“நோ வே.. என்ன விசயம்னு சொல்லு. இல்லன்னா தூங்க விட மாட்டேன்” என்றவன் படுத்து இருந்தவளின் கையை இழுத்து அமரவைத்தான்.
“ஹைய்யோ விட மாட்டாரு போலையே..” தலையை பிடித்துக் கொண்டவள்,
“பெட்ரூம் விசயம்” என்றாள்.
“புரியல?”
“அது...” என்று திணறியவள், முகம் சிவக்க அவளுக்கு தெரிஞ்ச தாம்பத்திய இரகசியத்தை மெதுவான குரலில் தலையை குனிந்துக் கொண்டு அவள் சொல்ல,
“கேட்கல” என்று சொல்லி அவளுக்கு வெகு அருகில் வந்து அமர்ந்தான் மலையமான். அவளின் மூச்சுக்காற்று அவனின் கன்னத்தில் உரசும் அளவுக்கு நெருங்கி அமரவும் திகைத்துப் போய் அவனை பார்த்தாள்.
“கேட்கல” என்றானே தவிர அவளை விட்டு விகலவே இல்லை.
“இப்ப சொல்லு” என்று அவன் மீண்டும் கேட்க,
“இதென்னடா இவரோட வம்பா போச்சு” முணகியவள், இளாவிடம் என்ன சொன்னாளோ அதை முடிந்த அளவுக்கு குறைத்தே சொன்னாள். ஆனால் அதற்கே அவளின் முகம் அப்பட்டமாய் சிவந்துப் போய் விட்டது.
அவளின் முகச்சிவப்பை ஆழ்ந்துப் பார்த்தான் மலையமான். எந்த ஒரு பெண்ணின் வெட்கத்தையும் இவ்வளவு நெருக்கமாக பார்த்ததே இல்லை. முதலில் யாரையும் அவனுக்கு அருகில் அனுமதித்ததே இல்லை. பிறகு எங்கிருந்து வெட்கத்தை பார்க்க..
“ப்ளீஸ்.. இதுக்கு மேல என்னால சொல்ல முடியாது” என்று அதீத வெட்கத்துடன் சொன்னவள் போர்வையை தலை வரை இழுத்து மூடிக் கொண்டு படுத்து விட்டாள். ஆனால் மலையமானுக்கு தான் தூக்கம் வராமல் போனது.
கண்களை மூடினாலே வெட்கத்துடன் தேனருவி சொன்ன தாம்பத்திய இரகசியமும் அவளின் கிசுகிசுப்பான குரலும், செக்க சிவந்துப் போன அவளின் முகமும் தான் வந்தது. அவள் பேசும் பொழுது அசைந்த அவளின் வடிவான செந்தூர இதழ்களில் அவனின் மனம் சிக்கிக் கொண்டது.
ஆனால் அதை மலையமான் கொஞ்சமும் உணரவே இல்லை. இரவு முழுவதும் அவளின் நினைப்பில் தூங்காமல் சீலிங்கை வெறித்துப் பார்த்துக் கொண்டு கழித்தான்.
அடுத்த நாள் காலையில் அவளாகவே அவனுக்கு உணவு ஊட்டிவிட மலையமானும் இளாவும் ஒருசேர அதிர்ந்துப் போனார்கள்.
இதுநாள் வரை அவர்களுக்கு யாரும் ஊட்டி விட்டதே இல்லை. இப்படி தேனருவி ஊட்டி விடுவாள் என்று எதிர் பார்க்காததால் திகைத்துப் போனார்கள்.
அதுவும் இளாவுக்கும் சேர்த்து அவள் ஊட்டி விட வாயில் வைத்த உணவை முழுங்க கூட இல்லமல் பிரீஸ் ஆகி இருந்தார்கள் அண்ணனும் தங்கச்சியும்.
“கையை நல்லா சோப்பு போட்டு லிக்வீட் போட்டு தன் கழுவுனேன்.. பயப்படாம சாப்பிடுங்க.. ஒன்னும் ஆகாது” என்று அவள் பாட்டுக்க இருவருக்கும் ஊட்டி விட்டு வாயையும் துடைத்து விட்டாள்.
