‘இவரு தெரிந்து தான் இதையெல்லாம் பண்றாரா... இல்ல தெரியாம பண்றாரா...’ என்று அவள் தடுமாறி நிற்கும் நேரம்,
“ஹேய் இங்க பாரு நீ தேடுன ஆல்பம்” என்று அவளிடம் காட்டியவன்,
“நீ தேடுனதை நான் எடுத்து குடுத்துட்டேன்ல. அதே மாதிரி நான் தேடுனதை நீ எடுத்து குடு குட்டி” என்று அவளுக்கு வேலையை பணிக்க அவனை திரும்பி முறைத்தாள். அந்த நேரம் அவனும் எதற்கோ அவளின் புறம் திரும்ப சட்டென்று இருவரின் இதழ்களும் ஒரு நேர்கோட்டில் சந்திக்க இருவருமே அதை எதிர்பார்த்திருக்கவில்லை.
ஒரே ஒரு நொடி தான். நெஞ்சை அடைப்பது போல வந்தது ஆதினிக்கு. அப்படியே அவனை தள்ளிட்டு விட்டு அவள் ஓடிப் போக, அவளின் தள்ளலில் கீழே விழுந்தான். அந்த அளவுக்கு அவளின் வேகம் இருந்தது.
அவன் நினைத்தால் சுதாரித்து இருக்க முடியும் தான். ஆனால் அவனாலுமே நடந்து முடிந்த சம்பவத்திலிருந்து வெளியே வரமுடியவில்லை. அதனால் அவள் தள்ளி விடவும் அப்படியே அவன் கீழே விழுந்தான்.
அவன் விழுவதை கூட கவனிக்காமல் வேகமாய் அந்த இடத்தை விட்டு போனவளின் முந்தானை இழுபட இன்னும் திகைத்துப் போய் திரும்பி பார்த்தாள்.
என்ன என்று யோசிக்கும் முன்பே அவனின் மீது அவள் விழுந்து வைத்தாள். அவன் கீழே விழவும் அவனது கையில் அணிந்து இருந்த வெள்ளி சங்கிலியில் இருந்த கொக்கி அவளின் முந்தானையில் வெகுவாக சிக்கி இருக்க அவன் கீழே விழவும், இவள் இந்த பக்கம் ஓரடி எடுத்து வைக்கவும் சரியாக இருக்க, அதுவரை அவனது கையில் சிக்கி இருந்த அவளின் முந்தானையை பற்றி இருவருமே அறியவில்லை.
எப்படி சிக்கியது என்று கூட இருவருக்கும் தெரியவில்லை. அதன் பிறகு நடந்த இழுபறியில் தான் அவளின் சேலை சிக்கி இருப்பதே இருவருக்கும் புரிந்தது. ஆனால் அதை கிரகிக்கும் வரை அவகாசம் இல்லாமல் போனதில் இருவருமே ஒருவர் மீது ஒருவர் விழ வேண்டிய நிலை.
தன் மீது மொத்தமும் விழுந்தவளை வளைத்துப் பிடித்தான் தனிச்சையாக. முன்பு இதழ்கள் மட்டும் உரசிக் கொள்ள, இப்பொழுது மொத்த யாக்கையும் உரசிக் கொள்ள இருவருமே ஒரே சேர அதிர்ந்துப் போனார்கள்.
என்ன நடக்குது இங்க என்று இருவருமே ஒரு கணம் குழம்பிப் போனார்கள். தங்களை மீறி என்னென்னவோ நடப்பது போல ஒரு உணர்வு. தடுக்க இருவராலும் முடியவில்லை. ஆனால் இந்த நெருக்கத்தை பற்றி இருவராலும் சிந்திக்கவே முடியவில்லை.
விழுந்த வேகத்தில் இதழ்கள் நான்கும் ஒன்றை ஒன்று கவ்விக் கொள்ள ஆதினிக்குள் ஒரு பிரளையமே ஏற்பட்டது. பெருவளத்தானுக்கோ எப்படி உணர்கிறோம் என்று கூட புரியாமல் தன் முரட்டு இதழ்களை உரசிக் கொண்டு இருந்த மென்மையான இதழ்களை விடுவிக்க முடியாமல் தன்னுள் ஒரு கோடி மின்னல்கள் உருவானதை அறிந்து அதனுள் தொலைந்துப் போக விரும்பியவனாய் அவளது இதழ்களை தன் பற்களுக்குள் கவ்விக் கொண்டான்.
பெருவளத்தான் தன்னை விட்டு விடுவான் என்று எண்ணி இருந்தவள் அவன் விடாமல் கவ்வி சுவைக்கவும் அடிவயிற்றில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் சிறகடித்து பறக்க கண்களை விரித்து பெருவளத்தானை பார்த்தாள்.
அவனது கண்ணியம் இந்த நொடியில் உடைந்துப் போனதை அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. மிக ஆழ்ந்து அனுபவிப்பது ஒரு உணர்வை அவனது முகம் வெளிப்படுத்த அப்போ என் இடத்தில் எந்த பெண் இருந்தாலும் இவன் இப்படி தான் சூழ்நிலையை பயன் படுத்திக் கொள்வானா என்று மருகினாள்.
அவனுக்கு இந்த உணர்வுகள் எல்லாம் பழையது தான். ஆனால் ஆதினிக்கு அப்படி இல்லையே.. முதல் முறை தன்னை நெருங்கிய ஆண். ஒரு ஆணின் நெருக்கம் எவ்வளவு தகிக்கும் என்பதை முதல்முறையாக உணர்ந்தாள்.
இளமையின் முதல் முத்தம். அதுவும் அடிவரை உயிர்வரை சிலிர்க்க வைக்கும் முத்தம். கண்கள் எல்லாம் கலங்கிக்கொண்டு வந்தது. சித்தம் கலங்கிப் போன நிலையில் ஆதினி இருந்தாள்.
