அத்தியாயம் 20

 

Admin
(@ramya-devi)
Member Admin
Joined: 12 months ago
Posts: 960
Topic starter  

தேனருவிக்கு கொஞ்சம் யோசனையாக தான் இருந்தது. இது கத்தி மேல் நடக்கும் தேர்வு. கொஞ்சம் பிசகினாலும் மலையமானின் பார்வையில் அருவெறுப்பான பெண்ணாக விழக்கூடும். அவனின் பார்வையில் தான் அப்படி விழுந்துவிடக் கூடாது என்பதில் மிக கவனமாக இருந்தாள். அவனை போல செயற்கையாக அவளால் எதையும் செய்ய முடியாது. அது அப்படியே காட்டிக் குடுத்து விடும். எனவே மலையமான் முன்பு செய்தார் போல எதையும் செய்து வைக்க முடியாது.

தான் முழு மனதுடன் இன்வால்வாக இருந்தால் மட்டுமே இளாவிடம் கொஞ்சமாச்சும் மாற்றம் வரும். இல்லை என்றால் அவளின் வாழ்க்கை சூனியமாகவே முடிந்தது விடும். தனக்கும் விடுதலை கிடைக்காது என பலவற்றை யோசித்து அலசி ஆராய்ந்து செயலாற்ற முடிவெடுத்துக் கொண்டவளுக்கு உள்ளுக்குள் பெரும் தடுமாற்றம் தான்.

தன் தந்தையிடம் போனில் பேசினாள்.

“ஆமாம் ம்மா. அந்த தம்பி சொன்னுச்சு. நான் தான் என் பொண்ணால முடியும்னு நம்பிக்கை குடுத்தேன். தங்கச்சிக்காக அவ்வளவு பார்க்கிறவர் கட்டுன பொண்டாட்டியை எப்படி பார்த்துக்குவாருன்னு தோணுச்சு. அதனால தான் எதையும் யோசிக்காம உன்னை அவருக்கு கல்யாணம் பண்ணிக் குடுத்தேன். அவரு காசு மனத்துக்கு மயங்கி நான் குடுக்கல.. என்ன அவரோட அப்பா அம்மா இருந்து இருந்தா மறுவீட்டு விருந்து அது இதுன்னு எல்லாம் நடந்து இருக்கும். ரெண்டு பேரா வளர்ந்ததுனால சடங்கு சம்பரதாயம் எதுவும் தெரியாம போயிடுச்சு.. அதை நினைச்சு நீ கவலை பட்டுட்டு இருக்காத. காலப்போக்குல நம்ம அன்பை எல்லாம் அவரு புருஞ்சுக்குவாறு” என்றார் மலையமானை பற்றிய அத்தனை புரிதலோடு.

“இந்த புரிதல் ஏன் ப்பா அவருக்கு இல்லாம போச்சு” மனதோடு சொல்லிக் கொண்டவள், எல்லோரின் நலனையும் விசாரித்துக் கொண்டு வைத்து விட்டாள். ஆக மலையமான் இதில் கூட தன்னை ஏமாற்றவில்லை. அப்பாவிடம் எதையும் மறைக்கவில்லை. எல்லாவற்றையும் சொல்லியே தன்னை கல்யாணம் பண்ணி இருக்கிறான். மனம் அப்பொழுதும் அவன் பக்கம் இருக்கும் சாட்சிகளை சேகரித்துக் கொண்டது.

எதற்காக அவளின் மனம் அவன் பால் சாய்கிறது என்று தெரியவில்லை. இது நல்லதுக்கே இல்லையே.. எதிர்காலமே இல்லாத உறவு.. கழுத்தில் தொங்க தொங்க தாலி இருக்கிறது, காலில் மெட்டி இருக்கிறது, வகிட்டில் குங்குமம் இருக்கிறது. ஆனால் இதில் எப்பவுமே உரிமை கொண்டாட முடியாது..

