“அன்னைக்கு குழந்தை கேட்டீங்களே... எதுக்காக? உங்க பாட்டி கேட்டாங்களா?” என்று அவனிடம் கேட்டாள்.
“ம்ம்ம் கொஞ்சி விளையாட கொள்ளு பேரனோ பேத்தியோ வேணுமாம். அது தான் அன்னைக்கு உன்கிட்ட டிமேண்ட் பண்ணேன்” என்றவன்,
“அன்னைக்கு டாக்டர் கிட்ட என்னடி சொன்ன... என்னால முடியாதுன்னா சொன்ன... இன்னைக்கு இருக்குடி உனக்கு” என்றவன் அவள் மீது புயல் வேகத்தில் தன் ஆதிக்கத்தை செலுத்தினான்.
அவனது வேகத்தை தாங்க முடியாமல் அவனின் தோளை அழுந்த பற்றிக் கொண்டவளுக்கு அவனது கோவத்தின் வீரியம் இன்னும் இருப்பதை கண்டு மலைத்து தான் போனாள்.
அது அவ்வளவு எளிதில் அடங்காது என்று எண்ணி கொண்டவளுக்கு அவனது கோவத்துக்கு தான் அதிகமாக பகடை காயாக மாறுவோம் என்பது மட்டும் புரிந்துப் போனது.
அவனது கோவத்தை இலகுவாக கடந்து வர கற்றுக்கொண்டவள், அவன் கோவப்படும் நேரமெல்லாம் தன் முந்தானையால் அவனுக்கு காதல் வீசினாள். அதன் பிறகு எங்கிருந்து அகத்தியன் கோவப்படுவது.
தமிழின் அரவணைப்பில் அகத்தியன் பரிபூரணமாக மயங்கி இருக்கிறான். இனி வரும் எல்லா காலமும் ஊடல் கூடலோடு இவர்களது வாழ்க்கை நகரும் என்பதில் கொஞ்சமும் ஐயமில்லை.
தன் மகளுக்காக இது வரை எதையும் செய்யாமல் இருந்த செல்லப்பா துணிந்து தன் மருமகனை அரசியல்வாதி ஆக்கி விட்டார்.
அதுவும் தன் மகனிடம் இருந்த தொழில்துறை அமைச்சர் பதவியை வாங்கி மருமகனுக்கு கொடுத்து விட்டு மகனுக்கு வேறு ஒரு துறையை கொடுத்து விட்டார். அதில் தாமரைக்கும் தயாளனுக்கும் அதித கோவம். ஆனால் செல்லப்பா எதையும் கண்டு கொள்ளாமல் தன் சொத்தில் சரி பாதியை தமிழ் பெயருக்கு மாற்றி விட்டு, குடும்ப நகைகளை எல்லாம் மகளுக்கு தான் சேர வேண்டும் என்று கோர்ட் ஆர்டர் வேறு வாங்கி வைத்து விட்டு ஒட்டு மொத்தமாக கம்பி நீட்டி விட்டார்.
எஸ்... மகள் தமிழுக்கும் மருமகன் அகத்தியனுக்கும் செய்வதை சிறப்பாக செய்து விட்டு வெளிநாட்டில் சேர்த்து வைத்த சொத்துக்களோடு சிறு வயது பெண்ணை கூட்டிக்கொண்டு கண்டம் விட்டு கண்டம் தாண்டி விட்டார்.
இன்னும் எத்தனை நாளுக்கு தான் அடிமையாக வாழ்வது என்று எண்ணினாரோ என்னவோ.. மொத்தமாக தாமரைக்கு முழுக்கு போட்டு விட்டு சுதந்திரமாக சுற்றி திரிய கிளம்பி விட்டார் செல்லப்பா.
போனில் அடிக்கடி தொடர்பு கொண்டு தாய் தந்தையோடு பேசிக் கொள்பவர், அவர்களுக்கு தேவையான அனைத்தையும் ஏற்பாடு செய்து இருந்தார்.