தம்பி தங்கைகளுக்கு ஊட்டி விட்ட பழக்கம் இருக்கு தானே.. அதனால் நேர்த்தியாக ஊட்டி விட்டாள்.
இளாவுக்கும் சரி மலையமானுக்கு சரி தேனருவியின் இந்த செயலை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. என்னவோ தடுத்தது. ஆனால் தேனருவி அதை எல்லாம் கண்டுக் கொள்ளவே இல்லை.
தன் அப்பா சொன்ன சொல் தான் அவளின் காதுக்குள் கேட்டுக் கொண்டு இருந்தது.
“அந்த பொண்ணும் உன் வயசு தான்மா. ஆனா அந்த பொன்னுக்கும் உனக்கும் இருக்குற வித்யாசத்தை பார்த்தியா? காசு பணம் இருந்தும் என்னத்துக்கு ஆவுது. மனசு விட்டு பேசக்கூட ஆளில்லாம தனிச்சு உணர்வுகளை தொலைச்சுட்டு நிக்கிது. அந்த பொண்ணுக்கு நீ அண்ணி மட்டும் இல்ல. அம்மாவுமா தான் இருக்கணும். என் பொண்ணு கண்டிப்பா அந்த பொண்ணுக்கு அம்மாவா இருப்பா” என்று சொன்னது தேனருவியின் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது.
ஒரு அம்மாவா இருந்து தான் அவளை நெருங்க முடியும் என்பதை புரிந்துக் கொண்ட தேனருவி முதல் வேலையாக பிள்ளைக்கு சோறு ஊட்டுவது போல அவளுக்கு ஊட்டி விட்டாள். ஆனால் திடுதிப்பென்று ஊட்ட முடியாதே.. அதனால் மலையமானை நெல்லுக்கு பாயும் நீர் கொஞ்சம் புல்லுக்கும் பாய்வது போல அவனை புல்லாக வைத்துக் கொண்டு இளாவை நெருங்கினாள்.
ஆனால் மலையமானுக்கு அதில் சொல்லொண்ணாத உணர்வு பிறந்தது. அடக்கிக் கொண்டவன், முதல் முறையாக அவளின் கண்ங்களை பார்த்து விடை பெற்றுக் கொண்டான்.
அதை புரிந்துக் கொள்ளாமல் எப்பொழுதும் போல அவனுக்கு கையாட்டி விட்டு உள்ளே நுழைந்தாள்.
இளா உண்டுவிட்டு அறைக்குள் நுழைந்துக் கொள்வதை பார்த்தவள்,
“சப்பா எப்படி தான் நத்தை மாதிரி எப்போ பார்த்தாலும் அறைக்குல்லையே அடைஞ்சி கிடக்குறாளோ” எண்ணிக் கொண்டவள், அவளை தொந்தரவு பண்ணாமல் வீட்டின் தோற்றத்தை சற்றே மாற்றி அமைக்க திட்டம் இட்டாள்.
அதை மலையமானுக்கும் தெரிவித்தாள்.
“ஏன் இப்ப இருக்குறதுக்கு என்ன? இதெல்லாம் இளா விருப்பப்படி பண்ணது. அதனால அதை மாத்தானும்னு நினைக்காத” சுல்லேன்று பேசினான்.
“இது என் வீடுன்னு நான் அவளுக்கு உணர்த்தணும். அவ வீடு ஏதுன்னு அவ தானாவே உணரனும்” என்றாள் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல்.
தேனருவியின் கூற்றில் இருக்கும் விசயத்தை புரிந்துக் கொண்டவன்,
“கோ ஹெட்” என்றான்.
“பணம் போட்டு விடுங்க.. உங்க வீட்டுக்கு தானே செய்யிறேன்” என்றாள் அவளும் சுல்லேன்று.
அதை கேட்டு பல்லைக் கடித்தவன் “நீ ஆணியே புடுங்க வேணாம் போடி” என்று சொல்ல தான் ஆசை பட்டான். ஆனால் அவளின் தங்கை வாழ்க்கை இந்த விசயத்தில் அடங்கி இருக்கே..
