எனவே இளாவை பற்றிய இந்த குறை தேனருவிக்கு பெரிதாக தெரியாவில்லை. இதுபோன்ற செய்திகளை ஏற்கனவே தேனருவி அறிந்து இருந்த காரணத்தால் மலையமானின் செயல்களை அவளால் தவறாக பார்க்க முடியவில்லை. ஆனால் அதில் தன் வாழ்க்கை நிலைகுலைந்து போக போவதில் தான் வேதனை அவளுக்கு.
எல்லாமே நன்மைக்கு என்று எடுத்துக் கொண்டவள், அவனுக்கும் இளாவுக்கும் கூடவே இருந்து பரிமாறினாள்.
“ஏங்க இன்னைக்கு சீக்கிரம் வர்றீங்களா? கல்யாணம் ஆகி நாம இன்னும் எந்த கோயிலுக்கும் போகல. போயிட்டு வெளில சாப்பிட்டு வரலாம். அப்படியே வரும் பொழுது பூவும் வாங்கிட்டு வாங்க” என்றாள்.
மலையமான் நிமிர்ந்துப் பார்த்தான் அவளை.
“ஏன் சொல்றேன்னா உங்களுக்கு தான் பூவாசம் ரொம்ப பிடிக்குமே.. அதனால தான்..” என்றவள்,
“நேரம் இருக்கும் தானேங்க.. இல்ல வேலை இருக்கா?” என்றாள் இளாவை கண் காட்டியபடி.
“இல்லல்ல.. எங்க போறதுன்னு யோசிக்கிறேன். என் கிளைண்டுக்கு ஒரு பழத்தோட்டம் இருக்கிறதா சொன்னாரு. வேண்ணா அங்க போகலாமா?” கேட்டான்.
“அங்க வீகென்ட் போகலாம். இப்போ ஷாப்பிங் மாதிரி போகலாம்ங்க.. உங்க கைப்பிடிச்சு நடந்து போகணும்னு ஆசையா இருக்கு” என்றாள்.
மலையமான் தலையை ஆட்டினான்.
“அப்புறம் அப்பா வீட்டுல இருந்து கொண்டு வந்த புடவைகளை தான் கட்டிக்கிட்டு இருக்கேன். நீங்க வேற தினமும் ஒவ்வொரு புடவையா கிழிச்சு வைக்கிறீங்க.. கொஞ்சம் புடவை எடுக்கணும்” என்றாள்.
மலையமான் இப்பொழுது அவளை பார்த்த பார்வையில் இவளுக்கு உள்ளுக்குள் ஜெர்க் ஆகியது. ஆனாலும் கண்டுக் கொள்ளாமல்,
“ப்ளவுஸ் கூட கொஞ்சம் சின்னதா இறுக்கிப் பிடிக்கிறது.. அதையும் மாத்தணும். கொஞ்சம் ப்ளவுஸ் பிட்டும் எடுக்கணும்” என்றாள்.
அவளின் பேச்சு வளவளவென்று நீண்டுக் கொண்டே போனது.
அவன் கைக்கழுவ போக பின்னாடியே போனவள்,
“இந்தாங்க இதுல தொடைங்க.. அதென்ன எப்போ பாரு துண்டுலையே துடைக்கிறீங்க.. பொண்டாட்டின்னு நான் எதுக்கு இருக்கேன்.. புடவை கட்ட சொல்ல சொல்றீங்க.. ஆனா என் முந்தானையில துடைக்க மாட்டீங்களா?” என்று அவனுக்கு முன்னாடி தன் முந்தானையை நீட்டினாள்.
மலையமான் அவளின் முந்தானையில் கையை துடைத்து விட்டு நகர, அவனின் பின்னோடு வந்தவள்,
“நில்லுங்க” என்று அவனை திருப்பி ஒரு கணம் தேங்கி பின் நெடு மூச்சை விட்டு அவனின் வாயை துடைத்து விட்டு, கற்றை மீசையை முறுக்கி விட்டு,
“வாயை கூட துடைக்காம போறீங்க.. சின்ன பிள்ளைன்னு நினைப்பா. ஒரு ஆள் துடைக்க வரணுமா?” அதட்டியவள்,
“எப்படி தான் இத்தனை வருடம் இருந்தீங்களோ தெரியல.. உங்க பின்னாடி அலையவே எனக்கு நேரம் சரியா இருக்கு. இதுல உங்களை மாதிரி உங்க மகனும் வந்தா என் நிலைமை அவ்வளவு தான். ஒருத்தரையே சமாளிக்க முடியல. ரெண்டு பேர் வந்தா என்ன பண்ணுவானோ தெரியல” என்று மடை திறந்த வெள்ளம் போல அவள் பேசிக் கொண்டே இருந்தாள். பேச்சினூடே மலையமானை கவனிக்கவும் செய்தாள்.