அவரை ஒன்றும் செய்ய முடியாமல் போனதில் கடுப்பு ஆன தாமரை தமிழை நெருங்க பார்க்க, அகத்தியன் சும்மாவா விடுவான் அவரை.
ஓட ஓட விரட்டி விட்டான். ஏற்கனவே அவன் தொழில் அதிபர். இதில் அமைச்சர் பதவி வேற சொல்லவும் வேண்டுமா அவனது திறத்தை. தமிழுக்கு புல் ப்ரோடேக்ஷன் குடுத்து பாதுகாத்து இறக்கிறான்.
அவன் வைத்த இரும்பு வளையத்தை தாண்டி ஒருவராலும் உள்ளே நுழைய முடியாது. இனி தாமரை செத்த பாம்பு தான். தயாளனும் பெரிதாக அவரை மதிக்கவில்லை. அவர் கேடு நிறைந்த வாழ்க்கையை பற்றிக் கொண்டானே தவிர தாயை கவனிக்கவில்லை. உல்லாசமாக இருந்துக் கொண்டான்.
எல்லா சொத்துக்களும் முறைப்படி பிரிக்கப் பட்டதால் அவனாலும் எதுவும் செய்ய முடியவில்லை. அதனால் தமிழிடம் இருந்து சொத்தை பறிக்கும் எண்ணத்தை கை விட்டுட்டு தன் வழியை பார்த்துக் கொண்டு சென்றான்.
இதோ அதோ என்று நாட்கள் நகர்ந்து இருந்தது. இப்போது தமிழ் கருவுற்று இருந்தாள். அதனால் தாத்தா பாட்டி அவளை பார்க்க வந்து இருந்தார்கள். அப்படி இல்லை என்றலும் வாரத்துக்கு ஒரு முறை வந்து பார்த்து விட்டு ஓரிரவு தங்கி விட்டு தான் செல்வார்கள் இருவரும். நாச்சியும் அவர்களை வற்புறுத்தி இருக்க வைத்து விடுவார். அப்படி அன்றைக்கு எல்லோரும் கூடி இருந்த சமயம் தான்,
“ம்கும் காலம் போன கடைசில உங்கப்பனுக்கு புத்தி வந்து இருக்கு பாரு.. இப்பவாச்சும் சொத்தை பிரிச்சு குடுத்து இருக்கான்” என்று நொடித்துக் கொண்டார் பாட்டி.
“விடுங்க பாட்டி... அவர் அவர் விருப்பத்துக்கு ஏதோ செய்யிறாரு. அவ்வளவு தான்” என்று தமிழ் சொல்லிவிட்டு திரும்ப,
“பால் எடுத்துட்டு மேல வா” என்று அகத்தியன் கட்சி ஆபிஸ், கம்பெனி, அலுவலகம் என பிசியாக சுற்றி விட்டு அப்பொழுது தான் வீட்டுக்குள் நுழைந்தான்.
“இதோ வரேங்க” என்றவள் அவனுக்காக மாலை நேரத்து சிற்றுண்டி எடுத்து கொண்டு மேலே விரைந்தாள். அவன் வரும் முன்பே தலை வாரி, மூன்று சரம் குண்டு மல்லிகையை வைத்து பளிச்சென்று இருந்தாள்.
இது நாச்சியின் கட்டளை. அதனால் சரியாக அதை செய்து விடுவாள்.
அறைக்குள் நுழைந்த தமிழ் குளியல் அறையில் இருந்து அகத்தியன் குரல் கொடுக்க வேகமாய் உள்ளே நுழைந்தாள்.
“சோப்பு இங்க தானே இருக்கு... இதை எடுத்து குடுக்க ஒரு ஆளா?” முறைத்துக் கொண்டே அவனிடம் நீட்டினாள்.
அதை வாங்கிக்கொண்டே,
“என்னடி வாய் ரொம்ப தான் நீளுது” என்று கேட்டுக் கொண்டே அவளை தன்னருகில் இழுத்துக் கொண்டவன்,
“உங்கப்பனுக்கு ரொம்பதான் சப்போர்ட் பண்ற... போன ஆளு சும்மா போகாம பதினெட்டு வயசுல ஒரு குட்டியையும் கூட்டிட்டு போய் இருக்கார் தெரியுமா?” என்றான் நக்கலாக.
