச்சைக்கு உண்டான அனைத்து பணத்தையும் கட்டி விட்டான் மருத்துவமனையில்.
சரியான வெட்கம் கேட்ட குடும்பம்😬😬😬😬
அவன் பணத்தையே எடுத்து செலவு பண்ணுதுங்க🤬🤬🤬🤬🤬🤬
இது வேறயா🤦♀️🤦♀️🤦♀️🤦♀️
சரியான வெட்கம் கேட்ட குடும்பம்😬😬😬😬
அவன் பணத்தையே எடுத்து செலவு பண்ணுதுங்க🤬🤬🤬🤬🤬🤬
இது வேறயா🤦♀️🤦♀️🤦♀️🤦♀️
அதுக்கு தான் ஆதிரா திட்டுறா இவங்களை.. அவளுக்கு இது கொஞ்சமும் பிடிக்கல