பெருமூச்சு விட்டவள் விடியும் நேரத்துக்காக காத்து இருந்தாள். அன்றைய நாள் பொழுது மிக மெதுவாக விடிவது போல தோன்றியது.

இதுநாள் வரை எதிலும் உரிமை எடுத்துக் கொள்ள அவளுக்கு தோன்றவில்லை. எல்லாவற்றிலும் இருந்து தள்ளியே இருந்தாள். ஆனால் இப்பொழுது அப்படி இருக்க முடியாது. முழு உரிமை கொண்டவள் போல அவள் நடந்துக் கொண்டு தான் ஆகணும்..

நெடுமூச்சோடு மாற்று துணியை எடுத்துக் கொண்டு குளிக்க சென்றாள். இன்றிலிருந்து அவளின் வாழ்வில் மறக்க முடியாத மாற்றம் நிகழப்போகிறது. அதை என்னும் போதே நெஞ்சுக்குள் தடதடவென்று ஒரு நடுக்கம்.

தடுமாறும் மனதை இறுக்கிப் பிடித்துக் கொண்டு சேலை மாற்றி விட்டு கண்ணாடி முன்பு வந்து நின்றாள். சில நாட்களாக வைக்க மறந்து இருந்த வகிட்டு குங்குமத்தை விரல்கள் நடுங்க எடுத்து வைத்தாள். கைகளில் கண்ணாடி வளையல்களை சேர்த்து அணிந்துக் கொண்டாள்.

ஹோம்லி லுக் வர, திருப்தி பட்டுக் கொண்டவள் கீழே சென்றாள். இன்னும் இளா எழுந்து வெளியே வரவில்லை. சிறிது நேரம் தோட்டத்தில் உலாவியவள் மலர்களை பறித்து முதல் முறையாக முழு மனதுடன் உரிமையாக இறைவனை பூசித்தாள். அவளின் வேண்டுதல் சக பெண்ணாக இளாவின் வாழ்க்கை மலர வேண்டும் என்று வேண்டிக் கொண்டாள்.

வீடு முழுக்க சாம்பிராணி புகைப்போட்டு அக்மார்க் குடும்ப இஸ்த்திரியாக மாற்றம் அடைந்தாள். இதை எல்லாம் செய்ய நினைக்கும் முன்பு இதழ்களில் சின்ன ஏளன சிரிப்பும் பரிகாச சிரிப்பும் வந்தது. ஆனால் செய்ய தொடங்கிய பொழுது முழு மனதுடன் ஒன்றிப்போனாள்.

அவளால் கடமைக்கு என்று செய்ய முடியவில்லை. வீட்டை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தாள். காலை உணவை அவளிடம் கேட்டு செய்ய ஆரம்பித்தார்கள். வீட்டை தனக்கு பிடித்த மாதிரி கொஞ்சம் கொஞ்சமாக அவள் மாற்ற மலையமான் முறைத்தானே தவிர எதுவும் கண்டுக் கொள்ளவில்லை.

எல்லாவற்றையும் மாற்ற முடிந்தவளால் அவனை நெருங்க மட்டும் துணிவு வரவில்லை. அப்படியே நெருங்கிப் போனாலும் அவனை தொடுவது எல்லாம் மலையாய வேலை தான்.

அன்றைக்கு அப்படி தான் அவனுக்கு பார்த்து பார்த்து பரிமாறினாள். எப்பொழுதும் பரிமாறுவது தான். ஆனால் முன்பு எல்லாம் போதும் என்று சொல்லி விட்டால் அப்படியே விட்டுவிட்டு போய் விடுவாள். ஆனால் இப்பொழுது,

“என்ன போதும்.. சாப்பிட்டதே ரெண்டு தோசை தான். இன்னொரு இடியாப்பம் வச்சுக்கோங்க. உங்களுக்காக பாயாவை நானே சமைச்சேன். இப்படி டெஸ்ட் கூட பண்ணாம போனா எப்படிங்க” என்று கேட்டு அவனின் தட்டை நிரப்பி வயிறையும் நிரப்பியவளை கூர்ந்துப் பார்த்தான்.