“சரி விடுங்க வயசான காலத்துல தான் எல்லாம் அனுபவிக்கணும்னு இருக்கு... அதை யாரால மாற்ற முடியும்” என்று சிரித்தாள்.
“அப்படியா அப்போ எனக்கு வயசு இருக்கு.. நான் இப்பவே அனுபவிக்கவா?” என்று புருவத்தை வளைத்து கேட்டான். அவனை ஒரு மார்க்கமாக பார்த்த தமிழ்,
“உங்க உடம்புல இன்னும் தழும்பு இருக்கு தானே... இல்ல புதுசா ஏதாவது தழும்ப வரவைக்கணுமா?” அதிராமல் கேட்டாள்.
“விவரம் தான்டி” என்று முறைத்தவன் அவளை தன் அருகில் இன்னும் நெருக்கமாக இழுத்துக் கொண்டான்.
அவனது அணைப்பில் அடங்கியவள்,
“உங்களுக்கு அப்படி ஒரு ஆசை இருக்கா ங்க” என்று மனதில் நிம்மதி இல்லாமல் கேட்டவளை சின்ன சிரிப்புடன் பார்த்தவன்,
“உன்னை தாண்டி என் கண்ணு எதையும் பார்க்காதுடி... அதுக்கு உன் மேல நான் கொண்ட கா...” என்று சொல்ல வந்தவன், தமிழின் கண்களில் தெரிந்த மின்னலை கண்டு சட்டென்று “அன்பு தான் சாட்சி” என்று மாற்றினான். அதில் மாற்றம் கொண்டவள்,
“உங்க வாயில இருந்து காதலன்ற வார்த்தையை வாங்கல. என் பேரு தமிழ் இல்ல” சிலுப்பிக் கொண்டவளை வளைத்துக் கொண்டவன்,
“அதை அப்புறம் பார்த்துக்கலாம் இப்போ என்னை கவனிடி” என்று அவளை ஷவரில் நனைய விட்டு ஈரத்தில் அவள் நின்ற கோலத்தை கண்ணெடுக்காமல் இரசித்துப் பார்த்து புசிக்க ஆரம்பித்தான்.
இருவருக்குள்ளும் ஆயிரம் முரண்பாடுகள் இருந்தது. ஆனால் அதை எல்லாம் ஒன்றுமில்லாமல் செய்து இருவரையும் சேர்த்து வைத்தது தூய நேசம் என்றாலும் அதை செயலாக்கி கொடுக்க அவர்களை சுற்றி நல்ல உறவுகள் இருந்தது.
இப்போ வரைக்குமே பூவரசியோடு தமிழ் ஜாலியாக வெளியே சுற்றுவாள். நேரம் கிடைக்கும் பொழுது அகத்தியன் சில நேரம் சேர்ந்துக் கொள்வான். அதே நேரம் வீட்டில் நாச்சியாருக்கு பயந்துக் கொண்டு மாமியாரும் மருமகளும் அடக்க ஒடுக்கமாக இருந்துக் கொள்வார்கள்.
நல்ல நட்பு அவர்களுக்கு இடையில் இருந்தது. ஆராவரம் எல்லாம் வெளியில் தான். உள்ளே பொறுப்பான பெண்மணிகளாக இருந்தார்கள்.
வஞ்சம் கெட நட்பு பேணு என்பது தான் விதி. அதை செயலாக்கிக் கொண்டார்கள் மாமியாரும் மருமகளும்.
“இன்னைக்கு ஸ்விம்மிங்பூல்ல ரோஜா இதழ்களை நிரப்ப சொல்லி சொல்லி இருக்கேன்... ப்ளஸ் கேண்டில்ஸ்.. மேடம் ரெடியா ஒன்பது மணிக்கு வந்திடுங்க” என்றவன் கருவுற்று இருந்தவளை மென்மையாக கையாண்டான்.
