அத்தியாயம் 24

 

Admin
(@ramya-devi)
Member Admin
Joined: 12 months ago
Posts: 960
Topic starter  

மலையமான் அலுவலகத்தில் இருந்து வந்ததும் வராததுமாக தேனருவியை சுவரின் மறைவுக்கு இழுத்துக் கொண்டு போய் இதழ் முத்தம் வைத்து, அவளின் உயிரை மெல்ல மெல்ல அந்த முத்தத்தின் வழியே எடுக்கப் பார்க்க மூச்சுக்கு பெரிதாக திண்டாடிப் போனாள்.

அதோடு அவளின் யோசனையும் மழுங்கிப் போய் அவனின் முத்தத்தோடு உருகிப் போக தொடங்க, தன்னையே நொந்துக் கொண்டவள், அவனின் இதழ் உருக்கும் முத்தத்தில் முழுதாக மூழ்க முடியாமல் கரைக்கும் நீருக்குமாய் அல்லாடும் படகை போல ஆனாள்.

ஒரே முத்தம் தான். முற்றிலும் அவளை தன் வசமாக்கிக் கொண்டான் மலையமான். அவனது போக்கில் விட எண்ணினாலும் உள்ளுக்குள் சின்னதாய் ஒரு போராட்டம் அவளுள் இருந்துக் கொண்டே இருந்தது.

அவளின் நிலை இப்படி என்றால் மலையமானின் நிலையோ வேறு மாதிரி இருந்தது. அலுவலகத்தில் வேலை பார்க்கவே அவனால் முடியவில்லை. பார்க்கும் காகிதமெல்லாம் பெண்ணவளின் ஈர இதழ்கள் தான் தெரிந்தது.

அவள் கட்டும் சேலைக்கு நடுவில் தெரியும் மெல்லிய  இடுப்பு தான் கண் முன் வந்து தொலைத்தது.

“இதென்னடா.. என்னைக்கும் இல்லாம இப்படி அவளோட ஒவ்வொரு பார்த்தும் தனியா தனியா தெரியுது.. இது வேலைக்கு ஆகாது..” என்று வாய் விட்டு முணகியவன் ரவுன்ஸ் பார்க்க சென்று விட்டான். செல்லும் பொழுது அவனின் கவனம் சுத்தமாக அவனிடம் இருக்கவே இல்லை. காணும் காட்சி எங்கும் பெண்ணவளின் பிம்பமே தெரிய தலையை பிடித்துக் கொள்ளாத குறையாகிப் போனான் மலையமான்.

ஒரு கட்டத்தில் தன் தலையை பிடித்துக் கொண்டு எரிச்சலில் அதிக அளவு காந்தினான். பெண்ணவளிடம் சரியும் பொழுது அவனது நாசியில் நுழையும் மெல்லிய நறுமணம் வேண்டும் என்று அவனின் மூச்சுக்குழல் ஏங்கிப் போய் மூச்சை நிறுத்துக் கொள்ளப் பார்த்தது. கைகளோ பெண்ணவளின் இடையை இறுக்கிப்  பிடித்தால் ஒழிய வேறு வேலை செய்ய மாட்டேன் என்று போராட்டம் செய்தது.

அவனின் இதழ்களோ அழுத்தமாய் மூடிக் கொண்டன. எனக்கு தேனருவியின் இதழ் அமுதம் தான் வேண்டும் என அவனின் எல்லாம் உறுப்புகளும் போராட்டத்தில் இறங்கி விட, இதற்கு மேல் தாங்க மாட்டாதவனாய் கிளம்பி வீட்டுக்கு வந்து விட்டான்.

வந்தவன் தன்னை எதிர்க்கொண்டு வரும் பெண்ணவளின் இயல்பான அழகில் முற்றிலும் நிலை இழந்துப் போக, அவளின் இடையோடு வளைத்து சுவரில் சாற்றி அவள் மீது மொத்தமாக கவிழ்ந்து விட்டான்.

இதற்கு முன்பு தங்கை பார்க்க வேண்டும், தங்கைக்காக அவளை நெருங்கியவன், முதல் முதலாக தங்கையின் கண்ணில் பட்டுவிடுமோ என்று அரை மாத்திரையில் யோசித்து சுவரின் மறைவுக்கு பெண்ணவளை கொண்டு போய் விட்டான்.

ஆனால் தேனருவிக்கோ அவனின் தங்கை அறைக்குள் இருப்பதை பார்த்து தான் தன்னை நாடுகிறான், தங்கைக்காக தான் தன்னை நாடுகிறான் என்று எதிராக புரிந்துக் கொண்டவள் அவனுடன் இணைந்தாள்.

