“கதவை திறடி...” ஓங்கி ஒரு தட்டு தட்டினான்.
“இன்னும் ரெண்டு தட்டு இப்படியே தட்டுங்க. கதவு தானா ஒடைஞ்சிடும்...” உள்ளிருந்து சொன்னாள்.
“இப்போ நீ திறக்கலன்னு வை அதை தான்டி செய்ய போறேன்...”
“கதவை உடைங்க. மாமாவும் அய்யாவும் வந்து விசாரணை பண்ணட்டும்...” என்றாள் கடுப்புடன்.
“பண்ணட்டும் எனக்கு என்ன... நானா தப்பு செஞ்சேன். நீ தானேடி என்னை ஏமாத்தி கல்யாணம் பண்ணின... அப்போ நீ தான் பதில் சொல்லணும்...” என்று இன்னும் கொஞ்சம் ஓங்கி கதவை தட்டினான்.
அதிலே அந்த கதவு ஆட்டம் காண, பக்கென்று இருந்தது அவளுக்கு.
“அய்யோ உடைச்சி புடாதீங்க... இருங்க வரேன்...” என்று புடவையை அள்ளி மேலே போட்டுக்கொண்டு வேகமாய் வந்து கதவை திறந்தாள்.
உள்ளே நுழைந்தவனின் கண்கள் அவள் இருந்த கோலத்தை கண்டு அவளிடமிருந்து மீள முடியாமல் வெறித்து பார்த்தது அவளை.
“ம்கும் இப்படியே காஞ்ச மாடு கம்பங்கொல்லையில பூந்த மாதிரியே பார்த்துக்கிட்டு இருங்க...” திட்டியவள், அவனுக்கு முதுகை காட்டிக்கொண்டு சுவரின் பக்கம் திரும்பி நின்றுக்கொண்டு உடை மாற்ற ஆரம்பித்தாள்.
அதை பார்த்தவனுக்கு கோவம் வர, வேகமாய் அவளை நெருங்கினான். அவனது அடி ஓசை கேட்டு,
“தள்ளி இருங்க சொல்லிட்டேன்... அய்யாவும் மாமாவும் எப்ப வேணாலும் வருவாங்க...” சொன்னவள் அவசர அவசரமாய் சேலையை சுற்ற ஆரம்பிக்க, அதுவரை அவனுக்கு அந்த நினைப்பு எதுவும் இல்லை.
ஆனால் இவள் சொல்லவும் கடுப்பானான். ஒரே இழுப்பில் சேலையை தன் கைக்கு கொண்டு வந்தவன் அவளையும் தன் கைகளில் தூக்கிக்கொண்டான்.
“ஐயோ என்ன பண்றீங்க மாமா.. இது ரொம்ப தப்பு.. முதல்ல என்னை கீழ இறக்கிவிடுங்க..” அவனிடம் கேட்க, அவனோ காதிலே வாங்காதவன் போல வீட்டை விட்டு வெளியே வந்து தூரத்தில் இருந்த வைக்கோல் போருக்கு தூக்கி சென்றான் அவளை.
“விடுங்க மாமா... அய்யாரு வந்தாருன்னா ரொம்ப கஷ்டமா போயிடும். சொன்னா கேளுங்க மாமா...” அவள் எவ்வளவு கெஞ்சியும் பாண்டியன் கொஞ்சம் கூட அசையவில்லை.
“ஏன் மாமா சொன்னா சொல்ற பேச்சை கேட்க மாட்டிகிறீங்க... அவங்களுக்கு முன்னாடி நான் அவமானப்படணும்னு நீங்க நினைக்கிறீங்களா...?” கண்ணீருடன் கேட்டவளை அந்த வைக்கோல் போறில் தூக்கி எறிந்தவன் கோவமாய் அவளை பார்த்தான்.
“எது உன்னை அவமானபடுத்த நான் நினைக்கிறனா...? நீ தான்டி நான் அவமானப்படணும்னு எல்லா வேலையும் செஞ்சுட்டு இங்க வந்து ஒளிஞ்சி இருக்க. என் மதிப்பு என்ன மரியாதை என்னன்னு உனக்கு தெரியுமாடி...?” ஆத்திரத்துடன் கேட்டான்.
“அதை தான் நானும் சொல்றேன். உங்க மதிப்பு மரியாதைக்கு என்னால குற(றை)வு வந்துட கூடாது. உங்க பகுமானத்துக்கு அந்த அம்மணி தான் சரியா வருவாங்க... அதனால நீங்க முதல்ல இங்க இருந்து கிளம்புங்க...” என்று சொன்னாள்.
“ஏய் வேணான்டி என்னை கொலைக்காரனா மாத்தாத...”
“நான் ஒரு இக்கட்டுல அவங்களுக்கு உதவி வந்தேன். அவ்வளவு தான். மத்தபடி நீங்க நினைக்கிற மாதிரி நான் உங்க மனைவி இல்ல... அவங்களுக்கு தான் நீங்க தாலி கட்டுனீங்க...” என்றாள்.
“என்னடி சொல்ற...?”