“மாட்டேன்... இன்னைக்கு வீக் எண்டு.. எல்லோரும் வந்து இருக்காங்க. ஜாலியா சிரிச்சு பேசிட்டு இருக்கணும். சோ நான் வர மாட்டேன்” என்றாள் சிணுங்கலாக.
“அதெல்லாம் எனக்கு தெரியாதுடி... நீ வரணும் வந்தே ஆகணும்.. ஒரு நிமிடம் தாமதம் ஆனாலும் அத்தனை பேர் முன்னாடியும் உன்னை தூக்கிட்டு வந்திடுவேன். அப்புறம் மானம் போச்சு மரியாதை போச்சுன்னு சொல்லிட்டு இருக்க கூடாது” என்று கட்டளை போட்டவன் விழியால் அவளை அளந்தது போதும் என்று இதழ்களாலும் விரல்களாலும் அளக்க ஆரம்பித்தான்.
ஏனெனில் ஒருமுறை அப்படி தான் வார இறுதியில் அனைவரும் வந்து இருக்க, இவள் அறைக்கு வர மிகவும் தாமதம் ஆனது. அன்றைக்கு பொறுத்தவனால் இந்த முறை பொறுக்காமல் போக, அத்தனை பேர் முன்னாடியும் அவளை கையில் தூக்கிக்கொண்டு மேலே வந்து விட்டான்.
அடுத்த நாள் அவளால் யாரையும் ஏறெடுத்து பார்க்க முடியாமல் போனது. அந்த அளவுக்கு அவளை வெட்கப்பட வைத்து இருந்தான். அதனால் அவனது மிரட்டலுக்கு பயந்து சரியாக ஒன்பது மணிக்கு அவனருகில் வந்து நின்றாள் தமிழ்.
“ஆனாலும் இப்படி எல்லாம் பயமுறுத்த கூடாது ங்க” என்று சிணுங்கியவள் அவன் கொடுத்த மெல்லிய புடவையை கட்டிக்கொண்டு தயார் ஆனாள்.
இருவருக்கும் இடைவெளி என்பதே கிடையாது. ஓரளவு மனதில் இருப்பதை இருவரும் பகிர்ந்துக் கொள்ள தொடங்கி இருந்தார்கள். மன கசப்பு முற்றிலும் நீங்கி இருவருக்கும் புது உலகம் தொடங்கி இருந்தது. அதன் புது வரவாய் அவர்களின் குழந்தையின் வரவு இருக்க மகிழ்ந்துப் போனார்கள்.
குழந்தை சுமந்து இருப்பவளை அதிகம் நாடாமல் கவனமாக பார்த்துக் கொண்டான். அவளோடு இருப்பதே பல நேரம் அவனுக்கு நிம்மதியை கொடுத்தது.
குளித்து விட்டு ஈரமாய் இருந்த அவனது தலையை தன் முந்தானையால் துடைத்து விட்டவள் அவனை இழுத்து தன் மார்பில் சூடிக் கொண்டாள் தமிழ்.
தமிழுக்கு எப்பொழுதும் அகத்தியன் இன்றியமையாதவன் அல்லவா... அதே போல தமிழையும் அகத்தியனையும் என்றைக்கும் பிரிக்க முடியாது... உயிரோடு இணைந்த உடம்பு போல ஒன்றை ஒன்று தழுவியே இருப்பவர்கள்.
அவளின் மணி வயிற்றில் முத்தம் குடுத்த அகத்தியனை நிமிர்த்தி அவனின் இதழ்களோடு தன் இதழ்களை பதித்தாள் தமிழ்.
ஒவ்வொரு கூடலிலும் தமிழ் விரும்பிய நெற்றி முத்தத்தை முத்தாய்ப்பாய் வைத்து அவளின் மனதை பரிபூரணமாக்கினான் அகத்தியன். அவளின் முந்தானையில் தான் அவனின் காதல் சோலையே பூ பூக்கிறது என்பதை கண்டு கொண்டவன் அவளை கொண்டாடி தீர்க்கிறான்.
இனி எல்லாம் சுகமே...
நன்றி...!
வணக்கம்...!
நைஸ் எண்டிங்க ரைட்டர்👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