Notifications
Clear all

அத்தியாயம் 14

 

Admin
(@ramya-devi)
Member Admin
Joined: 12 months ago
Posts: 960
Topic starter  

கனிகாவின் உதிரப் போக்கை கணக்கில் வைத்து சிகிச்சை ஆரம்பம் ஆனது. சரியாக இவளுக்கு ஸ்பெர்ம் வைக்கும் ஒரு வாரத்துக்கு முன்பாக பெருவளத்தானுக்கு விபத்து ஏற்பட்டு விட்டது. அவன் மருத்துவமனையில் இருந்த வரை அவளது செக்கப்புக்கு போயிட்டு வந்து மீதமிருக்கும் நேரத்தில் சிறிது நேரம் அவனோடு இருந்து விட்டு தன் மாமனாரிடம் சொல்லி விட்டு வீட்டுக்கு கிளம்பி விடுவாள். அவளின் விலகளை மெல்ல மெல்ல உணர்ந்துக் கொண்ட பெருவளத்தானுக்கு விரக்தி புன்னகை தான் வந்தது.

ஏற்கனவே இரண்டு வருடங்களாக மருத்துவமனைக்கு ஏகப்பட்ட செலவு, இதில் இந்த மெத்தேட்கு இன்னும் அதிக செலவு பிடித்தது.

அதன் படி முதல் மாத மாதவிடாய் சுழற்சியில் இருந்து கனிகாவிற்கு சிகிச்சை ஆரம்பம் ஆனது. அவளின் கருமுட்டையின் வளர்ச்சியை கவனித்து அதற்கு இன்ஜெக்ஷன் போட்டு சரியாக வெடிக்கும் நிலையில், அந்த லேடி மருத்துவர் சில பல கண்டிஷன்களோடு கனிகாவிற்கு வைத்து இன்ஜெச்ட் பண்ணி விட்டார்.

அதன் படி கரு உரு கொண்டு விட்டால் இரண்டு மாதத்திலே அதை வெளியே எடுத்து விடவேண்டும் எனவும், அந்த கருவின் மீது உரிமை கோரக் கூடாது என்றும், இது வெறும் டெஸ்டிங் மட்டுமே என்பதையும் அந்த மருத்துவர் தெளிவகா சொல்லி விட அனைத்துக்கும் தலையை ஆட்டினாள் கனிகா.

வெறும் டெஸ்ட்டிங் என்றாலும் இந்த வேலையில் கூடுதல் கவனிப்போடு ஈடுபட்டார் அந்த மருத்துவர். கனிகாவும் கரு சேர்ந்த பிறகு வெளியே எடுத்து விட வேண்டும் என்ற கண்டிஷனோடு தான் இந்த ப்ராசஸ்க்கு ஒத்துக் கொண்டாள். அவளை பொறுத்தவரை தான் எலிஜிபில் என்று நிரூபிக்க வேண்டும் அவ்வளவு தான்.

இரண்டு நாட்கள் கனிகா மருத்துவமனை வசம். அவளுக்கு துணையாக சஞ்சு உடன் இருந்தாள். கணவன் அடிபட்டு இருக்கும் சமயத்தில் அவன் கூட இல்லாமல் அவள் பாட்டுக்கு வேண்டாத வேலை செய்ய போய் விட்டாள்.

அதன் வெளிப்பாடு இதோ கணவன் வீட்டுக்கு வந்த பிறகு இவள் வெளியே கிளம்பி போய் விட்டாள். யார் கணவனை பார்த்துக் கொள்வார்கள் என்ற கவலை இல்லாமல் போனவளை அதட்டி வீட்டில் உட்கார வைக்க பெற்றவர்கள் முனையவில்லை.

இதெல்லாம் எங்குப் போய் முடியுமோ அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்...

படுக்கயில் இருந்த பெருவளத்தானுக்கு உலகமே தன்னை வெறுத்துப் போனது போல ஒரு உணர்வில் இருந்தான். கனிகா அவள் எப்பொழுதும் அவனது சொல் பேச்சை கேட்க மாட்டாள். ஆனால் இந்த ஆதினிக்கு என்ன ஆச்சு? இன்னும் அந்த முத்தத்தை இவள் விடவே இல்லையா..? என்று மனம் குமைந்துப் போனான். அவளிடம் பேச வேண்டும் என்று மனம் உந்த வேகமாய் வெளியே வந்து விட்டான். ஆனால் வீட்டில் யாரும் இருப்பது போல தெரியவில்லை.