அவனை கம்பெல் பண்ணி எதுவும் நடத்திக் கொள்ள முடியாது. ஆனால் இன்றைக்கு அவள் வரம்பு மீறி தன்னை கட்டுப்படுத்த நினைப்பது போல இருக்க விழிகளாலே அவளை எரித்தான். சட்டென்று அவனது தோளில் கைவைத்து இளாவை கண் காட்டி கெஞ்ச இயல்புக்கு வந்தான்.

“ஏங்க இனி சாப்பிட்டுட்டு கொஞ்சமா சூப் எடுத்துக்கோங்க..” பவுலில் ஊற்றி வைத்தாள். இதற்கு முன்னாடி இதெல்லாம் நடக்கும் தான். ஆனால் தேனருவி பேசமால் செய்வாள். இப்பொழுது அதிகமாக பேசினாள். வீட்டில் அவளது பேச்சு வார்த்தை கேட்டுக் கொண்டே இருந்தது.

அதுவும் பேச்சுக்கு பேச்சு ஏங்க ஏங்க என்று அழைப்பு, அவன் இல்லை என்றால் வேலையாட்களிடம் பேசும் பொழுது அவனை சார்ந்தே இருப்பது போல பார்த்துக் கொண்டாள்,

“அவருக்கு இது ரொம்ப புடிக்கும், அவர் இதை செஞ்சா ரசிப்பாரு..” அவரு அவருன்னு.. மலையமானை முன்னுக்கு நிறுத்தி அவளின் நெஞ்சில் அவன் நிலையாக நின்று விட்டதை போல காட்டிக் கொண்டாள். இளாவிடம் காட்சிப் படுத்திக் கொண்டாள்.

அது போல இளா தங்களை பார்க்கிறாளா என்கிற ஆராய்ச்சி எல்லாம் அவள் செய்யவில்லை. அதே போல மலையமானை ஆராய விடவில்லை.

“ஏன்டி..” என்று அவன் கோவமாக கேட்க,

“இப்படி ஆராய்ஞ்சிக்கிட்டே இருந்தா நாம நடிக்கிறோம்னு அவளுக்கு நல்லா தெரிஞ்சிடும். அதே போல நீங்க விரும்புற மாற்றமும் அவக்கிட்ட வராது. நாம செய்யிறத முழு மனதுடன் செய்வோம்.. கண்டிப்பா மாற்றம் வரும். எதையும் யோசிக்காம இயல்பா இருக்குற மாதிரி இருங்க..” என்றவளின் பேச்சை போனா போகுதென்று கேட்டுக் கொண்டான்.

அன்றிலிருந்து அவன் தங்கை தங்களை பார்க்கிறாளா என்று ஆராய்வதே இல்லை. அதே போல தேனருவி என்ன செய்தாலும் அதை ஏற்றுக் கொண்டான் முழு மனதுடன்.

அவளின் பேச்சு சத்தம் தொடர்ந்து வீட்டுக்குள் கேட்டுக் கொண்டே இருந்தது. அது அவனது காதில் நீங்காத ரீங்காரமாகிப் போனது அடுத்து வந்த நாட்களில் எல்லாம்.

“ஏன்டி இப்படி பேசிட்டே இருக்க?” கடுப்புடன் கேட்டு விட்டான் தங்களின் தனி அறையில். ஏனெனில் அவனது வீடு எப்பவும் அமைதியாக இருக்கும். இப்பொழுது அவளின் பேச்சு சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கவும் கடுப்பாகி விட்டான்.

“நீங்க பேசாம போனதுனால தான் இளாவும் மனசை திறந்து எதுவும் பேசாமலே இருக்கா.. அவ மௌனத்தை முதல்ல உடைக்கணும். அவளுக்கும் பேச தெரியும்னு முதல்ல அவளுக்கே புரியவைக்கணும். அதுக்காக தான் பேசிட்டே இருக்கேன்” என்றாள். மலையமான் மௌனமாகி விட்டான்.