என்றைக்கும் இல்லாத ஒரு ஆவேசம் அவனது இதழ் முத்தத்தில் இருப்பதை பார்த்துத் திகைத்துப் போனவளுக்கு கணவனின் கைகள் இடையை இறுக்கிப் பிடித்ததில் இருந்து அத்துமீறி மேலே பயணம் ஆக சட்டென்று அவனது கையை இறுக்கிப் பிடித்து தடை போட்டு விட்டாள்.

ஆனால் அவனுக்கு அவளை உணர்ந்துப் பார்க்க தோன்றியதோ என்னவோ அவளின் கையை சுலபமாக ஏமாற்றி விட்டு அவளை உணர்ந்துப் பார்க்க முனைய, தேனருவிக்கு கண்களில் இருந்து கண்ணீர் வந்து விட்டது. தங்கைக்காக இவ்வளவு தூரம் இறங்கிப்போவானா என்று வேதனையில் நெஞ்சம் விம்மியது.

இன்னும் இதழ் முத்தம் தொடர்ந்துக் கொண்டு தான் இருந்தது. அது ஒரு பக்கம் இருக்க, இது  ஒரு பக்கம் அரங்கேற, நொடி கூட தாமதிக்காது அவனிடம் இருந்து வெடுக்கென்று தன் இதழ்களை பிடுங்கிக் கொண்டு அவனின் தொடுகையில் மெழுகாய் உருகும் தன் உடலை பறித்துக் கொண்டு அழுது சிவந்த கண்களுடன்,

“உங்க தங்கச்சிக்காக இவ்வளவு தூரம் கீழிறங்கி கேவலமா நடந்துக்குவீங்கன்னு நான் கொஞ்சமும் எதிர் பார்க்கல” சொல்லி விட்டு கீழே இறங்கி ஓடி விட்டாள்.

அவள் போன பிறகும் கூட அவனால் இயல்புக்கு திரும்பவில்லை. அகோர பசி வேளையில் பாதியில் பறித்துக் கொண்டு உணவை போல அவனது நிலை இருக்க கொதித்துப் போனான்.

அவனின் மொத்த தேகமும் தேனருவியை அடைய ஆவலாய் சீற்றம் கொண்டு இருந்தது. அவனின் கைகள் நடுங்கவே ஆரம்பித்து விட்டது. அவனின் முரட்டு இதழ்களோ பெண்ணவளை ருசிப்பார்க்க காய்ந்து கிடந்தது. அவளின் ஈர இதழ்களின் அமுதம் கிடைத்தால் மட்டுமே அவனின் நாக்கும் வாயும் தன் வறட்சியை நீக்கிக் கொள்ளும் நிலைக்கு வந்து விட்டான்.

கண்கள் ஏகத்துக்கும் சிவந்து காய்ச்சல் கண்டவன் போல கொதித்துக் கிடந்தான். இப்படி பாதியில் விட்டுட்டு போனவளின் மீது கட்டுக் கடங்காமல் கோவம் பெருக அவளை தேடி போகத்துடித்த கால்களை சிரமப்பட்டு கட்டி நிறுத்தி மீண்டும் அலுவலகத்துக்கு கிளம்பி விட்டான்.

அவளின் பின்னாடி அப்படி போய் அலைந்து கெஞ்சி தான் எனக்கு என் உணர்வுகளை அடக்க வேண்டும் என்று எந்த தேவையும் இல்லை. இந்த மலையமானை அவ்வளவு எளிதில் யாராலும் வீழ்த்த முடியாது. என்னை அலைய விட நினைப்பவளை என் மேல பித்தாகி நான் அலைய விடுகிறேன் என்று தவறான புரிதலின் உச்சத்தில் அவள் மீது பகையை வளர்த்துக் கொண்டான் மலையமான். போதாதற்கு சபதம் வேறு போட்டுக் கொண்டான்.

தோட்டத்துக்கு ஓடியவள் தனியாக யார் கண்ணிலும் படமால அமர்ந்துக் கொண்டாள். அவளின் விழிகளில் கண்ணீர் ஆறு போல ஓடியது.

“இன்னும் எத்தனை நாளுக்கு இந்த வேதனை. நானும் மனுசி தானே.. எனக்கும் வலிக்கும் தானே.. என்னை பார்த்தா உனக்கு பாவமாகவே தெரியவில்லையா கடவுளே.. சீக்கிரம் இந்த வீட்டில் இருந்து எனக்கு விடுதலை கொடுத்து விடேன்” இறைவனிடம் கெஞ்சி கதறிக் கொண்டு இருந்தாள் நீண்ட நேரம்.

