அத்தியாயம் 8

 

Admin
(@ramya-devi)
Member Admin
Joined: 12 months ago
Posts: 961
Topic starter  

ஒரு நொடி அவனது மனதுக்கு அந்த காட்சி இதமாய் இருந்தது. இங்கிருந்த படியே

“மாதுமையாள்...” கர்ஜனையான குரல் கேட்க, தூக்கிவாரிப்போட நிமிர்ந்தாள் பொழிலி.

அவன் போட்ட சத்தத்தில் கணக்கும் பவளத்தின் மச்சானும் ஓடி வந்தார்கள்.

“இங்க என்ன நடக்குது... எதுக்கு இவள இங்க வேலை பார்க்க விட்டீங்க...” கடுமையுடன் கேட்டான்.

“இல்லைங்க ஐயா... அம்மணி தான் கொஞ்ச நேரம் நடவு நடுறேன்னு சொன்னாங்க.. நாங்க சொல்லி பார்த்தும் கேட்கல..” தலையை சொரிந்த படி இருவரும் கூற,

மாதுமையாளை முறைத்து பார்த்தான்.

“அவங்க மேல தப்பு இல்லங்க... நானாதான்...” தயங்கி சொன்னவள், அருகில் இருந்த பெண்ணிடம் தன் கையில் மீதம் இருந்த நாற்றுகளை கொடுத்துவிட்டு கரை ஏறினாள்.

“வா...” என்று அதட்டியவன், கைகால்களில் இருந்த சேற்றை கழுவ வாய்க்காலை காண்பித்தான்.

“இல்ல மாமா குளிக்கணும்...” என்று தயங்கினாள்.

“ஏன்...” அவளால் பதில் சொல்ல முடியாமல் தலை குனிய, சட்டென்று அவனது முகத்தில் ஒளி வந்தது.

“சரி சரி வா...” என்று கிணறுக்கு அழைத்து சென்றான்.

“நீங்க போங்க மாமா... நான் குளிச்சுட்டு வந்தர்றேன்.”

“தனியா விட்டுட்டு எல்லாம் போக முடியாது. நானும் குளிக்கிறேன் வா..” என்று அவளை இழுத்துக்கொண்டு கிணற்றில் இறங்கி குளிக்க தொடங்க, அவனுக்கு முன்னாடி எப்படி குளிப்பது என்று திணறியவள்,

“சரி எப்பொழுதும் போல பாவடையை உடுத்திக்கொள்ளலாம்...” என்று உடைகளை கலைந்துவிட்டு, பாவாடையை நெஞ்சில் கட்டிக்கொண்டு, இருவரது துணிகளையும் துவைத்து கிணற்று படியிலே காயப்போட்டவள், அதன் பின்பே குளிக்க நீரில் இறங்கினாள்.

அதுவரை அவளையே நீரில் மிதந்தபடி பார்த்துக்கொண்டு இருந்தான். அவளின் ஒவ்வொரு அசைவும் அவனை ரசிக்க தூண்டிக்கொண்டே இருந்தது. அவ்வளவு இயல்பு அவளிடம்.

குளிக்க நீரில் இறங்கியவளின் காலை வாரி விட்டான். அதில் பொத்தென்று அவன் மீதே விழுந்தாள். விழுந்தவளை இறுக கட்டிக்கொண்டவன் ஜலக்கீரிடை நடத்த தொடங்க,

“அச்சோ என்ன பண்றீங்க மாமா... விடுங்க.. வீட்டுல தேட போறாங்க. சாப்பாடு குடுக்க இவ்வளவு நேரமான்னு..” என்றவளை பேசவே விடவில்லை பாண்டியன்.

நீரில் இடுப்பு வரை அவளை நிற்க வைத்தவன் பின் பக்கமிருந்து அவளது பின் கழுத்தில் முகம் புதைத்து முதுகில் கோலம் போட்டு அவளின் இடையை இருக்கிப்பிடிக்க,

பொழிலியின் கண்கள் தானாக மூடிக்கொண்டது. உரம் மிகுந்த அவனது கைகளின் பிடியில் உண்டான உணர்வுகளை பற்களை கடித்து அடக்கொண்டவள், பின் பக்கமாய் கைகளை கொண்டு சென்று அவனது தலையை இறுக பற்றிக்கொண்டாள்.

“பொழிலி...” மிக மிருதுவாக அவளை அழைக்க,

“ம்ம்...” என்றாள்.

“மாமா சொல்லுடி...” என்றவன், மாமா சொல்லாத அவளது இதழ்களை நறுக்கென்று கடித்து வைத்தான். அதில் சற்றே சுயம் வந்தது அவளுக்கு.

“வலிக்கிதுங்க...”

“அப்போ மாமா சொல்லு...”

