அவன் விடிய விடிய கதை படிக்க சிணுங்கலுடன் வேறு வழியில்லாமல் அவனுக்கு இசைந்து கொடுத்தாள் பொழிலி.
விடியற்காலையில் பொழுது புலர மெல்ல விழிகளை சுழற்றி சூழலை அவதானித்தான் பாண்டியன். கருங்குயில் அழகாக ஒரே ரிதமாக “கூ கூ கூ” என்று இசை படிக்க, அதனோடு ஒத்து போய் மீன்கொத்தி பறவை அழகாக சத்தம் எழுப்பிக்கொண்டு இருந்தது...
இரவில் மழை வந்து போனதற்கான அடையாளமாய் மண்ணின் ஈர வாசமும், கொட்டும் அருவியின் இரைச்சலும் ஒருங்கே இணைய பக்கத்தில் இருந்த பெண்ணவள் லேசாக போர்வை விலகியதில் தவித்து போனாள்.
தூக்கத்திலே குளிர் வந்து தாக்க, வேகமாய் சிறிய மெத்தை போன்ற இருக்கும் ரஜாயை கழுத்துவரை போர்த்திக்கொண்டாள்.
அந்த சின்ன செயலில் தொலைந்தவன் தானும் போர்வைக்குள் புகுந்துக்கொள்ள, வேகமாய் அவனை தள்ளிவிட்டாள்.
“இங்க பாருங்க... இரவு முழுசும் என்னை கொஞ்சம் கூட தூங்க விடல... இப்பவாச்சும் தூங்க விடுங்க... இல்ல இப்படியே வெறும் போர்வையோட போடி நடையா நடந்து ஊருக்கே போயிடுவேன் பார்த்துக்கோங்க...” என்றாள்.
“என்னடி மிரட்டுறியா... எங்க என்னை தான்டி போய் பாருடி பார்க்கலாம்...” கோவம் கொண்டவன்,
வேண்டுமென்றே அவளிடம் வன்மையாக சரசம் செய்ய ஆரம்பிக்க, சோர்ந்து போனாள்.
“யோவ் மச்சான் நிஜமா உடம்பெல்லாம் ரொம்ப அசதியா இருக்குய்யா... இந்த ஒரு முறை தான். பொறவு என்னை தூங்க விடனும் சரியா...?” பாவமாய் கேட்டாள்.
அதில் தொலைந்தவன், “சும்மாடி உன்னை லேசா சீண்டி விட்டேன்... நீ தூங்கு...” என்று அவளுக்கு தட்டி கொடுக்க முதல்முறை அவனது உள்ளத்தில் இருந்த தூய்மையான தாய் அன்பை உணர்ந்தாள். இதற்கு முன் அவனது அன்பை மட்டும் அனுபவித்து இருந்தாள். ஆனால் இன்று ஒரு குழந்தையாய் தன்னை தாங்கி தாயாய் சேவகம் செய்தவனை எப்படி அவளின் வாழ்விலிருந்து கடந்து போக முடியும்.
நினைக்கும் பொழுதே நெஞ்சை அடைத்துக்கொண்டு வந்தது. அவனது மார்பில் தலை சாய்த்து படுத்து இருந்தவளுக்கு கண்களில் கண்ணீர் நிறைந்தது. அது அவனது மார்பில் வழியும் முன்பே தன் ஈர இதழ்களால் அவனது இதயத்தை முத்தமிட்டாள்.
திடிர் என்று அவள் முத்தம் கொடுக்கவும் அவனது முகத்தில் மகிழ்ச்சியின் சாயல் தெரிந்தது... தன்னோடு இன்னும் சேர்த்து அனைத்துக்கொண்டவன், அவளது தலையை மிக மென்மையாக தடவி கொடுத்தான்.
அதில் இன்னும் அவள் உடைந்து போக, சட்டென்று வெடித்து அழுதே விட்டாள். அவளிடமிருந்து இப்படி ஒரு பாவனையை எதிர்பார்க்காதவன் திகைத்து போனான்.
“என்னடி ஆச்சு... ஏன் இப்படி அழற... ரொம்ப வலிக்கிதா...? இனி வலிக்கிற மாதிரி முரட்டு தனமா நடந்துக்க மாட்டேன்டி...” என்று ஆறுதல் சொன்னவனை நிமிர்ந்து பார்த்தாள்.
பார்த்தவளின் விழிகளில் இன்னும் நீர் பெருக்கெடுத்தது. அவன் இன்னும் ஏதே ஏதோ சொல்லவர, அவனது பேச்சை தடுக்கும் விதமாய் தன் இதழ்களை கொண்டு அவனது வாயை அடைத்தவள் சில நிமிடங்களுக்கு அப்படியே இருந்தாள்.
அவளின் இந்த போக்கு கண்டு சற்று குழம்பி தான் போனான்.
“என்னடி ஆச்சு...”
“முத்தம் குடுக்கணும்னு தோணுச்சு குடுத்தேன்...” என்றாள்.
