கோவத்தோடு தேனருவி இருந்த அறைக்கதவை கோவமாக தட்டினான்.
அவனது தட்டலில் அத்தனை கோவம் அடங்கி இருந்தது. அதை இந்த பக்கம் புரிந்துக் கொண்டவளுக்கு நெஞ்சில் நீர் வற்றிப் போனது.
“ப்ளீஸ் கொஞ்ச நேரம் நான் தனியா இருக்கணும்” என்றாள்.
“அழதானே போற.. அதை அங்க வந்து அழு” என்றான் அழுத்தமாக.
“உங்களுக்கு எல்லாம் மனசாட்சியே இல்லையா..?” அழுது சிவந்த முகத்துடன் கதவை திறந்து அவனை பார்த்து ஆத்திரமாக கேட்டாள்.
“இல்ல” என்றவன், “வா” என்று விட்டு மேலே போய் விட்டான். இவளுக்கு போகவே மனம் வரவில்லை. ஆனால் அவன் சிவந்து கருத்துப் போய் இருந்த முகத்தை பார்த்து என்ன நினைத்தாளோ அவனின் பின்னோடு மாடி ஏறிவிட்டாள்.
தன் அறையில் இருந்து இதை பார்த்த இளவரசிக்கு ஒன்றும் புரியவில்லை. உதட்டை பிதுக்கிக் கொண்டு போய் விட்டாள்.
தங்களின் அறைக்கு வந்து சேர்ந்த தேனருவி அவனை நிமிர்ந்தும் பார்க்காமல் அப்படியே படுக்கையில் போய் சுருண்டுக் கொண்டாள். அழுகை என்றாள் அப்படி ஒரு அழுகை. அவளின் முதுகு குலுங்குவதை பார்த்த மலையமானுக்கு எரிச்சல் வந்தது.
“இப்ப எதுக்கு நீ இப்படி அழுதுட்டு இருக்க?” கடுப்பானான். அவனது பேச்சை கேட்ட தேனருவிக்கு கோவம் என்றால் கோவம் அப்படி ஒரு கோவம் வந்தது.
“உங்க மனசுல நீங்க என்ன நினைச்சுக்கிட்டு இருக்கீங்க.. இவ்வளவு நடந்த பிறகும் ஒருத்தி அழலன்னா அவ மனுசியே இல்ல.. நான் ஒரு சாதாரண மனுசி.. என்னால நடந்துப் போன சம்பவங்களை எல்லாம் அவ்வளவு ஈசியா எடுத்துக்க முடியல. அதனால அழுகை வருது.. எனக்கு ஒன்னும் பிழிஞ்சு பிழிஞ்சி அழணும்னு அவசியம் இல்ல.. என் தலை எழுத்து எனக்கு தானாவே அழுகை வந்து தொலையுது.. அதுக்கு நான் என்ன பண்ணட்டும்..” என்று கேட்டவளை கூர்ந்துப் பார்த்தான்.
அவளின் விழிகளில் மருதாணி அள்ளிப்பூசியது போல செக்க சிவந்துப் போய் இருந்தது.
“ப்ச் டிராமா பண்ணதா” என்றான்.
“என்ன ட்ராமா பண்றனா?” அதிர்ந்துப் போய் விட்டாள்.
“பின்ன இப்படி அழுது அழுது தானே நீங்க எல்லோரும் கணவன் கிட்ட எல்லாத்தையும் சாதிச்சுக்குறீங்க” என்றவனை முறைத்துப் பார்த்தவள்,
“அப்படி இதுவரை அழுது உங்கக்கிட்ட நான் என்னத்தை சாதிச்சுக்கிட்டேன் சொல்லுங்க” என்று எழுந்து அமர்ந்து விட்டாள். அவளின் கண்களில் இருந்து வரும் கண்ணீர் நின்றுப் போனது.
அதை ஒரு பார்வை பார்த்தவன்,
“இனிமே சாதிச்சுக்கலாம் இல்லையா?” என்று விதாண்டாவாதம் பேசியவனை கண்டு ஏகத்துக்கும் எரிச்சல் மண்டியது.
“நீங்க எல்லாம் மனுசனே இல்லை.. இரும்பு ரகம், அரக்க குணம் கொண்ட மனுசன். உங்க கூட எல்லாம் பேசுறதே நேர விரயம் தான்” வசைபாடினாள்.
“அதுக்கூட பரவாயில்ல.. ஆனா நீ அழுது சாதிக்க நினைக்கிறது தான் கடுப்பா வருது” என்று அதிலே நின்றவனிடம் பேசுவது வீண் என்று புரிந்துக் கொண்டவள் திரும்பி படுத்துக் கொண்டாள்.
அழுகை முற்றிலும் மட்டுப் பட்டு இருந்தது.