“நீங்க இப்படி அடிக்கடி சொல்றதுனால தான் எனக்கு மாமான்னு கூப்பிட வரவே மாட்டிக்கிது..” முடிக்கும் முன்பே முன்பை விட அதிகமாக அவளது இதழ்களை காயம் செய்ய தொடங்கிவிட்டான்.

“நான் பேசுனா எனக்கு பதில் பேசாதடி... சொல்றத மட்டும் செய்.” என்றவனது பிடி அவளுடம்பில் பலமாய் படிய அவனது முரட்டு தனத்தில் தவித்து போனாள்.

அவனது வெற்று மார்பில் புரண்ட சங்கிலியும் அடர்ந்து இருந்த ரோமங்களும், கற்றை மீசையும் சேர்ந்து அவனை மிக முரடனாக காட்டியது அவளுக்கு.

அவனது பிடியும் அது போலவே இருக்க அவளையும் மீறி அவளது மனம் அவனிடம் மயங்கியது. அவளின் உள் மனமும் அதை தான் நேசித்தது.

அதை மெய்பிப்பது போல, முரட்டு கரத்தினால் அவளை வாதம் செய்ய தொடங்க,

“மாமா...” என்றாள் அவனது முரட்டு தனம் தாளாமல்.

“ம்ம்ம்... இப்படியே பேசி பழகு...” என்றவன் அடுத்த நொடி அவளை இன்னும் வன்மையாக கையாள, அவளிடம் மாமா மாமா என்ற முனகல் மட்டுமே எழுந்தது.

அதை கேட்டவனுக்கு இன்னும் இன்னும் அவளை அலறவிட தோன்றியது.

மூக்கின் இரு பக்கமும் மின்னும் அந்த மூக்குத்தியை ரசித்தவன், அதில் முத்தமும் வைத்து அவளை வதைக்க, அவள் அவனிடமிருந்து விலகிப்போனாள்.

விலகியவளின் தாலிக்கொடியை இழுத்து நிறுத்தியவன் அவளின் கழுத்தில் முகம் புதைத்து தன் இதழ்களை அங்கு தேய விட, விக்கித்து போனாள்.

எத்தனை முறை அவனிடம் கூடினாலும் முதல் முறை கூடுவது போலவே உணர்வுலயங்கள் எழுந்து அவளை இம்சை செய்தது.

அவனுக்கும் அவளின் இந்த உணர்வு கிளர்ச்சிகளை கண்டு சொக்கிப்போனான்.

“என்னவோ மயக்குற டி... உன்கிட்ட பெருசா என்ன இருக்குன்னு எனக்கு புரியல... ஆனா என்னவோ இருக்கு... உன்னோட அகம் கவர்ச்சியா இருக்குன்னு நினைக்கிறன்... அதனால தான் என்னால உன்னை விட்டு கொஞ்சம் கூட இருக்க முடியல...”

“ஆமா உன் நெஞ்சுல என் நினைவு எப்படி பதிச்சு வச்சு இருக்க..” என்றவன் அவனது கையை அங்கு கொண்டு செல்ல, சட்டென்று அவனது கையை தட்டிவிட்டு அவனின் வெற்று மார்பில் சாய்ந்துக்கொண்டாள்.

“ஏய்... என்னை சோதிக்க விடுடி...” என்று அவளின் காதோரம் மீசை முடி குத்த கேட்டான். மாட்டேன் என்பது போல அவள் தலை அசைக்க,

அவளின் நாணம் புரிந்தவன் வாய் விட்டு சிரித்தான். “என்னவோ நான் பார்க்காத மாதிரியும், தொடாதா...” முடிக்கும் முன்பு அவனது வாயை தன் இதழ்களை கொண்டு அடைத்தாள்.

அதில் இன்னும் கிளர்ந்தவன், தன் கைகளை அவளின் மீது விளையாட விட, முற்றிலும் தளர்ந்து போனாள்.

அவனது தேவைகள் நீண்டுக்கொண்டு போக, அவளின் விழிகள் செந்நிறம் கொண்டது அவனது ஆசையினால்.

தன் தேவை தீர்த்தவன் அவளை அள்ளி தன் நெஞ்சில் போட்டுக்கொண்டு நீரின் மீதே சயனித்து இருந்தான்.

எவ்வளவு நேரம் அப்படி போனது என்றே தெரியவில்லை... நேரம் ஆவதை உணர்ந்து அவனிடமிருந்து விலகி, நீரில் நீந்த தொடங்கினாள்.

Loading spinner


   
Quote
(@gowri)
Reputable Member
Joined: 12 months ago
Posts: 289
 

என்னடா பாண்டி ஜலக்கிரடையா 🤭🤭🤭🤭🙈🙈🙈🙈😆😆😆😆😆😆

Loading spinner


   
ReplyQuote
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top