‘ஒருத்தரும் வீட்டில் இல்லையா..?’ என்று சிரமப்பட்டு ஒவ்வொரு அறையாய் இவன் நுழைந்துப் பார்க்க ஒருவரும் இல்லை.

இன்னும் ஒரு அறை மட்டும் மீதமிருக்க அதற்குள் கால் வலி எடுத்தது. ஆனால் ஆதினியை பார்க்க வேண்டும் என்கிற உந்துதலில் அந்த அறையின் கதவை திறந்துக் கொண்டு உள்ளே நுழைந்தான்.

அங்கும் யாருமில்லாமல் போக,

“ப்ச் இங்கயும் இவ இல்லை... இவளை பற்றி யார்க்கிட்டயாவது கேட்கலாம்னு பார்த்தா அதற்கு கூட யாரும் இல்லையே..” என்று தனக்குள் பேசிக் கொண்டே இருந்தவன் திரும்பலாம் என்று போக, அறைக்குள் இருந்த இன்னொரு கதவு திறக்க புருவம் சுறுங்க,

“யார் வரா” என்று அவன் அப்படியே நின்றான்.

பாத்ரூம் கதவை திறந்துக் கொண்டு அவன் தேடிய ஆதினி தான் வந்துக் கொண்டு இருந்தாள். அவளது முகத்தை பார்த்தவுடன் இவனது அகமும் முகமும் மலர்ந்தது. அவனது இதழ்கள் சற்றே விரிய,

கன்னத்து சதை வலி எடுக்க ஆரம்பித்தது. “ம்மா” என்று அவன் அலறிவிட அந்த சத்தத்தில் இவள் சற்றே பதற்றத்துடன் நிமிர்ந்துப் பார்த்தாள். அந்த இடத்தில் பெருவளத்தானை பார்த்தவுடன் அதிர்ந்துப் போனாள்.

“இங்க என்ன பண்றீங்க?” என்ற அவளது கேள்வியில் இவனுக்கும் முகம் சுருங்கிப் போனது. ஆனாலும் அதை காட்டிக் கொள்ளாமல்,

தட்டு தடுமாறி, “உன்னை பார்க்க தான் வந்தேன்” என்று அவன் சொல்லிவிட்டு கன்னத்தில் அதிக வலியை உணர அவனது முகம் வலியில் இன்னும் அதிகமாக சுறுங்கியது.

“ம்மா” என்று கன்னத்தை அபப்டியே பற்றிக் கொண்டான்.

“உங்களை யாரு இங்க வர சொன்னா. நானே வந்து பார்ப்பேனே. இவ்வளவு காயங்களை வச்சுக்கிட்டு பேசலன்னா தான் என்ன..” என்று அவள் எப்பொழுதும் போல சிடுசிடுக்க, பெருவளத்தானுக்கு என்னவோ போல ஆனது.

இந்த நேரத்தில் கொஞ்சமே கொஞ்சம் தன்மையாக பேசினால் என்ன என்று அவனது உள்ளம் உள்ளுக்குள் ஏங்கியது.

“முதல்ல இங்க இருந்து வெளியே போங்க” என்றாள்.

“ஏன் என்னை விரட்டுறதுலையே குறியா இருக்க...?” தன் வலிகளை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் அவளிடம் மல்லுக்கு நின்றான்.

“புரிஞ்சி தான் பேசுறீங்களா...? தயவு செய்து இங்க இருந்து முதல்ல வெளியே போங்க சொல்லிட்டேன்” என்று அவள் பிடிவாதம் பிடிக்க,

“அது தான் ஏன்னு கேக்குறேன். என்னை பார்த்தா உனக்கு எப்படி இருக்கு? இந்த சமயத்துல கூட உன்கிட்ட தவறா நடந்துக்குவேன்னு உனக்கு தோணுதா?” என்று அடிபட்டு கட்டு போட்டு இருந்த அவனது காலையும் கையையும் முகத்தையும் காட்டி கேட்டவனை முறைத்துப் பார்த்தவள்,

“நான் அப்படி சொன்னனா?”

“நீ வெளியே போக சொன்னதுக்கு காரணம் நான் வேற எப்படி எடுத்துக்குறது குட்டி?” ஆற்றாமையோடு கேட்டவனை இன்னும் முறைத்துப் பார்த்தவள்,

“நான் குளிச்சிட்டு துண்டோட நிக்கிறேன். உங்க கண்ணு முன்னடியே நான் உடை மாற்றவா...?” கோவமாக கேட்டாள்.