“அடியேய் அது தெரியுது. அதுக்கு முன்னாடி எதுக்குடி அழுத... ஹாங் காலையில தூங்கி ஏந்திரிச்சு அழுதா அந்த நாள் ரொம்ப நல்லா நாளா இருக்குமாம்...” நொடித்தவள், போர்வையை கட்டிக்கொண்டே தன் உடைகளை எடுத்துக்கொண்டு அருவிகரைக்கு சென்றாள்.
“கொஞ்சம் கூட பயமே இல்ல போல...” நக்கலுடன் கேட்டான்.
“எப்படியும் இங்க யாரும் வர போறது இல்ல... பார்த்தா நீங்க தான் பார்க்க போறீங்க... எனக்கு ஒண்ணும் உங்க கிட்ட கூச்சம் இல்ல... பார்த்தா பார்த்துக்கோங்க...” சொன்னவள் ஓடி போய்விட்டாள் அவனது கரத்தில் சிக்காமல்.
“எப்படியும் அருவி கரைக்கு தானே போவ... இந்தா பின்னாடியே வரேன்டி...” மீசையை முறுக்கியவன் துண்டை எடுத்துக்கொண்டு வேகமாய் விரைந்தான்.
அவன் வருவதற்கு முன்பே பாவடையை அழகாக மேலே ஏற்றி கட்டிக்கொண்டு கொட்டும் அருவியில் நனைந்தாள். அருகில் நெருங்கி வந்தவன், அவள் நனையும் அழகை விழிகளை அகற்றாமல் பார்த்துக்கொண்டு இருந்தான். அவனது பார்வை கொஞ்ச நேரம் கண்டுகொள்ளாமல் இருந்தவள் போக போக அவனது பார்வை மிகவும் தீவிரமாக போக, அவள் தான் இறங்கி வர வேண்டியது இருந்தது.
“இப்போ எதுக்கு இப்படி ஆளை முழுங்குற மாதிரி பார்க்குறீங்க...” கடுப்புடன் கேட்டாள்.
அவளது கடுப்பை சிறிதும் கண்டுகொள்ளாமல் இன்னும் அதிகமாக பார்த்தான்.
“யோவ் சொல்லிக்கிட்டே இருக்கேன்... இப்படி திங்கிற மாதிரி பார்த்தா வெட்கமா இருக்காதா... போயா அந்த பக்கம்... சும்மா சும்மா பார்த்துக்கிட்டே...” என்றவள் அவனை நெருங்கி அவன் தோளில் இருந்த துண்டை எடுத்து அவனது கண்களை எட்டி கட்ட முயன்றாள்.
ஆனால் அதற்குள் அவளை லாவகமாக அப்படியே தலைக்கு மேல் தூக்கியவன்,
“இந்த வாய் பேசுறதுக்கு உன்னை அப்படியே இந்த குளத்துல தூக்கி போடறேன் இருடி...” என்றவன் அவள் எதிர் பாரா சமயம் அருவியின் கீழே இருந்த குளத்தில் தூக்கி விசினான்.
“அடப்பாவி... உன்னை கெடா மீசையை பார்த்தும் ஓடிப்போகாம உன்னை கட்டிக்கிட்டேன் பத்தியா எனக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்...” என்று கத்திக்கொண்டே அந்த நீர் நிலையில் சென்று விழுந்தாள். அவளை வீசிவிட்டு தானும் அந்த நீரில் குதித்தவன், அடிஆழம் சென்று மீண்டவள் அசால்ட்டாய் நீரில் நீந்திக்கொண்டு இருந்தவனின் முதுகிலே நான்கு மொத்து மொத்தினாள்.
“கொலைக்காரா கொலைக்காரா... கேக்க ஆளு இல்லாத அப்பாவின்னா நீ என்ன வேணா பண்ணுவியாய்யா...?”
“எத நீ அப்பாவியா...?”
“பின்ன ஒண்ணும் தெரியாத பச்சை மண்ணை என்னென்னவோ பண்ணி கெடுத்ததும் இல்லாம இப்போ கொல்ல வேற செய்யிற...?”
“ஏன்டி ஆறு அடி கூட இல்லாத இந்த குளத்துல உன்னை தள்ளிவிட்டா நீ செத்து போயிடுவியா..?”
“ஆமா, முன்ன பின்ன நீச்சல் தெரியாதவனுக்கு ஒரு குவளை தண்ணீர் கூட ஆபத்து தான் தெரியுமா...” என்று நொடித்துக்கொண்டாள்.
“எனக்கு தெரியாது நீ சொல்லி குடு...” என்றவனது பார்வை மோக பார்வையாய் மாற,
“ஆத்தாடி தொலைஞ்சேன்...” என்று கரை ஏற பார்க்க, அதற்கு அவன் விட்டால் தானே...! அவளது இடையை பற்றி இழுத்தவன் தன்னோடு சேர்த்து அனைத்து அருவி நீரில் மின்னிய அவளது இதழ்களை தன்னக்குள் இழுத்து சுவைக்க தொடங்கியவனின் கைகள் அவளை அணு அணுவாய் அளந்து பார்க்க தொடங்கியது.
அவனது தொடர் படையெடுப்பில் ஆயுதங்கள் எதுவும் இல்லாமல் விரும்பியே தொலைந்து போனாள். நீரில் ஒரு மோக களியாட்டம் போட, அந்த நீரே சூடாகி போனது.
Nice





