“ஆமாய்யா... நீரு எதை பத்தியும் யோசிக்காத, பூ மாதிரி ஒரு பொண்ணை பெத்து எங்க குலம் தழைக்க குடுத்து இருக்க, என் பேரனோட மனசு முழுசும் நிறைஞ்சி இருக்குறது உம்மட மவ மட்டும் தான்ய்யா... எங்க சந்தோஷம் எங்க பேரன். எங்க பேரனோட சந்தோஷம் உம்மட மவ... உன்ற மவளோட சந்தோஷம் நீ.. அவ்வளவு தான் ய்யா...” என்று பிச்சாயி சொல்ல,
“சரிங்க ஆத்தா....” என்றார் செவுனப்பன் மனபூர்வ சம்மதமாய்...
பசும் பூண் பாண்டியன் தன் மாமனாரை எந்த வித தயக்கமும் ஏற்படமால் அவரை இயல்பாக புழங்க விட, அதை பார்த்துக்கொண்டு இருந்த பொழிலிக்கு அவ்வளவு ஆசையாகி போனது தன் மாமன் மீது.
செவுனப்பனிடமும் நன்கு ஒட்டிக்கொண்டான் கொற்கையன். அதன் பிறகு மலைச்சாமியிடம் மறைப்பதை மறைத்து லேசு பாசாக சொல்ல வேண்டியதை மட்டும் சொல்லி மற்றவற்றை மறைத்தார்கள் ஆத்தாமார்கள்.
செவுனப்பனுக்கு அவ்வளவு நிம்மதியாய் இருந்தது. ஏனெனில் பொழிலியின் செயலை அவ்வளவு எளிதாக யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது அல்லவா...? அதனால் அவருக்கு ஒரு சங்கடம் இருந்தது. ஆனால் அவர்கள் அதை ஒரு வார்த்தை கூட கோடிட்டு காட்டாமல் அவளை தாங்கியே பேசினார்கள்.
கொற்கையனுக்கு உடல் நிலை சரியில்லாமல் போன அன்று பொழிலி எல்லாவற்றையும் செவுனப்பனிடம் சொல்லிவிட்டாள்.
“நிஜமா எனக்கு இதெல்லாம் இப்படி ஆகும்னு எனக்கு தெரியாது ய்யா... என் எண்ணம் முழுசும் உம்மை நல்லபடியா தேத்தி கொண்டு வரணும்னு தான்... ஆனா இடையில இவ்வளவு விஷயம் நடந்து போச்சு...” என்று கதறி அவரின் காலை பிடித்தவளை தூக்கி தன் எதிரில் நிறுத்தி தன் மகளின் முகத்தை கூர்ந்து ஆழ்ந்து பார்த்தார்.
அதில் கொஞ்சம் கூட பொய்யோ புரட்டோ எதுவும் இல்லை. மாறாக தன் தகப்பனுக்கு தெரியாமல் இவ்வளவு காரியங்களும் செய்து விட்டமோ என்ற மறுகளும் குற்ற உணர்வும் தான் இருந்தது...
அதை அறிந்துக் கொண்டவருக்கு தன் மகளின் உள்ளமும் தெரியும் தானே...? அதோடு இவளுக்காக தானே இவள் வேண்டும் என்பதற்காக தானே அவ்வளவு சொத்து பத்து இருந்தும் மொத்த குடும்பமும் இந்த குடிசையில் வந்து ரெண்டு மூணு நாள் தங்கினது...
எண்ணி பார்த்தவருக்கு அப்பொழுது தான் பாண்டியன் தன்னை மட்டும் தம்பி என்று அழைக்க சொன்னது நினைவுக்கு வந்தது...
மெல்லிய புன்னகை எழுந்தது. சொத்து பத்து கோடி இருந்தாலும் தன் மகளை தேடி வந்தவர்களின் உள்ளத்தை கண்டு மாய்ந்து போனார்.
