பாண்டியன் பொழிலி மீது அவ்வளவு ஆசை வைத்து இருந்தாலும் ஒரு வருடம் அவளை படுக்கையில் நெருங்கவே இல்லை.
“ஏன்...?” என்று பொழிலியே கேட்டுவிட்டாள் வாய் திறந்து.
“எனக்கு நீ முக்கியம் டி...” என்று சிரிப்புடன் அவளை அனைத்து படுத்துக்கொள்ளுவான். தவறாய் சின்ன தீண்டல் கூட அவனிடம் இல்லை.
எல்லாம் இந்த ஒரு வருடம் மட்டும் தான்... அவளது உடல் நன்கு தேறி வந்த பின்பு மலை கரடுக்கு அவளை மட்டும் தூக்கிக்கொண்டு சென்றுவிட்டான்.
“என்னங்க இது பிள்ளைங்கள விட்டுட்டு நாம மட்டும்...” என்று பாவமாய் முகத்தை வைத்துக்கொண்டு கேட்டவளுக்கு பதில் எதுவும் சொல்லாமல் முறைத்துக்கொண்டு மரவீட்டின் உள்ளே நுழைந்துக்கொண்டான்.
“அதான்ன பேசுரவள மனுசியா மதிச்சா தானே...? எனக்கென்னன்னு போறது...”
“இந்தாங்க உங்கக்கிட்ட தானே பேசிக்கிட்டு இருக்கேன்... எனக்கென்னன்னு போனா எப்படி...? எனக்கு பதில் சொல்லிட்டு போங்க...” என்று அவள் கத்திக்கொண்டு பின்னால் போக, அவனோ நீ யாருக்கிட்டயோ கத்து என்பது போல தூங்கி போனான்.
“ச்சை கல்யாணம் கட்டி ரெண்டு வருஷம் தான் ஆகுது. அதுக்குள்ள இந்த முனுசன் கிட்ட போராட முடியல என்னால... இனி சொச்ச காலம் எப்படி தான் போகுமோ இவருக்கிட்ட....” கடுப்படித்துக்கொண்டே துணிகளை அடுக்கி வைத்துவிட்டு, அருவிக்கரைக்கு சென்று நின்றுவிட்டாள்.
ஆத்தாமார்கள் இருக்கிறவரை பிள்ளைகளை பற்றி கவலையே இல்லை தான். அதுவும் மீனாச்சியம்மை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்ளுவார். கூடவே பொழிலியின் அப்பா செவுனப்பனும் இருக்கும் பொழுது எதற்கு பயம் என்று பாண்டியன் தங்களது உல்லாச பயணத்தை மேற்கொண்டு விட்டான்.
அதற்கு தான் பொழிலி தையத்தக்க என்று குதித்துக்கொண்டு இருக்கிறாள். ஒரு குட்டி தூக்கம் போட்டவன், எழுந்து வந்தான் வெளியே.
பொழிலி அருவியில் நனைந்துக்கொண்டு அமர்ந்து இருந்தாள். அவளை அப்படி பார்க்கும் பொழுது முன்பு ஒரு முறை வந்த பொழுது நடந்த நிகழ்வுகள் எல்லாம் தொடர் அணிவகுப்பு செய்ய, பாண்டியனின் தேகம் தன்னவளுக்காக மிகவும் ஏங்கியது.
நிமிடமும் தாமதிக்காமல் அவளை நெருங்கியவன், எப்பொழுதும் போல கேட்டு கேள்வி இன்றி அவளை கட்டி பிடித்து தன் தேவையை தீர்த்தவன், நக்கலுடன் அவளை பார்த்தான்.
“செய்யிறதும் செஞ்சுட்டு நக்கல் பார்வை வேற, போங்க என்கிட்டே பேசாதீங்க...” அவனது முதுகில் குத்தினாள்.
“ரொம்ப சந்தோஷம்டி... நம்ம வந்த வேலைக்கு உன் வாய் கொஞ்சம் இடைஞ்சல் தான். அதனால நீ பெட்டர் வாயை மூடிக்கோ...” என்றவன் அவளுடன் ஜலக்கிரிடை நடத்த ஆரம்பிக்க அவனது அடாவடியிலும் பேச்சிலும் கோவம் கொண்டு முகத்தை தூக்கி வைத்து இருந்தாள்.
உன் கோவம் என்னை எதுவும் செய்யாது என்று வந்த வேலையை மட்டும் பார்த்துக்கொண்டு இருந்தான்.
இரண்டாவது தேன்னிலவை அமோகமாக அவன் கொண்டாட, பொழிலி தான் கடுப்பின் உச்சத்தில் இருந்தாள்.
பால் பொழியும் முழு நிலவொளியில் புள் தரையின் மீது அழகாக பட்டு மெத்தையை விரித்து, மலை கரடில் உள்ள வாசம் மிகுந்த பூக்களை அதில் தூவி, கதகதபுக்காக வேண்டி, காய்ந்த குச்சிகளை அடுக்கி அதில் நெருப்பை மூட்டி ஒரு ஏகாந்த இரவை தயார் செய்து இருந்தான் பசும் பூண் பாண்டியன்.
