Notifications
Clear all

அத்தியாயம் 17

 

Admin
(@ramya-devi)
Member Admin
Joined: 12 months ago
Posts: 961
Topic starter  

அவனது நெஞ்சில் கண் மூடி இருந்தவளுக்கு அவனை உணர ஏதோ தடையாக இருப்பதை உணர்ந்தவள், எழும்பி அவனை பார்த்தாள்.

அவளது விலகளில் “என்னடி...?” என்று கேட்டான்.

“ஒண்ணுமில்லங்க..” என்றவள் கட்டிலை எட்டி பார்த்தாள். குழந்தை நன்கு தூங்கிக்கொண்டு இருந்தான். இவனும் எட்டி பார்த்தான்.

“என்னடி அழுதானா...?”

“அதெல்லாம் ஒண்ணும் இல்ல மாமா...” என்றவள், அவனது முண்டா பனியனை கழட்டிவிட்டு அவனின் வெற்று நெஞ்சில் சாய்ந்துக்கொண்டாள்.

அதென்னவோ அப்பொழுது தான் அவனது நெருக்கம் இன்னும் அதிகமானது போல இருந்தது அவளுக்கு. அவளது செயலில் வாய்விட்டு சிரித்தவன்,

“கேடி... இதுக்கு தான் சுத்தி சுத்தி பார்த்தியாக்கும்..” என்று அவளது மூக்கை பிடித்து திருக்கியவன்,

“எனக்கும் உன்னை உணரனும்...” என்று முரண்டு பிடிக்க கலவரமானாள் பூம்பொழிலி மாதுமையாள்.

“வேணாங்க...” அவள் மறுப்பு குரல் அவ்விடம் ஒலித்துக்கொண்டே இருந்தது...

ஒரு கட்டத்துக்கு மேல் அங்கு அவளது முணகல் ஒலி மட்டும் இடைவிடாமல் கேட்டிக்கொண்டு இருக்க, அறையிலிருந்த சிறிய வெளிச்சம் கூட அணைக்கப்பட்டது பசும்பூண் பாண்டியனின் அதிரடி செயல்களில்.

முதல் தாரத்திடம் மூன்றே முறை தான் கூடினான். ஆனால் பூம் பொழிலியிடம் ஒரு நாளைக்கு மூன்று முறை கூடினான். கூடல் மட்டுமல்லாது காதலும் கட்டுக்கடங்காமல் தான் செய்தான்.

அவனது அன்பில் மூச்சு முட்டி தான் போவாள். அவ்வளவு அதிரடியாக அவளை தனக்குள் பதுக்கி வைத்து இருக்கிறான்.

ஒவ்வொரு நாளும் அவர்களுக்கு முதல் நாள் சந்தித்தது போல தான் இருந்தது. அவளிடம் மெல்லிய நடுக்கமும், அவனிடம் ஒரு உரிமையும் இருந்துக்கொண்டே இருந்தது.

ராக்காயிக்கும் பிச்சாயியிக்கும் இருவரது வாழ்வை பார்த்து அவ்வளவு சந்தோசமாக இருந்தது.

“ஆத்தா உங்க பேரன் பண்றது கொஞ்சம் கூட சரியே இல்லை... அண்ணி மெனக்கெட்டு கூப்புடுறாங்க... இவரு விடவே மாட்டிகிறாரு... என்னன்னு கேளுங்க...” சட்டமாய் அவரின் மடியில் படுத்துக்கொண்டாள்.

தாய் மடி சுகம் தெரியாத அவளுக்கு இருவரின் மடியும் தான் தாய் மடியாய் போனது.

“ஆத்தாடி என் பேரன் என்ன சொல்றானோ அதைக்கேட்டு நடத்தா... அவனுக்கு தெரியாதா அவன் உடன் பிறப்பப் பத்தி...” என்ற பொழுது மீனாச்சியம்மை அனைவருக்கும் மோர் தண்ணி கலக்கி எடுத்துக்கொண்டு வந்தார்.

அவரும் அவர்களோடு வந்து அமர்ந்து பேரனுக்கு பழங்களை உரித்து வெறும் சதையாக ஊட்டிவிட்டார்.

“அத்தை நீங்களாவது ஏதாவது சொல்லுங்க...”

“இதுல நான் சொல்ல என்ன இருக்கு பொழிலு. பாண்டியன் என்ன சொல்றானோ அதன் படியே நட...”

“அத்தை அண்ணி உங்க பொண்ணு...”

“இருக்கட்டும் அவ வேற வீட்டுக்கு போன பொண்ணு. ஆனா பாண்டியனும் என் மகன். இந்த வீட்டுக்கு எல்லாமுமா இருக்கிறவன். அவன் ஒண்ணு சொன்னா அதை மாத்த யாராலும் முடியாது. அதனால அந்த பேச்சை விடு...” என்றார்.

“எல்லோரும் மகனுக்கு தான் பேசுவீங்க...” நொடித்துக்கொண்டாள்.

அன்று மத்தியம் பருத்தி ஆலைக்கு உணவு எடுத்துக்கொண்டு சென்றாள் பாண்டியனுக்காக.

வந்தவளை கட்டிக்கொண்டவன்,

“ஏன்டி இவ்வளவு நேரம்... உனக்காக எவ்வளவு நேரம் காத்துக்கிட்டு இருக்கிறது...” இடையை வலிக்க கிள்ளினான்.

“கொற்கையனை தூங்கவச்சிட்டு வரேன் மாமா... இல்லன்னா அழுவான்...” என்றவளை தன் மடி மீது அமர்த்திக்கொண்டவன், அவளின் கழுத்தோரம் முகத்தை பதித்து, இதழ்களை புதைத்துக்கொண்டவன்,

“நானும் தான்டி அழுவேன் நீ இல்லன்னா...” என்று சொல்ல, ஒரு நொடி அவளுடைய உடம்பு விரைத்து இயல்புக்கு திரும்பியது.

