அத்தியாயம் 6

 

Admin
(@ramya-devi)
Member Admin
Joined: 12 months ago
Posts: 960
Topic starter  

ராஜா காதை விட்டு தள்ளி போனை பிடித்துக் கொண்டான். அந்த அளவுக்கு கத்தினான் ஆதி. காதே செவிடாக போய் விடும் போல.. பெருமூச்சு விட்டவன்,

“ஆதி கொஞ்சம் அமைதியாகுடா” சமாதனப் படுத்தப் பார்க்க, ஆதியோ விடா காண்டனாய் நின்றான்.

“இப்போ இந்த நிமிடம் உன் தங்கச்சி இந்த வீட்டை விட்டு வெளியே போய் இருக்கனும்.. இல்லன்னா நான் மனுசனா இருக்க மாட்டேன்” கத்தி விட்டு போனை தூக்கிப் போட்டவன் திரும்பி உள்ளே பார்த்தான். ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாள் மகரியாள்.

தூக்கத்திலும் விடாமல் பற்றி இருந்தவளின் கையில் இருந்த புகைப்படத்தை வெடுக்கென்று பிடுங்கியவன் அதை அவள் கையில் மீண்டும் கிடைக்காத அளவுக்கு எங்கோ மறைத்து வைத்தவன் அலுவலக வேலையில் ஈடுபட்டான்.

“எல்லாத்தையும் நாங்க பார்த்துக்குறோம் உன் உடம்பு முழுமையா குணமாகும் வரை அலுவலகத்துக்கு வரவே கூடாது” என்று ராஜாவும் கேசவும் கடுமையாக எச்சரித்த பிறகே அடங்கினான் ஆதி. இல்லை என்றால் இந்நேரத்துக்கு அலுவலகம் சென்று அத்தனை பேரையும் அரட்டி உருட்டிக் கொண்டு இருந்து இருப்பான்.

ஆதியின் அப்பா ஒரு நிறுவனத்தை நடத்திக் கொண்டு இருந்தார். அவருக்கு பிறகு துளசிநாதன் வெறும் மேற்பார்வை மட்டும் தான் பார்த்தார். அவருக்கு இந்த கம்பெனி நிர்வாகம் இதை பற்றி எல்லாம் எதுவும் தெரியாது.

ஆதி வளர்ந்த பிறகு அதை தன் கையில் எடுத்துக் கொண்டு முழு மூச்சாக இறங்கி விட்டான். அவனுக்கு கைக்கொடுக்க ராஜாவும் கேசவும் வந்து விட தொழிலில் ஏற்றம் தான் ஆதிக்கு.

அதுவும் ராஜாவும் கேசவும் சும்மாக சேராமல் அவர்களால் எவ்வளவு முடியுமோ அதை வாங்கி தன் நிறுவனத்தில் முதலீடாக போட்டு அவர்களையும் முதலாளி அந்தஸ்த்தில் வைத்துக் கொண்டான். அவனின் பரந்த மனப்பான்மைக்கும் உயர்ந்த நட்பின் இலக்கணத்துக்கும் பாத்திரம் ஆனான் ஆதி.

தூக்கம் கலைந்து எழுந்த மகரியாளுக்கு ஆதியை தான் கண் தேடியது..

“எங்க ஆளை காணோம்” என்று தேடியவளுக்கு அண்ணனிடம் இருந்து போன் வர, எடுத்து பேசினாள்.

“என்னடா பண்ற?” ராஜா ஆதூரமாக கேட்டான்.

“தூங்குனேன் ண்ணா.. நீ என்ன பண்ற தூங்காம?” நேரத்தை கணக்கிட்டு அவனிடம் கேட்டாள்.

“ஒரு சின்ன வேலை. அதை முடிச்சுட்டு தான் தூங்கணும் பாப்பா..” என்றவன் தயக்கமாக,

“நீ வேணா நம்ம வீட்டுக்கே போயிடுறியாடா? இங்க உனக்கு கம்பெர்ட்டா இருக்கலன்னு சொன்னியே” தயக்கமாய் கேட்டான்.

