பவளம் சொல்ல சொல்ல திகைத்து போனாள் பொழிலி.
“மொத்தம் எத்தனை ஏக்கரு இருக்கும்...” என்று மெதுவாக கேட்டாள்.
“அது இருக்குமுங்க நஞ்சை, புஞ்சை, கரடு கட்டையோட சேர்த்து எழுநூறு எட்டுநூறு ஏக்கரு.” என்ற பொழுதே காலின் அடியில் பூமி நழுவியது போல இருந்தது.
“என்ன பவளம் சொல்ற...” வார்த்தையே வரவில்லை.
“எனக்கு தெரிஞ்சி இதுங்க அம்மணி.. இன்னும் தெரியாம பல தொழில் ஆலைகள் இருக்குங்க... எல்லாத்தையும் உங்க ஐயா தான் முன்னால நின்னு பார்ப்பாங்க...”
“பெரிய ஐயா பஞ்சாயத்து, வயக்காடு, வாய்க்கா, காணின்னு இருப்பாக... உங்கட ஐயா தான் தொழிலெல்லாம்னு எம்மாட மச்சான் சொல்லுங்க அம்மணி...” என்றாள்.
“ம்ம்ம்...” என்று கேட்டுக்கொண்டாள்.
“என்ற மச்சானுக்கு என்ற மேல உசிருங்க... இந்த மாசி வந்தா கல்யாணம்னு தாத்தா அய்யாரு சொல்லி இருக்காங்க...” என்று பவளம் பேசிக்கொண்டே வர, பொழிலி “ம்ம்ம்” கொட்டிக்கொண்டே வந்தாள்.
பாண்டியனை ஒரு வாரத்திற்கு வெளியே எங்கும் போக வேண்டாம் என்று வெள்ளியம்பலத்தார் சொல்லிவிட, வயக்காட்டு பக்கம் போய் மேற்பார்வை செய்துக்கொண்டு இருந்தான்.
அதனால் அவனுக்கு உணவை பொழிலியிடம் கொடுத்து அனுப்ப சொன்னார்.
தூரத்தில் வந்த பூம்பொழில் மாதுமையாளை ஆசையுடன் பார்த்தவன்,
“கணக்கு சாப்பாடு வந்து இருக்கு... வாங்க சாப்பிடலாம்..” என்று சொல்ல,
“ஐயா நீங்க சாப்பிடுங்க... நான் அந்த பக்கம் போறேன்...” அவர் சொல்ல,
“இரு கணக்கு... சாப்பிட்டுட்டு போகலாம்...”
“பவளம் சாப்பாடு எடுத்துட்டு வந்து இருக்குங்க... நான் அந்த பக்கம் போயி சாப்பிட்டுட்டு அப்படியே வெங்காய மூட்டையை எண்ணி லோடு ஏத்துறேனுங்க...” சொல்லிவிட்டு அவர் போய்விட,
பூம்பொழிலை பாண்டியன் இருக்கும் இடத்தில் கொண்டு வந்து விட்ட பவளம் கணக்கு என்று அழைக்கப்படும் முனுசாமிக்கும், மேல் வேலை செய்யும் அவளின் மச்சானுக்கும் எடுத்து வந்திருந்த சாப்பாட்டை பரிமாற சென்றாள்.
பொழில் மரத்துக்கு கீழ் பனை ஓலையால் செய்த விரிப்பை விரித்துவிட்டு, சுருட்டி எடுத்துக்கொண்டு வந்திருந்த தலைவாழை இலையை விரித்து, ரக ரகமாய் இருந்த பித்தளை தூக்குவாளிகளில் இருந்த உணவு வகைகளை எடுத்து பரிமாற, பாண்டியனின் விழிகளில் தன்னவளையே வட்டம் போட்டது.
கைகளில் கலகலத்த கண்ணாடி வளையலும், நீண்டு தொங்கிய சடை பின்னலில் சூடி இருந்த மல்லிகை கணகாமர பூக்களும், நெற்றி வகிட்டில் வைத்திருந்த குங்குமமும், அவளுக்கு உறுத்தாத அளவில் தங்க சரிகையால் நெய்த பருத்தி புடவையும் தரையை கூட்டாத அளவிற்கு அதை சற்று ஏத்திக்கட்டிய விதமும் அவனை வெகுவாக கவர்ந்தது.
அந்த அலங்காரங்களை இப்பவே கலைத்து பார்க்க துடித்த தன் கைகளை அடக்கிக்கொண்டவன், சுற்றிலும் தன் பார்வையை ஓட்டினான்.
கணக்கு போகும் பொழுதே அந்த இடத்தில் இருந்த எல்லோரையும் கூட்டிக்கொண்டு சென்றுவிட்டார் என்று அறிந்துக்கொண்டவனின் இதழ்களில் மெல்லியே புன்னகை எழுந்தது.
தாராளமாக தன்னக்குறிய பெண்ணை கண்களால் களவாட தொடங்கினான்.
அவனது பார்வையில் தடுமாறிய பொழிலி,
“சாப்பிடுங்க...” என்றாள்.
“ம்ம்ம்..” என்றவன், சாதத்தை பிசைந்து முதல் கவளத்தை எடுத்து அவளது வாயருகே கொண்டு செல்ல, பொழிலிக்கு கண்கள் கலங்கியது. அதை அடக்கிகொண்டவள்,
“நீங்க சாப்பிடுங்க...” என்றாள்.