அதை அறிந்துக்கொண்டவன் “என்னடி...?” என்று கேட்டான்.

“ஒண்ணும் இல்ல மாமா... நீங்க என் மேல வச்ச அன்ப நினைச்சி உடம்பு சிலிர்த்துச்சு... அதான்”

“எங்கடி சிலிர்த்துச்சு நான் பார்க்கலையே... வா மாமென் எந்த இடம்னு பார்க்கிறேன்...” என்று அவளை கட்டிக்கொண்டு மேற்கொண்டு செல்ல போக,

அவனை தடுத்துக்கொண்டே,

“இது ஆலை மாமா... எதா இருந்தாலும் வீட்டுக்கு வாங்க அங்க போய் பேசிக்கலாம்...” என்றாள்.

“நீ தான்டி பேச கூடாதுன்னு சொன்ன...” முறைத்தான்.

“ரொம்ப ஆழமா போகாம அப்படியே லேசா தொட்டுக்கிட்டு பேசிக்கலாம் மாமா தப்பு இல்ல..” என்று சிரித்தாள்.

“என்னைக்கிடி காப்பு கட்டுறாங்க...” அவனது முகம் கழுத்தின் முன் பக்கமாக கீழே இறங்க, அவனை அப்படியே நகர விடாமல் பிடித்துக்கொண்டு,

“நீங்க தான் முடிவே எடுப்பீங்க... என்கிட்டே போய் கேக்குறீங்க மாமா...” என்றாள் அவனது உணர்வுகளை தாங்க முடியாமல்.

“அதுக்கு இன்னும் இரண்டு நாள் இருக்குடி...” என்றவன் மேலும் அவளிடம் இளைய,

“ப்ச்... முதல்ல சாப்பிடுங்க மாமா... ஆறிட போகுது..”

“நீ தான் என்னை ஆற போடுறதுலையே குறியா இருக்கியேடி...” வம்பளந்தான்.

“உங்க கிட்ட போய் சொன்னேன் பாருங்க...” என்றவள் அவனது பிடியில் இருந்தபடியே அவனுக்கு பரிமாறி அவளே ஊட்டியும் விட்டாள்.

நீயும் சாப்பிடு என்றவன், தனக்கு பிடித்த வழியில் அவளுக்கு ஊட்டி விட, சிவந்து போனாள்.

அவளது சிவப்பை கண்டு அவளின் கன்னத்தில் சாப்பிட்ட வாயோடு முத்தம் வைத்து அவளை சீண்டிவிட,

“இப்படி பண்ணாதீங்கன்னு எத்தனை முறை மாமா சொல்லி இருக்கேன். சொன்னா சொன்ன பேச்சை கேக்குறதே இல்ல...” என்றவள் கன்னத்தை துடைக்க பார்க்க, அவன் மேலும் வம்பு பண்ணினான்.

“விடுங்க மாமா போய் கைக்கழுவி விட்டு வரேன்..” என்றவளை விட மறுக்க,

அவனது கண்களில் வழியும் அன்பும் ஆசையும் காதலும் மோகமும் கண்டு குனிந்து அவனது மீசையை தன் பற்களால் பற்றி இழுத்து அவளை தூண்டிவிட்டவள்,

சுகமாய் அவனது இதழ்களை கவ்விக்கொண்டவள், கிறங்கும் அவனது விழிகளை ஆசையுடன் பார்த்தாள்.

அவன் சொன்ன பாடங்களை அவனுக்கே திருப்பி கொடுத்தவள், முழு மயக்கத்துக்கு அவனை இட்டு சென்று விட்டு அவன் அசந்த நேரம் கைகளை கழுவிக்கொள்ள விரைந்தாள்.

அவளது அருகாமையில் சொக்கி போனவன், அவள் விலகியது கூட தெரியாமல் கண்களை மூடி ஆழ்ந்து போய் இருந்தான்.

விரைந்து கைகளை கழுவிக்கொண்டு வந்தவள் பாண்டியன் இருக்கும் நிலையை கண்டு கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. அடுத்த நொடி விரைந்து அவனிடம் வந்தவள் முன்பை விட அதிகமாக அவனது இதழ்களை கவ்வி சுவைக்க தொடங்கினாள்.

இன்னும் இன்னும் என்று அவளது தேடல் இருக்க, பாண்டியனுக்கு சட்டென்று உணர்வு சங்கிலி அறுந்தது போல இருந்தது.

அவளிடம் காதலை விட ஒரு தேடுதல் தான் அதிகம் இருந்தது. உணர்வு குவியல்களில் இருந்து விலகியவனது சிந்தனை சட்டென்று முகிழ்க்க,

அவளது செயலுக்கு ஒத்துளைத்தானே தவிர அவன் எதுவும் செய்யவில்லை. ஒருகட்டத்துக்கு மேல் தளர்ந்தவள் அவன் நெஞ்சிலே சாய்ந்துக்கொண்டாள்.

விழிகளில் கண்ணீர் நிரம்பி இருந்தது அவளுக்கு. ஆனால் அதை அவனுக்கு காட்டாமல் மறைத்தாள். பாண்டியன் வில்லாதி வில்லன் அந்த வில்லுக்கே தலைவன் என்று அறியாதவளாய் போனாள்.

Loading spinner


   
Quote
(@megalaveera)
Eminent Member
Joined: 6 days ago
Posts: 43
 

Nice 

Yennavo villangam panna pora 

Loading spinner


   
ReplyQuote
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top