வேலையில் நான்கு மாதத்திலே சம்பாதித்து விடுவாள். அந்த மாதிரி திறமை உள்ளவள். எனவே மாதம் ஒரு இலட்சக் கணக்கில் சம்பாதிக்கும் வேலையாக பார்த்து படித்தாள்.
இதோ நாளைக்கு நேர்முகத் தேர்வுக்கு செல்கிறாள். சீப் இஞ்சினியர் வேலைக்கு... சாலைகளுக்கு பாலம் போடுவாந்தி ஆரம்பித்து பல மல்ட்டி காம்ளெக்ஸ் கட்டி கொடுக்கும் மிகப்பெரிய ப்ரைவேட் நிறுவனதுக்கு தான் செல்ல இருக்கிறாள்.
அதில் பெற்றவர்களுக்கு ஒரு பெருமை தான் என்றாலும் அவளின் வளர்ச்சி மற்ற பிள்ளைகளுக்கு இல்லையே என்ற குறை இருந்தது. முதல் இரண்டு பெண்களும் ஏதோ ஒரு சாதாரண டிகிரியோடு நின்று விட, இவளையும் ஒரு சாதாரண டிகிரி தான் படிக்க வைத்தார்கள். ஆனால் ஆதினி அந்த டிகிரியை ஆதாரமாக வைத்து வேலைக்குப் போனவள் சிவில் இஞ்சினியரிங் க்ரூப்பை தேர்ந்தெடுத்தாள் படிக்க. அதோடு மேற்படிப்பையும் படித்து முடித்தவள் டிஸ்டிங்க்ஷனில் தேர்வானவள் எல்லாவற்றையும் தன் வருவாய்க்குள்ளையே படித்து முடித்தாள்.
யாரிடமும் படிப்பு செலவுக்கு கேட்கவில்லை. அதில் வைகுந்தனுக்கு கூட கொஞ்சம் மனஸ்த்தாபம் தான். ஆனால் அவளது வெற்றியை கண்டு பூரித்து தான் போனார்.
இப்படி சுயம்புவாக தன்னை வளர்த்துக் கொண்டவள் இனிமேலும் சுயம்புவாக தான் இருப்பாள். அந்த சுயம்புவையும் ஆட்டி படைக்கும் ஒரு காரணி இருக்கிறது. அந்த காரணி என்ன என்பதை தெரிந்துக்கொள்ள நாம் இன்னும் வெகுதூரம் பயணிக்க வேண்டி இருக்கிறது.. பார்ப்போம் போக போக அவளின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று...
காலையில் கிளம்பி நேராக கோயிலுக்கு சென்றவள் மனமுருக சாமியை கும்பிட்டுவிட்டு அதன் பிறகே இண்டர்வியூவுக்கு சென்றாள்.
அங்கே அவளை போலவே பலர் வந்து இருந்தார்கள். வந்த எல்லோருக்குமே டெஸ்ட் வைத்தார்கள். குறிப்பிட்ட சின்ன இடத்தில் ஒரு பாலம் போட வேண்டும். அந்த இடத்தின் அளவுகள் எல்லாம் கொடுத்து விட்டு டிசைன் போட சொல்லி சொல்லி இருந்தார்கள். அனைவரும் டிசைன் போட்டார்கள்.
ஆனால் ஆதினி மட்டும் டிசைனோடு சேர்த்து எவ்வளவு காஸ்ட் ஆகும் என்று தற்போதைய மார்கெட் நிலவரத்தின் படி பட்ஜெட்டும் சேர்த்து போட்டு இருந்தாள். அதுவும் இரண்டு வகையாக.. ஒன்று நார்மல் பட்ஜெட், இன்னொன்று கொஞ்சம் விரிவான பட்ஜெட்... கூலி ஆள் முதற்கொண்டு எவ்வளவு செலவு ஆகும் என்று மிகத்துல்லியமாக அவள் கணக்குபோட்டு கொடுக்க
“வெட்டிட்டு வான்னா கட்டிட்டே வந்துட்டிங்க மிஸ் ஆதினி... யூ ஆர் செலெக்டட்” என்று அவளுக்கே அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் கொடுத்தார்கள். அந்த மகிழ்ச்சியோடு வீட்டுக்கு வந்தவள் அனைவரிடமும் சொல்ல அனைவருமே மகிழ்ந்தார்கள்.