தேனருவியின் செயலில் மலையமான் தான் திகைத்துப் போய் நின்றான் சில நொடிகள். பின் சுதாரித்து தேனருவியின் முகத்தை ஆழ்ந்து கூர்ந்துப் பார்த்தான்.
இதற்கு முன்னாடி அவளின் மார்பில் வாய் துடைத்து இருக்கிறான் தான். ஆனால் அவளின் முந்தானையில் அவளே அவனுக்கு வாய் துடைத்து விட்ட பொழுது என்னவோ அன்னையின் நினைவு வந்தது திடுதிடுப்பென்று.
“நோ..” நெஞ்சோடு இறுக்கிப்பிடித்துக் கொண்டான் உணர்வுகளை.
“இளா இளாவுக்காக மட்டும் தான்” உறுதிக்கொண்டவன், மாலை நேரம் தேனருவிக்காக விரைவாக வந்தான்.
“இளா நீங்களும் வர்றீங்களா?” என்று அவளிடம் தன் தயக்கத்தை ஒதுக்கி வைத்து விட்டு தானே கேட்டாள் தேனருவி. தலையை மட்டும் இல்லை என்று ஆட்டி விட்டு அறைக்குள் புகுந்துக் கொண்டாள்.
போகும் அவளை இறக்கத்துடன் பார்த்தவள் மலையமானோடு காரில் ஏறிக்கொண்டாள். அடுத்து வந்த வளைவில் வண்டியை நிறுத்த சொல்லியவள்,
ஏன் என்பதாய் அவளை பார்த்தவன் “இளாவுக்கு முன்னாடி தான் நடிக்கனும்.. இப்ப அவசியம் இல்ல” என்றவள்,
“ஷார்ப்பா ஒன்பது மணிக்கு வந்திடுங்க. அதுக்கு மேல இந்த கோயிலை பூட்டிடுடுவாங்க” சொல்லி விட்டு இறங்கி எதிரில் இருந்த கோயிலுக்குள் நுழைந்துக் கொண்டாள்.
போகும் அவளை அவனே அறியாமல் சில கணங்கள் பார்த்து நின்றான். அவனின் பார்வையில் இவள் வித்யாசமாக பட்டாள் முதல் முறை.
நடிப்பதற்காக கூட்டிட்டு வந்த பெண்ணின் நடவடிக்கையில் எல்லா நேரமும் முழி பிதுங்கிப் போய் இருந்தான். ஆடம்பர பொருள்கள், உயர்தரமான உடைகள், நகைகள் இவனோடு தேவையே இல்லாமல் ஒட்டி உரசுவது என பல வகையாக அந்த பெண் நடந்துக் கொண்டதில் மலையமானுக்கு பெண்களின் மீது ஒரு தவறான அபிப்ராயம் எழுந்து இருந்தது.
அந்த கண்ணோட்டத்துடனே தேனருவியையும் பார்த்தான். அவளையும் அதே போலவே நடத்தினான். ஆனால் தேனருவி அப்படி பட்ட பெண் இல்லை என்று அவனின் மனம் சொல்லிக் கொண்டே தான் இருக்கிறது பல சந்தர்ப்பங்களில். ஆனாலும் அவன் பட்ட காயத்திற்கு மருந்து போல அவளை வார்த்தைகளால் குத்திக் கொண்டே இருக்கிறான்.
சரியாக ஒன்பது மணிக்கு அந்த கோயில் வாசலில் வந்து நின்றான் மலையமான். இவளும் வந்து ஏறிக் கொண்டாள். மறக்காமல் கடையில் மல்லிகை பூவை வாங்கி வைத்துக் கொண்டாள்.
வீட்டுக்குள் இருவரும் இணையாக வருவதை பார்த்தாள் இளவரசி.
தானாக பேச தயங்கிய தேனருவி இப்பொழுது காட்டாற்று வெள்ளம் போல அவளிடம் பேச ஆரம்பித்தாள்.
“ஆசை ஆசையா ஷாப்பிங் பண்ணலாம்னு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் போனேன் இளா.. ஆனா உங்க அண்ணன் உன் கூட சினிமா பார்க்க ஆசையா இருக்குன்னு மால்ல இருக்க தியேட்டரல கார்னர் சீட் புக் பண்ணி ஓடாத அரத பழைய படத்துக்கு கூட்டிட்டு போயிட்டாரு. அதுலையே டைம் ஓடிடுச்சு..” என்றவளை பார்த்த இளா,
“உனக்கு அண்ணனை பிடிக்காதே” முத்து உதிர்த்தாள்.
“ம்ஹும் அவரை பிடிக்கும். அவரோட முரட்டு தனத்தை தான் பிடிக்காது. எதுக்கெடுத்தாலும் கடிச்சு வச்சுக்கிட்டே இருந்தா எப்படி. அங்கும் இங்குமா சிவந்துப் போயிடுது.. அப்புறம் பேசவும் விட மாட்டாரு. நம்ம வாயை அடைக்கிறதே வேலையே வச்சு இருந்தாரு. அது தான் தலையணை மந்திரம் போட்டு மாத்தி வச்சுட்டேன்” என்றாள்.