அதனால் வாயை மூடிக் கொண்டு அவள் கேட்ட பணத்தை போட்டு விட்டான்.
என்னென்ன வாங்குவது என்பதை எல்லாம் லிஸ்ட் போட்டுக் கொண்டவள், சிலவற்றை ஆன்லைன் ஷாப்பிங் செய்துக் கொண்டாள்.
சிலவற்றை நேரடியாக சென்று வாங்கிக் கொண்டாள். வீட்டை அலங்காரம் செய்வது என்றால் இவளுக்கு ரொம்ப விருப்பம். வாரத்துக்கு ஒரு முறை வீட்டை மாற்றி அமைப்பாள்.
“அக்கா நீ செம்மையா டெக்கரேட் பண்ற..! இந்த ஸ்க்ரீன் எல்லாம் நீயே டிசைன் பண்ணதா? கலர் காமிநேஷன் செம்ம.. அதே மாதிர புது விதமாவும் இருக்குக்கா” என்று கூடப்பிறந்தவர்கள் கேட்கும் பொழுது ஜிவ்வென்று இருக்கும். அவளின் வீட்டை பார்த்து அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் கூட இவளிடம் ஆலோசனை கேட்டு செய்வார்கள். இல்லை என்றால் முழு பொறுப்பையும் அவளிடம் கொடுத்து விட்டு பணத்தையும் கொடுத்து, “உன் விருப்பபடி செய். ஆனா உன் வீடு மாதிரி அழகா நேர்த்தியா இருக்கணும்” என்று சொல்லி விடுவார்கள்.
இவளுக்கு அல்வா சாப்பிடுற மாதிரி இருக்கும். தன் கற்பனையை சிறகு விரிய செய்து அவளின் விருப்பம் போல தன் கை வேலைபாட்டை காண்பிப்பாள். எல்லோருமே அசந்து போய் விடுவார்கள்.
“பரவாயில்ல மணி உன் பொண்ணு கையில தொழில் இருக்கு.. பிளைச்கிக்குவா. அவளை பத்தி கவலை பட வேண்டாம்” என்று பாராட்டுவார்கள். அதை கேட்டு மணிக்கு பெருமையாக இருக்கும்.
அதை எண்ணிப் பார்த்தவள், எவ்வளவு நாளாச்சு இந்த வேலை செய்து.. இப்ப தான் அவளுக்கு புத்துணர்வு வந்த மாதிரி இருந்தது.
மனசுக்கு பிடிச்ச வேலை செய்யும் பொழுது எப்பவுமே ஒரு உற்சாகம் பிறந்து சிறகு முளைக்க வைத்து விடும். தேனருவிக்கும் அப்படி தான். இது அவளுக்கு பிடிச்ச வேலை. சின்ன சின்ன வீட்டை டெக்கரேட் பண்ணும் பொழுதே அவ்வளவு உற்சாகமாக இருக்கும். இது அவளின் வேலைக்கு மிகப்பெரிய சவால். மிகப்பெரிய வீட்டையே மாற்றி அமைக்க வேண்டும்.
அவளின் கற்பனைக்கும் கை திறனுக்கும் ஏற்ற சவால். லேசாக தடுமாறினாலும் எல்லாவற்றையும் சரியாக செய்யணும் எண்ணிக் கொண்டவள், முதல் வேலையாக குட்டியாக ஒரு தையல் மிஷினை வாங்கிக் கொண்டாள்.
ஸ்க்ரீன் காமிநேஷன் கொஞ்சம் டல் தான் அந்த வீட்டில். எனவே அதை முதலில் மாற்றிப் போடலாம் என்று குறுங்கண் அளவுகளை எடுத்துக் கொண்டவள், கற்பனைக்கு எட்டிய வகையில் மூன்று வகை பெப்ரிக்கை வைத்து அழகாக தைத்துக் கொண்டாள். அந்த கலர் காமிநேஷன் அள்ளியது.
தையல் மிஷினை வாங்கும் போதே மலையமான் முறைத்தான். உன் வீட்டு மெண்டாலிட்டியை கொண்டு வராத.. ஒழுங்கா இதை எல்லாம் தூக்கிப் போடு என்று பல்லைக் கடித்தான்.
