அவன் அப்படி சொல்லும் பொழுது உள்ளமெல்லாம் அவ்வளவு உவகையாய் இருந்தது. இதைவிட வேறு என்ன வாழ்க்கையில் வேண்டும் என்கிற எண்ணம் வந்தது. கண்களில் நீர் நெகிழ எதிரே இருந்த தாயை நோக்கினாள்.
“இது போதும் எனக்கு... இந்த நொடி வாழ்ந்த மகிழ்ச்சி போதும்...” என்று முணுமுணுத்தவள் பாண்டியனின் கையேடு இணைந்து தாலியை எடுத்து பூசாரியிடம் கொடுத்தாள்.
அதன் பின்பு திருவிழா கோலாகலமாக நடை பெற்றது.
மாவிளக்கு எடுத்துக்கொண்டு குடும்பத்தோடு கடைசி நாள் திருவிழாவில் கலந்துக்கொள்ள வந்தாள் பொழிலி.
அம்மன் சன்னதிக்கு முன்பு வந்து நின்றவள், “எனக்கு உன்கிட்ட என்ன வேண்டுறதுன்னு தெரியல... நான் வேண்டுனா அது சுயநலமா போகும்... எனக்கு எதுவும் வேணாம் தாயே... உன்னை தேடி வந்தவர்களோட குறையை தீர்த்து வை. அது போதும்.” மனசார வயக்காட்டு அம்மனை கும்பிட்டு எழுந்தவளின் கண்களில் அவளது வீட்டை சேர்ந்தவர்கள் தென்பட, அவளின் இதழ்களில் புன்னகை வந்தது.
நிமிர்ந்து தன் எதிரில் இருந்த தாயை பார்த்தாள். அவரின் இதழ்களில் புன்னகை நிரம்பி இருந்தது.
திருவிழா ஒருவழியாய் முடிய, பாண்டியனின் விரதமும் முடிவுற்றது. பொழிலியை தூக்கி சுற்றியவன்,
“உன்னை விட்டு இருக்கவே முடியலடி... என்ன தான் மாயம் பண்ணி வச்சியோ. மனசெல்லாம் நீயே நிறைஞ்சி போய் கிடக்குறடி.. நிமிஷம் கூட விட்டுட்டு இருக்க முடியல... அப்படியே நெஞ்சை கிழிச்சுக்கிட்டு உள்ள கிடக்குறடி.” அவளது கழுத்தில் முகம் புதைத்து பின்னிருந்து அணைத்துக்கொண்டான்.
அவன் பேச பேச அவளுக்கு வானத்தில் பறப்பது போல இருந்தது. அதோடு இன்னொரு உணர்வும் அவளை வாட்ட, மீண்டும் கண்களில் கண்ணீர் வந்தது. ஆனால் அவனது மகிழ்ச்சியை குழைக்க மனமில்லாமல் அதை தனக்குள் உள் வாங்கிக்கொண்டவள் அவனுக்கு தன் விழி மொழிகளாலும் உணர்வின் நிலைகளாலும் பதிலுரை கொடுத்தாள்.
திருவிழாவுக்கு பாண்டியம்மாளும் வந்து சிறப்பித்து விட்டு நந்தினியை இன்னும் சில நாட்கள் இருக்க செய்துவிட்டு சென்றாள்.
நந்தினியின் கண்கள் முழுவதும் பசும்பூண் பாண்டியனின் மீதே இருந்தது. அதை கொஞ்சமும் கண்டுக்கொள்ளாமல் எப்பொழுதும் போல தன் மனைவியின் முந்தானையை பிடித்துக்கொண்டே அலைந்துகொண்டு இருந்தான்.
அவனது இந்த செயல் கூட பொழிலை அந்த அளவு ஈர்த்தது.
“உங்களையே தான் பார்த்துக்கிட்டு இருக்கா மாமா அவ... ஆனா நீங்க அவளை கொஞ்சமாச்சும் கண்டுக்குறீங்களா...? பாவம் அவ நூல் விட்டு நூல் விட்டு வாடிப்பொயிட்டா...” என்று அவனை சீண்டிவிட்டாள்.
“ஏன்டி அவ என்னை பார்த்தா பதிலுக்கு நான் அவளை பார்க்கணுமா என்ன...? என் கண்ணுக்கும் மனசுக்கும் நிறைஞ்சி போய் நீ இருக்க... உன்னை தான்டி என் கண்ணு தேடும், உன்னை தான் என் மனசு உணரும்..” என்றவன்,
“இன்னொரு முறை அவளை பாரு இவளை பாருன்னு வந்த... குடலை உருவி மாலையா போட்டுக்குவேன் பார்த்துக்க...” எப்பொழுதும் போல அவன் கத்த, அவனது தோளில் தன் முந்தானையை மாலையாக போட்டு தன்னருகில் இழுத்தவள், அவன் எதிர் பாரா சமயம் அவனின் இதழ்களில் இதழ் புதைத்தாள்.
அவன் ஒத்துழைக்காமல் போக,
“சரி இனி இப்படி செய்ய மாட்டேன் மாமா... விடுங்களேன். ரொம்ப தான் பண்றீங்க...” சடைத்துக்கொண்டவள், மீண்டும் அவனிடம் ஒன்ற, ஒரு புன்னகையுடன் தன் கைகளில் அவளை தன் உயரத்துக்கு தூக்கிக்கொண்டு அவளின் இதழ்களை வன்மையுடன் கவ்விக்கொண்டான்.