இளாவுக்கு தேனருவி மிக புதிதாக தெரிந்தாள். முன்பு எதையும் கண்டுக் கொள்ளாமல் இருப்பவள் தன்னை விட்டு ஒதுங்கி போய் இருப்பவள் இன்றைக்கு அவளே வந்து பேசுவதோடு என்னென்னவோ பேசவும் செய்தாள்.
“அப்படின்னா?” என்று அவள் முழித்தாள்.
“அதுவா?” என்று முகம் சிவந்துப் போன தேனருவி,
“இப்படி வா” என்று அவளின் கையை பிடித்து சற்று மறைவான இடத்துக்குப் போய் அவளின் காதில் சில பல தாம்பத்திய முறைகளை சொன்னாள்.
“ச்சீ” என்று இளா அருவெறுத்துப் போக,
“எது ச்சீயா?” நெஞ்சை பிடித்துக் கொண்ட தேனருவிக்கு வியர்த்துக் கொட்டியது. நானே ஒரு அரைகுறை. எனக்குமே எதுவும் முழுசா தெரியாது. எனக்கு தெரிஞ்ச வரையில் சொன்னதுக்கே சீ போடுறாளே.. இன்னும் மொத்தமும் தெரிஞ்சுக்கிட்டா என்ன பண்ணுவாளோ.. மிரண்டுப் போனவள்,
“இது சீயெல்லாம் கிடையாது.. இன்னைக்கு என் புருசனுக்கு ட்ரீட் வைக்கப் போறேன். பேச நேரம் இல்ல.. நாளைக்கு உன் அண்ணன் ஆபிஸ் போனதுக்கு பிறகு சொல்றேன்” என்றவள் தப்பித்தோம் பிழைத்தோம் என்று மாடி ஏறிவிட்டாள்.
“கடவுளே” என்று கண்களை மூடிக் கொள்ள,
“என் தங்கச்சிக்கிட்ட என்ன சொன்ன?” கடுப்பாக வந்தது மலையமானின் குரல்.
அவள் என்ன பேசினாள் சொன்னாள் என்று அவனுக்கு தெரிந்துக் கொள்ள வேண்டிய அவசிம் இருந்தது. இவள் பாட்டுக்க ஏட்டிக்கு போட்டியாக ஏதவது இளாவிடம் சொல்லப் போய் அது இன்னும் வேறு மாதிரி ஆகிப் போனால் முதலுக்கே மோசமாகி விடும் இல்லையா? அதோடு தேனருவி மீது இன்னும் அவனுக்கு முழு நம்பிக்கை வரவில்லை. அதனாலே இந்த குறுக்கு விசாரணை.
இளாவிடம் சொல்ல முடிந்தவளால் மலையமானிடம் சொல்ல முடியிவில்லை. பெண்மையின் வெட்கமும் கூச்சமும் அவளை பிடித்து ஆட்டியது. ஆனால் அதை புரிந்துக் கொள்ளாமல் அவளை நிற்கவைத்துக் கேள்வி கேட்க துடியாய் துடித்துப் போனாள். தவியாய் தவித்துப் போனாள் பெண்ணவள்.
“ப்ச் இதை எல்லாம் உங்கக்கிட்ட சொல்ல முடியாது. இது கேர்ல்ஸ் விசயம்” என்றாள்.
“அதெல்லாம் முடியாது.. நீ சொல்லி தான் ஆகணும்” என்று அவன் உடும்பு பிடியாய் நிற்க, இவளுக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது.
“ப்ச்... படுத்தாதீங்க ங்க”
“நோ வே.. என்ன விசயம்னு சொல்லு. இல்லன்னா தூங்க விட மாட்டேன்” என்றவன் படுத்து இருந்தவளின் கையை இழுத்து அமரவைத்தான். ,
“ஹைய்யோ விட மாட்டாரு போலையே..” தலையை பிடித்துக் கொண்டவள்,
“பெட்ரூம் விசயம்” என்றாள்.
“புரியல?”
“அது...” என்று திணறியவள், முகம் சிவக்க அவளுக்கு தெரிஞ்ச தாம்பத்திய இரகசியத்தை மெதுவான குரலில் தலையை குனிந்துக் கொண்டு அவள் சொல்ல,
“கேட்கல” என்று சொல்லி அவளுக்கு வெகு அருகில் வந்து அமர்ந்தான் மலையமான். அவளின் மூச்சுக்காற்று அவனின் கன்னத்தில் உரசும் அளவுக்கு நெருங்கி அமரவும் திகைத்துப் போய் அவனை பார்த்தாள்.