அப்பொழுது தான் அவளது காதில் “தேனு” என்கிற அழைப்பு விழுந்தது.

“தேனு தேனு” என்று விடாமல் அழைப்பு கேட்க திகைத்துப் போனவள் வேக வேகமாக முகத்தை துடைத்துக் கொண்டு தோட்டத்தை விட்டு வெளியே வர, அங்கே அவளை தேடி வந்து இருந்தாள் இளவரசி.

“ஹேய்.. நீயா என்னை கூப்பிட்ட?” மகிழ்ந்துப் போனாள்.

“ம்ம்” என்று அவள் தலையை ஆட்ட,

“ப்ச் அது தான் பேசுறியே.. அப்படியே பேச வேண்டியது தானே.. பிறகு எதற்கு தலையை ஆட்டுற..” சின்னதாய் கடிந்துக் கொண்டவளின் முகத்தில் இருந்த மகிழ்ச்சியை பார்த்த இளா,

“நான் பேசுனா உனக்கு பிடிக்குமா?” கேட்டாள்.

“என்ன நீ இப்படி கேட்டுட்ட? நீ பேசுனா யாருக்கு தான் பிடிக்காது. நீ மெல்ல மெல்ல இயல்புக்கு வருவன்னு நினைச்சேன். ஆனா இவ்வளவு சீக்கிரமா வருவன்னு நினைச்சுக் கூட பார்க்கல இளா. எவ்வளவு சந்தோசமா இருக்கு தெரியுமா? இரு இப்பவே உன் அண்ணனை வீட்டுக்கு வர சொல்றேன்” என்று தேனருவி பராபரக்க,

“அதெல்லாம் வேணாம்..  நாம ஒரு இடத்துக்கு போகலாமா?” தயங்கி தயங்கி கேட்டாள்.

“எங்கன்னு சொல்லு போகலாம்” என்று உடனே சம்மதம் கொடுத்து விட்டாள்.

“சைக்காட்ரிஸ்ட” என்றவளை அதிர்ந்துப் போய் பார்த்தாள்.

“என்ன சொல்ற இளா?”

“எனக்கும் வாழனும் தேனு. உன்னையும் அண்ணனையும் போல” என்றவளின் வார்த்தையில் இருந்த ஏக்கத்தை புரிந்துக் கொண்ட தேனுவிற்கு கண்கள் கலங்கிப்போனது.

“இதை தானே நாங்க எதிர் பார்த்தோம் உன்கிட்ட இருந்து” என்று அவளை கட்டிக் கொண்ட தேனு வேக வேகமாக மலையமானுக்கு போனை போட்டாள். ஆனால் அவள் மீது  இருந்த கடுப்பில் அவன் போனை எடுக்கவே இல்லை.

வேறு வழியில்லாது இளாவின் கணவனுக்கு போனை போட்டாள்.

அவனும் போனை எடுக்காமல் போக இவளே இளாவை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றாள். அப்பாயின்ட்மென்ட் வாங்கிக்கொண்டு காத்து இருந்தார்கள்.

பின் இவர்களின் எண் வர எழுந்து உள்ளேப் போனார்கள். இளாவின் பிரச்சனை எல்லாவற்றையும் தேனருவி விளக்கிக் கூற கேட்டுக் கொண்டு இருந்த மருத்துவர் இளவரசியை அழைத்து தனியாக ஒரு மணி நேரம் பேசினார்.

அதை வெளியே இருந்த மைக் கொண்டு தேனருவி கேட்டுக் கொண்டு இருந்தாள்.

இளாவின் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம் அவளின் தனிமை மட்டும் தான் காரணமாக மருத்துவர் சொல்ல கேட்டுக் கொண்டாள். இனியும் அந்த தனிமை அவளை நெருங்காது பார்த்துக் கொண்டாலே முற்றிலும் இயல்பாகி விடுவாள் என்று அவர் சொன்னார்.

“திணறிப் பேச்சினாலும் அவளை முழுமையாக பேச விடுங்க, அவளை பேச ஊக்கப்படுத்துங்க, அவ பேசும் பொழுது இண்டறேக்ட் பண்ணாம முழுமையா காது குடுத்து கேளுங்க, அவளுக்கு வாழுற தூண்டி விடுங்க என்று பல அட்வைஸ் சொன்னவர்,

ரெண்டு மாதம் வாரத்துக்கு ஒரு முறை என்கிட்டே கூட்டிட்டு வாங்க” அவர் சொல்ல கவனமாக கேட்டுக் கொண்ட தேனருவி அதே போல செய்தாள். மாதவன் நேராக மருத்துவமனைக்கே வந்து விட்டான்.

