“என்ன பண்றீங்க விடுங்க. அய்யா வந்துட போறாக...” நழுவியவளை இறுக்கி அணைத்தவன், இத்தனை நாள் அவளின் வாசம் தேடி அலைந்து ஏமாற்றம் மிஞ்சியதால் அவளின் வாசனை தேடி அவளிடமே சரிந்தான்.
மீசையின் கற்றை முடி அவளின் கழுத்தில் இறங்கி கோலம் போட, கைகள் அவனுக்கு பிடித்தமான இடங்களில் தஞ்சம் ஆக, துவண்டு போனாள்.
“மாமா...” என்றாள் அவளையும் அறியாமல். அதில் மறைந்து இருந்த கோவம் துளிர்க்க சட்டென்று அவளது கழுத்தை கடித்து வைத்தான்.
அதிலே அவனது கோவம் புரிய சுவரில் சாய்ந்துகொண்டாள் அவனது பாரம் தாங்காமல். இருக்க இருக்க அவன் தனது எடை மொத்தமும் அவளிடம் காட்ட, தளர்ந்து போனாள்.
அந்த சமயம் வெளியே மலைச்சாமியின் சத்தம் கேட்க, பட்டென்று அவனிடமிருந்து விலக பார்த்தாள். ஆனால் அவன் விடவே இல்லை.
“ஆத்தா கொஞ்சம் நீரு குடு... எங்க உம்மட அய்யன் போனான்... நெல்லு கதிரு அறுத்து முடிய போவுது...” என்றபடி கேட்க,
“அய்யாரு வெத்தலை எடுக்க போயிருக்காக மாமா... நீங்க செத்த உக்காருங்க.. இதோ வந்துடுவாக...” என்று அவனது பிடியில் இருந்து நழுவிக்கொண்டே கூறினாள்.
“அப்படியா ஆத்தா... ஆமா நில உடமை பட்ட அய்யாரு யாரும் வந்தாங்களா கண்ணு...?” கேட்க, பதில் சொல்ல வந்தவளின் இதழ்களை பாண்டியன் சிறை செய்தான் மிக வன்மையாக.
வேகமாக அவனது இதழ்களில் இருந்து தன் இதழ்களை பிரித்துக்கொண்டவள், மூச்சு வாங்க மலைச்சாமிக்கு பதில் சொன்னாள். ஆனால் அதோடு பாண்டியன் அவளை விடவில்லை. கைகள் அவளது இடையை இறுக்கி பிடிக்க, தவித்து போனாள். அதே நேரம்,
“ஆத்தா...” என்று மறுபடியும் அவர் அழைக்க,
“தண்ணீ மட்டும் குடுத்துட்டு வந்துடுறேன் மாமா... விடுங்க பாவம் களைச்சி போய் வந்து இருக்காங்க...” என்று கெஞ்சி கூத்தாடி மன்றாடிக்கொண்டு அவனிடமிருந்து விலகி நலுங்கி இருந்த சேலையை சரியாக போட்டுக்கொண்டு கலக்கி வைத்த நீர்மோரை அவரிடம் நீட்டினாள்.
வாங்கி பருகியவர், “கேட்டனே ஆத்தா ஆறும் வந்து இருக்காங்களான்னு...” மீண்டும் கேட்டார்.
“ஆமாங் மாமா.. உள்ள தான் தூங்குறாக. அங்க இருந்து சத்தம் போட்டா அவுக முழிச்சிடுவாங்கன்னு தான் பதில் குடுக்கல மாமா...” என்றாள் சாமார்த்தியமாக.
“நல்லது ஆத்தா...” என்று சிறிது நேரம் அமர்ந்து இருந்தவர்,
“அய்யாவுக எழுந்ததுக்கு பொறவு என்னைய கூப்பிட்டு விடு ஆத்தா... நீயா அவுகளை எழுப்பி போடாதா... கொஞ்சம் அசரட்டும். பயண களைப்பே மனுசனை வாட்டி வதைக்கும்.” என்றவர்,
“சரி ஆத்தா உம்மட அய்யா வந்தா அறுவடைக்கு வர சொல்லு...” என்று சொல்லிவிட்டு அறுவடை அறுக்கும் இடத்துக்கு சென்று மேற்பார்வை இட ஆரம்பித்தார்.
அவர் சென்ற பின்பு உள்ளே வந்த மாதுமையாள் அப்படியே நின்றுவிட்டாள். கீழே அவளின் புடவையை விரித்துவிட்டு அதில் படுத்து தூங்கியே இருந்தான். அவ்வளவு களைப்பு அவனிடம் இருந்தது.
ஒரு வாரம் இவளின் பிரிவில் அவன் விழியே மூட முடியாமல் தானே இருந்தான். ஆனால் இன்று அவளை கண்ணாரக் கண்டு கொள்ளவும் அசந்து போய் தூக்கம் வந்தது அவனுக்கு.