வெளில ஸ்க்ரீன் டிசைனை சொல்லி அவங்க தைச்சு குடுக்குறதுக்குள்ள நாள் கடந்திடும். நோ ப்ராப்ளம் இது உங்க கண்ணுல படாம ஒரு ஓரமா போட்டுக்குறேன் என்று கெஞ்சி கூத்தாடி பெர்மிஷன் வாங்கிக் கொண்டவள், வேலையில் முழு மூச்சாக ஈடுபட ஆரம்பித்து விட்டாள்.
சத்தம் கேட்டு இளா வெளியே வந்துப் பார்த்தாள். அங்கே நேர்த்தியாக தைத்துக் கொண்டு இருந்த தேனருவியை ஒரு பார்வை பார்த்து விட்டு மீண்டும் போய் விட்டாள்.
ஆனால் அவள் எதற்காக தைக்கிறாள் என்று தெரிந்துக் கொள்ள ஆர்வம் இருந்தும் அவள் கேட்கவில்லை. இளா வந்ததும் தன்னை பார்த்ததும் எதுவும் பேசாமல் திரும்பி போய் விட்டதையும் கவனித்த தேனருவிக்கு இவளின் உணர்வுகள் ஏன் இப்படி முன்னுக்கு பின்னாய் இருக்கிறது.
மனத்தில் எழும் கேள்வியை கேட்டு விட வேண்டியது தானே.. எண்ணியவள், சட்டென்று மிஷினில் இருந்து எழுந்துக் கொண்டாள்.
அன்னைக்கு காய்ச்சல் கண்டு மருத்துவமனைக்கு போயிட்டு திரும்பி வந்த பொழுது அந்த மரத்தடியில் அமர்ந்து இருந்த பொழுது பக்கத்தில் வந்து அமர்ந்தாளே. “ஓ.. அப்போ அது தான் அவளின் வெளிபாடா? அவ்வளவு தான் அவளின் வெளிப்பாடா?” சட்டென்று விசயத்தை பிடித்துக் கொண்ட தேனருவிக்கு “ஆக அவளுக்குள் உணர்வுகள் இருக்கு. ஆனா அதை எப்படி வெளிப்படுத்துறதுன்னு தெரியல போல..” புரிந்தது.
வேகமாய் மலையமானுக்கு போனை போட்டு இந்த விசயத்தை சொல்ல,
“வாட்?” என்றான்.
“ஆமாங்க.. நான் அதை பீல் பண்ணேன். ஏன்னா நான் வந்த நாள்ல இருந்து அவ என்கிட்டே பேசுனதே இல்ல. அப்படியே பேசினாலும் அதை பேச அவங்களுக்குள்ள பல முறை ஒத்திகை பார்த்து இருப்பாங்க போல. அன்னைக்கு உடம்பு முடியாதப்ப வந்தாங்க. ஆனா அவங்களால பேச முடியல.. எப்படி என்னை நலம் விசாரிக்கிறதுன்னு தெரியாம தான் அமைதியா இருந்துட்டு போனாங்க” என்றாள்.
“அது மட்டும் இல்ல. நீங்க ஒரு டைம் எனக்கு பூ வாங்கிட்டு வந்தீங்கள்ள. அவங்க முன்னாடி நானும் பூவை வச்சுட்டு போயிட்டேன் இல்லையா? அப்போ கூட அவங்க கண்ணுல என்னவோ இருந்துச்சுங்க.. நான் தான் சரியா கவனிக்கல” என்றாள் பரபரப்பாக.
“ஹேய் என்னடி என்னென்னவோ சொல்ற?” திகைத்துப் போனான்.
“அட ஆமாங்க. நீங்க இன்னைக்கு பூ வாங்கிட்டு வாங்க.. நான் உங்களுக்கு காண்பிக்கிறேன்” என்றாள். அதே போல மாலை நேரம் மலையமான் மல்லிகை சரத்தோடு வீட்டுக்கு வந்தான் ஒரு வித எதிர்பார்ப்போடு.