“நானும் முதல்ல அப்படி தான் ண்ணா நினைச்சேன் ஆனா பாரு உன் பிரெண்டு மூக்குல இருந்து இரத்தமா வடியுது. இந்த நிலமையில நான் எப்படி அவரை தனியா விட்டுட்டு போக முடியும் சொல்லு.. நாளைக்கு ஒன்னு கிடக்க ஒன்னு ஆச்சுன்னா நாம எல்லாம் என்ன பண்றது.. அத்தை மாமாக்கு இருக்குற ஒரே வாரிசு இவரு மட்டும் தான். நாம எல்லாம் இவரை பார்த்துக்குவோம்னு தானே விட்டுட்டு போனாங்க. இப்போ நாம பார்த்துகலன்னா அத்தை மனசும் மாமா மனசும் என்ன பாடு படும்” என்றவளின் பேச்சில் இருந்த அன்பு ராஜாவையும் நெகிழ்த்தியது.

“ஆமாம்டா.. ஆனா உன்கிட்ட முறைச்சுக்கிட்டு இருப்பானே.. என்ன பண்றது?”

“அதுக்காக இவரை விட்டுட்டு போயிட முடியுமா ண்ணா.. நான் பார்த்துக்குறேன். இவருக்கு சீக்கிரமா ஒரு கல்யாணத்தை பண்ணி வச்சுடலாம். அப்போ ப்ராப்ளம் சால்வ் ஆகிடும் தானே.. இவருக்கு கல்யாணம் ஆகும் வரை நான் இங்கையே இருக்கேன். இவரை விட்டுட்டு நம்ம வீட்டுக்கு போனா எனக்கு மனசே ஆறாது..” என்றாள்.

அவளின் வாயாலே இந்த வீட்டை விட்டு போக மாட்டேன் என்று சொல்லி விட ராஜாவுக்கு வேற என்ன வேண்டும். இனி நண்பனை எப்படியாவது சரி கட்டிடலாம் என்று எண்ணிக் கொண்டான்.

ஆதி பேசிவிட்டு வைத்த பிறகு மனசே விண்டுப் போனது அவனுக்கு. எப்படியாவது மகரியாளை ஆதியின் வீட்டில் தங்க வைத்து விட இவன் தலைகீழாக நிற்க. ஆதியோ கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் “இப்பவே உன் தங்கச்சியை கூட்டிட்டுப் போ” என்று ஒற்றை காலில் நிற்க தலையை பிடித்துக் கொண்டான் ராஜா.

ஆதி இப்படி சொன்னது மட்டும் மகரியாளுக்கு தெரிஞ்சதுன்னா உடனே இது தான் சாக்குன்னு கிளம்பி வந்து விடுவாள். இதுக்காகவா மூவரும் இத்தனை பாடு பட்டது.

அதனால் நைசாக தங்கையிடம் பேச்சுக் குடுத்து அவள் எந்த மன நிலையில் இருக்கிறாள் என்று அறிந்துக் கொண்ட ராஜாவுக்கு அதன் பிறகே உயிர் வந்தது.

இனி எல்லாவற்றையும் அவனின் தங்கையே பார்த்துக் கொள்வாள். முடிவு எடுக்கும் வரை தான் ஊஞ்சலாடிக் கொண்டு இருப்பாள். ஒரு முடிவை தெளிவாக எடுத்து விட்டால் என்றாள் அதன் பிறகு யார் பேச்சையும் கேட்கமாட்டாள்.

இதோ இப்பொழுது ஆதி அவளை வீட்டை விட்டு போக சொல்லும் பொழுது கூட அவள் கொஞ்சமும் அசையாமல் அவன் முன்னாடி கையை கட்டிக் கொண்டு அத்தனை உறுதியாக நின்றுக் கொண்டு இருக்கிறாள்.

“உன் கிட்ட தான் பேசிட்டு இருக்கேன்.. யார் கிட்டையோ பேசிட்டு இருக்க மாதிரி நிக்காத” பல்லைக் கடித்தான் ஆதித்யன்.

“நான் அப்படி நிக்கிறேன்னா நீங்க பேசுறதுல எனக்கு விருப்பம் இல்லன்னு அர்த்தம்” தைரியமாக அவன் முகம் பார்த்து பேசினாள்.