“ஆமாங்க, அவங்களுக்கு தான் நீங்க தாலிய கட்டுனீங்க... ஏதோ கோயில் திருவிழா வந்ததே...”
“ஆமாம்..”
“அப்போ அந்த ஒரு வாரம் மட்டும் தான் நான் அங்க இருந்தேன்... அதுக்கு பிறகு மறுபடியும் நான் வந்துட்டேன். இப்படி பண்றது தப்புன்னு தெரியும். இருந்தாலும் அவங்க ஒரு உதவி கேட்டாங்க. என்னால மறுக்க முடியல... அதான் ஒரு வாரம் மட்டும் இருந்துட்டு வந்துட்டேன்.” என்றாள் கோர்வையாக.
“ஆக நீ என் கையாள தாலி வாங்கல..” என்று மீசையை திருகினான்.
“இல்லங்க...” என்றாள் அப்பாவியாய்.
“ம்ம்... அப்போ என் கூட வாழவும் இல்ல இல்லையா...?”
“ஆமாங்க. அப்போ தான் ஏதோ விரதம்னு சொன்னாங்களா அதனால உங்க நிழல் கூட என் மேல படல...” என்றாள்.
“ம்ம்ம் அது சரி தான்...” என்று இந்த ஒரு வாரத்தில் வளர்ந்து இருந்த தாடியை விரல்களால் தேய்த்து வருடிவிட்டவன்,
“அப்போ நான் வாழ்ந்தது எல்லாம் அவ கூடத்தான் இல்லையா...?” என்று மிக நிதானமாக கேட்டான்.
“ஆமாங்க...” என்று சொல்லி முடிக்கும் முன்பே ஓங்கி ஒரு அறை விட்டான். அப்படியே அந்த வைக்கோல் போறின் ஒரு மூளையில் சென்று விழுந்தாள்.
கன்னம் தீப்பற்றி எரிந்தது போல வலித்தது. ஒரு நொடி உலகம் சுற்றியது போல இருக்க, பிடிமானத்துக்கு ஒன்றும் இல்லாமல் அப்படியே இருந்தாள் சில நொடிகள்.
ஒரே ஜம்பில் அவளின் முன்பு வந்து முட்டி போட்டு அமர்ந்தவன் அவளது கூந்தலை பிடித்து அருகில் இழுத்தவன்,
“உன் நிழலை கூட தொடலன்னா பொறவு எதுக்குடி இங்க வந்து முத்தம் குடுத்த உடனே மாமான்னு சொன்ன...” ஆத்திரமாய் கேட்டான். அதில் தன் குட்டு உடைய தலையை குனிந்துக்கொண்டாள்.
“இவ்வளவு நாளும் அவளோட வாழ்ந்து இருந்தேன்னா பொறவு என்னத்துக்குடி இந்த ஒரு வாரம் அவளை என்னால பார்க்க கூட முடியாம போச்சு...” என்று கர்ஜித்தான்.
அவன் பிடித்த பிடி வலியை கொடுக்க,
“வலிக்கிது விடுங்க...” என்றாள்.
“நல்லா வலிக்கட்டும். எனக்கு அதைவிட அதிகமா வலிக்கிது...” என்றவன் அவளது கூந்தலை விட்டுவிட்டு அவளின் அருகே படுத்தான் வேதனையுடன்.
அவனது வேதனை புரிந்தது தான். ஆனாலும் செஞ்சோற்று கடன் அவளை அப்படி பேச வைக்கிறது. என்ன செய்வது.
நெடு மூச்சை இழுத்துவிட்டவள் எழுந்து புடவை கட்டினாள். அதை கடுப்புடன் பார்த்தவன் வேகமாய் அவளது புடவையை உருவினான்.
“விடுங்க அய்யாரு வர போறாரு. போய் ராவுக்கு சமைக்கணும்..” என்று அவனிடமிருந்து புடவையை பிடித்து இழுத்தாள்.
“நான் தான் உன்னை தொட்டதே இல்லன்னு சொன்னியே.. அதை இப்போ செயல் படுத்தலாம்னு இருக்கேன்... வாடி..” என்றவன் அவளை இழுத்து தன் மேல் போட்டுக்கொண்டு,
“அவளை தொட்டேன்னு சொன்னில்ல. அவக்கிட்ட என்ன இருந்தது என்ன இல்ல... உன்கிட்ட என்ன இருக்குன்னு பார்த்து வித்யாசம் சொல்றேன் சரியா...?” என்று அவளின் காதோரம் கூறியவன், அவள் மறுக்க மறுக்க அவளை தனக்குள் எடுத்துக்கொண்டவன் அவளின் காதோரம் வாய் வார்த்தையால் எதை எதையோ சொல்ல, ஒரு கட்டத்துக்கு மேல் அவளால் தாங்க முடியாமல் போக,
அவனை அடக்கும் வழி தெரியாமல் அவளின் இதழ்களை சிறை எடுத்தாள் மிக கோவமாக. அதில் பாண்டியனின் கண்களில் மின்னல் வெட்டு ஒன்று வந்தது.
Nice