வந்த்தவனிடமும் மருத்துவர் சில அறிவுரைகளை சொல்ல கவனமுடன் கேட்டுக் கொண்டான். அவர் சொல்படியே நடந்தும் கொண்டான்.

கொஞ்சம் கொஞ்சமாக தாம்பத்திய வாழ்க்கையை ஆரம்பிக்க சொல்ல, அதை கையில் எடுத்துக் கொள்ளாமல், சின்ன சின்ன முத்தங்களில் இருந்து ஆரம்பித்தான் மாதவன்.

அதற்கு எந்த எதிர் விளைவும் இளவரசி காட்டவில்லை என்றாலும் கணவனை தடுக்கவில்லை. அடுத்த வாரத்தில் இருந்து அவளிடமும் சின்ன மாற்றம் தெரிய ஆரம்பித்தது. தானாகவே கணவனின் தலையை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள். அதை உணர்ந்தவனின் கண்களில் மெல்லிய கண்ணீர் படலம். அவனின் காதல் உன்னதமானது தானே.. இதோ அவள் மீது அவன் கொண்ட காதலுக்கு எதிர் விளைவு ஆற்றி விட்டாளே.. வேறு என்ன வேண்டும்..

வேலை முடிந்து வந்த மாதவன் பெண்ணவளை அப்படியே தூக்கி தட்டாமலை சுற்றி இளாவின் இதழ்களை கவ்விக் கொண்டான். அவனின் இந்த செயலை எதிர் பார்க்காத இளா கொஞ்சம் பயந்தாலும் அவனின் பின்னதலையை இருக்கப்பற்றி தன் உணர்வுகளை அவனுக்கு உணர்த்தினாள்.

என்னவோ எடுக்க கூடத்துக்கு வந்த தேனருவி இந்த காட்சியை பார்த்து திகைத்துப் போனாள். அதே நேரம் அலுவலக வேலையை விரைவாக முடித்துக்கொண்டு உள்ளே நுழைந்த மலையமானும் இந்த காட்சியை பார்த்தான்.

பார்த்தவனின் கண்களில் ஆச்சரியம்.. அதுவும் தன் தங்கை கணவனுக்கு ஒத்துளைத்து நிற்பதை பார்த்து வியந்துப் போனான்.

எப்படி இந்த மாற்றம்.. அதுவும் இத்தனை சடுதியில்.. என்று எண்ணியபடியே தேனருவியை பார்த்தான். அவளும் அந்த நேரம் அவனை தான் பார்த்தாள்.

சட்டென்று அரவம் செய்யாமல் உள்ளே போய் விட்டாள். அவளின் பின்னோடு போகத்துடித்த கால்களை கட்டுப் படுத்திக் கொண்டு மறைந்துக் கொண்டான் அவர்களுக்கு எந்த தொந்தரவும் தராமல். ஆனால் அவர்களின் பேச்சு அவனது காதில் கேட்டது.

“ரொம்ப கஸ்ட்டப்படுத்திட்டனா?” தயங்கி கேட்டாள் இளவரசி தன் கணவனிடம். இல்லை என்று தலை அசைத்த மாதவன்,

“வேற எதுவும் வேணாம்டி.. இந்த சின்ன இதழ் முத்தம் போதும். அதுக்கு நீ என் தலையை இறுக்கி பிடிக்கிற இல்லையா இந்த எதிர்வினை ஒன்று போதும்டி.. என் முத்தத்தை நீ ஆழ்ந்து உணர்றங்கிற வெளிப்பாடு போதும் என் நெஞ்சுக்கு” என்று கட்டுப்பாடு அற்றுப் போய் அவளிடம் இழைந்து நின்றான் முத்தங்களால்.

அதை கேட்ட மலையமானுக்கு நெஞ்சில் அப்படி ஒரு நிம்மதி பிறந்தது. மனதிலும் வயிறிலும் பால்வார்த்தது போல ஆனான். இனி அவனின் தங்கை வாழ்க்கை நலமுடன் ஆரம்பித்து விடும் என்ற பரவசம் வந்து விட்டது அவனுக்கு.

Loading spinner


   
Quote
(@nehanu)
Active Member
Joined: 2 months ago
Posts: 5
 

Ada pakki payale un thangachi vazhkai mela poguthu unodathu adi padhalathuku poguthu ....sekiram therinjila pola...

Loading spinner


   
ReplyQuote
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top