“ஓகே அப்போ இதை கொண்டாட வெளியே போகலாம்” என்று விதுல் சொல்ல,
“அதெல்லாம் ஒண்ணும் வேணாம்டா” என்று இவள் மறுக்க பெருவளத்தான் எல்லோரும் வெளியே போக செவென் சீட்டர் வண்டியை புக் செய்துவிட்டான்.
தன்னை கேட்காமல் அவனே எல்லாம் செய்ய கடுப்படித்தாள்.
“ஏன்டி எப்போ பாரு மூஞ்சை காண்பிச்சுக்கிட்டே இருக்க... கொஞ்சம் சிரிச்ச மாதிரி இருந்தா தான் என்னவாம்” குமுதா அவளின் குமட்டிலே குத்த,
“என் மூஞ்சியே அப்படி தான்” என்று சிடுசிடுத்தவள் வேறு வழியில்லாமல் கிளம்பினாள்.
வைகுந்தன் முன்னாடி அமர்ந்துக் கொள்ள, பின்னாடி இரு அக்காக்களும் அமர்ந்துக் கொள்ள அவர்களோடு விதுல் அமர்ந்துக் கொள்ள நடு சீட்டில் ஒரு பக்கம் பெருவளத்தானும் இன்னொரு பக்கம் குமுதாவும் அமர்ந்துக் கொள்ள நடுவில் ஆதினிக்கு இடம் ஒதுக்கப்பட கடுப்பானாள்.
“கனிகா நீ உன் புருசன் கூடவே உட்கார மாட்டியா எப்போ பாரு அவரை விட்டு தள்ளியே போற... மரியாதையா இங்க வந்து உட்காரு. நான் பின்னாடி சீட்டுல போய் உட்கார்ந்துக்குறேன்” என்று கடுப்படித்தாள்.
“ஏன்டி இன்னும் கொஞ்ச நேரத்துல போய் இறங்க போறோம். அதுக்குள்ள எதுக்குடி இப்படி முறைச்சுட்டு இருக்க... வரும் பொழுது மாப்பிள்ளை பக்கத்துல உட்கார்ந்துக்குவா இப்போ உட்காரு. உன்னால தான் லேட்டாகுது” என்று குமுதா சொல்ல பல்லைக் கடித்தவள் வேறு வழியின்றி அவனருகில் வந்து அமர்ந்தாள்.
குமுதா கொஞ்சம் குண்டக்க இருந்ததால் ஆதினி பெருவளத்தான் அருகில் சற்று நெருங்கி உட்கார வேண்டி வந்தது. அவனுக்கு எதுவும் தோன்றவில்லை போலும். ஆதினிக்கு தான் எரிச்சல் மேல் எரிச்சலாய் வந்தது.
அவனை உரசிக்கொண்டு அமர்ந்து இருந்தது பெரும் தகிப்பை கொடுத்தது..! அக்காவின் கணவன் என்றாலும் ஒரு எல்லைக்கோடு இருக்கிறதே...! வண்டி சாலையின் மேடு பள்ளம் எல்லாம் ஏறி இறங்க அவள் அவன் மீது சாய வேண்டிய நிலை. போதாதற்கு எதிரில் வந்த லாரி இந்த வண்டியை இடிப்பது போல ஓட்டுனர் ஸ்டீரிங்கை சடார் என்று வலைத்ததில் அவனது மடியிலே ஏறி அமர்ந்து விட்டாள்.
அதை பின்னாடி இருந்து பார்த்த மூவரும் களுக்கென்று சிரிக்க நெருப்பு பட்டவள் போல பின்னாடி திரும்பி பார்த்தாள்.
“நீ எதுக்கு பின்னாடி போய் உட்கார்ந்து இருக்கன்னு இப்போ புரியுது கனி எருமை” என்று திட்டினாள் ஆதினி.