நீட்டிய கையை அவன் மடக்கவே இல்லை. அதிலே அவனது பிடிவாதம் புரிய, தயக்கத்துடன் வாங்கிக்கொண்டாள்.
“சாப்புடுடி...” என்றவன் மேலும் அவளுக்கு ஊட்டி விட,
“எனக்கு போதும் நீங்க சாப்பிடுங்க...” என்றாள்.
“மாமா சொல்லுடி...” முகம் வெட்கத்தில் சிவக்க,
“நீங்க சாப்பிடுங்க மாமா...”
“ம்ம்ம்... நீயும் சாப்பிடு...” என்று அவளுக்கு ஊட்டிவிட்டுக்கொண்டே அவனும் சாப்பிட்டு முடித்தான்.
எல்லாவற்றையும் எடுத்து வைத்துவிட்டு வாய்க்காலில் வந்த நீரில் பாத்திரத்தை கழுவி வைக்க செல்ல,
“அதை அப்புறம் பார்த்துக்கலாம்... இப்போ வா...” என்றவன் அவளை தோளின் மீது தூக்கிபோட்டுக்கொண்டு அங்கிருந்த சின்ன குடிசைக்குள் நுழைந்துக்கொண்டான்.
“ஐயோ பட்ட பகல்லையா... விடுங்க.. ஆளுகாரவுங்க யாராவது பார்த்தா மானம் போயிடும்...” என்று அவனிடமிருந்து விலக பார்த்தாள்.
“அதெல்லாம் அப்பவே எல்லாரையும் கணக்கு கூட்டிட்டு போயாச்சு... இப்போ மாமனை கவனி...” என்றவன் அதன் பிறகு அவளை விடவே இல்லை.
தேவைகள் அனைத்தும் தீர்ந்த பின்பும் அவளை விடாமல் அவளின் நெஞ்சின் மீதே துஞ்சினான்.
அவனது தலையை வருடிக்கொடுத்தவளுக்கு தூக்கம் வரவில்லை. நெஞ்சில் பல எண்ணங்கள் சுழன்று அடித்தது.
முரட்டு குழந்தையாய் இருப்பவனை குனிந்து பார்த்தாள். விழிகளில் நீர் நிறைந்தது. சற்று குனிந்து அவனது நெற்றியில் முதல் முறையாய் தானாகவே முத்தம் வைத்தாள்.
“ம்ம்ம்... இங்கயும் குடுடி...” என்றவன் அவனது இதழ்களை காட்டினான்.
“நீ... ங்க தூங்கலையா...?” திணறிப்போனாள்.
“நான் தூங்கிருந்தா உன்னோட இந்த முத்தம் எனக்கு தெரியாமலே போய் இருக்குமே...” மீசையை முறுக்கியவன்,
“குடுடி...” என்று வம்பு செய்ய தொடங்கினான்.
“அது நீங்க தூங்குறீங்கன்னு தான் குடுத்தேன்... மத்தபடி வேற எதுவும் இல்ல...” என்றவளை தன் இதழ் நோக்கி குனிய வைத்தவன், தான் கேட்டதை அவளிடம் வாங்கிக்கொண்டு அதோடு நிறுத்தாமல் மேற்கொண்டு அடுத்த வேலைக்கும் தாவினான்.
அவனது செயல்களில் தளர்ந்து போனவள் அவனது நெஞ்சிலே துயில் கொண்டாள். மெல்ல அவனது விரல்கள் அவளை தடவி, வருடிக்கொண்டு இருந்தது.
இருவரின் நினைவுகளும் எங்கெங்கோ சென்று சுழன்றுக்கொண்டு இருந்தது. ஆனால் அதை இருவரும் வெளிப்படுத்திக்கொள்ளவே இல்லை.
அவனும் அவளை அணைத்த படியே தூங்கினான். கொஞ்ச நேரம் சென்று எழுந்து பார்த்த பொழுது பொழிலி அவனருகில் இல்லை...
வேகமாய் தன் உடைகளை சரி செய்துக்கொண்டு வெளியே வந்து பார்த்தான். கண்ணுக்கு எட்டிய தூரம் வரையிலும் அவளை காணவில்லை..
“கிளம்பிவிட்டாளா...?” என்று யோசித்தவன் உணவு எடுத்துக்கொண்டு வந்த மூங்கில் கூடை குடிசையின் வெளிப்புறம் ஓரமாக இருப்பதை கண்டான்.
“இங்க தான் இருக்கா...” முணுமுணுததவன் மேல் சட்டையை போட்டுக்கொண்டு வரப்பில் இறங்கி தேட தொடங்கினான்.
சற்று தொலைவில் நெல்லு நாத்து நடவு போய்க்கொண்டு இருக்க, அங்கே ஊன்றி கவனித்தான்.
பொழிலி புடவையை முழங்கால் அளவு ஏற்றி கட்டி, கீழே குனிந்து இலாவகமாக நாத்து நட்டுக்கொண்டு இருந்தாள்.
ஒரு நொடி அவனது மனதுக்கு அந்த காட்சி இதமாய் இருந்தது. இங்கிருந்த படியே
“மாதுமையாள்...” கர்ஜனையான குரல் கேட்க, தூக்கிவாரிப்போட நிமிர்ந்தாள் பொழிலி.
ஏண்டா காத்தற.....ஏன்🤣🤣🤣🤣🤣🤣
அவளே பயந்துட்டா.....