தனக்கு முத்தம் கொடுத்துக் கொண்டு இருந்தவன் தன் அக்காவின் கணவன் என்று அவளால் நினைவு கூட படுத்த இயலா அளவுக்கு முதல்முதலான முத்தத்தில் உறைந்துப் போய் இருந்தாள்.
பெருவளத்தான் ஆழ்ந்து அமிழ்ந்து முகிழ்த்து முத்தம் கொடுத்துக் கொண்டு இருந்தான் ஆதினிக்கு. அவனும் இவள் தன் மனைவி இல்லை என்று அறியவில்லை போலும். மோகமோ காமமோ எதுவும் இல்லை தான்.
ஆனால் அவளிடம் இருந்து அவனால் பிரியவே முடியவில்லை. எல்லாவற்றையும் மீறிய ஒரு இலயிப்பு அவளிடம் கொண்டவன் தன் கண்ணியம் கறைபட்டு போகிறது என்பதை அவன் அறியவில்லை.
ஆழ்ந்த முத்தத்தின் இடைவெளியில் வெளிவந்த சுவாச காற்று இருவரையும் தொட்டு செல்ல அதை கூட உணரும் நிலையில் இல்லை. ஏதோ காணாததை கண்ட மாதிரி இனி காணவே முடியாத மாரிதியும் அவளின் இதழ்களை ருசித்துக் கொண்டு இருந்தவனின் வேகத்தில் நிலை தடுமாறியவள் தன் மனதினை கட்டுப் படுத்த முடியாமல் சரிய ஆரம்பிக்க, அந்த நேரம் “ஆதினி” என்று விசாகனின் குரல் வெளியே கேட்க மயங்கிக்கொண்டு இருந்த மூளையை தட்டி உலுக்கி உசுப்பி விட்டு ஆழ்நிலை மயக்கத்தில் இருந்து வெளியே வந்தவள் என்ன நடக்கிறது என்பதை உணரவே ஒரு நொடி பிடித்தது.
பின் சுதாரித்து பெருவளத்தானின் பிடியில் இருந்து விடுபட அவனை உலுக்கு எடுத்தாள். அதன் பிறகே அவனுக்கும் என்ன நடந்தது.. தான் என்ன செய்துக் கொண்டு இருந்தோம் என்பதே நினைவுக்கு வந்தது.
“வாட்..?” என்று அதிர்ந்தே போனான். பட்டென்று அவனது தலையில் அவன் அடித்துக் கொள்ள ஆதினிக்கு நெஞ்சில் கொதிக்கும் எண்ணையை ஊற்றியது போல இருந்தது அவனது அந்த ஒற்றை பாவனை.
அவளின் இதழ்கள் விரக்தியாக சிரித்தது. அடுத்த நிமிடம் அவன் முன்பு நிற்காமல் வழிந்த கண்ணீரை யாருக்கும் காட்டாமல் தன் வண்டி சாவியை எடுத்துக் கொண்டு வெளியே ஓடினாள். அவள் அப்படி யாரையும் கண்டுக் கொள்ளாமல் ஓட,
விசாகன், “என்னடா பண்ணின... நான் எதிரில் வந்ததை கூட கண்டுக்காம, ஒரு வார்த்தை கூட எங்கக்கிட்ட சொல்லாம ஏதோ தலைபோற மாதிரி ஆதினி ஏன் இப்படி ஓடுறா?” என்று கேட்ட விசாகனின் ஒரு சொல் கூட அவனின் காதில் விழவில்லை.
திகைத்துப் போய் ஆதினி சென்ற வழியையே பார்த்துக் கொண்டு இருந்தான். பிடித்து வைத்த மண்ணாய் அவன் அப்படியே நிற்கவும் அவனை பிடித்து உலுக்கினார் அவர்.
“தம்பி உனக்கு என்ன ஆச்சு...? நீயும் எதுவும் பேசாம ஏதோ பேய் அடிச்ச மாதிரி இருக்க. புள்ளையை எதுவும் சொன்னியா ப்பா...” அவர் மேலும் கேட்க பெருவளத்தானால் எதுவுமே பேசமுடியவில்லை. அவனது வாய் பசைப்போட்டு ஒட்டியது போல ஒட்டிக் கொண்டது.
“புள்ளை அழுதுக்கிட்டே போகுது ப்பா...” அவர் சொல்ல அப்பொழுது மட்டும் அவனது விழிகள் சற்றே அசைந்து அவனது தந்தையை பார்த்தது. ஆனால் அவனது வாய் திறக்கவே இல்லை. அவனது செய்கையும் சரி பார்வையும் சரி எதுவும் புரியாமல் அவனை பார்த்தார் விசாகன்.
ஆதி பாவம் தான்..,..
விசா & வள்ளிக்கு கூட ஏதோ தெரிஞ்சி இருக்கு...
ஒன்னும் புரியாம, தெரியாம இருந்த வளத்தான் பண்ணின காரியம் சரி இல்ல....
ஏண்டா அந்த பிள்ளையை போட்டு வதைகிறாய்?????
ஆதி பாவம் தான்..,..
விசா & வள்ளிக்கு கூட ஏதோ தெரிஞ்சி இருக்கு...
ஒன்னும் புரியாம, தெரியாம இருந்த வளத்தான் பண்ணின காரியம் சரி இல்ல....
ஏண்டா அந்த பிள்ளையை போட்டு வதைகிறாய்?????
ஆதியின் அம்மாவுக்கும் கூட தெரியும். ஆனா சந்தர்ப்ப சூழ்நிலையில எல்லோரும் மௌனமா இருக்காங்க டா..
பெருவளத்தான்.....................