அதன் பிறகு தான் அவள் நிற்கும் தோற்றத்தையே உணர்ந்தவன், “ஷிட்...” என்று தலையில் அடித்துக் கொண்டவன்,

“சாரி குட்டி. நான் கவனிக்கல..” என்று அவன் தடுமாற,

“தெரியும். இப்போ நீங்க வெளியே போங்க ப்ளீஸ். எதா இருந்தாலும் பிறகு பேசலாம்” என்று அவள் தன் கோவத்தை விடுத்து சொன்னாள். ஏனெனில் இவ்வளவு நேரம் அவன் நின்றிருந்தாலும் அவனது கண்கள் அவளது முகத்தை தாண்டி போகவே இல்லையே. தான் எந்த உடையில் இருக்கிறோம் என்பது கூட அவன் அறியவில்லை.

பெருமூச்சு விட்டவள் அவன் தட்டு தடுமாறி போவதை பார்த்து மனம் கனத்துப் போனது. உதவிக்கு ஆளின்றி அவன் இந்த வீட்டில் படும் அவஸ்த்தையை அவளும் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறாள்.

அவன் மீது கட்டுக் கடங்காமல் எழும் நேசத்தை அணைபோட்டு தடுத்துக் கொண்டு இருக்கிறாள். எப்பொழுது அந்த அணை உடைந்து அவனிடம் இவளது நேசம் வெளிப்படுமோ தெரியவில்லை.

ஆதினியின் தோற்றத்தை ஒரே ஒரு கணம் பார்த்தவனுக்கு மூளை நரம்பு எல்லாம் செயலிழந்து போனது போல ஒரு உணர்வு... அவனுக்கு பாதை கூட மறைந்து போனது. அதிக வெளிச்சத்தை பார்த்த கண்கள் ஒரு நிமிடம் அதிலிருந்து வெளிவராமல் வேறு பொருளை பார்த்தாலும் அதே வெளிச்சம் தான் கண்ணில் தென்படும் அதுபோல எதிரில் உள்ள பாதை கூட தெரியாது ஆதினியின் வசீகர தோற்றம் மட்டுமே அவனின் கண்களில் தெரிந்தது.

அதனால் கால் இடறிப்போனது. ஒழுங்காக அடி எடுத்து வைக்க முடியாமல் அவன் தடுமாற, அவனது நடையை ஊன்றி கவனித்துக் கொண்டு இருந்த பெண்ணவளுக்கு அவனின் கால் தடுமாறுவதை கண்டு வேகமாய் ஓடிப் போய் அவனை பின்னால் இருந்து பிடித்துக் கொண்டாள்.

“பார்த்து போறது இல்லையா...? இதுக்கு தன் சொன்னேன் இங்க எதுக்கு வந்தீங்கன்னு. அதுக்கு உடனே முகத்தை சுறுக்கிக்கிட்டீங்க. இப்போ பாருங்க கால் எப்படி தடுமாருதுன்னு. ஒரு வாரம் கம்ப்ளீட் ரெஸ்ட் எடுக்க சொல்லி சொல்லி இருக்காங்க இல்லையா... அதை பாலோ பண்ணா தான் என்ன?” என்று கடிந்துக் கொண்டவளை தலையை திருப்பி பார்த்தான்.

“கையை எடுத்து தோள் மேல போடுங்க. என்னால உங்க புல் வெயிட்டை தாங்க முடியல...” என்று அவள் பாட்டுக்கு சொல்லிக் கொண்டு இருந்தாள். இந்த அக்கறையும் கடுகடுப்பும் ஒரு நாளும் கனிகாவிடம் அவன் பார்த்ததே இல்லை.

“சொன்னா சொல் பேச்சு கேட்கணும். அதை விட்டுட்டு எதையாவது பத்தி யோசித்துக் கிட்டே இருக்குறது தான் வேலை” என்றவள் அவனது கரத்தை எடுத்து தன் தோளின் மீது போட்டுவிட்டு அவனை நடக்க வைக்க, அவளின் முகத்தை பார்த்துக் கொண்டே அவளின் வேற்று தோளை அழுத்தி பிடித்தான்.

அதுவரை எதையும் நினைக்காத ஆதினி அப்பொழுது தான் தான் வேற்று உடம்போடு ஒரே ஒரு துண்டோடு அவனோடு நிற்பதையே உணர்ந்தாள்.

Loading spinner


   
Quote
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top