“பின்ன அம்மா பக்கத்துல யாராவது உட்கார முடியுமா... அடைச்சி வச்ச மாதிரி எல்லாம் என்னால வர முடியாது. நீ தான் கொஞ்சம் ஒல்லியா இருக்க. அது தான் உன்னை அங்க விட்டுட்டு நாங்க எல்லாம் பின்னாடி உட்கார்ந்துக் கிட்டோம்” என்று சொன்ன கனிகாவை முறைத்துப் பார்த்தாள்.
“கொஞ்சம் இறங்குனா நல்லா இருக்கும்” என்று பெருவளத்தான் அவளின் காதருகில் சொல்ல, அவனின் மூச்சுக் காற்று அவளின் காதோரம் உரசி சென்றதில் இன்னும் கடுப்பாக அவனது மடியில் இருந்து சட்டென்று எழுந்துக் கொண்டவள் இருவருக்கும் நடுவில் இருந்த குட்டி இடத்தில் அமர்ந்தாள்.
“சாரிடி” என்று அம்மா சொல்ல,
“ஒரு ஆணியும் வேணாம். சும்மா போங்க அந்த பக்கம்” கடுப்படித்தவள் மீண்டும் பெருவளத்தானை உரசிக்கொண்டே அமர வேண்டிய சூழல்... அவள் உட்கார ரொம்ப சிரமப்படுவதை பார்த்து தன் கையை தூக்கி பின்னாடி சீட் மேல போட்டுக்கொள்ள கிட்ட தட்ட அவனின் நெஞ்சோடு உரசிக்கொண்டு போவது போல இருக்க கண்களை இறுக மூடி தன் கோவத்தை கட்டுப் படுத்திக் கொண்டு அமர்ந்து இருந்தாள் ஆதினி.
அந்த இடைவெளியில் கொஞ்சம் வசதியாக தான் இருந்தது. ஆனால் அவனின் நெஞ்சோடு உரசுவது என்னவோ போல இருக்க நிமிர்ந்து அவனை பார்த்தாள்.
“என்ன குட்டி சிரமமா இருக்கா..? அவ்வளவு தான் ஆச்சு” என்று சமாதனம் செய்தவனை கண்டு தன் கோவத்தை காட்ட முடியாமல் அவனது நெஞ்சோடு தன் கை உரச அந்த பயணத்தை மேற்கொண்டாள்.
எல்லோருக்கும் அரைமணி நேரம் பயணித்த பயணம் ஆதினிக்கு மட்டும் என்னவோ நீண்ட தூரம் பயணித்தது போல ஒரு உணர்வு. மெல்ல நிமிர்ந்து பெருவளத்தானை நிமிர்ந்துப் பார்த்தாள்.
அலைஅலையான சிகை... படர்ந்த நெற்றியில் எப்பொழுதும் இருக்கும் திருநீறு. சாந்தத்தை தத்து எடுத்து இருக்கும் முகம், அதில் அவனது கம்பீரத்தை கூட்ட வெட்டி நறுக்கிய கற்றை மீசை... அழுத்தமான சற்றே தடித்த கருமையான இதழ்கள்..
கழுத்தில் எப்பொழுதும் இருக்கும் குட்டி சங்கிலி... ஒரு பட்டன் எப்பொழுதும் திறந்தே இருக்கும். அதன் வழியாக அவனது நெஞ்சு முடி சுருண்டு இருக்கும் அழகு, அதில் துள்ளி விளையாடும் சங்கிலி என ஆண்மைக்கு முழு இலக்கணமாய் இருந்தான்.
“என்ன குட்டி அப்படி பார்த்துட்டு வர.. எதுவும் வேணுமா...?” என்று பாசமாக கேட்டவனிடம் ஒன்றும் இல்லை என்று தலையாட்டியவள் அப்படியே பின்னால் சாய்ந்துக் கொண்டாள்.
பின்னால் அவனது முரட்டு கரம் இருக்க சட்டென்று எழுந்துக் கொண்டாள்.