அவரே தேடினாலும் இந்த பகுமானம் நிறைந்த குடும்பம் அவருக்கு கிடைக்காது அல்லவா...? ஆனால் வேற ஒரு பெண்ணோட வாழ்க்கை இடையில் இருக்கையில் தான் தன் மகளுக்கு மட்டும் இந்த வாழ்க்கை கிடைக்க ஆசை படுவது தவறு என்று எண்ணி அந்த எண்ணத்தை தனக்குள் புதைத்தவர் நடப்பது நடக்கட்டும் என்று தன் மகளை தேற்றினார்.
அதை இப்பொழுது எண்ணி பார்த்தவருக்கு விருந்து உபச்சாரம் தடபுடலாய் நடந்தது. மாறன் பூபதி பாண்டியன் எதிலும் கலந்துக்கொள்ள வில்லை. ஒதுங்கியே இருந்தான். தன் அக்காவுக்கு இங்கு நடப்பதை போன் போட்டு சொல்லிக்கொண்டு இருந்தான்.
அவளுக்கு பெரியவன் தான் வழிக்கு வரவில்லை. சின்னவனையாவது தன் நாத்தனாருக்கு முடித்து போட வேண்டும் என்று ஆசையாகி போனது.
அதனால் நந்தினியை அவனிடம் பழக சொல்ல, நந்தினிக்கு அதில் பெரிதாக விருப்பம் இல்லை. அதனால் தன் அண்ணியை கண்டாலே தெரித்து ஓடினாள்.
ஏனெனில் ஆத்தாமர்களின் கவனிப்பு அந்த மாதிரி... “மாமியாரை கூட சமாளிச்சிடலாம். ஆனா இந்த கிழவிகளை என்னால சமாளிக்க் முடியாது சாமி... ஆளை விடுங்கடா...” என்று நந்தினி மேற்படிப்பு படிக்க வெளிநாடு சென்றுவிட்டாள்.
அதனால் ஆசையும் நிறைவேறாமல் போக பாண்டியம்மாளுக்கு கொஞ்சம் கோவம் பிறந்த வீட்டின் மீது... ஆனால் அவளின் கோவத்தை இங்கு சட்டை செய்ய தான் ஆளில்லை...
மூன்று நாள் செவுனப்பன் அங்கிருந்து தன் மகள் வாழும் வாழ்வை கண் நிறைய பார்த்துவிட்டு தன் இடத்திற்கு திரும்ப, பாண்டியன் மறுத்துவிட்டான்.
அதோடு ஆத்தாமார்கள் இருவரோடு சேர்ந்து குடும்பமே அவரை விடாமல் தங்களோடு இருக்க சொல்ல,
“இல்லைங்க பொண்ண குடுத்த இடத்துல உக்காந்தி சாப்பிடுவது தப்புங்க.... நான் அங்கயே போறேனுங்க...” என்றார்.
“அய்யா நீரு சொல்றது சரி தான். ஆனா உம்ம மகளை கொஞ்சம் யோசிச்சு பார்த்தியா...? அது கண்ணெல்லாம் கலங்கி போய் இருக்குது.. உன்னை அவ உசுர குடுத்து காப்பாத்துனதுக்கு இது தான் நீ செய்யிற கை மாறா...? உன்னை அவ எப்படி வாழ வைக்கனும்னு ஆசை பட்டு இருக்கா...?”
“நீரு எங்கயும் போக கூடாது... இங்க நம்ம ஆலையை பார்த்துக்கிட்டு பக்கத்துலையே உமக்கு ஒரு வீடு கட்ட சொல்றேன்... எங்களோட இருக்க தானே உமக்கு கூச்சம். உனக்குன்னு தனியா ஒரு வீடு... ஆனா நீ தூங்க மட்டும் தான் அங்கன போகணும்...” என்று வெள்ளியம்பலத்தாரும் சொல்ல, வேறு வழியில்லாது அருகிலே அவருக்கு என்று ஒரு வீடு கட்டி கொடுத்து தங்களோடே வைத்துக்கொண்டார்கள்.