வித விதமாக அவன் கொண்டாட அவளுக்கு தான் வெறியாகி போனது நிமிடத்துக்கு நிமிடம். மனம் விட்டு அவன் எதுவும் பேசவில்லை. ஆனால் அதற்கு நேர் மாறாய் அவளிடம் அவன் அதிக நெருக்கம் காட்டினான்.
அதை அனுபவிக்க முடியாமல் சிறு உறுத்தல் அவளுள் இருக்க அதை சட்டை செய்யவில்லை பாண்டியன்.
அதுவும் இன்றைய ஏற்பாட்டை பார்த்து கடுப்பின் உச்சத்தில் இருந்தாள்.
“இன்னைக்கு எந்த ஒத்துழைப்பும் கிடையாது... அப்படியே தான் இருப்பேன்...” என்று அவன் விரித்த மஞ்சத்தில் படுத்துக்கொண்டு போராட்டம் செய்தாள்...”
“ம்ஹும் நான் பாண்டியன் டி... உன் ஒத்துழைப்பு தேவையில்லை. எனக்கு என்ன வேணுமோ அதை நானே எடுத்துக்குவேன்.” என்று அவள் மீது பாய்ந்தான் அதிரடியாக.
அவன் செய்த செயலில் இன்னும் ஊடல் வந்தது அவளுக்கு... முதுகு காட்டி படுத்தாள் அவனுக்கு.
“நீ இப்படியே பண்ணிக்கிட்டு இரு...” என்றவன் சில அந்தரங்க பேச்சுக்கள் அவளிடம் பேச,
“ச்சீ... போங்க...” என்று சிவந்தவள் அவனது மார்பில் ஒன்றிக்கொண்டாள்.
அவளை விலக்காமலே அவளது கூந்தலில் மலைக்கரட்டில் கிடைத்த கலவை மலர்களை கோர்த்து சூடினான். அதோடு, இன்னும் பல பூக்களை எடுத்து அழகாக மாலையாக்கியவன், அதை படுக்கைக்கு அருகே வைத்து இருந்தான்.
அதில் ஒன்றை எடுத்து அவளது கழுத்தில் சூடினான்.
“நீயும் போடு..” என்று நிமிர்ந்து அமர்ந்தான் அவளை அணைத்த படி. இன்னொரு மாலையை எடுத்து அவனது கழுத்தில் போட்டவள், கண்கள் கலங்க அவனது நெஞ்சில் முகம் புதைத்துக்கொண்டாள்.
“பொழிலி...”
“ம்ம்ம்”
“நிமிர்ந்து பாருடி...”
“போய்யா பார்க்க மாட்டேன்...”
“நீ இப்படி போய்யா வாயான்னு கூப்பிடும் போது...” அதோடு நிறுத்தி அவளை பார்த்தான்.
“கூப்பிடும் போது...” கேட்டாள்.
எட்டில் எழுத முடியா காதல் வார்த்தைகளை அவன் அவளது காது கூச பேச தன் உதடுகளை கடித்து தன் உணர்வுகளை அடக்கிக்கொண்டு அவனை பார்த்தாள்.
“இந்த உதடு எனக்கு சொந்தமானது டி... அதை போட்டு ஏன் கசக்குற...” என்று மையலாக பேசியவனின் பார்வையை அவளால் எதிர் கொள்ளவே முடியவில்லை.
ஆளை தின்னும் பார்வையை பார்த்தான்.
“என் மேல உங்களுக்கு கோவமே இல்லையா மாமா...?”
“நான் இந்த பேச்சு வேணான்னு சொன்னதா ஞாபகம்...” சட்டென்று அவனது உடம்பில் ஒரு இறுக்கம் வந்து ஒட்டிக்கொண்டது.
“மாமா... ஒரே ஒரு முறை நான் சொல்றத கேளுங்களேன்....”
“நீ குடுக்குற எந்த விளக்கமும் எனக்கு வேணான்னு எப்பவோ சொல்லிட்டேன் பொழிலி... எதுக்கு மறுபடியும் மறுபடியும் அதையே தோண்டுற... இங்க நாம மகிழ்ச்சியா இருக்க தான் வந்து இருக்கோம்...” என்றான் சுல்லேன்று.
“ஆனா எனக்கு நெருடலா இருக்கு மாமா...”
“பொழிலி....” கர்ஜித்தான்.
“ஆமா மாமா... உங்களுக்கு வேணா நான் அவங்க கிட்ட காசு வாங்குனது ரொம்ப சுளுவா தெரியும்... ஆனா அதை வாங்கிக்கிட்டு உங்க படுத்தது எனக்கு எவ்வளவு வேதனையா இருந்தது தெரியுமா...?” கண்ணீருடன் கேட்டாள்.
Nice