“உங்களை ஹெர்ட் பண்ண சொல்லல.. ஆனா அது தான் உண்மை.. வலிச்சாலும் வலியை பொறுத்துக்கோங்க. ஏன்னா நாம செய்யிறது உங்க தங்கை வாழ்க்கைக்காக” என்றாள்.

தலையை ஆட்டினான் மலையமான். அதன் பிறகு அவளின் செயலில் எதையும் தலையிடவே இல்லை. இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் கணவன் மனைவி நெருக்கம் என்பது ஒன்று இருக்கிறதே.. அதையும் இளாவுக்காக செய்து தான் ஆகணும். நான்கு சுவருக்குள் நடப்பதை படையல் போடவேண்டும் என்கிற அவசியம் இல்லை. ஆனால் அந்த நான்கு சுவரை தாண்டி பல ஆத்மார்த்தமான நெருக்கத்தை இளாவுக்கு காட்டிக் கொடுத்து தானே ஆகணும்.

அதுவும் எந்த வகையிலும் முகம் சுளிக்கா வண்ணம் காட்டியாகணும். இது ஒன்னும் புதிது இல்லை. நம் நாட்டில் ஒரு மன்னன் தன் மகளுக்காக ஒரு குளத்தை கட்டி அதில் தாம்பத்திய நெருக்கத்தை சிற்பங்களாக வடித்து வைத்து இருக்கிறார்.

அந்த இளவரசி தாய் இல்லா பிள்ளை. வாள் பயிற்சி குதிரை பயிற்சி என இருக்கும் மகளுக்கு திருமணம் செய்து வைத்து குடும்ப வாழ்க்கை பற்றிய புரிதல் இல்லாமல் போனதில் மனம் வருந்திப் போனார்.

தாய் என்றால் இல்லறவாழ்வின் சூட்சமத்தை சொல்லிக் கொடுத்து இருப்பார். இவர் தகப்பன் ஆயிற்றே.. மகளிடம் எப்படி சொல்வது. எனவே மகள் களவியல் பாடங்களை கற்றுக் கொள்ள அவளுக்காகவே தனியாக ஒரு குளத்தை கட்டினார். அதில் இருக்கும் சிற்பங்கள் அத்தனையும் களவியல் சிற்பங்கள் தான். அதை பார்த்து அந்த பெண் பலவற்றை புரிந்துக் கொண்டு கணவனோடு மனம் நிறைந்து வாழ்ந்தாள் என்பது எல்லாம் சரித்திரம். எதுவும் கதையில்லை.

ஏன் நம் ஊர்களில் காணப்படும் கோயில் கோபுரங்களில், கற் தூண்களில் கூட பல வகை களவியல் சிற்பங்களை செதுக்கி வைத்து இருப்பார்கள். ஏன் எதற்கு என்ற ஆராய்ச்சி எல்லாம் தேவையில்லை.

ஆனால் அதை பார்த்து பலரும் பாடம் படித்து இருக்காலம் இல்லையா? இப்படி தான் இருக்கவேண்டும் இது தவறு இல்லை என்ற கண்ணோட்டத்தை கொடுத்து இருக்கலாம் இல்லையா?

எனவே இளாவை பற்றிய இந்த குறை தேனருவிக்கு பெரிதாக தெரியாவில்லை. இதுபோன்ற செய்திகளை ஏற்கனவே தேனருவி அறிந்து இருந்த காரணத்தால் மலையமானின் செயல்களை அவளால் தவறாக பார்க்க முடியவில்லை. ஆனால் அதில் தன் வாழ்க்கை நிலைகுலைந்து போக போவதில் தான் வேதனை அவளுக்கு.

Loading spinner


   
Quote
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top