தூங்க மட்டுமே அங்கே சென்றார். மத்த நேரம் முழுவதும் ஆலை, வயல் வேலை, தோப்பு என்று சுற்றி வருவார். உணவு உண்ணும் நேரம் எல்லோரோடும் அமர்ந்து உண்டுவிட்டு, தாத்தா சம்மந்தியிடம் வெகு நேரம் பேசிவிட்டு அதன் பின்பே உறங்க வருவார்.
ஊரில் அவருக்கு என்று தனி மதிப்பு வந்தது. அவரை மதிக்காத சொந்தங்கள் எல்லாம் தேடி வந்து உறவு கொள்ள, அதை பார்க்கும் பொழுது பொழிலிக்கு தன் மாமனை கட்டிக்கொள்ள வேண்டும் போல தோன்றியது.
ஆனால் மாமன் தான் இன்னும் வழிக்கு வராமல் முரண்டு பிடித்துக்கொண்டே இருக்கிறான். என்ன செய்வது என்று இவளும் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு சேட்டை செய்து அவனிடம் வாங்கி கட்டிக்கொள்ளுவாள்.
அதுவும் அவர்களிடம் கணக்கு பார்க்கும் முனுசாமியிடம் தினமும் கணக்கு கத்துக்க சொல்லி சொல்ல, அவரை ஏய்த்துவிட்டு வயலில் இறங்கி கலை பறிப்பது, நாத்து நடுவது, கலை வெட்டுவது, அறுவடை என்று வயல் வேலையை பார்க்க தொடங்கிவிடுவாள்.
அதில் பெரும் காண்டு அவனுக்கு. ஆனாலும் அவ்வப்பொழுது அதை வைத்து தன் காரியங்களை சாதித்துக்கொள்ளுவான் அவளிடம். அவளுக்கும் கணக்கை விட இவனை கரெக்ட் பண்ணுவது மிக எளிதாக இருக்கவும் பாண்டியன் கொடுக்கும் தண்டனையை ரசித்தே வாங்கிக்கொள்ளுவாள்.
இரண்டு குழந்தையை தாங்கி இருந்ததால் அவளின் வயிறு ஆறு மாதத்திலே மிகவும் பெரியதாக இருந்தது.
எட்டு மாதத்தில் வயிறு கீழ் நோக்கி சரியவும் தொடங்க, எல்லோருக்கும் பயமாகி போனது. பாண்டியனுக்கு எண்ணமெல்லாம் பொழிலி மட்டும் தான்.
அவளை ஆடாமல் அசையாமல் பார்த்துக்கொண்டான். ஆனால் அவளுக்கு தான் அது பயங்கர கடுப்பாக இருந்தது.
அப்படி இப்படி என்று எல்லோரையும் பயமுறுத்தி விட்டு பொழிலி பாண்டியனுக்கு இரண்டும் ஆண் வாரிசாக பிறந்தார்கள் இரட்டையர்கள்.
வெறும் மூன்று மாதங்கள் மட்டுமே பொழிலிக்கு விடுமுறை விட்டு இருந்தான்.
அதன் பிறகு எப்பொழுதும் போல அவளை வைத்து செய்ய ஆரம்பித்தான்.
“சட்டையை போட்டுவிடு, பனியனை போட்டு விடு, தலை சீவி விடு, வாசலில் வந்து நில்...” என்று. அவளும் அலுங்காமல் அவனது வேலைகளை செய்ய ஆரம்பித்தாள்.
ஏற்கனவே இரண்டு, இப்பொழுது இன்னும் இரண்டு சொல்லவும் வேண்டுமா...? நால்வரும் அவளை பாராபட்சம் பாராமல் வைத்து செய்தார்கள்.
Nice a