அதில் அவளது உதடுகள் காயம் கொண்டு வீங்கியே போனது.
“ம்ம்மா... என்ன மாமா இப்படி முரட்டு தனம் பண்றீங்க... விடுங்க வலிக்கிது... வாயே புண்ணாயிப்போச்சு போங்க...” வெடுக்கென்று அவனிடமிருந்து இதழ்களை பிடுங்கிக்கொண்டாள்.
“ம்ம்... இனிமே இப்படி தேவையில்லாம உன் வாய் பேசாது பாரு அதுக்குதான்...” என்றான் அமர்த்தலாய்.
அவனை முறைத்தவள் கீழே செல்ல போக,
“எங்கடி போற...”
“கீழ போறேன்...”
“எதுக்கு...”
“எதுக்கோ போறேன் விடுங்களேன்...” கடுப்படித்தாள்.
அவளது கடுப்பில் இவனுக்கு குளிர்காய ஆசை பிறக்க,
“அப்படியா... சரி போ. ஆனா போறதுக்கு முன்னாடி தைலம் தேச்சி விட்டுட்டு போடி.” என்றான்.
“ஏன் என்ன ஆச்சுங்க...” பதறினாள்
“மூட்டை ஒண்ணு தூக்குனேன்.. அப்பத்துல இருந்து இந்த பக்கம் வலிக்கிது...” என்று அவன் நெஞ்சை பிடித்துக்கொண்டான்.
“என்னங்க சொல்றீங்க...” படபடத்தவள், வேகமாய் தைலத்தை எடுத்து வந்து அவனது வெற்று மார்பில் தேய்க்க வர, அவளை அப்படியே அள்ளி தன் நெஞ்சில் போட்டுக்கொண்டவன்,
“எவ்வளவு ஏத்தம் இருந்தா நான் இங்க இருக்கேன். நீ வேலை செஞ்சி கிழிக்கிறவ மாதிரி கீழ போறேன்னு சொல்லுவ... வாய் ரொம்ப கூடி போச்சு. உன்னை இப்படியே விட்டா நீ சுத்தப்பட்டு வர மாட்ட... இரு இப்போ உன்னை என்ன பண்றேன்னு பாருடி...” என்று சொல்லியவன் மாலை பொழுது என்று கூட விடாமல் அவளை தன் ஆளுகைக்கு கொண்டுவந்து அவளை ஆட்க்கொண்டான்.
உச்ச நேரத்தில் கொற்கையன் வந்து கதவை தட்ட, பொழிலியின் வதனத்தில் கேலி புன்னகை உதித்தது.
“அடியேய் உன்னை...” என்றவன் சிரிக்கும் அவளது இதழ்களை வலிக்க வலிக்க காயம் செய்தவன்,
“உன் மகனுக்கு பதில் சொல்லுடி... பாரு அம்மா அம்மான்னு கத்திக்கிட்டு இருக்கான்...” என்றான் நக்கலுடன்.
“செய்யிறதும் செஞ்சுட்டு உங்களை...” என்று அவனை திட்டிக்கொண்டே அவனது ஆளுகையில் இருந்துக்கொண்டே,
“டேய் கண்ணா அம்மா குளிச்கிக்கிட்டு இருக்கேன் டா... இதோ இன்னும் ஒரு பத்து நிமிடம். நீ பிச்சாயி ஆத்தாக்கிட்ட போயி ராக்காயி ஆத்தா யாருக்கும் தெரியாம தாத்தாவுக்கு முத்தம் குடுத்ததுன்னு போய் சொல்லுடா...” என்றாள்.
“ஏய் எதுக்குடி கிழவிங்களுக்குள்ள சண்டையை மூட்டி விடுற...” என்றான் தன் வேலையை செய்துக்கொண்டே,
“அதெல்லாம் அப்படி சிண்டு முடுஞ்சி விட்டாதான் வீடு எப்பவும் கலகலப்பா இருக்கும். விடுங்க மாமா... கொற்கையன் அப்புறம் அழ ஆரம்பிச்சுடுவான்.” என்று விலக போக, அவன் விடாமல் தன் காரியத்தை சாதித்துக்கொண்டு இருந்தான்.
“மாமா...”
“ஷ்... கத்தாதடி...” அவளது கழுத்தில் வலிக்க கடித்து வைத்தவன், அவள் மீது சரிந்துக்கொண்டான்.
கொற்கையன் கீழே போய் அதே போல சொல்ல, ராக்காயிக்கயும் பிச்சாயிக்கும் மயிருபிடி சண்டை அமோகமாக நடந்தது.
மீனாச்சியம்மை சிரிப்புடன் தன் பேரனோடு அடுப்படி பக்கம் ஒதுங்கிக்கொள்ள,
நந்தினியோ “இதென்ன இப்படி பண்ணுதுங்க இந்த கிழவிங்க...?” முறைத்து பார்த்துக்கொண்டு இருந்தாள். மாறன் தொலைகாட்சியில் மூழ்கி இருக்க, நின்ற பாண்டியர் தாத்தா அப்பாவியாய் அவர்களை பிரிக்கும் வேளையில் இருந்தார்.
வாழ்க்கையில மனுஷனுக்கு சோதனை வரலாம்... ஆனா சோதனையே வாழ்க்கையா வந்தா யாரால தாங்க முடியும்... புலம்பிய படியே தாத்தா இரு கிழவிமார்களுக்கும் இடையில் மாட்டிக்கொண்டு நின்றார்.
Nice