அதனால் அவளது புடவையில் ஒன்றை உருவி விரித்து அதில் தூக்கம் கொண்டு இருந்தான். அவனது இந்த உரிமையான செயலில் எப்பொழுதும் போல மனம் நிறைந்தவள் கதவை சாத்திவிட்டு நடவு வேலைக்கு விரைந்தாள்.
மூன்றுமணி நேரம் நன்கு தூங்கி எழுந்தவனின் உடம்பு இன்னும் அசதியாகவே இருந்தது. கைகளை மேலே உயர்த்தி உடம்பை ஒரு முறுக்கு முறுக்கி குதித்து எழுந்தவன் தன்னவளை தேடினான்.
அந்த வீட்டில் அவளது அரவம் எதுவும் இல்லாமல் போக மூஞ்சி கூட கழுவாமல் எழுந்து வெளியே வந்தான். மாலை நன்கு முற்றி போய் இருந்தது.
இந்த சமயத்தில் எங்கு போய் இருப்பாள். என்று யோசித்தவன் வயல்வெளியை சென்று பார்த்தான். அனைவரும் வேலை முடித்து வீடு திரும்பி இருந்தார்கள்.
மலைச்சாமியையும் காணோம். செவுனப்பனையும் காணோம்...
“என்னடா இது ஒருத்தரையும் காணோம்...” வாய்விட்டு முணகியவன் கிணற்றடி பக்கம் வந்து முகம் கழுவ வர, உள்ளே ஏதோ சத்தம் கேட்டது.
எட்டி பார்த்தான். பாண்டியனின் மீனவள் தான் உடுப்புகளை துவைத்துக்கொண்டு இருந்தாள்.
“இந்த ஆங்கில்ல பார்த்தா நல்லா தான் இருக்கா...” முணகியவன் மத்தியம் டைவ் அடித்தது போல இப்பொழுதும் மேலிருந்து தலைகீழாக குதித்தான்.
இருந்திருந்த வாக்கில் நீரில் பொத்தென்று ஏதோ சத்தம் விழ திடுக்கிட்டு போனாள். நெஞ்சம் ஒரு நிமிடம் பக்கென்று ஆனது.
அதன் பின்பே மனித கைகளும் தலையும் தென்பட ஆசுவாசமானாள். அதன் பின்பு தன் பாட்டுக்கு துணிதுவைக்க ஆரம்பித்தாள்.
நீரிலிருந்து மேலெழும்பி வந்தவன் தன்னை சிறிதும் கண்டுக்கொள்ளாமல் அவள் பாட்டுக்கு துணி துவைத்துக்கொண்டு இருந்ததை பார்த்து ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது.
கோவமாக தண்ணியை அள்ளி அவள் மீது வீசினான். அவள் அதையெல்லாம் சிறிதும் சட்டையே செய்யவில்லை.
“அடியேய் ரொம்ப ஓவரா தான்டி போற...” கத்தினான்.
“குளிக்க வந்தா குளிக்கிற வேலையை மட்டும் பாருங்க. தேவை இல்லாத வேலையெல்லாம் பார்க்க வேணாம். உங்களுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. ஒழுங்கா உங்க வீட்டுல இருக்க உங்க ‘பொண்டாட்டியோட’ வாழுங்க...” என்றவள் துவைத்த துணிகளை தோளில் போட்டுக்கொண்டு படியில் மேலேறினாள்.
“என்னடி சொன்ன...” என்று கர்ஜித்தவன் வேகமாய் அவளது காலை பிடித்து இழுக்க பார்த்தான். அவன் அதை தான் அடுத்து செய்ய போகிறான் என்று உணர்ந்தவள் வேகமாய் மேல் படியில் கால் வைத்து விறுவிறுவென்று என்று ஏறி அவனுக்கு எட்டா உயரத்தில் நின்றுக்கொண்டு,
“இன்னைக்கே ஒழுங்கா ஊர் போய் சேருங்க... இல்ல காலையில இங்க இருந்து நீங்க பார்க்க நான் இருக்க மாட்டேன்...” சொன்னவள் அடுத்த ஒரு நிமிடம் கூட அங்கு தாமதிக்காமல் சென்றுவிட்டாள்.
அவள் சொன்னதை கேட்டவனுக்கு அவ்வளவு ஆத்திரம் வர, வேகமாய் மேலேறி வந்தான்.
ஆனால் அதற்குள் அவள் குடிசைக்குள் நுழைந்து கதவை தாளிட்டு இருந்தாள். வந்த கோவத்துக்கு அந்த கதவை உடைத்து எரிய வேண்டும் போல் இருந்தது.
Yennachu