“ப்ச்.. இரிடேட் பண்ணாம நீ முதல்ல இங்க இருந்து போடி. நீ இங்க இருக்க வேணாம்.. உன் வீட்டுக்குப்போ”

“முன்னாடி சொல்லி இருந்தா உடனே கிளம்பி இருப்பேன். பட் இப்போ என்னால போக முடியாது”

“அடம் பிடிக்காதடி..”

“நான் என்ன அடம் பிடிச்சேன்? நீங்க தான் யாரோட சொல் பேச்சும் கேட்காம முரண்டு பிடிச்சுக்கிட்டு இருக்கீங்க.. மூக்குல இருந்து இரத்தம் வருது.. எனக்கென்னன்னு போக சொல்றீங்க.. உங்களுக்கு வேணா எங்க மேல எல்லாம் பாசம் இல்லாம போகலாம். ஆனா எனக்கு உங்க மேல அக்கறை இருக்கு. அப்படி எல்லாம் விட்டுட்டு போக முடியாது..”  

“உன் அக்கறை டேஷ் ஒன்னும் வேணாம் போடி” ஆத்திரத்தில் புடைத்துக் கொண்டு நின்றான். அவனது கோவத்தை பார்த்த பிறகும் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல்,

“உங்க இஷ்ட்டத்துக்கு எல்லாம் போக முடியாது. ஒன்னு நீங்க எங்க கூட வாங்க. இல்லையா ஒரு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோங்க. ரெண்டுல ஏதாவது ஒன்னை பண்ணுங்க.. அப்படி நீங்க பண்ணுனா பிறகு நான் இங்க இருந்து போறேன். இல்லன்னா நான் இங்க தான் இருப்பேன். என்னை அசைக்க முடியாது” என்றவளை வந்த கோவத்தில் அப்படியே அலேக்காக தூக்கி தலைகீழாக தொங்க விட்டுட்டு விட்டான்.

“அடப்பாவி.. இறக்கி விட்டு தொலைடா.. நெஞ்சு வாய்க்கு வந்திடும் போல..” தன் காலை பிடித்து தலைகீழாக தொங்க விட்டவனிடம் அலறிக் கொண்டு இருந்தாள்.

“அப்போ இங்க இருந்து போறேன்னு சொல்லு” மிரட்டினான்.

“முடியவே முடியாது” அவள் அதற்கு மேல் வீம்பு பண்ணினாள்.

“என் கிட்ட நல்லா வாங்குவடி” பல்லைக் கடித்தான்.

“ம்கும் இதுக்கு முன்னாடி எதுவும் வாங்காத மாதிரி தான்..” தனக்குள் முணகிக் கொண்டவள்,

“முடியாதுன்னா முடியாது தான்.. ஒன்னு கல்யாணம் பண்ணிக்கோங்க.. இல்ல எங்களோட வந்து இருங்க. இந்த ரெண்டை தவிர இன்னொரு ஆப்ஷன் உங்க கூட நான் இருக்குறது. இந்த மூணு தான் உங்களுக்கு. சாய்ஸ் இஸ் யோயர்ஸ்” என்றவளை ஆழ்ந்து ஒரு பார்வை பார்த்தவன்,

“என்னால உங்க கூட வந்து இருக்க முடியாது.. கல்யாணமும் செஞ்சுக்க முடியாது..”

“அப்போ நான் இங்க இருக்கிறது தான் சரி” என்றாள் முடிவாக. அவளை கூர்ந்துப் பார்த்தவன், “நோ ப்ராப்ளம்..” தோளை குலுக்கிக் கொண்டவன், “என் கூட பெட் சேர் பண்ணிக்கோ ரெடியாகிக்கோ. இன்னைக்கு நைட் எனக்கு நீ வேணும்” என்று விட்டு போய் விட்டான். இவள் தான் பேதலித்துப் போய் நின்றாள்.

“நண்பனோட தங்கைன்னு கூட பார்க்காம எப்படி பேசிட்டு போறான் பாரு பொறம்போக்கு..” திட்டியவளும் அவன் பின்னாடி தான் போனாள்.

Loading spinner


   
Quote
(@gowri)
Reputable Member
Joined: 12 months ago
Posts: 288
 

ஐ ஆதி வந்துட்டான்🤩🤩🤩🤩

Loading spinner


   
ReplyQuote
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top